புதிதாகப் பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை (Newborn Jaundice in Tamil) என்பது அதிகப்படியான பிலிரூபின் காரணமாக குழந்தையின் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாருவதாகும்
பொதுவாக குழந்தை பிறந்த பிறகு தான், அதன் பிலிரூபின் அளவு (Bilirubin Levels) எவ்வளவு இருக்கு என்பதை தெரிந்து கொள்ள முடியும், பிலிரூபின் அளவு என்பது மஞ்சள் காமாலை, குழந்தையின் இரத்தத்தில் எவ்வளவு அளவு பரவி உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுவதாகும்.
குழந்தைக்கு ஏற்படும் மஞ்சள் காமாலை வகைகள் (Newborn Jaundice in Tamil – Types)
மூன்று வகையான மஞ்சள் காமாலை உள்ளது அவை – பிஸியோ லாஜிக்கல் ஜான்டிஸ் (physiological jaundice), பத்தோ லாஜிக்கல் ஜான்டிஸ் (pathological jaundice), பிரஸ்ட் பீடிங் ஜான்டிஸ் (breastfeeding jaundice).
பிஸியோ லாஜிக்கல் ஜான்டிஸ் (Physiological Jaundice)
புதிதாகப் பிறந்த குழந்தையின் முதிர்ச்சியற்ற கல்லீரல், உள்ள பிலிரூபினை பெரும்பாலும் விரைவாக அகற்ற முடியாது, இதனால் பிலிரூபின் அளவு அதிகமாகிறது.
புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஏற்படும் இந்த சாதாரண நிலை மஞ்சள் காமாலை பிஸியோ லாஜிக்கல் மஞ்சள் காமாலை என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது பொதுவாக குழந்தை பிறந்து இரண்டாவது அல்லது மூன்றாவது நாளில் ஏற்படும்.
பத்தோ லாஜிக்கல் ஜான்டிஸ் (pathological jaundice)
இது குழந்தை பிறந்த பிறகு 24 மணி நேரத்திற்குள் ஏற்படுகிறது , மேலும் குழந்தையின் பிலிரூபின் அளவு விரைவாக உயரும்.
பத்தோ லாஜிக்கல் மஞ்சள் காமாலைக்கான சில காரணங்கள்
- செயலற்ற தைராய்டு சுரப்பியில் (ஹைப்போ தைராய்டிசம்)
- தைராய்டு சுரப்பி போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்யாதது.
- தாய்க்கும் குழந்தைக்கும் வெவ்வேறு இரத்த வகைகள் இருக்கும்போது, அவை கர்ப்ப காலத்தில் அல்லது பிரசவத்தின் போது ஒன்று சேர்ந்து, இரத்தப் பொருத்தமின்மை இல்லாமல் இருப்பது
- அல்லது கல்லீரல் நோயாக இருக்கலாம்.
பிரஸ்ட் பீடிங் ஜான்டிஸ் (breastfeeding jaundice)
குழந்தை பிறந்து இரண்டாவது அல்லது மூன்றாவது வாரங்களில் இந்த மஞ்சள் காமாலை ஏற்படுகிறது மற்றும் இது பல வாரங்களுக்கு குறையாமல் தொடரலாம்.
உங்கள் குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் கிடைக்காதபோது இது நிகழ்கிறது.
பிறந்த குழந்தைக்கு வரும் மஞ்சள் காமாலை எப்படி சரி செய்வது (Newborn Jaundice in Tamil – Management)
சில சமயம் இந்த மஞ்சள் காமாலை தானாகவே சரி ஆகிவிடும் இதனால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இருக்காது. மஞ்சள் காமாலை சரி செய்வதற்கு போட்டோ தெரப்பி (phototherapy for jaundice) மற்றும் லைட் தெரப்பி (light therapy for jaundice) என்ற சிகிசைகள் உள்ளது.
போட்டோ தெரப்பி சிகிக்சை என்பது ஒரு சிறப்பு வகை ஒளியுடன் அதாவது ஊதா நிற ஒளியில் குழந்தையை படுக்க வைக்கும் சிகிச்சையாகும்.
மேலும் உங்கள் குழந்தையின் கல்லீரலை உள்ள பிலிரூபின் அளவை எளிதாக அகற்றும் , மற்றும் குழந்தையின் இரத்தத்தில் இருந்து பிலிரூபினை முழுமையாக அகற்றும்.
லைட் தெரப்பி – குழந்தைகளுக்கு பிலி-லைட் (bili-light) என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு வகையான ஒளி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உங்கள் குழந்தை பிலி-லைட்கள் கொண்ட படுக்கையில் வைக்கப்படும், லைட்கள் குழந்தையின் தோலில் சரியாக பரவி பிலிரூபினை மாற்றுகின்றன. பின்னர் இந்த மஞ்சள் காமாலை சிறுநீர் அல்லது மலம் வழியாக குழந்தையின் உடலை விட்டு முழுவதும் வெளியேறும்.
புதிதாகப் பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை (Newborn Jaundice in Tamil) வராமல் கர்பத்திலேயே தடுக்க முடியுமா?
ஒரு குழந்தை பிறந்த பிறகு வரும் மஞ்சள் காமாலையை, அந்த குழந்தை கருவில் இருக்கும் போது கர்ப்பத்தில் வளரும் போது மருந்துகள் கொடுத்து வராமல் தடுக்க முடியுமா என்றால் அது முடியாது என்பது தான் இதற்கு பதில்.
குழந்தை கருவில் வளரும்போது மஞ்சள் காமாலை வராமல் தடுப்பது என்பது நம்மளால் செய்யமுடியாத ஒன்று. குழந்தை பிறந்த பிறகு தான் அந்த பிலிரூபினை சரிசெய்ய முடியும்.