அறுவை சிகிச்சை செய்து உடல் எடையை குறைக்க முடியுமா?

Deepthi Jammi
9 Min Read

இன்றைய காலகட்டத்தில் பலரின் பிரச்சனையாக இருப்பது அதிகமான உடல் எடை. என்னதான் முறையான டயட் பின்பற்றினாலும், உடற்பயிற்சி செய்தாலும், சாப்பிடாமலே கூட இருந்தாலும் உடல் எடை குறைவதில் முன்னேற்றமே இருக்காது. அதற்கு ஒவ்வொருவரின் உடலமைப்பை பொறுத்து பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

Contents
யாரெல்லாம் அதிக எடை உள்ளவர்கள்?பி.எம்.ஐ 30 முதல் 40 வரை இருந்தால் உண்டாகும் பாதிப்புகள்!பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை (Bariatric Surgery) என்றால் என்ன?பேரியாட்ரிக் அறுவை (Bariatric Surgery) சிகிச்சை வகைகள்ஸ்லீவ் கேஸ்ட்ரெக்டமி (Sleeve Gastrectomy)ஸ்லீவ் கேஸ்ட்ரெக்டமி நன்மைகள்ஸ்லீவ் கேஸ்ட்ரெக்டமி பக்கவிளைவுகள்கேஸ்ட்ரிக் பேண்டிங் (Gastric Banding)கேஸ்ட்ரிக் பேண்டிங் சிகிச்சையின் நன்மைகள்கேஸ்ட்ரிக் பேண்டிங் சிகிச்சையின் பக்கவிளைவுகள்கேஸ்ட்ரிக் பைபாஸ் அறுவை சிகிச்சை (Gastric bypass surgery)கேஸ்ட்ரிக் பைபாஸ் அறுவை சிகிச்சை நன்மைகள்கேஸ்ட்ரிக் பைபாஸ் அறுவை சிகிச்சை பக்கவிளைவுகள்இன்டராகேஸ்ட்ரிக் பலூன் பிளேஸ்மென்ட் (Intragastric Balloon Placement)அறுவைசிகிச்சைக்கு முன்பு செய்யவேண்டியவைஅறுவை சிகிச்சைக்கு பின்பு உணவுகள்சாஃப்ட் சாலிட் உணவுகள் (Soft Solid Foods)தவிர்க்க வேண்டிய உணவுகள்அறுவைசிகிச்சையின் சிக்கல்கள்..தற்காலிக சிக்கல்கள்..நீண்டகால சிக்கல்கள்..

ஆனால், அவர்களுக்காகவே இன்னொரு வழியும் இருக்கிறது. அதுதான் பேரியாட்ரிக் சர்ஜரி. Bariatric Surgery என்று சொல்லக் கூடிய அறுவை சிகிச்சை தெரபி இது. ஆனால், இதுவும் கூட அனைவருக்கும் செய்ய முடியாது. இந்த அறுவை சிகிச்சைக்கென்று ஒரு சில அளவுகோல்கள் உள்ளது. அதற்கு பொருந்தி, இவருக்கு இது உதவும் என்று மருத்துவர்கள் முடிவு செய்யும் நோயாளிகளுக்கு மட்டுமே இந்த அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

அப்படி பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை (Bariatric Surgery) என்றால் என்ன? யாருக்கெல்லாம் அதை செய்யலாம்? இந்த அறுவை சிகிச்சையில் என்ன என்ன வகைகள் உள்ளது? அறுவை சிகிச்சைக்கு பிறகான குணமாகும் காலம், அறுவை சிகிச்சையில் உள்ள சிக்கல்கள், பக்கவிளைவுகள் என்ன என்பதை விளக்கமாக பார்க்கலாம்.

யாரெல்லாம் அதிக எடை உள்ளவர்கள்?

ஒவ்வொருவருக்கும் தங்கள் எடை குறித்து ஒரு கருத்து உண்டு. அதனால், சரியான எடையில் இருப்பவர்கள் கூட தங்களை அதிக எடை கொண்டவர்களாக நினைத்து கொண்டு அதை குறைக்க ஏதாவது செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், நீங்கள் அதிக எடையா இல்லையா என்பதை உங்கள் BMI அளவை வைத்து கண்டுபிடிக்கலாம்.

பிஎம்ஐ என்பது உங்கள் உயரம் மற்றும் எடையின் அளவீட்டு விகித நிலை தான். பிஎம்ஐ அளவு 20 முதல் 25 வரை இருப்பது நார்மல். அதற்கு மேல் 26 முதல் 30 வரை செல்வது நார்மலை விட கூடுதல் எடை. இதற்கு மேல் இருப்பவர்கள் அனைவருமே கூடுதல் எடை உடையவர்கள்தான்.

normal bmi

குறிப்பாக பிஎம்ஐ 40க்கு மேல் இருப்பவர்கள் அதிக எடை கொண்டவர்கள். இந்த பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்கு தகுதியானவர்கள் இவர்களே. இவர்கள் என்னதான் உடற்பயிற்சி டயட் என்று பின்பற்றியிருந்தாலும் இவர்களின் உடல் எடை குறைந்திருக்காது.

பி.எம்.ஐ 30 முதல் 40 வரை இருந்தால் உண்டாகும் பாதிப்புகள்!

bmi for normal

அதே போல் பிஎம்ஐ 30 முதல் 40க்குள் இருப்பவர்களுக்கு உடல் எடை அதிகமாக இருப்பதால் சில சிக்கல்கள் ஏற்படும். இவர்களுக்கு சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு, rheumatoid arthritis , obstructive sleep apnea ஆகியவை ஏற்படும். குறிப்பாக இந்த obstructive sleep apnea இருப்பவர்கள் அடிவயிற்று எடை அதிகமாக இருப்பதால் தூங்கும்போது மூச்சு விட சிரமப்படுதல், குறட்டை விடுதல், ஏதோ அடைப்பது போல் உணர்வு வந்து இரவில் விழித்தல் மற்றும் இரவில் தூங்கும்போதே இதயத்துடிப்பும் மூச்சும் நிற்பது போல தோன்றும்.

இந்த அனைத்து சிக்கல்களும் தனித்தனியாக கவனிக்க பட வேண்டிய பிரச்சனைகள். எனவே, உங்களுக்கு பிஎம்ஐ 40க்கு மேல் இருந்தாலோ அல்லது 30 முதல் 35க்குள் இருந்து இந்த சிக்கல்களும் இருந்தாலோ உங்கள் மருத்துவர் இந்த அறுவை சிகிச்சையை பரிந்துரைக்கலாம்.

பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை (Bariatric Surgery) என்றால் என்ன?

நாம் எடுத்துகொள்ளும் உணவு வாய் வழியாக தொண்டைக்குள் இறங்கி உணவுக்குழாய்க்குள் இறங்கும். அங்கு உணவுகள் உடைக்கப்பட்டு அதன் சத்துக்கள் குடல் வழியாக உறிஞ்சப்பட்டு எஞ்சியிருப்பவை மலக்கழிவாக வெளியேறும். இது குறித்து விளக்கமாக செரிமான மண்டலம் குறித்த கட்டுரையில் கொடுத்திருக்கிறோம்.

இப்போது இந்த சர்ஜரி குறித்த சிகிச்சைக்கு வருவோம். எந்த ஒரு சர்ஜரியையும் உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால் நமது உணவுகளின் அளவை குறைக்க வேண்டும். உணவ அளவுகளை குறைக்க வேண்டுமென்றால் வயிறு அதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதற்கு வயிற்றின் அளவை சுருக்க வேண்டும்.

அப்போதுதான் குறைந்த உணவு எடுத்துகொண்டாலே வயிறால் நிறைந்த உணர்வை பெற முடியும். எளிய மொழியில் சொல்ல வேண்டுமென்றால் இதுதான் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையின் கோட்பாடு. இந்த பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையில் (Bariatric Surgery) மூன்று வகைகளும் கூட உள்ளன. இந்த மூன்று பற்றியும் அதன் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

பேரியாட்ரிக் அறுவை (Bariatric Surgery) சிகிச்சை வகைகள்

பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையை (Bariatric Surgery) பொறுத்தவரை முழுக்க முழுக்க அனஸ்தீஸியா கொடுக்கப்பட்டு மயக்க நிலையில்தான் செய்யப்படும். பெரும்பாலும் Laparoscopy முறையில்தான் செய்யப்படுகிறது. காரணம், இதன் மூலம் குணமடையும் காலம் வேகமானதாக இருக்கும். முன்பே சொன்னது போல் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையில் மூன்று வகைகள் உள்ளன.

Bariatric Surgery Types

ஸ்லீவ் கேஸ்ட்ரெக்டமி (Sleeve Gastrectomy)

Gastric என்றாலே வயிறு என்று அர்த்தம். ectomy என்றால் ரிமூவ் செய்வது, Sleeve என்றால் வெட்டி எடுத்தல் என்ற பொருள்படும் . இந்த Sleeve Gastrectomy நிலையில் வயிற்றில் 80% பகுதியை வெட்டி எடுத்து விட்டு மீதி உள்ள 20% பகுதியை தையல் போட்டு விடுவார்கள். இதன் அடிப்படையே பெரிதாக இருக்கும் வயிற்றை சிறிதாக மாற்றுதல். அப்படி உங்கள் வயிறு சிறிதாக மாறிவிட்டால் உங்கள் உணவு உட்கொள்ளும் அளவும் குறைந்துவிடும். உங்கள் வயிற்றுப்பகுதியில் சுரக்கும் Ghrelin என்ற ஹார்மோனும் கூட குறைவாகவே சுரக்கும்.

ஸ்லீவ் கேஸ்ட்ரெக்டமி நன்மைகள்

  • அதிக உடல் எடை குறைய வாய்ப்பு உள்ளது
  • மிக குறைந்த நாட்களே மருத்துவமனையில் இருக்க வேண்டிய தேவை வரும்
  • மிக எளிய மற்றும் மற்ற வகைகளோடு ஒப்பிடும் போது இது ஒரு சிறிய அறுவை சிகிச்சையே..

ஸ்லீவ் கேஸ்ட்ரெக்டமி பக்கவிளைவுகள்

  • ஒருமுறை வயிற்றை வெட்டி எடுத்து விட்டால் மீண்டும் பொருத்தமுடியாது. இது ஒரு irreversible அறுவை சிகிச்சை
  • வயிறு உறிஞ்சக்கூடிய நியூட்ரிஷன்ஸ், ஜூஸ்கள் அனைத்தும் உறிஞ்சப்படுவதற்குள் வெளியேறி விடும். இதனால் சிலருக்கு நியூட்ரிஷியன் குறைபாடு உண்டு செய்யலாம்.
  • அமில எதிர்வினை(Acid Reflux) ஏற்படும் வாய்ப்புண்டு.

கேஸ்ட்ரிக் பேண்டிங் (Gastric Banding)

இந்த முறையில் நீங்கள் எப்படி தலைமுடியை கட்டி பேண்ட் போடுவீர்களா அதேபோல் பேண்ட் போன்ற அமைப்பை பயன்படுத்தி வயிற்றுப்பகுதியை கட்டி ஒரு பைப்பை உள்ளிருந்து வெளியே பொருத்தி விடுவார்கள். அதன்மூலம் நீங்கள் அந்த பேண்டை சுருக்குதல் மற்றும் விரித்தல் போன்றவற்றை செய்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு முறை மருத்துவரை அணுகும்போதும் உங்களின் உடல் எடை குறைவதை பொறுத்து உங்கள் மருத்துவர் இந்த பேண்டை செலைன் பயன்படுத்தி சுருக்குதல் அல்லது விரித்தல் ஆகியவற்றை செய்வார். முன்பு பார்த்த அறுவை சிகிச்சை வகையில் வயிற்றை வெட்டி எடுத்தது போல் இல்லாமல், இதில் நாம் வயிற்றை கட்டிதான் போடுகிறோம். இதன் மூலம் உள்ளே வரும் உணவின் அளவு குறையும். கொஞ்சம் சாப்பிட்ட உடனே நிறைவான உணர்வு ஏற்படும்.

கேஸ்ட்ரிக் பேண்டிங் சிகிச்சையின் நன்மைகள்

  • இது reversale அறுவை சிகிச்சை என்பதால் உங்கள் வயிறு பத்திரமாக உங்களிடமே இருக்கும்.
  • இது மேஜர் அறுவை சிகிச்சை இல்லை என்பதால் மருத்துவமனையில் இருக்கும் காலமும் மிக குறைவு.

கேஸ்ட்ரிக் பேண்டிங் சிகிச்சையின் பக்கவிளைவுகள்

  • உடல் எடை குறைப்பு அவ்வளவு வேகமாகவும், திறன் மிக்கதாகவும் இருக்காது.
  • இதில் வயிறு வெட்டி எடுக்கப்படவில்லை என்றாலும் இதன் அளவு குறைவாக இருக்கும். இதனால் நியூட்ரிஷன் உறிஞ்சுதல் குறையும் வாய்ப்பும் உள்ளது.

கேஸ்ட்ரிக் பைபாஸ் அறுவை சிகிச்சை (Gastric bypass surgery)

இதுதான் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையின் (Bariatric Surgery) முக்கியமான சிகிச்சை. இதற்கு பெயர் ROUX – EN – Y bypass surgery என்று அழைக்கிறோம். இதில் மேல் வயிற்று பகுதியின் சிறு பகுதியை மட்டும் வெட்டி நேரடியாக குடல்பகுதியோடு இணைத்து விடுவார்கள். இதன் மூலம் நீங்கள் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் நேரடியாக குடலுக்கு சென்று ஜீரணம் ஆகி விடும். அதே போல் நியூட்ரிஷன்களும் நேரடியாக குடலுக்கு சென்று விடும். இதனால் உணவின் அளவு இயல்பாகவே குறைந்துவிடும்.

கேஸ்ட்ரிக் பைபாஸ் அறுவை சிகிச்சை நன்மைகள்

குறிப்பிடத்தகுந்த உடல் எடை குறைவு ஏற்படும்.

கேஸ்ட்ரிக் பைபாஸ் அறுவை சிகிச்சை பக்கவிளைவுகள்

  • வைட்டமின்கள் அதிகமாக குறைய வாய்ப்புண்டு
  • மருத்துவமனையில் இருக்கும் காலமும் அதிகம்
  • அறுவை சிகிச்சையை ரிவர்ஸ் செய்வது கடினம்

இன்டராகேஸ்ட்ரிக் பலூன் பிளேஸ்மென்ட் (Intragastric Balloon Placement)

மேல் சொன்ன மூன்று முறைகள் தாண்டி இது உங்கள் மருத்துவர் எளிமையாக அவரது அலுவலகத்திலேயே கூட செய்யக்கூடிய ஒன்று. இந்த முறையில் சிலிகான் பலூன் ஒன்றை உங்கள் வாய் வழியாக வயிற்றுக்குள் அனுப்பி செலைன் மூலமாக விரிவடைய செய்வார்கள். பின்னர் அந்த பலூனை வயிற்று பகுதியிலேயே வைத்து விடுவார்கள்.

இதன் மூலம் வயிறும் சுருங்கி சுருங்கி நீங்கள் சாப்பிடும் உணவின் அளவும் குறையும். இதில் சிக்கல்களும் குறைவு என்பதால் மற்ற முறைகளை விட இது பாதுகாப்பானது மற்றும் இது ஒரு Reversible அறுவை சிகிச்சை. இதற்கு பக்கவிளைவுகள் அதிகம் கிடையாது.

அறுவைசிகிச்சைக்கு முன்பு செய்யவேண்டியவை

என்னதான் உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்து உடனடியாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தாலும் சிகிச்சைக்கு முன்பு சில பல பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும். அதில் முதல்கட்டமாக ஒரு மருத்துவர் உங்களது தலை முதல் கால் வரை ரத்த பரிசோதனை உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளையும் செய்து நீங்கள் அறுவைசிகிச்சைக்கு தகுதியானவரா என்று பரிசோதனை செய்வார்.

அடுத்ததாக அறுவை சிகிச்சைக்கு பிறகு உங்கள் டயட் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஊட்டச்சத்து நிபுணர் உங்களை ஆய்வு செய்வார். மூன்றாவதாக அறுவை சிகிச்சைக்கு முன்பும், பின்பும் உங்களின் மனநிலை சீரானதாக இருப்பதற்காக உளவியல் நிபுணரோடு ஒரு அமர்வு இருக்கும். நான்கவதாக பேரியாட்ரிக் அறுவைசிகிச்சை நிபுணர்கள் உங்களை அணுகி எந்த விதமான அறுவை சிகிச்சை என்பதை முடிவு செய்வார்கள்.

அறுவை சிகிச்சைக்கு பின்பு உணவுகள்

பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை (Bariatric Surgery) முடிந்தவுடன் நீங்கள் உடனே எந்த உணவையும் உண்ண முடியாது. முதல் இரண்டுநாட்கள் அந்த பகுதி ஆறுவதற்கான நேரம். எனவே, முதல் இரண்டு நாளுக்கு ட்யூப் வழியாகவே உணவு செலுத்தப்படும். பிறகு முதல் கட்டமாக இரண்டு நாட்கள் கழித்து பொறுமையாக தண்ணீர், இளநீர் போன்றவை கொடுக்கப்படும்.

அடுத்து படிப்படியாக இரண்டாவது கட்டமாக உணவுகளை மாற்றி கொள்ளலாம். சூப், கஃபின் குறைந்த டீ ஆகியவை கொடுப்பார்கள். பழங்களில் வாழைப்பழம், தர்பூசணி, பீச், ஆப்ரிகாட் , அண்ணாச்சி பழம் ஆகியவற்றை சாப்பிடலாம். தக்காளி சூப், கேரட் சூப், க்ரீன் பீன்ஸ் சூப் ஆகிய சூப் வகைகள் சாப்பிடலாம்.

சாஃப்ட் சாலிட் உணவுகள் (Soft Solid Foods)

இதுதான் மூன்றாவது கட்டம். நன்கு வேகவைத்த முட்டை, மசித்த பழங்கள், தயிர், சீஸ், சிக்கன், வேகவைக்கப்பட்ட பீஃப் ஆகியவற்றை கூட எடுத்து கொள்ளலாம். இதில் நான்காவது கட்டம்தான் நார்மல் உணவுகள் சாப்பிடும் காலகட்டம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

பாப்கார்ன், கடினமான இறைச்சி உணவுகள், வறுக்கப்பட்ட உணவுகள், பொரிக்கப்பட்ட உணவுகள், ஜங்க் ஃபுட், ஆகியவற்றை முழுமையாக தவிர்த்து விட வேண்டும்.

அறுவைசிகிச்சையின் சிக்கல்கள்..

எவ்வளவு பெரிய வெற்றிகரமான அறுவை சிகிச்சையாக இருந்தாலும் அதன் சிக்கல்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

தற்காலிக சிக்கல்கள்..

பொதுவாகவே அனைத்து அறுவை சிகிச்சைகளிலும் மருத்துவர்கள் பயப்படுவது தொற்று மற்றும் ரத்தக்கசிவுதான். அது அதிக ரத்த கசிவு ஏற்பட்டு காய்ச்சல், அடிவயிற்றில் வலி போன்றவற்றை ஏற்படுத்தலாம். உடலின் உள்ளே கூட ரத்த கசிவு ஏற்படலாம். சில தீவிரமான கேஸ்களில் இது மரணத்தை கூட ஏற்படுத்தலாம்.

நீண்டகால சிக்கல்கள்..

பலருக்கும் இரண்டு மூன்று மாதங்கள் கழித்து கூட அவர்கள் சாப்பிடும் உணவு செரிக்காமல், அல்லது உள்ளே செல்லாமல் வாந்தி எடுப்பது, வயிற்றுப்போக்கு என பல அறிகுறிகளை எதிர்கொள்ள நேரிடலாம். இதற்கு காரணம் உள்ளே உள்ள பாகங்கள் இந்த அறுவைசிகிச்சைக்கு சரியாக ஒத்துழைக்காமல் இருக்கலாம்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

அதே போல் வைட்டமின் குறைபாடு அதிகம் ஏற்படலாம். சில தீவிர கேஸ்களில் இது மரணத்தை கூட ஏற்படுத்தலாம். எனவே, பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்கு (Bariatric Surgery) முன்பு இது அனைத்தையும் தெளிவாக தெரிந்து கொண்டு உள்ளே செல்லுங்கள். அதே போல், இது எல்லாருக்கும் பொருந்த கூடிய அறுவை சிகிச்சை அல்ல. அதற்கான அளவுகோல்களுக்கு பொருந்தினால் மட்டுமே செய்து கொள்ளுங்கள்.

5/5 - (51 votes)

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Follow:
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »