ஆஸ்துமா (Asthma Attacks) குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பலரையும் பாதிக்கும் பொதுவான நோயாக இருக்கிறது. தற்போது நீரிழிவு நோய், தைராய்டு, ஹைப்பர்டென்ஷன் போன்ற நோய்களுக்கேற்ப இவையும் பரவலாக இருக்கிறது என்றே சொல்லலாம். இதை bronchial asthma அல்லது wheezing என்று சொல்வோம்.
சிலருக்கு தூசுக்கள் அலர்ஜியாக இருக்கும், மகரந்த ஒவ்வாமை, பருவக் காலத்திற்கேற்ற மூச்சுத்திணறல், அதிகமாக தும்மல் என்று பார்க்கிறோம். இவை எல்லாமே ஆஸ்துமா அல்லது இயல்பான ஒன்றா என்று கேட்பவர்கள் முதலில் ஆஸ்துமாவை எப்படி கண்டறிவது என்று பார்க்கலாம்.
நமக்கு இருப்பது ஆஸ்துமா அல்லது நார்மல் அலர்ஜியா என்று எப்படி கண்டறிவது?
நாம் தூங்கி எழுந்த உடனே அதிக தும்மல் வருவதும், மழை மற்றும் பனி காலத்தில் மீண்டும் மீண்டும் சளி ஜலதோஷம் வருவது, சளி பிடித்த போது மூச்சு வெளியே விடுவதில் சிரமமாக இருப்பது, மார்பை இறுக்கி பிடித்தது போன்ற உணர்வு, மூச்சை வெளியே விடும் போது wheeze என்னும் விசில் போன்ற சத்தம் வந்தால் இது மிதமாக இருக்கும் போது ஸ்டெதஸ்கோப் வழியாக கேட்க முடியும். அதுவே தீவிரமாக இருந்தால் மார்பிற்கு அருகில் வந்தாலே கேட்க முடியும். இதை தான் bronchial asthma என்பார்கள்.
இந்த அறிகுறிகள் சிறு வயதிலும் இருக்கலாம் அல்லது வளர வளர வர தொடங்கலாம். சிறு வயதில் இருந்தே அடிக்கடி ஆக்ஸிஜன் மாஸ்க், நெபுலைஸர் வைப்பதை பார்த்திருப்போம். இந்தியாவில் மட்டும் 25 மில்லியன் மக்களுக்கு ஆஸ்துமா இருக்கிறது, அதில் 6 மில்லியன் குழந்தைகள் என கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்துமா வருவதற்கான காரணம் (Asthma Attacks) குறிப்பாக இது மட்டும் தான் என்று இன்றுவரை எந்த அறிவியலும் கண்டுப்பிடிக்கவில்லை.
ஆத்மாவில் மூன்று நிலை உள்ளது. mild, moderate, severe. சிலருக்கு வெறும் அலர்ஜியோடு நின்ருவிடும். இன்னும் சிலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவிற்கு தீவிரமாக இருக்கலாம். இது சிறுகுழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை எப்போது வேண்டுமானாலும் வரலாம். இப்போது ஆஸ்துமாவில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.
ஆஸ்துமாவில் என்ன நடக்கிறது?
ஆஸ்துமா (Asthma Attacks) இருக்கும் போது மூச்சு விடுதலில் சிரமம் இருக்கும். மூச்சு விடுதலில் இறுக்கம் அதிகமாக இருக்கும். சிலருக்கு மைல்டாக இருக்கும். சிலருக்கு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும் அளவுக்கு இருக்கும். ஏன் இவ்வளவு பிரச்சனைகள் வருகிறது என்பதை தெரிந்துகொள்ளவும்.
ஏன் ஆஸ்துமா வருகிறபோது (Asthma Attacks) சுவாசிக்க சிரமமாகவும், விசில் சத்தம் கேட்கிறது?
முதல் காரணம்: bronchospasm என்று மருத்துவத்தில் அழைப்பதுண்டு. இதில் broncho என்றால் தொண்டையிலிருந்து நுரையீரலுக்கு செல்லும் டியூப் spasm என்றால் எதையோ இறுக்கமாக பிடித்து கொண்டிருப்பது. bronchospasm என்னும் போது குட்டி குட்டி வாயு மாற்றம் இறுக்கமாகி இந்த டியூப், முடிச்சுகள் இறுக்கமாகி மூடிக்கொள்ளும்.
ஏன் மூடுகிறது? அழற்சியால் இவை மூடுகிறது.
bronchus மற்றும் டியூப்களில் புண்ணாகி அழற்சியின் போது சளியை அதிக அளவில் உருவாக்குகிறது. சளி தூசி, மாசு, புகையால் நுரையீரல் பாதிக்கப்படும் போது சளி அதிகமாக வருகிறது. இயல்பாகவே நுரையீரலில் சளி உற்பத்தி இருக்கும். ஆனால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு சளி bronchioles துவாரத்தை அடைப்பதால் சுவாசிக்க சிரமம் ஏற்படும்.
மூச்சு உள்ளிழுத்து வெளியே விடும்போது மிகவும் சிரமமாக இருக்கும் ஏனென்றால் அந்த பாதை முழுவதும் அடைத்துவிடும். மிகச்சிறு துவாரத்தால் மட்டுமே மூச்சு விடுதல் இருக்கும். அதனால் தான் ஆஸ்துமாவின் போது சுவாசிக்க சிரமமாக இருக்கிறது.
ஆஸ்துமாவை குணப்படுத்த முடியுமா?
இல்லை இதை முழுவதுமாக குணப்படுத்த முடியாது. ஆனால் அறிகுறியை கட்டுப்படுத்தலாம். இதற்கான குறிப்பிட்ட காரணங்கள் இல்லையென்றாலும் சில காரணங்களால் ஆஸ்துமா வரலாம் என்று சொல்லப்படுகிறது.
அப்படி சொல்லப்படும் காரணங்களில் மரபணு போக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். குடும்பத்தில் பெற்றோர்களுக்கு ஆஸ்துமா இருக்கும்போது அவை அப்படியே குழந்தைகளுக்கு மாறுகிறது. இதை முழுவதுமாக குணப்படுத்த முடியவில்லை என்றாலும் ஆஸ்துமாவை தூண்டும் காரணங்களை கட்டுப்படுத்தலாம்.
புகை பிடிக்கும் இடம், காற்று மாசடைந்த இடங்களில் ஆஸ்துமா தூண்டுதல் அதிகரிக்கலாம். அந்த இடத்தில் போகாமல் இருப்பதன் மூலம் இதை தடுக்கலாம்.
அதே நேரம் கொரோனா காலத்தில் மாஸ்க் அணிந்ததால், அதை தொடர்ந்து கடைப்பிடிப்பதால் தற்போது ஆஸ்துமாவின் தீவிரம் குறைந்து பார்க்க முடிகிறது என்றே சொல்லலாம். மாஸ்க் அணிவதால், தூசி மற்றும் கிருமிகள் உள்ளே செல்வதை தடுக்க முடியும். இப்படி அலர்ஜியை உண்டு செய்யும் சில காரணங்களை நீங்கள் உணர்ந்தால் அலர்ஜி ஆகிறது என்றால் அதை தடுத்து அல்லது குறைத்துக்கொள்ளுங்கள்.
ஏனெனில் சிலருக்கு பெயிண்ட் வாசனை, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் போது கூட ஆஸ்துமா தூண்டலாம். அதனால் உங்களுக்கு எதனால் அலர்ஜி ஏற்படுகிறது, எந்து ஆஸ்துமாவை தூண்டுகிறது என்று தெரிந்தால் அதிலிருந்து விடுபடுவது தான் சிறந்தது.
எந்த நோயையும் வருமுன் காப்பது மிகவும் சிறந்ததாகும். அதிலும் ஆஸ்துமாவுக்கு இது நிச்சயம் பொருந்தும். ஏன் ஆஸ்துமா வருகிறது அறிகுறிகள், தடுப்பு முறைகள் என்ன என்பதை பார்த்தோம். இவையெல்லாம் செய்த பிறகும் ஆஸ்துமா அறிகுறி தடுக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது என்பதை பார்க்கலாம்.
ஆஸ்துமா அட்டாக் வந்துவிட்டது என்றால் என்ன செய்ய வேண்டும்?
ஆஸ்துமா உறுதி செய்தவுடன் மருத்துவர் சில மத்திரைகளை மருந்துகளை எழுதி கொடுக்கிறார்கள். குறிப்பாக நெபுலைசர் பரிந்துரைப்பார்கள். அதை எங்கு சென்றாலும் கையோடு எடுத்து செல்ல வேண்டும். அவை உடலுக்குள் என்று என்ன செய்கிறது ஏன் இவை அவசியம், ஆஸ்துமா அறிகுறிகளை போக்க என்ன செய்கிறது என்பதை பார்க்கலாம்.
ஆஸ்த்மா அட்டாக்கில் (Asthma Attacks) ஒன்றான bronchospasm வருகிற போது அதன் அடைப்பு நீக்க மருத்துவர்கள் bronchodilators பரிந்துரைப்பார்கள். bronchus களில் சளி அடைத்து சுருங்குவதால் அதை விரிய செய்வதற்கு ஒன்று மாத்திரைகளாக கொடுப்பார்கள் அல்லது நெபுலைசர் வைப்பார்கள். ஆக்ஸிஜன் மாஸ்க் போன்று இருக்கும் இதில் மருந்தை கலந்து கொடுப்பார்கள்.
இன்ஹேலர்களை பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் பயனளிக்கும். இதை அடிக்கடி ஆஸ்துமா வருபவர்கள் கையிலேயே வைத்து உபயோகப்படுத்துவார்கள். இதை கையோடு எடுத்து செல்லலாம். அறிகுறி மோசமடையும் போது இதை பயன்படுத்தலாம். இப்படி மாத்திரை அல்லது நெபுலைசர் இரண்டில் ஒன்றை பயன்படுத்தி காற்று பாதை அடைப்பை நீக்குவார்கள்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
இன்னொன்று அழற்சி எதிர்ப்பு. புண்கள் ஏற்பட்டுப் அழற்சி ஆகி சளி பாதையை அடைப்பதால் அழற்சியை குறைக்க மருந்துகளை பரிந்துரைப்பார்கள். இந்த மருந்துகள் புண்களை சரி செய்து இயல்பாக செயல்பட உதவி செய்யும்.