கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் (Constipation during pregnancy in tamil) வருவதை தவிர்க்க சிறந்த வழிகள்

Deepthi Jammi
5 Min Read

கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் (Constipation during pregnancy in tamil) வருவதை தவிர்க்க என்ன செய்யலாம்?

ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் (Constipation during pregnancy in tamil) என்பது அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று. கர்ப்பகாலத்தில் குடல் அசைவுகள், வயிறு வலி, கடினமாக மலம் கழித்தல் என இந்த மூன்று அறிகுறிகளையும் எதிர்கொண்டிருப்போம். ஹார்மோன் மாற்றங்கள், கர்ப்பப்பை அழுத்தம், இரும்புச்சத்து போன்றவையே இதற்கு காரணம். 

கர்ப்ப காலத்தில் மலச்சிக்கலுக்கு (Constipation during pregnancy in tamil) தீர்வு காண்பதற்கு முன்பு இவை ஏன் உண்டாகிறது என்று பார்க்கலாம்.

கர்ப்ப காலத்தில் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் அதிகரிக்க தொடங்கும். இது உடலின் தசைகள் தளர்த்தப்பட காரணமாகிறது. இவை தான் குடல் இயக்கத்தை பொறுமையாக இயக்குகிறது. இதனால் செரிமானம் மெதுவாக கூடும்.  இது தொடர்ந்து இருக்கும் போது மலச்சிக்கல் உண்டாகிறது. 

ஆய்வு ஒன்றின் படி நான்கு பெண்களில் மூன்று பெண்கள் கர்ப்பகாலத்தில் மலச்சிக்கல் பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள் என்கிறது. மலச்சிக்கலுக்கு மருந்துகள் இருந்தாலும் மலச்சிக்கலை போக்க முழுமையான தீர்வுகள் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களை செய்தால் போதும். கருவுற்ற முதலே கர்ப்பகாலத்தில் வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. இந்த பதிவின் மூலம் உங்கள் உணவு முறை குறித்த விஷயங்களை தெரிந்து கொள்வோம். 

கர்ப்ப காலத்தில் மருத்துவரின் ஆலோசனையை பெறும் போது கர்ப்பிணிகள் உணவுகள் குறித்து ஆலோசிக்கவும் மறந்துவிட வேண்டாம். கர்ப்பகாலம் முழுவதுமே  ஆரோக்கியமான உணவு தேவை என்றாலும் ஒவ்வொரு ட்ரைமெஸ்டர் காலங்களிலும் ஒவ்வொரு விதமான சத்துகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதால் இதை கவனத்தில் கொள்வோம்.

மலச்சிக்கல் இருக்கும் என்று சொல்வதை காட்டிலும் அவை வருவதற்கு முன்பு என்ன மாதிரியான உணவுகளை எடுத்துகொள்வது என்று பார்க்கலாம். மேலும் கர்ப்ப கால பொதுவான பிரச்சனை பற்றி அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம்.

கர்ப்ப கால மலச்சிக்கலை (Constipation during pregnancy in tamil) தவிர்க்க செய்ய வேண்டியவை!

avoid constipation in pregnancy

நார்ச்சத்து மிகுந்த உணவுகள்

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மலச்சிக்கலை தடுக்க உதவும். கர்ப்பிணிகளுக்கு வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை இவை அளிக்கிறது. 

கர்ப்பிணிகள் ஆரோக்கியமாக இருக்க நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 கிராம் வரையான நார்ச்சத்து தேவை. நார்ச்சத்து இருக்கும் காய்கறிகள், கீரைகளை எடுத்துகொள்ள வேண்டும்.

Fiber Foods for Pregnancy

காய்கறிகள், பீன்ஸ் பட்டாணி, பயறு வகைகள், தானியங்கள், முழு தானியங்களில் செய்த ரொட்டி வகைகள், கொடி முந்திரி போன்றவை அடங்கும். 

தினம் இரண்டு விதமான பழங்களை எடுத்துகொள்ள வேண்டும். பழங்களில் ஆப்பிள், வாழைப்பழங்கள், அத்திப்பழம், ராஸ்பெர்ரி போன்றவை எடுத்துகொள்ளலலாம். இவற்றில் இயற்கையாகவே நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இவை குடல் இயக்கத்தை சீராக இயக்க உதவும். 

போதுமான தண்ணீர் அவசியம்

கர்ப்ப காலத்தில் பெண்கள் மலச்சிக்கலை (Constipation during pregnancy in tamil) தவிர்க்க விரும்பினால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு இருக்க கூடாது. சிறுநீர் அடிக்கடி போக வேண்டியிருக்கிறதே என்று தண்ணீர் குடிப்பதை தவிர்த்தால் அது மலச்சிக்கல் பிரச்சனையில் கொண்டுவந்துவிடும். மலச்சிக்கலுக்கு தீர்வு என்றில்லாமல் அதை வராமல் செய்ய நீங்கள் செய்ய வேண்டியது உடலை நீரேற்றமாக வைத்திருப்பது தான். 

pregnancy drinking water level

கர்ப்பகாலத்தில் நாள் ஒன்றுக்கு 8 முதல் 12 டம்ளர் வரை நீர் குடிப்பது அவசியம். உடலில் போதுமான நீர் இருந்தால் அது குடலை மென்மையாகவும் செரிமான பாதையை சீராக்கவும் செய்ய உதவும்.

ஒவ்வொரு நாளும் அதிக நீர் எடுத்துகொள்வதை உறுதி செய்யுங்கள். கர்ப்பகாலம் முழுவதும் உடலை நீரேற்றமாக வைத்திருந்தால் மலச்சிக்கல் பெருமளவு தவிர்க்கப்படும் 

உணவை பிரித்து எடுத்துகொள்வது நல்லது

கர்ப்ப காலத்தில் செரிமானப்பிரச்சனை இருக்கும் பெண்கள் உணவை பிரித்து எடுத்துகொள்வது நல்லது என்று அறிவுறுத்துவார்கள். மலச்சிக்கல் பிரச்சனைக்கும் இது தீர்வாக இருக்கும்.

தினசரி மூன்று வேளை உணவை ஆறுவேளையாக பிரித்து எடுத்துகொள்ளலாம். சிறிது சிறிதாக உணவை எடுத்துகொள்ளும் போது செரிமானத்துக்கு அதிக நேரம் எடுக்காமல் ஜீரணமண்டலம் வேலை செய்யும். இது குடல் மற்றும் பெருங்குடலுக்கு உணவை சீராக அனுப்ப அனுமதிக்கும், 

அதிகளவு உணவு ஒரே நேரத்தில் எடுத்துகொள்வதால் வயிற்றுக்கு அதிக சுமை ஏற்படும். இது செரிமானத்தை கடினமாக்கும். நீங்கள் எடுத்துகொள்ளும் உணவும் மலச்சிக்கலை உண்டாக்கும்.  உதாரணத்துக்கு கால்சியம் நிறைந்த உணவு என்று பால் பொருள்களை அதிகம் சேர்க்கும் போது மலச்சிக்கல் உண்டாகலாம் என்பதால் அதையும் கவனத்தில் கொள்வது நல்லது. 

கர்ப்ப கால உடற்பயிற்சி

கர்ப்பகாலத்தில் உடல் செயல்பாடு மலச்சிக்கலை தவிர்க்க உதவும். உடல்பயிற்சி செய்வதன் மூலம் குடல் இயக்கங்கள் தூண்டப்படுகிறது. ஒவ்வொரு கர்ப்பிணியும் வாரத்தில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்ய முயற்சிக்க வேண்டும். 

உங்களுக்கு பொருத்தமான உடல்பயிற்சி எது என்பதை மருத்துவரை ஆலோசித்து உடற்பயிற்சி நிபுணரின் அறிவுறுத்தலின் பெயரில் செய்யலாம்.

Pregnancy and exercise

நீச்சல், யோகா போன்ற பயிற்சிகள் பொதுவாக அறிவுறுத்தப்படும். அதே நேரம் எல்லா கர்ப்பிணிகளும் செய்ய வேண்டிய பயிற்சி என்றால் அது நடைபயிற்சி என்று சொல்லலாம்.

இது குடல்களின் இயக்கங்களை மேன்மைபடுத்துகிறது. நீங்கள் ஓட வேண்டியதில்லை. நிதானமாக நடந்தாலே போதுமானது. அருகில் இருக்கும் பூங்காக்கள், மொட்டை மாடி, தோட்டம் என ஏதாவது ஒரு இடத்தில்  உங்கள் நடைபயிற்சியை உங்கள் துணையுடன் கொண்டாடுங்கள். 

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

மலச்சிக்கலுக்கு (Constipation during pregnancy in tamil) மருந்துகள் எடுக்கலாமா?

தலைவலிக்கு கூட காய்ச்சலை தேடி ஓடும் சூழலில் மலச்சிக்கலுக்கு மருந்துகள் மூலம் தீர்வு காண விரும்பும் கர்ப்பிணிகள் இயன்றவரை அதை தவிர்ப்பதே நல்லது.

இயற்கை முறையில் மலச்சிக்கலுக்கு தீர்வு காணவே மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதே நேரம் அதிக மலச்சிக்கலை சந்திக்கும் போது மலம் இளகி வெளியேற மருந்துகளை பரிந்துரைப்பார்கள்.

Medicine to Treat Constipation

இவை குடலை இயக்கி மலத்தை இளக்கி எளிதாக வெளியேற உதவும். எனினும் தொடர்ச்சியாக மருந்துகள் மூலமே மலத்தை வெளியேற்ற முயலக்கூடாது. 

வைட்டமின் மாத்திரைகளாலும் மலச்சிக்கல் உண்டாக கூடும் என்பதால் அவ்வபோது மருத்துவரின் ஆலோசனை எடுத்துகொள்வது அவசியம். இரும்புச்சத்து குறைபாடு இருக்கும் போது மலச்சிக்கல் இருந்தால் மருத்துவரின் அறிவுரையோடு உணவு முறை மாற்றத்தில் இந்த சத்தை எடுத்துகொள்ள ஆலோசிக்கலாம். அதே நேரம் மலச்சிக்கலுக்கு சுயமாக மாத்திரைகளை எடுத்துகொள்வதும் தவறானது என்பதையும் மறந்துவிட வேண்டாம். 

கர்ப்பகால மலச்சிக்கலுக்கு (Constipation during pregnancy in tamil) தீர்வு மருந்துகள் தான் என்றில்லாமல் கர்ப்ப காலத்தில் மலச்சிக்கலைத் தவிர்க்க சிறந்த வழிகள் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை என்பதை மனதில் கொள்ளுங்கள். அம்மாவுக்கும் குழந்தைக்கு அதிக நன்மை தரும்.

5/5 - (226 votes)

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Follow:
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »