கர்ப்ப கால நோய்களில் பலவும் தற்காலிகமானவை. சற்று கவனித்து எச்சரிக்கையுடன் இருந்தால் எளிதில் தவிர்த்துவிடலாம், வந்தாலும் கட்டுக்குள் வைக்கலாம். அப்படியான ஒன்று தான் நீரிழிவு, இந்த சிக்கலுக்கு கர்ப்ப காலத்தில் இன்சுலின் ஊசி (Insulin During Pregnancy) எடுக்கும் போது, கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில் இன்சுலின் ஊசி (Insulin During Pregnancy in Tamil)
கர்ப்ப காலத்தில் நீரிழிவு எதிர்கொள்பவர்கள் அதிகம் என்றாலும் இது தற்காலிகமானது தான். பிரசவத்துக்கு பிறகு இவர்களுக்கு உடலில் இரத்த சர்க்கரை அளவு இயல்பான நிலைக்கு திரும்பும். எனினும் கர்ப்ப காலத்தில் இன்சுலின் ஊசி (Insulin During Pregnancy in Tamil) எடுக்கலாமா என்பதை கவனமாக கையாள வேண்டும். இல்லையெனில் பிரசவத்தில் சிக்கலை உண்டு செய்யலாம்.
கர்ப்பத்துக்கு முன் நீரிழிவு இல்லாத நிலையில் கர்ப்ப காலத்தில் உண்டாகும் இந்த நீரிழிவு அப்பெண்ணுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கலாம். கர்ப்பகால நீரிழிவு நோயை எதிர்கொள்ளும் பெண்கள் அவை கட்டுக்குள் இல்லாமல் இருக்கும் போது இன்சுலின் எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.
எனினும் இது எல்லோருக்கும் ஆனது அல்ல. கர்ப்பத்தின் தொடக்கம் முதலே உணவு மற்றும் உடற்பயிற்சி பழக்கங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் கர்ப்பகால நீரிழிவு நோயை தடுக்கவும் முடியும். இன்சுலின் என்பது என்ன என்பதை பார்க்கலாம்.
உடலில் இன்சுலின் பணிகள் என்ன?
இன்சுலின் என்பது கணையத்தால் வெளியிடப்படும் ஒரு ஹார்மோன் ஆகும். இந்த ஹார்மோன் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை உடல் செயல்பாடுகளுக்கு செல்கள் பயன்படுத்தும் ஆற்றலாக மாறுகிறது.
நீரீழிவு நோயின் போது உங்கள் உடல் இன்சுலின் எதிர்ப்பு சக்தியாக மாறக்கூடும். இந்நிலையில் கணையம் இன்சுலினை உற்பத்தி செய்தாலும் குளுக்கோஸ் அல்லது இரத்த சர்க்கரை செல்களால் சரியாக பயன்படுத்த முடியாத நிலை ஆகும்.
இதனால் உடல் கர்ப்பகாலத்தில் கூடுதல் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாது. அப்படி உற்பத்தி செய்தாலும் அது திறம்பட பயன்படுத்த முடியாது. இதனால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இந்த நிலையில் தான் உடலுக்கு இன்சுலின் தேவைப்படுகிறது.
கர்ப்பிணிக்கு எப்போது இன்சுலின் (Insulin During Pregnancy in Tamil) தேவை?
கர்ப்ப காலத்தில் நீரிழிவை எதிர்கொள்ளும் போது உணவு, உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் மருந்துகள் சர்க்கரை அளவை குறைக்காவிட்டால் அப்போது இன்சுலின் பரிந்துரைக்கப்படுகிறது.
- அதாவது உணவுக்கு முன் இரத்த சர்க்கரை 92 மி.கி/டி.எல்
- உணவுக்கு பிறகு 1 மணி நேரம் கழித்து – 140 மி.கி /டிஎல்
- உணவுக்கு பின் 2 மணி நேரம் கழித்து -120 மி.கி/டிஎல்
- முன் உணவு -95 மி.கி/டி.எல்
டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கருத்தரிக்கும் போது இன்சுலினுக்கு (Insulin During Pregnancy) மாற வேண்டிய நிலை ஏற்படலாம். ஏனெனில் பல நேரங்களில் இவர்கள் எடுக்கும் வாய்வழி மருந்துகள் நஞ்சுக்கொடியை கடந்து குழந்தையை அடையலாம் என்பதால் அது பாதுகாப்பானதாக கருதப்படவில்லை.
சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதை கவனித்து அதற்கேற்ப மருந்துகளும் தேவையெனின் இன்சுலின் எடுத்துகொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.
கர்ப்பகால இன்சுலின் குழந்தைக்கு பாதிப்பை உண்டு செய்யுமா?
கர்ப்ப காலத்தில் இன்சுலின் மிகவும் பாதுகாப்பான தேர்வு. கர்ப்பிணி நீரிழிவு நோய் கொண்டிருந்தால் இன்சுலின் அவர்களுக்கு பாதுகாப்பானது. இதை எடுத்துகொள்ளும் போது அது நஞ்சுக்கொடியை கடந்து கருவை அடையாது.
கர்ப்பிணி சர்க்கரை அளவு அதிகம் கொண்டிருந்து இன்சுலின் தேவையை பூர்த்தி செய்யாத போது இரத்தத்தில் உள்ள அதிக குளுக்கோஸ் அளவுகள் நஞ்சுக்கொடி மூலம் குழந்தைக்கு பரவலாம். இதனால் குழந்தை வழக்கமான அளவை விட பெரிதாக வளரலாம். இது பிற சிக்கல்களை உண்டு செய்யலாம்.
இன்சுலின் எடுப்பதற்கான ஒரே வழி ஊசி மட்டுமே. கர்ப்பிணி இந்த ஊசி எடுக்கும் போது இன்சுலின் ஆற்றலை வழங்க குளுக்கோஸ் சரியான முறையில் வெளியேற்றப்படுகிறது. இது அதிகப்படியான குளுக்கோஸ் குழந்தையை அடைவதை தடுக்கிறது. மேலும் உடலில் மற்ற எந்தவிதமான் சிக்கல்களையும் தவிர்க்கிறது.
இன்சுலின் வகைகள் உண்டா?
இன்சுலின் என்பது மருந்தாக கிடைக்கிறது. இது வேகமாக செயல்படக்கூடியது குறிப்பாக இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் காலம் பொறுத்து பல்வேறு வகையான இன்சுலின்கள் உள்ளன. எனினும் கர்ப்பிணியின் சர்க்கரை அளவுக்கு ஏற்ப இன்சுலின் வகை மற்றும் அளவு மருத்துவர் தீர்மானிப்பார்.
இன்சுலின் விரைவாக செயல்பட உணவுக்கு முன்பு 10-15 நிமிடங்களுக்குள் எடுக்கப்பட வேண்டும். இது 15 நிமிடங்களுக்குள் வேலை செய்கிறது மற்றும் 1-2 மணிநேரத்தில் உச்சத்தை அடைகிறது. இதன் விளைவு 3-4 மணி நேரம் நீடிக்கும். 30 நிமிடங்களுக்குள் செயல்படும்.
குறுகிய செயல்பாட்டு இன்சுலின் ஆனது 2-3 மணி நேரத்தில் உச்சத்தை அடைந்து 3-6 மணி நேரம் நீடிக்கும்.
2-4 மணி நேரத்துக்குள் செயல்படும்.
இடைநிலை எனப்படும் இன்சுலின் ஆனது 4-12 மணி நேரம் செயல்படும். இன்சுலின் 2-3 மணி நேரத்துக்கு பிறகு வேலை செய்கிறது. ஆனால் 24 மணி நேரம் நீடிக்கும்.
கர்ப்பிணி இன்சுலின் (Insulin During Pregnancy) பயன்பாடுக்கு வரும் போது மருத்துவரே இன்சுலின் எப்போது எடுக்க வேண்டும், எவ்வளவு அளவு தேவை, எவ்வளவு காலம் என்பது குறித்து அனைத்தையும் வழிகாட்டுவார் என்பதால் கர்ப்பிணிகள் இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை.
மருத்துவரின் ஆலோசனையை சரியாக பின்பற்றினாலே போதுமானது. சீரான இடைவெளியில் இரத்த சர்க்கரை அளவு பரிசோதனையின் மூலம் மருந்தின் அளவை கூடவோ குறைக்கவோ செய்வார்.
ஏனெனில் இன்சுலின் அளவு மற்றும் வகை என்பது கர்ப்பிணியின் எடை, கர்ப்ப கால உணவு மற்றும் குளுக்கோஸ் அளவு பொறுத்து ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம் என்பதால் மருத்துவரின் அறிவுரை பின்பற்றுவது நல்லது.
கர்ப்பிணி இன்சுலின் எங்கு செலுத்த வேண்டும்?
கர்ப்பிணி பெண் இன்சுலின் (Insulin During Pregnancy) எடுப்பதாக இருந்தால் பெண்கள் வயிறு அல்லது தொடையின் பக்கங்கள் போன்ற கொழுப்பு நிறைந்த பகுதிகலில் இன்சுலின் ஊசி போட வேண்டும் இது வலியை குறைக்கிறது மற்றும் இன்சுலினை வேகமாக உறிஞ்ச உதவுகிறது.
இன்சுலின் எந்த இடத்தில் போட வேண்டும்
வயிறு அல்லது தொப்பை அல்லது தொப்புளில் இருந்து இரண்டு அங்குல தூரம் அதிக கொழுப்பை கொண்டிருக்கும் கைகளின் வெளிப்புறம் தொடைகளின் மேல் மற்றும் வெளிப்புறம் பிட்டத்தின் வெளிப்புற பக்கம்.
இன்சுலின் ஊசி போடும் போது சரியான முறையில் உடலில் செல்ல வேண்டும். இல்லையெனில் அவை வித்தியாசமாக உறிஞ்சப்பட்டு உங்கள் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கும் மேலும் காயங்கள் அல்லது ஊசி இடங்கள் உள்ள பகுதிகளை தவிர்க்க வேண்டும். அதே போன்று உடற்பயிற்சி செய்யும் பகுதிகளை தவிர்க்கவும். இது இன்சுலின் மிக வேகமாக அகற்றும் .
ஒவ்வொரு நாளும் இன்சுலின் எடுக்கும் போது இரண்டு இன்சுலின் பகுதிகளுக்கும் இடையில் ஒரு விரல் அகலம் இருக்கும் வகையில் புதிய பகுதியை தேர்ந்தெடுத்து போட வேண்டும். ஒரே இடத்தில் தொடர்ந்து இன்சுலின் பயன்படுத்தும் போது அந்த இடத்தில் வலியோ வீக்கமோ உண்டாகலாம்.
நீங்கள் இன்சுலின் எடுக்கும் பகுதியில் ஒரு வீக்கம் அல்லது முடிச்சு இருப்பதை கண்டால் நீங்கள் இன்சுலின் போடுவது உறிஞ்சுதல் தவறாக இருக்க கூடும். அதனால் அதை தவிர்ப்பது நல்லது. மேலும் உட்செலுத்தப்பட்ட இடத்தில் ஏதேனும் தடிப்புகள் இருந்தால் அது ஒவ்வாமை அல்லது தொற்றுநோயை குறிக்கலாம்.
அதனால் இந்த நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படும் வரை சில மாதங்கள் வரை இந்த இடத்தில் இன்சுலின் போட வேண்டாம். இந்த முடிச்சு இருக்கும் பகுதியை மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை எடுக்கவும் தயங்காதீர்கள்.
கர்ப்பமாக இருக்கும் போது இன்சுலின் போடுபவர்கள் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கைகளை கழுவி இன்சுலின் ஊசி மருந்தை தொடவேண்டும். சரியான முறையில் ஊசியை அப்புறப்படுத்த வேண்டும். இன்சுலின் கருவியை சீராக பயன்படுத்த வேண்டும்.
கர்ப்ப காலத்தில் இன்சுலின் எடுப்பதற்கான உதவிக்குறிப்புகள்!
ஒரே பகுதியை அதாவது ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் இன்சுலின் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இன்சுலின் போடும் இடத்திலிருந்து ஒரு அங்குலம் அல்லது இரண்டு அங்குலம் நகர்த்தி போட வேண்டும். நீங்கள் உணவு முறை அல்லது உடற்பயிற்சி மாற்றும் முன்பு உங்கள் மருத்துவரை அணுகவும்.
இன்சுலின் மருந்தை அறை வெப்பநிலையில் பயன்படுத்தவும். நீங்கள் எடுக்கும் இன்சுலின் மருந்தின் அளவை கண்காணிக்க வேண்டும். குறிப்பாக நீங்கள் இரண்டு வெவ்வேறு வகைகளை எடுத்துகொள்வதாக இருந்தால் ஒவ்வொன்றையும் தனித்தனி கொள்கலனில் தனித்தனி ஊசியை பயன்படுத்தி அப்புறப்படுத்தவும்.
கர்ப்ப காலத்தில் இன்சுலின் பக்கவிளைவுகளை உண்டாக்குமா?
கர்ப்பகாலத்தில் இன்சுலின் பக்கவிளைவுகள் என்பது உணவை தவறவிடும்போதும் உணவை தாமதமாக எடுக்கும் போதும் உண்டாகலாம். சில நேரங்களில் அளவுக்கு அதிகமாக இன்சுலின் எடுக்கும் போது இரத்த சர்க்கரை அளவு திடீரென குறைந்துவிடலாம். ஒவ்வொரு பரிசோதனையிலும் இன்சுலின் அளவு குறித்து மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.
கர்ப்பகாலத்தில் இரத்த சர்க்கரை குறைவுக்கு எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதையும் உடனடியாக செய்ய வேண்டியது என்ன என்பது குறித்தும் மருத்துவரிடம் முன்கூட்டியே ஆலோசிக்க வேண்டும். ஏனெனில் இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருந்தால் உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கலாம்.
கர்ப்ப காலத்தில் குறைந்த இரத்த சர்க்கரையின் அறிகுறிகள் எப்படி இருக்கும்?
கர்ப்பிணிக்கு உடலில் இரத்த சர்க்கரை அளவு குறைந்தால் வியர்த்தல், தலைசுற்றல், நடுங்கும் உணர்வு, மயக்கம் போன்றவை உண்டாகும். மேலும் மங்கலான பார்வை, படபடப்பு, நடுக்கம், பசி போன்றவையுயும் ஏற்படும். அப்போது விரைவாக சிகிச்சையளிக்க ஒரு டீஸ்பூன் தேன் அல்லது திராட்சைகள் அல்லது பழச்சாறு எடுத்துகொள்வதன் மூலம் உடனடியாக சர்க்கரை அளவு உயர்த்தலாம்.
இன்சுலின் எடுக்கும் கர்ப்பிணிகள் நாள்தோறும் சர்க்கரை அளவை கவனிக்கவேண்டும்.
இன்சுலின் எடுக்கும் போது சர்க்கரை அளவு கண்காணிக்க என்ன செய்வது?
கர்ப்பிணிகள் இன்சுலின் எடுக்கும் போது இரத்த சர்க்கரை அளவை கண்காணிக்க நாள் ஒன்றுக்கு 6 முறை சரிபார்க்கவேண்டும்.
குளுக்கோஸ் விவரம் பொறுத்து சர்க்கரை அளவு குறைவாகவோ அதிகமாகவோ சரி பார்க்க வேண்டியிருக்கும்.இரத்த சர்க்கரை அளவை எளிதாகக் கண்காணிக்க குளுக்கோமீட்டரை பயன்படுத்தவும்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
ஒவ்வொரு முறை மருத்துவரை அணுகும் போதும் இந்த விவரங்களை அளித்து ஏதேனும் மாற்றம் தேவையா என்பதை ஆலோசிக்கவும். உங்கள் உணவு முறை, உடல் உழைப்பு, சர்க்கரையின் அளவு என அனைத்தையும் ஆரோக்கியமாக வைத்துகொண்டால் எதிர்காலத்தில் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம். பிரசவமும் சிக்கல் இல்லாமல் இருக்கும்.