தாய்மை உணரும் தருணங்களெல்லாம் ஒவ்வொரு பெண்களின் வாழ்விலும் வசந்தகாலமாகவே தோன்றும்.
அப்படிப்பட்ட உணர்வினை முழுதாக அனுபவிக்க சில கர்ப்பமாக இருந்தால் வெளிப்படும் கர்ப்ப அறிகுறிகள் (Pregnancy Symptoms) மூலம் நாம் அறிந்துகொள்ளலாம்.
எத்தனை நாளில் கர்ப்பம் தெரியும்?
ஒரு பெண் கருவுற்றிருக்கிறாரா இல்லையா என்பதை அறிந்துகொள்ள மாதவிடாய் சுழற்சிக்கு பிறகு குறைந்தது 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை ஆகும்.
கருவுற்றதற்கான அடிப்படை மாற்றங்கள் அதன் பிறகு தான் தெரியப்படும். கடைசி மாதவிடாய் சுழற்சிக்குப் பிறகு அடுத்த மாதவிடாய் சுழற்சியை எதிர்நோக்கும் பெண்கள் அந்த மாதவிடாய் காலத்தை எதிர்நோக்குவதற்குள்ளாகவே தான் கர்ப்ப அறிகுறிகள் (Pregnancy Symptoms) உணரப்படுவார்.
கர்ப்பம் கண்டுபிடிப்பது எப்படி?
இன்றைய கால கட்டத்தில் மருந்து கடைகளில் கிடைக்கும் டெஸ்ட் கிட்டை வாங்கி கர்ப்ப பரிசோதனை செய்யலாம்.
அதில் இரண்டு கோடுகள் வந்தால் நீங்கள் கர்பம் என்றும், ஒரு கோடு மட்டும் வந்தால் நீங்கள் கர்பம் இல்லை என்றும் அர்த்தம்.
ஆனால், முந்தைய காலங்களிலெல்லாம் இது போன்ற மெடிக்கல் கிட்கள் ஏதும் கிடையாது. இருந்தும், கர்ப்பத்தைக் கண்டறிய கையில் நாடி பிடித்து பார்த்து கண்டறிந்து கொண்டனர். இதுபோல கர்ப்பத்தை கண்டறிய பல வழிமுறைகள் உள்ளன.
சில வீட்டுப் பொருட்களை வைத்துக் கூட வீட்டில் கர்ப்பத்தை உறுதி செய்து கண்டறியலாம்.
கர்ப்பம் முதல் வாரம் எப்படி இருக்கும்? (1 Week Pregnancy Symptoms)
கர்ப்பம் முதல் வாரம் எந்த ஒரு மாற்றமும் நமக்கு தெரியவராது. ஏனென்றால் நமது உடல் நமக்கு தெரியாமலேயே கரு வளர உதவிக்கொண்டிருக்கும்.
மார்பகங்கள் மென்மையாக இருப்பதை போல் தோன்றும். வேறு எந்தவொரு அறிகுறிகளும் நமக்கு தெரியாது.
அறிகுறி இல்லாத கர்ப்பம் எப்படி இருக்கும்?
எல்லா பெண்களுக்கும் கர்ப்ப காலத்தின் போது ஒரே மாதிரியான அறிகுறிகள் (Pregnancy Symptoms) இருக்கும் என்று சொல்லி விட முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அறிகுறிகள் தென்படும்.
சிலர் கர்ப்பமாக இருப்பார்கள் ஆனால் எந்த ஒரு அறிகுறியும் இல்லை என்று கூறுவார்கள். அதற்கு காரணம் அவர்களின் உடல்நிலை மட்டுமே. அவர்களின் உடல்நிலை பொறுத்தே அறிகுறிகள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ தோன்றும்.
இது போன்ற அறிகுறி இல்லாமல் கர்ப்பம் என்பது எந்த ஒரு பாதிப்பும் இல்லை. அதேபோல் இது வெகு சிலருக்கு மட்டுமே இப்படி அறிகுறி இல்லாமல் காணப்படும்.
- கர்ப்ப காலத்தின்போது அறிகுறிகள் இல்லாத பெண்களுக்கு அதிக அளவு பசி உணர்வு ஏற்படும். இந்த அறிகுறிகள் ஹார்மோன் மாற்றத்தினால் தான் உண்டாகிறது.
- இது போன்ற அறிகுறி இல்லாத கர்ப்பம் எந்தவொரு பாதிப்பும் உண்டாக்காது.
- முதல் மூன்று மாதங்களுக்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லாத பெண்களுக்கு மூன்று மாதங்களுக்கு பிறகு சில அறிகுறிகள் தோன்றும். அதை அழகாய் அனுபவித்துக் கொள்ளுங்கள்.
- எப்போதும் இயல்பாக உணர்வீர்கள்.
- எந்தவொரு கர்ப்ப அறிகுறியும் இல்லாத பெண்கள் மிகவும் பாக்கியம் பெற்றவர்கள். தங்களுக்கு பிடித்த உணவை மனமகிழ்வோடு உண்டு தங்கள் கருவை ஆனந்தமாய் சுமப்பார்கள்.
- நீங்கள் உங்கள் மாதவிடாய் தவறும் போதே மருந்தகத்தில் கிடைக்கும் மெடிக்கல் கிட்டையோ அல்லது அருகில் உள்ள மருத்துவரையோ அணுகுவது நல்லது.
12 பொதுவான கர்ப்ப அறிகுறிகள்(Pregnancy Symptoms)
கர்ப்ப கால காலை சுகவீனம் (மார்னிங் சிக்னஸ்)
கர்ப்பத்தின் ஆரம்ப நாட்களில் பாதிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இதில் பசியின்மையம் சேர்த்து கொள்ளலாம்.
மார்னிங் சிக்னஸ் என்பது பெரும்பாலான பெண்களுக்கு படுக்கையை விட்டு எழும் போதிலிருந்தே ஆரம்பமாகும்.
சிலருக்கு இதுபோல மாலை நேரங்களிலோ அல்லது இரவு வேளைகளிலோ கூட ஏற்படலாம். அதேபோல் பல பெண்களுக்கு நாள் முழுவதும் கூட குமட்டல், வாந்தி, உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்படலாம்.
சிலருக்கு வாசனையிலும் ஒவ்வாமையை உண்டாக்கி குமட்டல் உணர்வை உண்டாக்கும். அதிகம் விரும்பிய உணவுகள் கூட பிடிக்காமல் போதும். அதேபோல் பிடிக்காத உணவுகளும் பிடித்து உட்கொள்ளவர்.
கர்ப்பிணிக்கு ஏற்படும் மார்பக மாற்றங்கள்:
கருத்தரிக்கும்போது ஒரு பெண், அவர்களது மார்பகத்திலே சில மாற்றங்களை அவர்களால் உணர முடியும்.
குழந்தைக்கு தேவையான தாய்பால் சுரப்பதற்கான அவள் உடலில் ஹார்மோன்கள் தயாராவதால், சில அசெளகரியமான உணர்வுகள் தோன்றும்.
திடீரென்று மார்பகங்கள் பெரிதாகி விடுவது போன்ற உணர்வும், சில நேரம் மென்மையான அல்லது கனத்த மார்பகங்களை கொண்டது போல் உணரப்படுவார்.
மார்பக காம்புகள் தடித்து, கருமையாக மாற ஆரம்பிக்கும். இந்த அறிகுறிகள் எல்லாம் பெண் கர்ப்பம் தரித்துவிட்டதை உறுதி செய்யக்கூடிய முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக உள்ளது.
மேலும் கர்ப்பிணிகள் மார்பக காம்புகளை பராமரிக்கும் முறை பற்றி தெரிந்து வைத்து கொள்வது அவசியம்.
கர்ப்ப கால அடிக்கடி சிறுநீர் கழித்தல்:
கர்ப்ப காலத்தின் ஆரம்ப கால அறிகுறிகளாக் இருப்பதில் ஒன்று கர்ப்பிணிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது.
கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் திரவங்கள் அதிகரித்து சிறுநீரை வெளியேற்றுவதில் அவர்களின் சிறுநீரகம் விரைவாக செயல்பட வழிவகுக்கிறது.
குறிப்பாக இரவு நேரத்தில் சீரான தூக்கத்தை அனுபவிக்க முடியாமல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம்.
ஆனால் சலிப்பு காட்டாமல் கர்ப்பிணி பெண் சிறுநீர் அடக்கி வைக்காமல் அவ்வப்போது சிறுநீர் கழிப்பது உடலுக்கும் மனதுக்கும் பலம் கொடுக்கும்.
கர்ப்ப கால திடீரென்று எடை அதிகரிப்பது:
கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பதும் பொதுவானது. சரிவர சாப்பிடாமல் இருந்தும், உடல் எடையானது திடீரென்று அதிகரித்தால், அதுவும் கர்ப்பமானதற்க்கான அறிகுறிகளுள் ஒன்று.
சாப்பிடுவதில் ஒவ்வாமை ஏற்படக்கூடும். கர்ப்ப காலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுவது தான் இதற்குக் காரணம்.
ஒருவருக்கு என்று சாப்பிடாமல் குழந்தைக்கும் சேர்த்து சாப்பிடும் போது ஊட்டடச்சத்துகள் அதிகம் தேவைப்படுவது இயல்பே.
கர்ப்ப கால வாந்தி:
சில நேரங்களில் பெண்களுக்கு உணவை நன்கு செரிக்க சாப்பிட்ட பின்னர் கூட வாந்தி வருவது போல் இருக்கும். இத்தகைய நிலை ஒவ்வொரு நாளும் ஏற்பட்டால், அதற்கு கர்ப்பமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
எந்த உணவு சாப்பிட்டாலும் ஒருவகை ஒவ்வாமையும் வரும் ஆனால் எல்லா பெண்களுக்கும் இத்தகைய அறிகுறிகள் ஏற்படாது.
கர்ப்பகால பசி:
கர்ப்ப காலத்தை எட்டியுள்ள பெண்கள் அதிக பசியை உணர்வார்கள். கருத்தரிப்பால் உடலில் ஏற்பட்டுள்ள ஹார்மோன் மாற்றம் மட்டும் ஊட்டச்சத்திற்கான தேவை அதிகரிப்பதால் பெண்ணுக்கு பசியும், தாகமும் அதிகரிக்கும்.
சிலருக்கு பசியின்மை, அஜீரண கோளாறு, மலச்சிக்கல், வயிற்றில் காற்று நிரம்பியது போன்ற அசெளகரியமான உணர்வும் தோன்றலாம்.
கர்ப்பகாலத்தில் கடுமையான தலைவலி:
கடுமையான தலைவலி அடிக்கடி விட்டு விட்டு தலைவலி வந்தால், அதுவும் கர்ப்பத்திற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.
கர்ப்பகாலத்தில் அடிவயிற்று வலி:
கர்ப்ப கால அடிவயிற்று வலி இன்றைய காலத்தில் சரியான நிலையில் உட்காராத காரணத்தினாலும், போதிய உடல் உழைப்பு இல்லாத காரணத்தினாலும் பலருக்கு முதுகு மற்றும் அடிவயிற்றில் வலி ஏற்படும்.
சில நேரங்களில் வயிற்று பிடிப்புக்கள் கூட ஏற்படும். அடிவயிற்றில் வலி அளவுக்கு அதிகமாக இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.
கர்ப்பகால காய்ச்சல்:
காய்ச்சல் சில பெண்களுக்கு ஹார்மோன்களின் மாற்றத்தினால் உடலின் வெப்பநிலையானது திடீரென்று அதிகரிக்க ஆரம்பிக்கும்.
ஆகவே நீங்கள் குழந்தை பெற்று கொள்ள முயற்சித்து கொண்டிருக்கும் போது, திடீரென்று காய்ச்சல் வந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள். இதுவும் கர்ப்பத்தின் அறிகுறிகளுள் ஒன்றாகும்.
கர்ப்பகாலத்தில் மயக்கம்:
மயக்கம் கர்பிணிப்பெண்களுக்கு பொதுவான ஒன்றே. கரு வளரும் போது பெண்களின் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும் அதில் ஒன்று மயக்கம்.
கர்ப்பகால முதுகுவலி:
கர்ப்பகால முதுகுவலி கர்ப்பிணிப் பெண்களிடையே மிகவும் பொதுவான புகார்களில் ஒன்றாகும். ஏனென்றால், குழந்தைக்கு ஏற்றவாறு கருப்பை விரிவடைகிறது.
கர்ப்பகாலத்தில் மாதவிடாய் தள்ளிப்போவது:
மாதவிடாய் தவறுதல் பல பெண்களுக்கு சீரான மாதவிடாய் சுழற்சியின்மையாலும் வரலாம். ஆனால் 10 நாட்களுக்கு மேற்ப்பட்டு போனால் அது கர்ப்பத்தின் அறிகுறியாக ஆரம்பிக்கும்.
எனவே சீரான மாதவிடாய் சுழற்சியில் இருந்து, திடீரென்று தவறினால் அதுவும் கர்ப்பத்திற்கான அறிகுறியாகும்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
கர்ப்ப காலத்தில் சில வலிகளும், சிரமங்களும் காண்பது இயல்பான ஒன்றே. எதையும் கடந்து குழந்தை பிறப்பெடுத்து வரும் வேலையில் அத்தனைக் கவலைகளும் ஓடிவிடும் அந்த நொடி நம்முள் கடத்தப்படும் இன்பத்திற்க்கு இணை ஏதும் இல்லை என்றே தோன்றும். எனவே கர்ப காலத்தை அணு அணுவாய் ரசித்து அந்த அசைவுகளில் தங்களை நகர்த்திப் பயணப்படுங்கள்.