கர்ப்ப காலம் தலை முதல் பாதம் வரை உடல் பல அசெளகரியங்களை எதிர்கொள்ள செய்யும். ஒவ்வொரு ட்ரைமெஸ்டர் காலங்களிலும் ஒவ்வொரு உபாதை இருக்கும்.
அவை மிதமானதாகவோ அல்லது தீவிரமாகவோ இருக்கலாம். பல கர்ப்ப அறிகுறிகளில் கர்ப்ப கால தலைச்சுற்றல் (Dizziness During Pregnancy in Tamil) என்பதும் ஒன்று. இவை மிதமாகவோ அல்லது தீவிரமாகவோ இருக்கும்.
கர்ப்ப காலத்தில் தலைச்சுற்றல் (Dizziness During Pregnancy in Tamil) எல்லோருக்கும் ஏற்படுமா?
கர்ப்ப காலத்தில் தலைச்சுற்றல் (Dizziness During Pregnancy in Tamil) என்பது பொதுவானது. கர்ப்பத்தின் ஆரம்ப காலம் முதல் இறுதி காலம் வரை தலைச்சுற்றல் இருக்கவே செய்யும்.
இது நின்றிருக்கும் இடத்தில் தலைச்சுற்றல் அறை சுழல்வதை போன்ற உணர்வை உண்டு செய்யலாம். இது வெர்டிகோ அல்லது மயக்க நிலை ஆகும். இது கர்ப்பிணியை பலவீனமாக உணர செய்யலாம்.
எனினும் இது கவலைப்பட கூடிய விஷயமல்ல. கர்ப்பிணி மயக்கம் நிலையை உணரும் போதெல்லாம் படுத்துகொண்டால் அந்த அறிகுறிகள் குறையும். சூடான குளியலுக்கு மாற்றாக வெதுவெதுப்பான குளியல் குளிக்கலாம். வேகமாக எழுந்து நிற்காமல் பொறுமையாக எழுந்து நிற்கலாம்.
தலைச்சுற்றல் பொதுவானது (Dizziness During Pregnancy in Tamil) என்றாலும் இது தனித்து வராமல் உடன் மற்ற அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்பதை கவனியுங்கள்.
ஏனெனில் மூச்சுத்திணறல், மங்கலான பார்வை மற்றும் பலவீனமான பேச்சு போன்றவை இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். சில நேரங்களில் இது உடனடி மருத்துவ கவனிப்பு தேவையாக கூட இருக்கலாம்.
கர்ப்பத்தில் முதல் மூன்று மாதங்களில் (Dizziness During Early Pregnancy in Tamil) தலைச்சுற்றல் ஏன் உண்டாகிறது?
ஹார்மோன் மாற்றங்கள்
கருவுற்றவுடன் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க ஹார்மோன் அளவுகள் மாறுகின்றன. இது குழந்தை கருப்பையில் வளர உதவுகிறது. அதிகரித்த இரத்த ஓட்டம் உங்கள் இரத்த அழுத்தத்தை மாற்றும்.
பெரும்பாலும் கர்ப்பகாலத்தில் இரத்த அழுத்தம் குறையும். இது ஹைபோடென்ஷன் அல்லது குறைந்த இரத்த அழுத்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
குறைந்த இரத்த அழுத்தம் தலைச்சுற்றலை உண்டு செய்யலாம். படுத்திருக்கும் போது அல்லது உட்கார்ந்திருக்கும் போது எழுந்து நிற்கும் போது இதை உணரலாம்.
உயர் இரத்த அழுத்தத்தை கண்காணிக்க உங்கள் மருத்துவர் முகப்பேறுக்கு முந்தைய சந்திப்புகளில் இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பார். குறைந்த இரத்த அழுத்தம் கவலைக்குரியது அல்ல. பிரசவத்துக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும்.
Hyperemesis gravidarum
இந்நிலையில் அதீத குமட்டல் அல்லது வாந்தி இருந்தால் தலைச்சுற்றல் உண்டாகலாம். இது ஹைபிரேமிசிஸ் கிராவிடரம் என்று அழைக்கப்படுகிறது. ஹார்மோன் அளவுகள் மாறுவதால் இது பெரும்பாலும் கர்ப்பத்தின் ஆரம்பத்தில் நிகழ்கிறது.
இந்நிலையில் உணவையோ தண்ணீரையோ எடுக்க முடியாமல் போகலாம். இதன் விளைவாக தலைச்சுற்றல் மற்றும் எடை இழப்பு ஏற்படலாம். இந்நிலையில் சிகிச்சையளிக்க மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
இடம் மாறிய கர்ப்பம் (எக்டோபிக் கர்ப்பம்)
எக்டோபிக் கர்ப்பத்தின் விளைவாக இவை உண்டாகலாம். கருவுற்ற முட்டை கருப்பைக்கு வெளியே உள்ள உங்கள் இனப்பெருக்க அமைப்பில் தன்னை பொறுத்தும் போது நிகழ்கிறது.
இந்நிலையில் கரு ஃப்லோபியன் குழாய்களில் பொருத்துகிறது.
இந்நிலையில் கர்ப்பம் சாத்தியமற்றது. தலைச்சுற்றல் மற்றும் வயிற்றில் வலி பிறப்புறுப்பு இரத்தப்போக்கு போன்றவை உண்டாகலாம். இந்த கருவுற்ற முட்டையை அகற்ற மருத்துவர் சிகிச்சையளிப்பார்.
இரண்டாவது ட்ரைமெஸ்டரில் தலைச்சுற்றல் ஏன் ஏற்படுகிறது?
இரண்டாவது மூன்று மாதங்களிலும் தலைச்சுற்றல் வரும்.
முதல் மூன்று மாதங்களில் அனுபவிக்கும் தலைச்சுற்றல் போன்று இதற்கும் அந்த காரணங்கள் இருக்கலாம. அதனோடு கர்ப்பம் முன்னேறும் போது இன்னும் பிற நிலைமைகள் ஏற்படலாம்.
கருப்பையில் அழுத்தம்
வளர்ந்து வரும் கருப்பையின் அழுத்தம் இரத்த நாளங்களில் அழுத்தும் போது உங்களுக்கு மயக்கம் உண்டாகலாம். இது இரண்டாவது அல்லது மூன்றாவது மூன்று மாதங்களில் ஏற்படலாம். குழந்தை வளர வளர தலைச்சுற்றல் பொதுவானது.
படுக்கும் போது மல்லாந்து படுப்பதால் தலைச்சுற்றல் அதிகரிக்கும்.
ஏனென்றால் கர்ப்பத்தின் பிற்பகுதியில் முதுகில் படுத்துகொள்வதால் கருப்பை விரிவடைந்து உங்கள் கீழ் முனைகளிலிருந்து இதயத்துக்கு இரத்த ஓட்டத்தை தடுக்கலாம்.
இது தலைச்சுற்றல் மற்றும் பிற தொடர்புடைய அறிகுறிகளை உண்டு செய்யலாம். இதை தவிர்க்க பக்கவாட்டில் தூங்கி ஓய்வெடுக்கலாம்.
கர்ப்பகால நீரிழிவு
கர்ப்ப காலத்தில் நீரிழிவு இருக்கும் போது திடீரென்று இரத்த சர்க்கரை அளவு குறைந்தால் தலைச்சுற்றல் எதிர்கொள்ளலாம்.
கர்ப்பத்தின் 24 முதல் 28 வாரங்களுக்கு இடையில் கர்ப்பகால நீரிழிவு பரிசோதனையை உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார். இந்த நிலை கண்டால் சர்க்கரையை தவறாமல் கண்காணிக்க வேண்டும்.
மூன்றாவது ட்ரைமெஸ்டரில் தலைச்சுற்றல் ஏன் ஏற்படுகிறது?
மூன்றாவது மூன்று மாதங்களில் தலைச்சுற்றல் முதல் மற்றும் இரண்டாவது ட்ரைமெஸ்டர் காலங்கள் போன்று மூன்றாவது ட்ரைமெஸ்டர் காலங்களிலும் பல காரணங்கள் உள்ளன. மேலும் கர்ப்பத்தின் பிற்பகுதியிலும் அதே அறிகுறியை உண்டு செய்யலாம்.
கர்ப்பத்தின் மூன்றாவது ட்ரைமெஸ்டர் காலங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் மூன்றாவது மூன்று மாதங்களில் தலைச்சுற்றலால் மயங்கி விழுவதை தவிர்க்க மயக்க அறிகுறிகளை கவனிக்க வேண்டும்.
இவையெல்லாம் கர்ப்பகாலத்தில் ஒவ்வொரு ட்ரைமெஸ்டரிலும் தலைச்சுற்றல் வருவதற்கான காரணங்கள்.
சில பெண்களுக்கு கர்ப்பகாலம் முழுவதும் தலைச்சுற்றல் இருக்கும். அதற்கு என்ன காரணங்கள் என்பதையும் அறிவோம்.
கர்ப்ப காலம் முழுவதும் தலைச்சுற்றல் எப்போது வேண்டுமானாலும் உண்டாகலாம். இவை குறிப்பிட்ட அந்த மூன்று மாதங்களுடன் இணைக்கப்படாதவை.
இரத்த சோகை
கர்ப்ப காலத்தில் இருக்கும் போது ஆரோக்கியமான சிவப்பணுக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்.
இதனால் சத்து குறைபாடும், இரத்த சோகையும் உண்டாகிறது.
உடலில் போதுமான அளவு இரும்புச்சத்தும் ஃபோலிக் அமிலமும் இருந்தால் இந்நிலை வராது. இவை குறைபாடு இருக்கும் போது இது உண்டாகிறது.
தலைச்சுற்றுதலுடன் கூடுதலாக இரத்த சோகையும் சேரும் போது உங்களை சோர்வடைய செய்யலாம். அப்போது வெளிறியதாக அல்லது மூச்சுத்திணறலை உணரலாம்.
கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் எப்போது வேண்டுமானாலும் இரத்த சோகையை உண்டாக்கலாம்.
அப்படி செய்தால் இரும்பின் அளவை கண்காணிக்க பரிசோதனை தேவைப்படும். மேலும் கர்ப்பிணிக்கு இரும்பு அல்லது ஃபோலிக் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும்.
நீரிழப்பு
கர்ப்பத்தின் எப்போது வேண்டுமானாலும் நீரிழப்பு உண்டாகலாம். குமட்டல் அல்லது வாந்தியெடுத்தல் முதல் மூன்று மாதங்களில் நீங்கள் அனுபவிக்கலாம்.
கர்ப்பத்தின் பிற்பகுதியில் குமட்டல் இருக்கும் போது உடலுக்கு தண்ணீர் அதிகம் தேவைப்படும்.
கர்ப்பிணிகள் தொடக்கத்தில் நீங்கள் ஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும்.
உணவில் அதிக கலோரிகளை சேர்க்கும் போது தண்ணீர் அளவை அதிகரிக்கவும்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது மூன்று மாதங்களில் நாளைக்கு 300 மில்லிலிட்டர்கள் நீர் உட்கொள்வதை அதிகரிக்கலாம்.
வாசோவாகல் மயக்கம் (Vasovagal Syncope)
(Vasovagal syncope என்பது உங்கள் வாகஸ் நரம்பு உங்கள் சுற்றோட்ட அமைப்பை பாதிக்கிறது. சின்கோப் என்றால் மயக்கம் என்று அர்த்தம்) சிலருக்கு இருமல், சிறுநீர் கழிக்கும் போது குடல் இயக்கம் ஏற்படும் போது மயக்கம் உண்டாகலாம்.
இந்த செயல்கள் இரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பை குறைத்து தலைச்சுற்றல் மற்றும் மயக்கத்தை உண்டு செய்யும். நீரிழப்பு, பதட்டம் மற்றும் வலி ஆகியவை தூண்டுதலாக இருக்கலாம்.
கர்ப்பிணி பெண்களுக்கு வாசோவகல் சின்கோப் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
இந்நிலையில் அவர்களுக்கு தலைச்சுற்றல் தவிர அதிக வெப்பம், வெளிறிப்போதல், வியர்த்தல், குமட்டல், கொட்டாவி விடுதல் போன்ற எச்சரிக்கை அறிகுறிகளும் உண்டாகும்.
இந்த அறிகுறிகளில் கவனம் செலுத்துங்கள். மயக்கம் ஏற்படாமல் இருக்க உடனடியாக படுத்துகொள்வது நன்மை பயக்கும்.
பதட்டம்
நீங்கள் பதட்டமாக உணரும் போது ஹைப்பர்வெண்டிலேட் மற்றும் இலேசான தலைவலி எதிர்கொள்ளலாம். மன அழுத்தத்தை குறைப்பதற்கான வழிகளில் ஈடுபடும் போது தலைச்சுற்றல் கட்டுப்படுத்தலாம்.
கர்ப்பகாலத்தில் தலைச்சுற்றல் (Dizziness During Pregnancy in Tamil) வந்தால் என்ன செய்வது?
மயக்கம் வர ஆரம்பிக்கும்போதே படுத்துவிட வேண்டும். ஒருபக்கமாக பக்கவாட்டில் படுத்துகொள்வது உடல் மற்றும் மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம். இதனால் மயக்கமடைவது தடுக்கலாம். தலைச்சுற்றல் குறையலாம்.
படுக்க முடியாத நிலையில் இருந்தால் கீழே விழாமல் இருக்க உட்கார்ந்து கொள்ளுங்கள்.
தலையை உங்கள் முழங்கால்களுக்கு இடையில் வைக்க முடிந்தால் (கர்ப்பிணிகள் இதை செய்ய முடியாது. ஆரம்ப கட்டத்தில் இதை செய்யலாம்) வைத்துகொள்ளலாம்.
வண்டி ஓட்டும் போது தலைச்சுற்றல் இருந்தால் உடனடியாக வண்டி ஓட்டுவதை நிறுத்துங்கள்.
நீண்ட நேரம் நிற்பதை கட்டுப்படுத்துங்கள். சுழற்சியை அதிகரிக்க நீங்கள் நிற்கும் போது தொடர்ந்து நகர்வதை உறுதி செய்யுங்கள். உட்கார்ந்து அல்லது படுத்திருக்கும் உங்கள் நேரத்தை அதிகரியுங்கள்.
இரத்த சர்க்கரை அளவு குறைவதை தடுக்க ஆரோக்கியமான உணவை அடிக்கடி எடுத்துகொள்ளுங்கள்.
நீரிழப்பு தடுக்க அதிக தண்ணீர் குடியுங்கள்.
தலைச்சுற்றல் வரும் அறிகுறி உணர்ந்தால் ஆழ்ந்த சுவாசம், ஜன்னல்களை திறப்பது, புதிய காற்றை பெறுவது, இறுக்கமான ஆடைகளை தளர்த்துவது போன்றவற்றை செய்யுங்கள்.
தலைச்சுற்றல் அறிகுறிக்கு எப்போது மருத்துவரை அணுகுவது?
பசி அல்லது வேகமாக எழும்போது மயக்க நிலை உணர்வது பொதுவானது. ஆனால் அடிக்கடி மயக்கம், தலைச்சுற்றல் அல்லது வேறு ஏதேனும் கவலைகள் இருந்தால் மருத்துவரை சந்தியுங்கள்.
- கடுமையான தலைவலி
- மங்கலான பார்வை
- பலவீனமான பேச்சு
- படபடப்பு
- உணர்வின்மை
- கூச்சம்
- நெஞ்சு வலி
- மூச்சுத்திணறல்
- பிறப்புறுப்பு இரத்தப்போக்கு
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
மேற்கண்ட அறிகுறிகளோடு அடிக்கடி தலைச்சுற்றல் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ உதவியை பெறுங்கள்.