மாதவிடாய் முன் நோய்க்குறி (PMS) இருந்தால் என்ன செய்யலாம்?

Deepthi Jammi
7 Min Read

மாதவிடாய் முன் நோய்க்குறி (PMS – Premenstrual Syndrome ) என்பது பற்றிய விழிப்புணர்வை ஒவ்வொரு பெண்ணும் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சிக்கு முன்பும் சிலருக்கு அசெளகரியமான அறிகுறிகள் தென்படும். தொடர்ந்து அறிகுறிகள் ஒவ்வொரு மாதமும் இருக்கும் நிலையில் சற்று உற்று கவனித்தால் மட்டுமே அதை உணர முடியும்.

இந்த நிலையில் மனநிலை மாற்றங்கள், மென்மையான மார்பகங்கள், பசி, சோர்வு, எரிச்சல் மற்றும் மனச்சோர்வு போன்ற அறிகுறிகள் எல்லாமே அடங்கும். ஒவ்வொரு பெண்களும் இந்த அறிகுறிகளில் இருந்து தப்பிப்பதில்லை என்று தான் சொல்ல வேண்டும் . 4 மாதவிடாய் பெண்களில் 3 பேர் மாதவிடாய் முன் நோய்க்குறியை அனுபவிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாதவிடாய் முன்நோய்க்குறி அன்றாட வாழ்க்கையில் குறுக்கிடலாம் என்றாலும் சிகிச்சைகள் மற்றும் சில வாழ்க்கை முறை விஷயங்கள் கடைப்பிடிப்பதன் மூலம் முன் நோய்க்குறியின் அறிகுறிகளை குறைக்க நிர்வகிக்க உதவும்.

பிஎம்எஸ் (PMS) மாதவிடாய் முன் நோய்க்குறி என்றால் என்ன?

இந்த பிஎம்எஸ் என்பது மனநிலை உணர்ச்சிகள், உடல் ஆரோக்கியம் மற்றும் நடத்தை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களை குறிக்கிறது.

அண்டவிடுப்பின் தொடக்கத்துக்கும் உங்கள் மாதவிடாயின் தொடக்கத்துக்கும் இடையில் இந்த பிஎம்எஸ் அறிகுறி உருவாகிறது அதாவது மாதவிடாய்க்கு சுமார் 2 வாரங்களுக்கு முன்பு இவை இருக்கும். மாதவிடாய் தொடங்கி சில நாட்கள் வரை நீடிக்கும் இந்த அறிகுறி ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து காண்பிக்கப்படும்.

அன்றாட வாழ்க்கை மற்றும் வழக்கமான செயல்பாடுகளில் சில தாக்கத்தை இது ஏற்படுத்துகின்றன. இந்த பிஎம்எஸ் அறிகுறிகள் பொதுவான கவலை. இனப்பெருக்க வயதுடைய பெண்களின் நம்பகமான ஆதார ஆய்வு ஒன்றில் 48% பேர் பிஎம்எஸ் -ஐ அனுபவிக்கின்றனர். இதில் 20% பேருக்கு அறிகுறிகள் அவர்களின் வழக்கத்தை அன்றாட வாழ்க்கை முறையை பாதிக்கும் அளவுக்கு கடுமையானவை.

பிஎம்எஸ் PMS என்பது உண்மையான நிலை. இது அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும் மற்றும் குறிப்பிடத்தக்க உடல் அசெளகரியம் மற்றும் உணர்ச்சி துயரத்தை உண்டு செய்யும். இந்த அறிகுறிகள் எரிச்சல் அல்லது மனச்சோர்வு போன்ற உணர்ச்சிகளின் அடிப்படையில் இருக்கலாம்.

பிஎம்எஸ் அறிகுறிகள் எப்படி இருக்கும்?

மாதவிடாய் சுழற்சியே அசெளகரியமானது தான். இது உடலையும் உணர்ச்சி நல்வாழ்வையும் எதிர்மறையாக பாதிக்கும். பல்வேறு அறிகுறிகளை இவை உண்டாக்கும் என்றாலும் எப்போதும் கணிக்க முடியாதவை.

ஒரு பெண் இந்த பிஎம்எஸ் அறிகுறிகளை கொண்டிருந்தால் 20 களில் எதிர்கொள்ளும் அறிகுறிகள் 30 மற்றும் 40 களில் அனுபவிக்கும் அறிகுறிகளிலிருந்து வேறுபட்டிருக்கலாம்.

இந்த வலிகள் கணிக்ககூடியது. வலிகள் எரிச்சல் போன்ற உணர்வுகள் மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் சரியாகிவிடும். இந்த பிஎம்எஸ் PMS அறிகுறிகள் பெரும்பாலும் தினசரி வாழ்க்கையை பாதிக்காத இலேசான அல்லது மிதமான அறிகுறிகளை உள்ளடக்கியிருந்தாலும், அன்றாட நடவடிக்கைகள் ஒட்டுமொத்த நல்வாழ்வை பாதிக்கும் அளவு கடுமையாக இருக்கும்.

Premenstrual Syndrome Symptoms

உணர்ச்சி மற்றும் நடத்தை அறிகுறிகள் பிஎம்எஸ் அறிகுறிகளே, பதட்டம் மன அமைதியின்மை அல்லது அசாதாரண உணர்வு, கோபம் மற்றும் எரிச்சல், பசியின் மாற்றங்கள், அதிகரித்த உணவு பசி அதாவது இனிப்புகள் மீது அதிக நாட்டம் இருக்கலாம்.

சோர்வு மற்றும் தூங்குவதில் சிக்கல் உட்பட தூக்க முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் சோகமான அல்லது மனநிலையை மோசமாக்கி காட்டும். இது காரணமே இல்லாமல் அழுகையை உள்ளடக்கியது. மனநிலை மற்றும் உணர்ச்சி வெடிப்புகளில் விரைவான மாற்றங்களை உண்டு செய்யும். இது தனிமையின் மீது ஆர்வத்தை தூண்டும். இதனால் குடும்பத்தினரிடமிருந்து விலகி இருப்பீர்கள்.

Premenstrual Syndrome (PMS) உடல் அறிகுறிகள் எப்படி இருக்கும்?

  • வயிற்று உப்புசம்
  • தசைப்பிடிப்பு
  • புண் அல்லது மார்பகம் வீங்குதல்
  • முகப்பரு
  • மலச்சிக்கல்
  • வயிற்றுப்போக்கு
  • தலைவலி
  • முதுகு மற்றும் தசைவலி
  • மூட்டு அல்லது தசைவலி
  • எடை அதிகரிப்பு

உடல் வலி மற்றும் உணர்ச்சி மன அழுத்தம் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு கடுமையாக இருக்கும். இந்த அறிகுறிகளின் தீவிரத்தை பொருட்படுத்தாமல் பெரும்பாலான பென்களுக்கு மாதவிடாய் தொடங்கிய நான்கு நாட்களுக்குள் அறிகுறிகள் மறைந்துவிடும்.

அதுவே மாதவிடாய் முன் நோய்க்குறி உள்ள சிறிய எண்ணிக்கையிலான பெண்கள் ஒவ்வொரு மாதமும் செயலிழக்கும் அறிகுறிகளையும் கொண்டுள்ளன. பிஎம் எஸ் வடிவமான இது மாதவிடாய் முன் டிஸ்போரிக் கோளாறு என்று அழைக்கப்படுகிறது.

பிஎம்எஸ் (Premenstrual Syndrome) அறிகுறிகள் எப்போது தொடங்கும்?

மாதவிடாய் சுழற்சி முறையை பொறுத்து இவை மாறுபடும். உங்களுக்கு 28 நாட்கள் மாதவிடாய் சுழற்சி இருந்தால் அண்டவிடுப்பின் அல்லது கருப்பையில் இருந்து முட்டை வெளியீடும் நாள் 14 அல்லது சுழற்சியின் நடுப்பகுதியில் நிகழும்.

PMS Symptoms

பிஎம்எஸ் அறிகுறிகள் அண்டவிடுப்பின் பிறகு எந்த நேரத்திலும் தொடங்கலாம். பொதுவாக இது மாதவிடாய்க்கு முந்தைய வாரத்தில் தொடங்கும். மாதவிடாய் தொடங்கிய 5 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் வரை நீடிக்கும். உங்கள் மாதவிடாய் சுழற்சி பொறுத்து இந்த அறிகுறிகள் மாறுபடலாம்.

PMS ஏன் உண்டாகிறது?

PMS உண்டாக உறுதியான காரணம் கிடைக்கவில்லை. இது குறித்த விளக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கோட்பாடுகளை பரிந்துரைத்துள்ளனர்.

ஹார்மோன்களின் சுழற்சி மாற்றங்கள்

ஈஸ்ட்ரோஜன் மற்றும் போர்ஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் அளவு மாறுவதற்கு பதில் இந்த PMS உண்டாகிறது என்கிறார்கள் பல்வேறு நிபுணர்களும்.

இந்த ஹார்மோன்கள் மாதவிடாய் சுழற்சி முழுவதும் இயற்கையாகவே ஏற்ற இறக்கமாகவே இருக்கும். அண்டவிடுப்பின் பின் வரும் லூட்டல் நிலையில் ஹார்மோன் என்பது உச்சத்தை அடைத்து, பிறகு விரைவாக குறையும். இது கவலை, எரிச்சல் மற்றும் மனநிலையில் மாற்றங்களை உண்டு செய்யலாம்.

மூளையில் இராசயன மாற்றங்கள் நரம்பியல் கடத்திகள் செரடோனின் மற்றும் நோர்பைன்ப்ரைன் உடலில் பல முக்கிய செயல்பாடுகளை கொண்டுள்ளன. இவை தான் மனநிலை உணர்ச்சிகள் மற்றும் நடத்தை ஆகியவற்றை ஒழுங்குப்படுத்துகிறது. இந்த இராசயன ஹார்மோன் PMS அறிகுறிகளாக இருக்கலாம்.

ஈஸ்ட்ரோஜனின் வீழ்ச்சி நோர்பைன்ப்ரனின் norepinephrine வெளியீட்டை தூண்டும். இது டோபமைன், அசிடைல்கொலின் மற்றும் செரோடோனின் உற்பத்தி குறைய வழிவகுக்கும். இவை தூக்க பிரச்சனைகள் தூண்டலாம். குறைந்த மனச்சோர்வு மனநிலைக்கு வழிவகுக்கும்.

மனநல மாற்றங்கள்

மனச்சோர்வு அல்லது பதட்டம் போன்ற ஒரு மனநல நிலையுடன் இருப்பது இந்த PMS கடுமையான நிலையான மாதவிடாய் முன் டிஸ்ஃபோரிக் கோளாறு போன்றவற்றை அனுபவிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.

இந்த PMS இருமுனைக்கோளாறு அல்லது மனச்சோர்வு பிரசவத்துக்கு பிறகான மனச்சோர்வு உள்ளிட்ட குடும்ப வரலாறும் இதை அதிகரிக்கலாம்.

மாதவிடாய்க்கு முந்தைய அதிகரிப்பும் நீங்கள் உணரலாம். இதன் பொருள் இருமுனைக்கோளாறு அல்லது மனச்சோர்வு போன்ற அடிப்படை நிலைமைகளின் அறிகுறிகள், மாதவிடாய் தொடங்குவதற்கு முன்பு தீவிரமடைகிறது.

மாதவிடாய் தொடர்பான மனநிலை மாற்றங்கள் மற்றும் மனநல அறிகுறிகள் ஆகியவற்றுக்குக்கு இடையேயான தொடர்புக்கு நிபுணர்கள் இன்னும் உறுதியான விளக்கத்தை பெறவில்லை. எனினும் இது மூளையின் இராசயன மாற்றங்களுடன் தொடர்புடையது என்று பலர் நினைக்கிறார்கள்.

வாழ்க்கை முறை காரணிகளால் அதிகரிக்கும் PMS

சில பழக்கவழக்கங்கள் கூட உங்கள் PMS அறிகுறிகள் தீவிரத்தை பாதிக்கலாம். இந்த PMS அறிகுறிகளை மோசமாக்கும் வாழ்க்கை முறை காரணிகள்

  • புகைப்பழக்கம் கொண்டிருப்பது
  • கொழுப்பு அதிகம் கொண்டிருப்பது
  • சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகள்
  • வழக்கமான உடல் செயல்பாடு இல்லாதது
  • தரமான தூக்கமின்மை

போன்றவற்றை உள்ளடக்கியது. 2018 ஆம் ஆண்டின் நம்பகமான ஆதாரத்தின் ஆராய்ச்சியானது, மது அருந்துவதையும் PMS அபாயத்தையும் அதிகரிக்க செய்வதாக கூறியுள்ளது. குடிக்கும் பழக்கம் கொண்டுள்ள பெண்களிடம் இந்த PMS அறிகுறிகள் அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது.

Premenstrual Syndrome (PMS)

இந்த பிஎம் எஸ் PMS அறிகுறிகள் பற்றி நமது மருத்துவர் சொல்வது என்ன என்பதை தெரிந்துகொள்வோம். 20 முதல் 45 வயதுக்குள் இருக்கும் பெண்கள் இந்த பிரச்சனையை அதிகம் எதிர்கொள்வார்கள்.

  • தூக்கமின்மை
  • வயிறு உப்புசம்
  • மார்பு மென்மை
  • அடி வயிறு பிடிப்பு
    மூட் ஸ்விங் போன்றவை மாதவிடாய்க்கு முன்பு இருக்கலாம். இது premenstrual syndrome என்று அழைக்கப்படுகிறது. இது 40% பெண்களை பாதிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

இது ஏன் வருகிறது என்பதை கண்டறிய பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சரியான காரணத்தை கண்டறிய முடியவில்லை. எனினும் இவை ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் வரலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் இது ஓவரியில் உண்டு. மற்ற இரண்டு ஹார்மோன்கள் மகிழ்ச்சி ஹார்மோன் என்று சொல்லகூடிய டோபமைன் மற்றும் செரடோனின் ஆகும். இதில் ஈஸ்ட்ரோஜன் ஓவரியிலும், செரடோனின் மூளையிலும் சுரக்கிறது. மாதவிடாய் சுழற்சி வரும் போது மாதவிடாய் சுழற்சியின் மத்தியில் கருமுட்டை கருமுட்டை வெளிப்படும் அப்போது சட்டென்று ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறையகூடும்.

இதனால் Norepinephrine அளவு குறையக்கூடும். இதனால் மூளையில் இருக்கும் நல்ல ஃபீல் கொடுக்கும் டோபமனைன் ஹார்மோன் குறையக்கூடும். இவை தான் எரிச்சலை உண்டு செய்கிறது. இவை வந்தால் என்ன செய்யணும் என்பதையும் தெரிந்து வைத்துகொள்ளுங்கள்.

இனிப்பு சேர்த்த உணவுகள், செயற்கை இனிப்பு பானங்கள் தவிர்க்க வேண்டும் . காஃபி அளவை கட்டுப்படுத்த வேண்டும். காஃபி, டீ இரண்டும் நீரிழப்பை கட்டுப்படுத்தும். சூடாக குடிக்க வேண்டுமெனில் க்ரீன் டீ, புதினா டீ குடிக்கலாம்.

வயிறு உப்புசம், அடி வயிறு வலி போன்றவை இருக்கும் போது எண்ணெய், ஜங்க்ஃபுட், பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடும் போது அத் வலியை தூண்டும்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

உடற்பயிற்சி மாதவிடாய் நேரத்தில் செய்யமுடியாது. ஆனால் மாதவிடாய் முடிந்த பிறகு செய்யலாம். இதன் மூலம் உங்கள் மாதவிடாய் முன் கூட்டிய அறிகுறிகளை குறைக்கலாம். அதனால் நீங்கள் நன்றாக உணர தொடங்கும் போதே உடற்பயிற்சி செய்வது நல்லது. யோகா செய்வது கூட நல்லது.

வலி அதிகமாக இருப்பவர்கள் மருத்துவரை அணுகினால் ஹார்மோன் மாத்திரைகள் அளிப்பார்கள். இதன் மூலம் அறிகுறி தீவிரத்தை குறைக்கலாம்.

5/5 - (16 votes)

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Follow:
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »