கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் பயம் என்ன? (Pregnancy Fears in Tamil)

Deepthi Jammi
9 Min Read

பெண்கள் கர்ப்பத்தை உறுதி செய்தவுடன் அவர்கள் பிரசவத்தை நினைத்து கவலை கொள்கிறார்கள். மகிழ்ச்சியாக ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் இது குறித்த கவலையோடு இன்னும் பல அச்சங்களையும் எதிர்கொண்டு வருகிறார்கள்.

சில நேரங்களில் அவர்கள் எதிர்கொள்ளும் குழப்பங்கள் கூட பயமாக மாறலாம். அப்படி கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் பயம் (Pregnancy Fears in Tamil) என்னென்ன அதை எப்படி தவிர்க்கலாம் என்பதை பார்க்கலாம்.

கர்ப்ப காலத்தில் அச்சம் (Pregnancy Fears in Tamil) கவலை இரண்டுமே பொதுவானது. எல்லா கர்ப்பிணிகளுக்கும் வர கூடியது. இதை புறக்கணிக்க முடியாது ஆனால் மனதில் தெளிவான புரிதல் இருந்தால் இந்த குழப்பமே உண்டாகாது.

கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் பயம் (Pregnancy Fears in Tamil)

common pregnancy fears

கருச்சிதைவு பற்றிய அச்சம் (Pregnancy Fears in Tamil)

கருவுற்ற பெண்களுக்கு கர்ப்பத்தின் தொடக்க காலம் முதல் ஐந்து மாத காலம் வரை இருக்கும். பெரும்பாலும் ஆரோக்கியமான கர்ப்பம் உண்டாகிறது என்றாலும் 20% கருச்சிதைவு உண்டாக்குவதும் உண்டு. எனினும் இது கர்ப்பத்தின் முதல் சில வாரங்களுக்குள்ளேயே நடக்கும் .

மேலும் பல பெண்கள் தங்கள் கருத்தரித்திருக்கிறோமா இல்லையா என்பதையே அறிவதில்லை. இதனால் கர்ப்பத்தின் சில நாட்களில் கருச்சிதைவு ஆவதை உணர்வதில்லை. மாதவிடாய் சுழற்சி போன்று எதிர்கொள்கிறார்கள். கருத்தரித்த உடன் கருச்சிதைவு குறித்து கவலை (Pregnancy Fears in Tamil) வேண்டாம். பயமும் வேண்டாம்.

miscarriage fears

பொதுவாக 35 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு இது 10 முதல் 12% 35 வயது முதல் 39 வயதுடையவர்களுக்கு இது 18% 40 முதல் 44 வயதுடைய பெண்களுக்கு இது 34% ஆக இருக்கும். ஆனால் ஒரு பெண் தான் கருத்தரித்ததை கூட உணராத அளவுக்கு பல கர்ப்பங்கள் விரைவாக இழக்கப்படுகின்றன.

இன்னும் உறுதியளிக்கும் விஷயம் கருவின் இதயத்துடிப்பை காண அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்த பிறகு கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு 5% குறைவாக இருக்கும். அதனால் கருச்சிதைவு பற்றிய கவலையோ அச்சமோ வேண்டாம்.

கருச்சிதைவு அச்சம் (Pregnancy Fears in Tamil) நீங்க என்ன செய்யலாம்?

தடுக்க முடியாத குரோமோசோமால் அசாதராணங்கள் காரணமாக பெரும்பாலான கருச்சிதைவுகள் உண்டாகின்றன. அதனா உடற்பயிற்சி உடலுறவு அல்லது அதிக எடை தூக்குதல் கூட கருச்சிதைவை ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு என்பதால் இதை தவிருங்கள். அதே நேரம் இது குறித்த ஆய்வு இல்லை என்பதையும் கவனியுங்கள்.

நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காஃபி குடிப்பது கூட உங்கள் ஆபத்தை அதிகரிக்கலாம் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. மேலும் பாலியல் பரவும் நோய்கள் மற்றும் ஈறுநோய் உட்பட சில நோய்த்தொற்றுகள் உண்டாகலாம். எச்சரிக்கையோடு இருந்தால் அச்சம் தேவையில்லை.

பிறப்பு குறைபாடுகள் (78%)

பிறப்பு குறைபாடுகள் கொண்ட குழந்தைகள் ஸ்பைனா பிஃபிடா அல்லது டவுன் சிண்ட்ரோம் போன்ற பெரிய குறைபாடு இல்லாமல் பிறந்தாலும் குறைந்த சதவீத குழந்தைகள் இத்தகைய அறிகுறிகளோடு பிறக்கின்றன. கூடுதலாக கால்விரல்கள் மற்றும் சில இதய குறைபாடுகள் போன்றவை சிகிச்சையளிக்க கூடியவையாக இருந்தாலும் இந்த குறைபாட்டை கொண்டிருக்கின்றனர்.

Preterm labor

நீங்கள் அதிக ஆபத்துள்ள கர்ப்பத்தில் இல்லை என்றால் உங்களுக்கு பிறப்பு குறைபாடுள்ள குழந்தை பிறக்கும் வாய்ப்பு இன்னும் குறைவாக இருக்கலாம். அதாவது கர்ப்பத்தில் நீரிழிவு, கல்-கை வலிப்பு, புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் உடல் பருமன் ஆகியவை அடங்கும். எனினும் 70% பிறப்பு குறைபாடுகள் காரணம் தெரியவில்லை.

பிறப்பு குறைபாடுகள் தவிர்க்க முடியுமா?

கர்ப்பமாக முயற்சிக்கும் போதே இதற்கான செயல்பாடுகளை தொடங்கிவிட வேண்டும். பெரும்பாலான கட்டமைப்பு பிறப்பு குறைபாடுகள் உங்கள் மாதவிடாய் தவறிய ஒரு வாரத்தில் அல்லது இரண்டு வாரங்களில் ஏற்படுகின்றன. எனினும் நீங்கள் கர்ப்பமாக இருப்பதை அறியும் வரை காத்திருப்பது இந்த குறைபாடுகளை தடுக்க தாமதமாகலாம்.

ஸ்பைனா பிஃபிடா போன்ற நரம்புகுழாய் குறைபாடுகளுக்கான ஆபத்தை குறைக்க தினமும் குறைந்தது 400 மைக்ரோகிராம் ஃபோலிக் அமிலத்தை எடுத்துகொள்ளுங்கள். ஆரோக்கியமான சீரான உணவை எடுத்துகொள்ளுங்கள்.

மீன்களில் பாதரசம் இருப்பதை தவிக்கவும். மது அருந்துதல் பழக்கம் இருந்தால் அதை நிறுத்துங்கள். சிகரெட் புகைத்தல் , சுயமாக மருந்துகளை பயன்படுத்துதல் அரை வேக்காட்டு இறைச்சிகள், செல்லப்பிராணிகள் தொற்று, இரத்த சர்க்கரை அளவு போன்றவற்றில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அதிக மன அழுத்தம்

pregnancy stress

கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் குறித்து பயம் வேண்டாம். இது எல்லோருக்கும் வர கூடியது தான். வேலை குறித்து , வீட்டில் இருக்கும் பொருளாதார சூழல் போன்றவை எல்லாம் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு ஆபத்தை உண்டு செய்யாது. ஆனால் மனச்சோர்வுடன் சோர்ந்துகொண்டிருக்கும் போது மன அழுத்தமும் இணைந்தால் அது பாதிப்பை உண்டு செய்யலாம்.

இதனால் குறைப்பிரசவம் அல்லது குறைந்த எடை கொண்ட குழந்தை அல்லது நீண்ட கால நடத்தை சிக்கல்கள் கொண்ட குழந்தை ஆகியவற்றை பெறுவதற்கான ஆபத்தை உண்டு செய்யலாம்.

கர்ப்பிணிகள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் குடும்பத்தினருடன் கணவருடன், நெருங்கிய உறவினருடன் ஈடுபாடு காட்ட முடியவில்லை என்றால் உங்களுக்கு இந்த தாக்கம் உண்டு செய்யலாம்.

உங்கள் மன அழுத்தம் எந்த அளவை எட்டவில்லை என்றால் கர்ப்ப சிக்கல்களின் அடிப்படையில் அது குறிப்பிடத்தக்கதாக இருக்காது.

கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் குறைக்க என்ன செய்யலாம்?

தொடர்ந்து கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் அல்லது மனச்சோர்வுக்கு உங்களை ஆளாக்கும் விஷயங்கள் மீது கவனமாக இருங்கள். மன அழுத்த ஹார்மோன் அளவை குறைக்க தளர்வு பயிற்சிகள் மற்றும் மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்றுங்கள்.

கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் சுவாச பயிற்சிகளை நீங்கள் செய்யலாம். ஆழ்ந்த சுவாசத்தை பயிற்சி செய்யும் போது உங்களுக்குள் இருக்கும் கவலைகளை உள்ளிழுங்கள்.

மூச்சை வெளியேற்றும் போது மனதில் இருக்கும் எண்ணம் அல்லது கவலையை விடுப்பதாக நீங்கள் நினையுங்கள். சுவாசிக்கும் போது அதை வெளியேற்றுங்கள் என்னும் எண்ண அலையை முயற்சி செய்யுங்கள்.

குறைப்பிரசவம்

குறைப்பிரசவம் ஏற்படக்கூடாது என்பது குறித்து நியாயமான கவலை இருக்கவே செய்யும். முன்கூட்டியே பிறப்பு கவலை அளிக்கவே செய்யும். பெரும்பான்மையான குழந்தைகள் 37 வாரங்களுக்கு பிறகு பிறக்கின்றன. இது முழு காலமாக சொல்லப்படுகின்றது.

12% preterm labor

ஆனால் 12% பேர் குறைபிரசவத்தில் பிறக்கிறார்கள். இது அவர்களின் உடல்நல பிரச்சனைகள் ஆபத்தை அதிகரிக்கின்றது. ஆனால் அவர்களால் 70% பேர் 34 மற்றும் 37 வாரங்களுக்கு இடையில் பிறந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தாமத கால குழந்தைகள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு இன்னும் அதிக ஆபத்துகள் உள்ளன. ஆனால் அவை மிகச்சிறியவற்றை விட குறைவாக பாதிக்ககூடியவை.

குறைப்பிரசவத்துக்கான மிகப்பெரிய ஆபத்து காரணிகள் முந்தைய கால பிரசவம், பல மடங்கு கர்ப்பம் மற்றும் சில கருப்பை அல்லது கர்ப்பப்பை வாய் அசாதாரணங்கள் இன்னும் முன்கூட்டியே பிரசவிக்கும் பெண்களில் பாதி பேர் எந்த உயர் ஆபத்து வகையிலும் இல்லை என்றாலும் இதுவும் ஒரு காரணமே.

குறைப்பிரசவம் தவிர்க்க என்ன செய்யலாம்?

Prevention of Premature Births

உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்றவை முன்கூட்டிய ஆபத்து காரணிகள் அதனால் ஆரோக்கியமான எடையை பராமரிக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த அளவு சாதாரணமாக இருப்பதை உறுதிப்படுத்தவும்.

புகைப்பழக்கம், மருந்துகளை தவிர்க்கவும். நல்ல மகப்பேறுக்கு முந்தைய கவனிப்பை பெறுங்கள். தேவையான அனைத்து நோய்த்தடுப்பு மருந்துகள் மற்றும் ஏதேனும் நோய்த்தொற்றுகள் உடனடியாக சிகிச்சையளிக்கப்படுவதை உறுதிப்படுத்தவும்.

நோய்த்தொற்றுகள் குறைப்பிரசவத்துக்கு முக்கிய காரணமாகும். மேலும் தொடர்ந்து பெரிய மன அழுத்தம் குறைப்பிரசவத்தை தூண்டும். கடுமையான கவலை அல்லது மனச்சோர்வுக்கு சிகிச்சையளித்தால் குறைப்பிரசவம் தவிர்க்கப்படலாம்.

பிரசவ வலி

பெண்கள் கருத்தரித்த உடன் பிரசவ வலி குறித்த அச்சம் கொண்டிருப்பார்கள். ஆனால் வலி , பயம் இரண்டையும் கொண்டிருக்கும் போது அது சாதாரண வலியை கூட தீவிரமாக காட்டும். ஆனால் இது குறித்து நீங்கள் கவலை பட வேண்டாம்.

ஏனெனில் பிரசவக்காலத்துக்குரிய நிலைகளை அடிக்கடி மாற்றுவது அதற்குரிய செயல்பாடுகளை கவனித்து புரிந்துகொள்வது, உங்கள் வலியை குறைக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுவது போன்றவற்றை செய்யலாம். வலி மருந்துகள் எடுப்பதை ஊக்குவிக்க வேண்டாம்.

தாய்ப்பால் கவலை

breastfeeding fears

பெண் கருத்தரிக்கும் போது அது முதன் முதலில் இருக்கும் போது தாய்ப்பால் கொடுப்பது குறித்து உலகிலேயே இது கடினமான விஷயம். என்று நினைத்து பயப்படலாம். ஆனால் 90 % பெண்கள் வெற்றிகரமாக தாய்ப்பால் கொடுக்க முடியும்.

சிரமமின்றி கொடுக்க முடியும். பல இளந்தாய்மார்கள் தங்களுக்கு தீர்க்க முடியாத பிரச்சனை இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் தாய்ப்பால் சிரமமில்லாத ஒன்று.

தாய்ப்பால் பயத்திலிருந்து வெளியெறுதல்

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது மகிழ்ச்சியாக இருங்கள். தேவைப்பட்டால் பாலூட்டும் நிபுணரின் அறிவுரையை பெறுங்கள். அதனால் குழந்தை பிறப்பதற்கு முன்பு தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் அறிவுரையை பின்பற்றுங்கள். மற்ற பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதை பார்க்கும் போது அது எளிதாக இருக்கும்.

breastfeeding positions

மேலும் முலைக்காம்பு வலியால் தாய்ப்பால் கொடுக்கும் எண்ணத்தை சில பெண்கள் கைவிடுவார்கள். ஆனால் தாய்ப்பாலை முறையாக கொடுப்பதன் மூலம் வலி இல்லாமல் தவிர்க்க முடியும். தாய்ப்பால் கொடுக்கும் நிலைகளை அறிந்துகொள்ளுங்கள். மாறாக இது குறித்து அச்சமோ தயக்கமோ கொள்ள வேண்டாம்.

கர்ப்ப காலத்தில் எடை

pregnancy weight

கர்ப்ப காலத்தில் அதிக எடை உண்டாகும் இது இயல்பானது தான். இப்போதே குண்டாகிவிட்டால் என்று எடை கட்டுக்குள் இருக்கும் பெண்கள் பயம் கொள்வார்கள். அதோடு 41% பெண்களுக்கும் மேல் கர்ப்பம் தரிக்கும் முன் அதிக எடையுடன் கொண்டிருப்பார்கள் என்பது குறிப்பிடதக்கது.

கர்ப்பகால எடை தவிர்க்க

கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பதற்கான காரணங்களை கண்டறியுங்கள். ஆரோக்கியமான எடை அதிகரிப்பு நல்லது. ஆனால் அளவாக எடையை கொண்டிருக்க செய்ய வேண்டியதை மட்டும் தவிர்க்க வேண்டாம்.

pregnancy weight loss tips

கர்ப்பிணி பெண் இயல்பாகவே எடை பருமன் அதிகம் கொண்டிருந்தால் இயல்பாக 25 முதல் 35 பவுண்டுகள் வரை உடல் எடை அதிகரிக்கும். எடை குறைவாக இருந்தால் 28 முதல் 40 பவுண்டுகள் வரை பெறுங்கள். சிலருக்கு 15 முதல் 25 பவுண்டுகள் அதிகரிக்கும். எனினும் உங்கள் பிஎம் ஐ க்கேற்ப எடை எவ்வளவு வரை இருக்க வேண்டும் என்பதை மருத்துவரே முடிவு செய்வார். அதற்கேற்ப உடல் எடை அதிகரித்தால் போதுமானது.

கர்ப்பகாலத்தில் சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள். கடல் மீன்கள் பாதரசம் இல்லாத மீன்கள் சேர்த்துவருவது எடையை அதிகரிக்காது. பிரசவத்துக்கு பிறகு எடையை குறைக்க உதவும். மேலும் நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது எடை இழப்பு சாத்தியமாகும் என்பதால் நீங்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. பிறந்த குழந்தைக்கு முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம்.

கனமான பொருள்கள் தூக்கினால் குறைப்பிரசவம்

கருவுற்ற உடன் பெண்கள் அதிக தூக்கம் தேவைப்படும் வேலையை செய்வது கனமான பொருள்களை தூக்குவது குறைப்பிரசவ அபாயத்தை அதிகரிக்க கூடும் என்று சொல்ல சில சான்றுகள் இருந்தாலும் ஆராய்ச்சிகள் இது பற்றி தெளிவாக இல்லை. அதனால் பயம் வேண்டாம்.

நீங்கள் குறைப்பிரசவம் ஏற்படும் ஆபத்தில் இருந்தால் நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்க அறிவுறுத்தப்படலாம். எதை பற்றியும் கவலைப்படாமல் அடிக்கடி ஓய்வு எடுங்கள். மனதில் அச்சம் வேண்டாம்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

சீரான இடைவெளியில் மருத்துவரை அணுகி பரிசோதியுங்கள். மருத்துவரின் அறிவுரைப்படி பரிசோதனை செய்யுங்கள். அச்சமோ குழப்பமோ எப்போதுமே தவிருங்கள். மனதை அமைதியாக வைத்திருங்கள். பிரசவம் சுகமாக நடக்கும்.

5/5 - (1 vote)

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Follow:
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »