கர்ப்ப காலத்தில் வாய் ஆரோக்கியத்தை எவ்வாறு கவனித்துக்கொள்வது? – Oral Health During Pregnancy in Tamil

Deepthi Jammi
6 Min Read

கர்ப்பிணி வழக்கமான சுகாதார பராமரிப்பில் பல் பராமரிப்பும் முக்கியமானது. வாய் ஆரோக்கியம் ஏன் கர்ப்பிணிக்கு (oral health during pregnancy in tamil) முக்கியமானது. கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க. 

கர்ப்ப காலத்தில் வாய் ஆரோக்கியம் (oral health during pregnancy in Tamil) அவசியமா?

கர்ப்ப காலத்தில் வழக்கமான பல் பராமரிப்பு முக்கியத்துவம் அவசியமானது. கர்ப்பிணிக்கு உண்டாக்கும் ஆரோக்கிய  அசெளகரியங்களில் பல் பராமரிப்பும் ஒன்று.

கர்ப்பமாக இருக்கும் போது பல்லுக்கு பரிசோதனை தேவையில்லை என்று நினையாதீர்கள். மற்ற நேரங்களை விட இப்போது வழக்கமான பரிசோதனைகள் முக்கியம்.

கர்ப்ப ஈறு அழற்சி ஆன இது கர்ப்பத்தில் 40%  பெண்களை  பாகர்ப்ப காலத்தில் வாய் ஆதிக்கிறது. அதனால் ஈறுநோய் இருந்தால் அவை மேலும் மோசமாகலாம். அதனால் பல் மருத்துவரை அணுகுவது அவசியமானது.

Oral Health During Pregnancy in Tamil - Facts

கர்ப்பமாக இருக்கும் போது  கர்ப்பிணிகள் பற்கள் மற்றும் ஈறுகளை (Oral health during pregnancy in tamil) நன்கு கவனித்துகொள்வது முக்கியம்.

கர்ப்ப ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அப்போது ஈறுகளில் நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. இது உங்கள் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். 

கர்ப்பத்துக்கு முன்பும், கர்ப்பத்தின் போதும் வாய் வழி ஆரோக்கியத்தை பராமரிக்க என்ன செய்வது என்பதை பார்க்கலாம்.

கர்ப்பகாலத்தில் ஈறு அழற்சி என்றால் என்ன?

13 5

கர்ப்பிணி பல் துலக்கும் போது அல்லது துலக்கினால் சில அறிகுறிகள் தென்படும். அப்படி இருந்தால் அது ஈறு அழற்சியை கொண்டிருக்கலாம்.

கர்ப்பகாலத்தில் உங்கள் புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் அளவு அதிகமாக இருக்கும் அப்போது ஈறுகளை தாக்க கூடிய பாக்டீரியா பிளேக்கை உருவாக்குவதற்கு  எளிதில் பாதிப்பை உண்டு செய்யலாம். 

ஈறு அழற்சி இருந்தால் அறிகுறிகள்

  • வீங்கிய ஈறுகள்
  • மென்மையான வீங்கிய ஈறுகள்
  • ஈறுகளில் இரத்தப்போக்கு
  • ஈறுகள் சிவந்து இருப்பது
  • கெட்ட சுவாசம்
  • கர்ப்பகால ஈறு அழற்சி

கர்ப்பிணிக்கு பொதுவாக 2 ஆம் மாதம் முதல் 8 மாதங்களுக்கு இடையில் இவை உண்டாகிறது. இது மூன்றாவது ட்ரைமெஸ்டர் காலங்களில் உச்சத்தை அடையலாம். 

கர்ப்பிணி பெண்கள் பல் சிதைவு மற்றும் தளர்வான பற்கள் ஆகிய இரண்டுக்குமான அதிக ஆபத்தையும் எதிர்கொள்கிறார்கள். 

கர்ப்பிணிக்கு ஈறு அழற்சி ஏன் உண்டாகிறது?

14 3

கர்ப்பத்தில் ஹார்மோன் அளவு அதிகரிப்பதால் ஈறுகளில் வீக்கத்தை ஏற்படுத்தலாம். ஈறு நோய் அல்லது தொற்று ஏற்படுத்தலாம்.

கர்ப்பிணி  வாந்தி எடுப்பதால்  அமிலம் பல்லின் பற்சிப்பியை பாதிக்கும். அதனால் கர்ப்பிணி கர்ப்பகாலம் முழுவதும் பல் சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும்.  கர்ப்பிணி பல் பராமரிப்புக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்வோம். 

கர்ப்பிணிக்கு வாயில் கட்டி

15 2

சில நேரங்களில் கர்ப்பிணிக்கு பெரிய கட்டி வாய் வழிப்பாதையில் வரலாம்.  இந்த கட்டி  ஆழமான சிவப்பு புள்ளி குறிகளுடன்  வீக்கமடைந்த ஈறு திசுக்களில் உருவாகும்.

இரத்தப்போக்கு மேலோடு இருப்பதால் சாப்பிடுவதும் பேசுவதும் கடினமாக இருக்கலாம். அசெளகரியத்தை உண்டு செய்யலாம்.  இது கர்ப்ப கட்டிகள் ஆகும்.

இது கர்ப்பிணிக்கு எப்போது வேண்டுமானாலும் வெளிப்படலாம். இது இரண்டாவது மூன்று மாதங்களில் வெளிப்படும். 

இவை புற்றுநோய் கட்டிகள் அல்ல என்பதால் கவலை வேண்டாம். கட்டிகள் 10% கர்ப்பிணிபெண்களில் காணப்படுகிறது. பெரும்பாலும் கர்ப்ப ஈறு அழற்சி உள்ள பெண்களிலும் ஏற்படுகின்றன. 

எனினும் இது குழந்தை பிறந்த பிறகு தானாகவே மறைந்துவிடும். கட்டி சாப்பிடுவதில் தலையிட்டால், பல் மருத்துவரை அணுகுங்கள். 

கர்ப்பிணிக்கு ஈறு நோய் வந்தால் குழந்தையை பாதிக்குமா?

16 4

ஈறு நோய் மற்றும் முன்கூட்டிய பிறப்புக்கும்  இடையே தொடர்பு இருப்பதாக இரண்டு ஆய்வுகள் காட்டுகிறது.

ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் டெண்டல் அசோசியேஷன் இதழில் முடிவுகள் படி  ஆய்வின் ஆராய்ச்சியளார்கள் ஆரோக்கியமான ஈறுகளை கொண்ட தாய்மார்களை  விட, நாள்பட்ட ஈறு நோயால் பாதிக்கப்பட்ட  கர்ப்பிணி பெண்களுக்கு முன்கூட்டிய  மற்றும் எடை குறைவான் குழந்தைகளை பெறுவதற்கான வாய்ப்பு நான்கு முதல் ஏழு மடங்கு அதிகம் என்று கண்டறிந்துள்ளனர். 

மிக கடுமையான பீரியண்டோண்டல் நோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள், 32 வாரங்களில் முன்கூட்டியே பிரசவித்துள்ளனர். ஈறு நோய்க்கு சிகிச்சையளிப்பது  குறைப்பிரசவ அபாயத்தை குறைக்குமா என்பது குறித்து ஆராய்ச்சிகள் தெளிவாக இல்லை. 

கர்ப்பத்துக்கு முன்பே வாய் ஆரோக்கியம்

17 2

கர்ப்பத்தை முயற்சிக்கும் போதே பல் மருத்துவரை சந்திக்க வேண்டும். பற்கள் சுத்தம் செய்யலாம் ஈறு திசுக்களை பரிசோதிக்கலாம். கர்ப்பத்துக்கு முன்பே சுகாதார பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கலாம். 

கடுமையான பீரியண்டோண்டல் நோய் கர்ப்பத்துக்கு சாத்தியமான சிக்கல்களை ஏற்படுத்தும். பல ஆய்வுகள் பெரிடோண்டல் நோயை இணைக்கின்றன. 

இத்தகைய சிக்கல்களை எதிர்கொள்ளாமல் இருக்க கர்ப்பத்துக்கு முன்னும் பின்னும் சில விஷயங்களை நீங்கள் பாதுகாக்க வேண்டும். 

கர்ப்பிணி  நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.  ஃப்ளூரைடு கொண்ட  பேஸ்ட் வகைகள் பாதுகாப்பை அளிக்கலாம். 

உங்களுக்கு குமட்டல் இருப்பதால் இது சிக்கலாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் மென்மையான பேஸ்ட் வகைகளை எடுத்துகொள்ளுங்கள். உறுதியான வகைகளை போன்று இது மென்மையான ஈறுகளை எரிச்சலடைய செய்யாது.

கர்ப்பிணி பல் தேய்க்கும் போது பற்களை ஃப்ளோஸ் செய்வது நல்லது. இதனால் பல் இடுக்குகளில் சிக்கியிருக்கும் உணவுத்துகள்கள் மற்றும் பாக்டீரியாக்களை  வெளியேற்ற இது உதவுகிறது. 

கொஞ்சம் நேரம் எடுத்தேனும் இதை செய்வதன் மூலம் பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் சேதம் மற்றும் வீக்கத்தை  குறைக்க முடியும். 

ஈறுகளில் சிறிது வீக்கம் அல்லது இரத்தப்போக்கு கொண்டால்  ஒரு உப்பு கல் சேர்த்து வாய் கொப்புளியுங்கள். ஆண்டிமைக்ரோபியல் வாயை கழுவுதல் போன்றவையும் உங்களுக்கு உதவும். 

18 3

பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் பால் பொருள்கள், பழச்சாறுகள் மற்றும்  தண்ணீர் சேர்க்க வேண்டும்.  இனிப்பு நிறைந்த மிட்டாய், கேக்குகள், உலர்ந்த பழங்கள்,   மாவுச்சத்துள்ள பொருள்களிலிருந்து விலகி இருங்கள்.

சர்க்கரைகள் மற்றும் மாவுச்சத்துக்கள் அனைத்தும் பற்களை மற்றும் ஈறுகளை தாக்கும். கர்ப்பிணிக்கு இனிப்பு பசி என்பது இருக்கும். இது பல் சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை உண்டு செய்யும். 

கர்ப்பிணிக்கு முதல் மூன்று மாதங்களில் குமட்டல் ஒவ்வாமை இருந்தாலும் சமச்சீரான உணவுகள் எடுக்க வேண்டும். 

குழந்தையின் வளரும் பற்கள், ஈறுகள் மற்றும் எலும்புகள் ஆரோக்கியத்துக்கும் மட்டும் அல்லாமல் வாய் ஆரோக்கியத்துக்கும் நல்லது. 

வாய் உலர்வு இல்லாமல் அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். நீரேற்றமாக இருங்கள். தண்ணீரின் சுவை கூட எலுமிச்சை,  ஆரஞ்சு, புதினா, வெள்ளரி போன்றவை நறுக்கி சேர்த்த தண்ணீரை குடியுங்கள்.

கர்ப்பகாலத்தி பல் மருத்துவரை அணுக வேண்டுமா? – Can I go to dentist during pregnancy

19 1

கர்ப்பகால ஈறு அழற்சியை தடுப்பதற்கான  சிறந்த வழி பல் மருத்துவருடன்   ஆலோசனையில் இருங்கள்.  கர்ப்பகாலத்திலும்  வாய்வழி ஆரோக்கியத்தை (oral health during pregnancy in tamil) கண்காணிக்க மருத்துவரிடம் செல்லலாம்.

இதன் மூலம் சிறிய பிரச்சனை பெரிய பிரச்சனையாக மாறுவதை தடுக்க முடியும். வழக்கமான பல் பராமரிப்பு செய்யலாம். 

பல் மருத்துவரை அணுகும் போது மகப்பேறுக்கு முந்தைய வைட்டமின்கள் மற்றும்  மகப்பேறு மருத்துவர் வழங்கிய மருந்துகள் குறித்து  அவரிடம் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் பல் மருத்துவர் பல் சிகிச்சை திட்டம் மாற்றி அமைக்கலாம்.

குணமடையாத  ஈறு நோய் ஒரு பல் நிபுணரால் சிகிச்சையளிக்கப்பட வேண்டும். சிகிச்சையில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும்  பாதிக்கப்பட்ட  திசுக்கள் அகற்றுவது அடங்கும்.

கர்ப்பிணிக்கு தேவையெனில் பல் எக்ஸ்ரே எடுக்கலாம்.  குழந்தையை பாதுகாக்கும் வகையில்  இன்று தொழில்நுட்பங்கள் பெருகிவிட்டது.

அதனால் கர்ப்பத்தின் போது பல் மற்றும் ஈறுகளில் அசெளகரியம் ஏற்படும் போது மருத்துவர் எக்ஸ்ரே பரிந்துரைத்தால் தயக்கமில்லாமல் எடுத்துகொள்ளுங்கள். இதன் மூலம்  பிரச்சனை தீவிரமாகாமல் தடுக்கலாம். 

முடிவுரை

கர்ப்பிணி மகப்பேறு மருத்துவரிடம் தொடர்ந்து  கண்காணிப்பில் இருக்க வேண்டும். அதே போன்று கர்ப்பகால பிரச்சனைகளை உண்டு செய்யும் பல் தொடர்பான  அசெளகரியம் இல்லாத நிலையிலும்  பல் மருத்துவரை சந்திப்பதும் வாய் வழி ஆரோக்கியம் பேணுவதும் ஆரோக்கிய கர்ப்பத்தை உறுதி செய்யும்.

கர்ப்பம் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.  இது மென்மையான ஈறுகளில் இரத்தம் வரும் அபாயத்தை அதிகரிக்கலாம். கர்ப்பிணிக்கு பல் பிரச்சனைகள் உண்டாகலாம் என்பதால் வாய்வழி பராமரிப்பு (Oral health during pregnancy in tamil) பெறுவது அவசியம். 

5/5 - (27 votes)

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Follow:
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »