பெண்களுக்கு வெள்ளைப்படுதல் (Vaginal Discharge in Tamil) குணமாக

Deepthi Jammi
5 Min Read

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் (Vaginal Discharge in Tamil) பற்றி நீங்கள் அறிய வேண்டிய விஷயங்கள்!

பெண்களுக்கு உண்டாகும் இயற்கையான உடல் நிகழ்வுகளில் ஒன்று வெள்ளைப்படுதல். பெண் உறுப்பிலிருந்து வெளியேறும் சாதாரணமான நிகழ்வு தான் இந்த வெள்ளைப்படுதல் பெண் உறுப்பில் தென்படும். இது அளவாக இருக்கும் வரை எந்த விதமான பாதிப்பையும் உண்டாக்காது. உடல் உஷ்ணம் காரணமாக, மாதவிடாய்க்கு முன்பு, கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல் (Vaginal Discharge in Tamil) உண்டாவது இயல்பானது. 

இது மெல்லிய திரவம் போன்று வழவழப்பாக வெள்ளை நிறத்தில் இருக்கும். உதிரபோக்கு போன்று அதிகமாக இருக்காது. பெண் உறுப்பில் செல் சுவர்களில் நிறமற்று இருக்கும். இலேசான பிசுபிசுப்புத்தன்மையோடு இயற்கையாக சுரக்கும். பெண் உறுப்பை வறட்சியில் இருந்து பாதுகாத்து அந்த இடத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். அமிலத்தன்மை நிறைந்தது. சொல்லபோனால் அந்தரங்க உறுப்பில் கிருமிகள் மற்றும் தொற்றுகள் ஏற்படாமல் பிறப்புறுப்பை பாதுகாக்க செய்யும். 

அசாதாரணமான வெள்ளைப்போக்கு (Vaginal Discharge in Tamil) என்றால் என்ன?

அசாதாரணமான வெள்ளைப்போக்கு (Vaginal Discharge in Tamil) என்பது பெண் உறுப்பை பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற தொற்றுக்கிருமிகள் பாதிக்கும் போது அந்த பகுதியில் சுரக்கும் திரவத்தின் அமிலத்தன்மை காரத்தன்மையாக மாற்றமடையும். இதனால் வெள்ளைப்படுதலில் நிறம் மாறக்கூடும்.

வெள்ளை, சிவப்பு, மஞ்சள் வெளிர் பச்சை நிறங்களில் தென்படும். இவை தொற்றுகாரணமாக உண்டாவது என்பதால் கர்ப்பப்பையிலும் இனப்பெருக்க உறுப்பிலும் பிரச்சனைகள் உண்டாகலாம். இந்த நிறமாற்ற வெள்ளைப்படுதல் காலங்களில் துர்நாற்றமும் உண்டாக கூடும். எனவே பெண் உறுப்பில் ஏற்படும் நோய்கள் பற்றி மருத்துவரிடம் கேட்டு அறிந்து கொள்வது நல்லது.

வெள்ளைப்படுதல் (Vaginal Discharge in Tamil) நிறங்களை கொண்டு அது வகைப்படுத்தப்பட்டுள்ளது. சில வகையான வெள்ளைப்படுதல் இயல்பானது. சில வகை அசாதாரணமானது. 

இதையும் தெரிந்து கொள்ள: மென்சுரல் கப் என்றால் என்ன? யாரெல்லாம் உபயோகிக்கலாம்!

வெள்ளை நிறம்

வெள்ளைப்படுதல் (Vaginal Discharge in Tamil) வெள்ளை நிறங்களில் இருந்தால் மாதவிடாய் சுழற்சியின் தொடக்கத்திலோ அல்லது மாதவிடாய் சுழற்சியின் முடிவிலோ இருந்தால் அது சாதாரணமானது நீங்கள் பயப்பட வேண்டியதில்லை ஆனால் இந்த வெளியேற்றமானது அரிப்பை கொண்டிருந்தால் அடர்த்தியாக பாலாடை கட்டி போன்று இருந்தால் அது சீராக இருப்பது போல் தோன்றினாலும் இது அசாதாரணமானது. அதோடு அரிப்பும் இருந்தாலும் கண்டிப்பாக யோனி ஈஸ்ட் தொற்று அறிகுறியாக இருக்கலாம். 

வெகு சிலருக்கு அவ்வபோது வெள்ளைப்படுதல் (Vaginal Discharge in Tamil) இருக்கும் இது தெளிவான நீராக வெளியேறும். இது சாதாரணமானது. எப்போதுவேண்டுமானாலும் வரக்கூடும். உடற்பயிற்சி செய்த பிறகு உணர முடியும். இதுவும் சாதாரணமானது என்பதால் அச்சம் கொள்ள தேவையில்லை. 

சிலருக்கு சளி போன்று சற்று அடர்த்தியாக இருக்கும். இது அண்டவிடுப்பின் குறிக்கும் நிகழ்வு, இதுவும் சாதாரண வெளியேற்றம். 

பழுப்பு அல்லது சிவப்பு நிறம்

பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் வெள்ளைப்போக்கு உண்டாகும். இதுவும் இயல்பானது. அதாவது மாதவிடாய் சுழற்சிக்கு முன்பு அல்லது மாதவிடாய் சுழற்சி முடிவுக்கு பிறகு இவை உண்டாகும். மாதவிடாய்க்கு பிந்தையை காலத்தில் வெளியேறூம் போது சிறிய உதிரமும் சேர்ந்து வெளியேறும். இது ஸ்பாட்டிங் என்று அழைக்கப்படுகிறது. 

திருமணத்துக்கு பிறகு என்றால் நீங்கள் பாதுகாப்பு இல்லாமல் உறவு கொண்டு கர்ப்பத்தை அடைவதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். கர்ப்பத்தின் ஆரம்ப கட்டமாக இருந்தால் இது கருச்சிதைவின் அறிகுறியாக இருக்கலாம். இந்த நிலையில் தாமதிக்காமல் மகப்பேறு மருத்துவ நிபுணரை அணுகுவது அவசியம். 

எந்த காரணமும் இல்லாமல் இந்த வெள்ளைபோக்கு பழுப்பு அல்லது ரத்த நிறத்தி இருந்தால் அது எண்டோமெட்ரியல் அல்லது கர்ப்பபை வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இது நார்த்திசுகட்டிகள் அல்லது பிற அசாதாரண வளர்ச்சிகள் போன்ற சிக்கலை கொண்டிருக்கலாம். 

மஞ்சள் அல்லது பச்சை நிறம்

மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் வெளியேற்றம் இருந்தால் அது சாதாரணமானதல்ல. இதிலும் அடர்த்தியாக, துர்நாற்றத்தோடு வெளியேறினால் அது ஆபத்தானதும் கூட. இந்த வகையான வெளியேற்ரம் ட்ரைக்கோமோனியாசிஸ் நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். இந்த தொற்று இளம்பெண்களுக்கு வருவதில்லை. இது உடலுறவு மூலம் பரவக்கூடியது. 

பாதுகாப்பற்ற உறவு மற்றும் பிறப்புறுப்பு சுகாதாரத்தை கடைப்பிடிக்காத போது உறவுகொள்வதன் மூலம் இந்நிகழ்வு உண்டாகலாம். இந்த அசாதாரண வெள்ளைப்போக்கு உண்டாகும் போது பெண் உறுப்பில் வீக்கம், புண் கொப்புளங்கள் போன்ற அறிகுறிகளும் இருந்தால் அது பால்வினைதொற்று தான்.

இது தீவிரமாகும் போது சாம்பல் நிறத்தில் வெள்ளைப்படுதல் உண்டாகும். இந்த வெள்ளைப்படுதல் நிறமாற்றத்தை அலட்சியம் செய்தால் சிறுநீர்ப்பாதை  மற்றும் கர்ப்பப்பைக்கு தொற்று பரவக்கூடும். 

வெள்ளைப்படுதல் (Vaginal Discharge in Tamil) காரணங்கள்

வெள்ளைப்படுதல் (Vaginal Discharge in Tamil) அசாதாரணமாக இருக்க காரணங்களில் பாக்டீசியா வஜினோசிஸ் என்பது பொதுவான காரணமாக அறியப்படுகிறது. இது யோனி பகுதியில் துர்நாற்றத்தை வலுவாக உண்டாக்குகிறது. சில நேரங்களில் எந்த அறிகுறியையும் உண்டாக்காது. இது வாய்வழி உறவை பெறும் பெண்களுக்கு உண்டாக கூடியது. 

பாலியல் ரீதியாக உண்டாகும் நோய்த்தொற்றில் மற்றொன்று கோனோரியா மற்றும் கிளமிடியா. இது அசாதாரணமான வெளியேற்றத்தை உண்டாக்கும். இதுவும் மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும். 

இதையும் தெரிந்து கொள்ள: மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி நீங்க உதவும் டிப்ஸ்!

பாலியல் தொடர்பு மூலம் பரவும் மற்றுமொரு தொற்று இடுப்பு அழற்சி நோய் ஆகும் Pelvic inflammatory disease (PID) பாக்டீரியா யோனியிலும் இனப்பெருக்க உறுப்புகளிலும் பரவும் போது இவை உண்டாகிறது. இந்த நிலையில் துர்நாற்றம் வேகமாக இருக்கும். 

ட்ரைகோமோனியாசிஸ் என்னும் தொற்று குறித்து பார்த்தோமே. இதுவும் ஒற்றை செல் உயிரினத்தால் உண்டாகிறது.  பச்சை மஞ்சள் நிறத்தில் உண்டாகும்  துர்நாற்றமான போக்கு வலி, வீக்கம் அரிப்பு போன்ற அறிகுறிகளை கொண்டிருக்கும். 

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

ஈஸ்ட் தொற்று புஞ்சை தொற்று ஆகும். இது பாலாடைக்கட்டி போன்று வெளியேற்றத்தை உண்டாக்கும். இந்த நிலையில் பெண்களுக்கு அரிப்பு மற்றும் எரிச்சலை உண்டாக்கும். இது மன அழுத்தம், நீரிழிவு நோய், பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளை பயன்படுத்துதல், கர்ப்பம், நுண்ணுயிர் எதிர்ப்புகள், தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக நீடித்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. 

சமயங்களில் மனித  பாப்பிலோமோ வைரஸ் தொற்று பாலியல் தொடர்பு மூலம் பரவுகிறது. இது கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். அறிகுறிகளே இல்லாத இந்த வகை புற்றுநோய் விரும்பத்தகாத மணத்தை கொண்டு வெளியேறும். பழுப்பு, சிவப்பு நீரை துர்நாற்றத்தோடு வெளிப்படுத்தும். 

வெள்ளைப்போக்கு அசாதாரணமாக இருக்கும் போது தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது. அதே போன்று வெள்ளைப்போக்கு இருக்கும் போது அடி வயிற்றில் வலி, காய்ச்சல், எடை இழப்பு, சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற நிலை இருந்தாலும் மருத்துவரை சந்திக்க வேண்டும்.  

5/5 - (2 votes)

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Follow:
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »