சிசேரியன் பிரசவத்திற்கு பின் கர்ப்பம் ஆவது இயல்பான ஒன்றே.(after c section when can you get pregnant in tamil) ஆனால் எப்போது கர்ப்பம் அடைந்தால் அந்த பெண்ணின் உடல் வலுவாக இருக்கும் என்று தெரிந்து கொண்டு செயல்படுதல் அவசியம்.
ஒரு பிரசவத்திற்கு பின்பு அவளின் உடல் எந்த அளவு மாற்றங்களை அனுபவிக்கும், பிரசவ வலியால் ஏற்பட்ட புண்களும் தழும்புகளும் எப்போது குணமடையும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சிசேரியன் பிரசவத்திற்கு பின் கர்ப்பம் (after c section when can you get pregnant in tamil)
பிரசவம் சிக்கலற்றதாக இருந்தாலும் கூட, சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கும் போது அந்த புண்கள் குணமடைய சுகப்பிரசவத்தை விட அதிக நேரம் எடுக்கும்.
மீண்டும் சிசேரியன் பிரசவத்திற்கு பின் கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும் முன் உங்கள் உடல் ஆரோக்கியமாக நேரம் கொடுப்பது மிகவும் முக்கியம்.
நீங்கள் குறைந்தது 6 மாதங்களாவது காத்திருக்க வேண்டும். ஆனால் உங்கள் மருத்துவர் குறைந்தது கண்டிப்பாக 12-18 மாதங்களாவது காத்திருக்கும்படி அறிவுறுத்துவார். அப்போது தான் உங்கள் உடலும் மனதும் அடுத்த கர்ப்பத்தை ஏற்க ஏற்றவாறு இருக்கும்.
சிசேரியன் செய்யப்பட்ட வடு குணமடைய நீங்கள் எவ்வளவு காலம் விடுகிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் குணமடையும்.
இது ஒரு தீவிர பிரச்சனையாக இருக்காது, ஆனால் இது கருப்பை முறிவு அதாவது கருப்பையின் சுவரில் கண்ணீர் போன்று கசிந்து கொண்டே இருக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
இதனால் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும். அடுத்தடுத்த சுகப்பிரசவங்களில் கருப்பை முறிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உங்கள் கடைசி சிசேரியன் பிரிவில் இருந்து மீண்டு வர எவ்வளவு நேரம் எடுத்தது, தற்போதைய உடல் ஆரோக்கியம் மற்றும் நீங்கள் உணர்ச்சி ரீதியாக தயாராக உள்ளீர்களா என்பதை கருத்தில் கொள்வது உதவியாக இருக்கும்.
உங்கள் கர்ப்பத்தை நீங்கள் திட்டமிடாமல் நடந்தாலோ, அல்லது உங்கள் சொந்த விருப்பத்தின் காரணமாகவே நீங்கள் கர்ப்பம் தரிக்க விரும்பினாலோ சிசேரியன் செய்து 2 வருடத்தில் மருத்துவரின் அறிவுரைப்படி நீங்கள் சுகப்பிரசவதிற்கு முயற்சி செய்யலாம்.
சிசேரியனுக்குப் பிறகு கர்ப்பமாவது ஆபத்தா?
சி செக்சன் ஆன பிறகு உடனடியாக கர்ப்பமடைவது (after c section when can you get pregnant in tamil) எதுபோன்ற ஆபத்துகளை உண்டாக்கும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
சிசேரியனுக்குப் பிறகு கர்ப்பம் ஆவது (after c section when can you get pregnant in tamil) என்பது முதல் குழந்தை பிறந்த பின்பு இரண்டு வருடத்துக்குள் நிகழும் கர்ப்பத்தை குறிக்கிறது. ஏற்கனவே கூறியுள்ளது போல சிசேரியன் பிரசவ நேரத்தில் கருப்பை பாதிக்கப்பட்டிருக்கும்.
இந்த பாதிப்பு இரண்டாவதாக கர்ப்பம் ஏற்படும் பொழுது எதிர்பாராத பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். உதாரணமாக கருப்பை பாதிப்பால் ஏற்பட்டிருக்கும் தழும்புகளால் கர்ப்பப்பையில் இருந்து தாயின் வயிற்று பகுதிக்குள் குழந்தை விழும் அபாயத்தை ஏற்படுத்தும்.
இதனால் உள்ளுறுப்பில் ரத்தப்போக்கு ஏற்பட்டு தாய் மற்றும் குழந்தை இருவரின் உயிருக்கும் ஆபத்தை உண்டாகும். சிசேரியன் வழியாக குழந்தை பெற்ற பிறகு, இரண்டாவது குழந்தையை இயற்கையாக பிரசவிக்க விரும்பும் பெண்களுக்கு, அது சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முறையான ஆலோசனை தேவை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்து மயக்கம் தெளிந்த பிறகு தான் உண்மையில் அதன் வலி தெரியும். ஆனால் நார்மல் டெலிவரியில் குழந்தை பிறப்பு என்பதை முழுவதுமாகவே வலி நிறைந்ததாக தான் இருக்கும்.
எனவே இதைப் பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும். ஏற்கனவே கருப்பை பாதிப்பு இருந்திருந்தால், அது அதிகப்படியான இரத்த இழப்பை ஏற்படுத்தும். தொற்று பாதிப்பு, தீவிரமான ரத்தப் போக்கு, அடிப்பகுதியில் உள்ள உறுப்புகளுக்கு பாதிப்பு போன்ற விசயங்கள் ஆபத்தாக இருக்கும்.
சிசேரியனுக்குப் பிறகு இரண்டாவது குழந்தை பெற விரும்பும் பெண்கள், உரிய ஆலோசனை மற்றும் மருத்துவரிடம் பரிசோதனை செய்து தங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்த பிறகு தான் அடுத்த குழந்தைக்குத் திட்டமிட வேண்டும். இதற்கு முதல் குழந்தை பிறந்து குறைந்தது இரண்டு வருடமாவது காத்திருக்க வேண்டும்.
சிசேரியனுக்குப் பிறகு சுகப்பிரசவம் ஆகுமா?
முதல் பிரசவம் சிசேரியனாக இருந்தால் அந்த சிசேரியன் பிரசவத்திற்கு பின் கர்ப்பம் அதே மாதிரியான பிரசவமாக இருக்க வேண்டும் என்ற எந்த ஒரு அவசியமும் இல்லை.
முதல் பிரசவம் உங்களுக்கு ஏன் சிசேரியனில் முடிந்தது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். (Non recurrent Indications) திரும்பத் திரும்ப வராத பிரச்சனைகளுக்காக சிசேரியன் செய்யப்பட்டிருந்தது என்றால் அடுத்த பிரசவம் உங்களுக்கு சுகப்பிரசவம் ஆக வாய்ப்புள்ளது.
குழந்தையின் தலை கீழே இல்லாமல், புட்டப்பகுதி (கால் பகுதி) கீழே இருந்திருந்தாலோ, குழந்தை குறுக்கே இருப்பது போன்ற காரணங்களுக்காக சிசேரியன் செய்யப்பட்டிருந்தாலோ, குழந்தை வயிற்றுக்குள் மலம் கழித்துவிட்டாலோ, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ, இதயத்துடிப்பில் பிரச்சனை இருந்தாலோ, தாய்க்கு பிரசவ வலி வராவிட்டாலோ, வலிக்கான மருந்து கொடுத்தும் வராவிட்டாலோ உங்களுக்கு முதல் பிரசவம் சிசேரியனாக செய்யப்பட்டிருந்தால், அடுத்த கர்ப்பத்தில் நீங்கள் சுகப்பிரசவத்துக்கு முயற்ச்சிக்கலாம்.
முதல் குழந்தை சிசேரியன் ஆன நிலையில் எல்லோருக்கும் அடுத்து சுகப்பிரசவம் நடக்குமா என்று கேட்டால் நிச்சயம் வாய்ப்பில்லை. சிசேரியன் ஆனவர்களில் 70 சதவிகிதம் பேருக்கு மட்டுமே அடுத்து சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பிருக்கிறது.
ஆனால், இதில் நிறைய ஆபத்தும் இருக்கிறது. எனவே, பிரசவத்துக்கு முன் உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து தாய்க்கும் குழந்தைக்கும் என்ன மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடும் எனத் தெரிந்துகொண்ட பிறகு சுகப்பிரசவத்திற்கு முயற்ச்சிக்கவும்.
எப்போது சுகப்பிரசவத்தை கை விடவேண்டும்?
- முதல் பிரசவத்துக்கும் இரண்டாவது பிரசவத்துக்கும் இடையில் அதிக இடைவெளி விடாமல் இருக்கும் போது.
- பிரசவ தேதியைத் தாண்டியும் பிரசவ வலி வராமல் இருக்கும் நேரத்தில்.
- தாயின் வயது 40-ஐ கடந்துவிட்டாலோ.
- குழந்தை எடை அடிகமாக இருந்தாலோ.
- ஸ்கேனில் பழைய தையல் மிகவும் மெலிதாக இருப்பது போல் தெரிந்தாலோ.
- அந்தப் பெண்கள் சுகப்பிரசவ முறையைத் தவிர்த்துவிட்டு சிசேரியன் செய்துகொள்வது பாதுகாப்பானது.
சிசேரியனுக்குப் பிறகு எப்போது உடற்பயிற்சி செய்யலாம்?
சிசேரியனுக்குப் பிறகு உடற்பயிற்சி 6-8 வாரங்களுக்குப் பிறகு உங்கள் பிசியோதெரபிஸ்ட்-ஐப் பார்க்கும் வரை நீங்கள் காத்திருப்பது நல்லது. நீங்கள் கர்ப்பமாக இருப்பதற்கு முன்பு அதிக உடற்பயிற்சி செய்யவில்லை என்றால், இப்போது தொடங்குவதற்கு நல்ல நேரம்.
நீங்கள் உங்கள் சிசேரியன் பிரிவில் இருந்து மீண்டு, வலியின்றி இருந்தால், நீங்கள் வழக்கமாக நீச்சல், யோகா, லைட் ஜாகிங் போன்ற மிதமான உடற்பயிற்சிகளை பாதுகாப்பாக தொடங்கலாம்.
ஏரோபிக்ஸ், ரன்னிங், பழு தூக்குதல் போன்ற அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு குறைந்தது 12 வாரங்களாவது காத்திருக்கும்படி பிசியோதெரபிஸ்ட் பரிந்துரைக்கலாம்.
சிசேரியன் புண்ணை எப்படி குணப்படுத்துவது?
சரியான ஓய்வு
நேரம் கிடைக்கும் போதெல்லாம் நன்றாக ஓய்வெடுப்பது அவசியம். உங்களுக்கும் உங்கள் குழந்தியக்கும் தேவையானவைகளை அருகிலேயே வைத்துகொள்வது அவசியம். முதல் சில வாரங்களுக்கும் குழந்தையை தவிர வேறு எந்த அதிக எடை உள்ள பொருட்களையோ, கடினமான வேலைகளை செய்வதால் உங்கள் வயிற்று சதையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும்.
இதனால் தையல் பிரியும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. காயம் முழுவதுமாக குணமடையும் வரை ஓய்வெடுத்து உடலை காப்பதே நல்லது.
வலி நிவாரண மாத்திரை/ மருந்துகள்
சிசேரியன் செய்து வந்த பிறகு கண்டிப்பாக அதிக வலி இருக்கும். அதற்கான வலி நிவாராணிகள் நீங்கள் எதேனும் எடுக்க நினைத்தால் கண்டிப்பாக மருத்துவரின் அறிவுரைப்படி தான் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்களாக எதையும் எடுத்துக்கொள்ள கூடாது.
தொற்று இருக்கிறதா உறுதி செய்தல்
சிசேரியன் செய்த இடத்தில் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதால், அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். தையல் போட்ட இடம் சிவந்தோ அல்லது வீக்கமாகவோ இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனையை பெறுவது அவசியம்.
மூச்சுப்பயிற்சி
மூச்சுப்பயிற்சி செய்வது நல்ல ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் தரும். இழுத்து மூச்சு விடுவது என்பது சிறந்த உடற்பயிற்சிகளில் ஒன்று. இந்த உடற்பயிற்சியினை போது உங்கள் வயிற்று பகுதியில் உள்ள தசைகள் நன்கு செயல்படும்.
தினமும் காலையில் எழுந்தவுடன் இதனை செய்து வந்தால் நல்லது. அப்படி இதை செய்துவர நாளடைவில் உங்கள் வயிற்றுப்பகுதியில் உள்ள சதைகள் வலுப்படும். புண்களும் விரைவில் குணமடையும்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
மேலே குறிப்பிட்டவாறு சிசேரியன் பிரசவத்திற்கு பின் கர்ப்பம் (Pregnancy After C-Section) தரிக்கலாம். ஆனால் முறையான் கால அவகாசம் குடுத்து அதன் பிறகு அடுத்த குழந்தைக்கு முயற்சிப்பது நல்லது. சி செக்சன் (C-section) பிரசவத்திற்கு பிறகு எந்த விதமான வலியாகவோ அல்லது அலர்சி ஏற்ப்படுவது போல இருந்தாலோ கண்டிப்பாக மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற்றுக்கொள்வது அவசியம்.