கர்ப்பம் கலையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? (Ways to Reduce Chance of Miscarriage in Tamil) யாருக்கு கர்ப்பம் கலைய அதிக வாய்ப்புள்ளது மேலும் கர்ப்பம் கலைந்த பிறகு எதை நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்பதை கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
கர்ப்பம் கலைவதால் மேற்கொண்டு கவலை கொள்ளாமல் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்ளுங்கள்.
பொதுவாக முதல் 3 மாதங்களில் நிறைய பெண்கள் இந்த கருச்சிதைவு பிரச்சினையை சந்திக்கின்றனர். தொடர் கருச்சிதைவு நிகழும் போது தம்பதிகள் இருவரும் மருத்துவரை அணுகி சிகச்சை பெறுவது நல்லது.
சில மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உங்களின் ஹார்மோன் மாற்றங்கள், தொற்றுகள் மற்றும் மரபணு ரீதியான பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கேற்ப சிகச்சை அளிக்கப்படும்.
இந்த பரிசோதனைகள் மூலம் மறுபடியும் இந்த மாதிரியான பிரச்சனைகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்கலாம்.
ஆரம்பகால கர்ப்பத்தில் கருச்சிதைவைத் தவிர்ப்பது (Ways to Reduce Chance of Miscarriage in Tamil) எப்படி?
கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் கரு வளர்ச்சி நிலையற்றதாக இருக்கும். எனவே கர்ப்பிணி பெண்கள் கர்ப்பம் கலையாமல் இருக்க (ways to reduce chance of miscarriage in tamil) இந்த நேரத்தில் அதிக கவனத்துடம் இருக்க வேண்டும்.
- கருவுற்ற முதல் 4 மாதங்களுக்கு உடலுறவு கொள்ளாதீர்கள்.
- கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யக்கூடாது.
- நேரம் தவறி சாப்பிடக்கூடாது.
- கர்ப்ப காலத்தில் குறைவாக ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.
- கர்ப்பிணிப் பெண்கள் மிகவும் பதட்டமாக உணரக்கூடாது.
இவற்றையெல்லாம் சரிவர தெரிந்து வைத்து அதன் படி நடந்துகொண்டாலே ஆரம்பகால கருச்சிதைவை தடுக்கலாம்.
ஏன் கருச்சிதைவு ஏற்படுகிறது?
கர்ப்ப காலத்தில் தேவைக்கு குறைவான புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பதாலும் கருசிதைவு ஏற்படுகிறது.
கருச்சிதைவு பிறப்புறுப்பில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டாலோ, எச்.ஐ.வி, மலேரியா, சிபிலிஸ் போன்ற பிரச்சனைகளாலும், சுகாதாரமற்ற உணவை சாப்பிட்டு ஃபுட் பாய்சனாகிவிடுவதாலும் கருச்சிதைவு ஏற்படுகிறது.
மேலும் காய்ச்சப்படாத பால், வேக வைக்காத முட்டை சாப்பிடுவதால் வரும் ஃபுட் பாய்சன், கெட்டுப்போன இறைச்சி அல்லது சரியாக வேக வைக்கப்படாத இறைச்சி சாப்பிடுதல், போன்றவை கருச்சிதைவுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றது.
கர்ப்பப்பை வாய் பிரச்சனை உள்ளவர்களுக்கு கருசிதைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
பி.சி.ஓ.எஸ் பிரச்சனை உள்ள பெண்களுக்கு, தைராய்டின் அளவு அசாதாரணமாக இருக்கும் பெண்களுக்கு கருசிதைவு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
பொதுவாக முதல் 3 மாதத்தில் 50 சதவீத கருச்சிதைவுக்கு மரபணு பாதிப்பு தான் காரணமாக அமைகிறது. அதிகமான குரோமோசோம் அசாதாரண விகிதத்தில் இருப்பது தான் இதற்கு முக்கிய காரணம்.

கர்ப்பபையில் உள்ள குறைபாடுகளும் கருச்சிதைவுக்கு காரணமாக இருக்கின்றது. கர்ப்ப பையில் உள்ள நார்த்திசு கட்டிகள், பிளவு சரியற்ற கர்ப்பப்பை வாய் போன்றவைகளும் கருச்சிதைவுக்கு காரணமாக அமைகிறது. எனவே இந்த பிரச்சினைகளை உடனடியாக சரி செய்து விட்டாலே போதும் ஆரோக்கியமான கரு உருவாகுதலை பெறலாம்.
சில வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களும் கருச்சிதைவுக்கு காரணம். புகைப்பிடித்தல், அதிகமான மதுப் பழக்கம், போதைப் பழக்கம் போன்றவை கருச்சிதைவை ஏற்படுத்த முக்கிய காரணிகளாக அமைகிறது.
பெண்கள் பரிசோதனைகளுக்குச் சென்று சரியான நேரத்தில் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். கருப்பையில் ஏற்படும் பிரச்சனைகளும் கருச்சிதைவை ஏற்படுத்தும். ஆனால் பெரும்பாலான கருப்பை பிரச்சனைகளை அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் கண்டறியலாம்.

கருச்சிதைவு யாருக்கு ஏற்படுவதற்கான வாப்புக்கள் உள்ளது?
கருச்சிதைவு 35 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கும், சர்க்கரை நோய், தைராய்டு, மற்றும் 3 முதல் 4 முறை ஏற்கெனவே கருச்சிதைவு நடந்திருக்கும் பெண்களுக்கு மீண்டும் கருசிதைவு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

இரண்டு அல்லது அதற்கு மேல் கருச்சிதைவு (Prevent Miscarriage) ஏற்பட்டு இருந்திருந்தால் ஆண் மற்றும் பெண் இரண்டு பேரின் குரோமோசோம்களும் பரிசோதனை செய்ய வேண்டும். இந்த பரிசோதனை 95 சதவீதம் தெளிவான தீர்வை கொடுக்கிறது. இதில் பாதிப்பு இருந்தால் நீங்கள் அனுபவம் வாய்ந்த மரபணுவியல் மருத்துவரை நாடுவது நல்லது.
கருச்சிதைவு நடந்தால் எதிர்கால கர்ப்பத்தை தடுக்குமா?
கருச்சிதைவு நடந்திருந்தால் கண்டிப்பாக எதிகால கர்ப்பத்தை தடுக்காது. 100ல் 85 சதவீத பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டு இருந்தாலும் மீண்டும் கர்ப்பமாக முடியும். மேலும் சுகப்பிரசவத்திலேயே கூட பெற்றுகொள்ள முடியும்.

ஆரோக்கியமான குழந்தை பிறக்கவும் செய்யும். கருச்சிதைவு ஏற்பட்டால் இனி மீண்டும் நீங்கள் கர்ப்பமாக முடியாது என அர்த்தம் கிடையாது. இது குழந்தையின்மை பிரச்சனை கிடையாது. 1 முதல் 2 சதவீத பெண்களுக்கு தொடர்ந்து கருச்சிதைவு ஏற்படும் பிரச்சனை இருக்கும். சில ஆய்வார்கள் இதை ஆட்டோ இம்யூன் நோய் என கூறுகின்றனர்.
இப்படி இருக்கும் போது இவர்கள் சரியான மருத்துவரை அணுகி, குழந்தைக்குத் திட்டமிடும் முன்னரே ஆலோசனை பெறுவது நல்லது. சில மருத்துவர்கள், குறைந்தது 6 மாதமாவது இடைவெளி விட்டு மீண்டும் கருத்தரிக்க திட்டமிடும்படி சொல்வார்கள். உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் ஒரு பெண் இருக்க வேண்டியது அவசியம்.
கருச்சிதைவுக்குப் பிறகு தவிர்க்க வேண்டிய உணவுகள்
இனிப்புகள்
அதிக வெள்ளை சர்க்கரை கொண்ட உணவுகளைத் தவிர்க்கவும். ஏனென்றால் அவை இரத்த சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தும்.
பால் மற்றும் கொழுப்பு இறைச்சிகள்
கருச்சிதைவுக்குப் பிறகு, உங்களுக்கு வலி மற்றும் அசவுகரியத்தை ஏற்படுத்தும் அழற்சியைத் தவிர்ப்பது முக்கியம். இறைச்சி மற்றும் பால் பொருட்களில் உள்ள கொழுப்புகள் வீக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் கருச்சிதைவுக்குப் பிறகு கொழுப்பு இறைச்சிகள் மற்றும் பால் பொருட்களைத் தவிர்க்கவும்.
துரித உணவு
துரித உணவு (ஜங்க் ஃபுட்) சிலவற்றை மிதமாக சாப்பிடுவது சரி. ஆனால் கருச்சிதைவுக்குப் பிறகு அந்த உணவுகளை அதிகம் எடுத்துகொள்ள வேண்டாம்.
மேலும் இந்த உணவுகள் வெற்று கலோரிகளால் உங்களை நிரப்புகிறது மற்றும் உங்கள் உடலுக்கு இப்போது தேவைப்படும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதைத் தடுக்கும்.
சோயா பொருட்கள்
சோயா உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது தான். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் இதில் பைட்டேட்டிலும் நிறைந்துள்ளது. இது உங்கள் உடலில் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. எனவே, கர்ப்ப இழப்புக்குப் பிறகு நீங்கள் உட்கொள்ளும் சோயாவின் அளவைக் கட்டுப்படுத்துவது நல்லது.
சில தம்பதியருக்கு ஏன் இந்த கருச்சிதைவு ஏற்படுகிறது என்ற காரணங்கள் தெரியாமலும் இருக்கின்றன. இருப்பினும் அவர்களுக்கு 70 சதவீதம் இயல்பான கருவுறுதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
கருச்சிதைவு என்பது உடம்பு ரீதியான வலியை மட்டும் கொடுப்பதோடு கணவன் மனைவிக்கு மனது ரீதியான வலியையும் கொடுக்கிறது. எனவே கருவுறுதல் என்பது மிகுந்த கவனத்துடன் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
சரியான சிகிச்சையை மேற்கொள்வதன் மூலம் கருச்சிதைவை தடுத்து (Ways to Reduce Chance of Miscarriage in Tamil) ஆரோக்கியமான கருவை உருவாக்கலாம்.
இது ஒரு உணர்வு ரீதியான விஷயம் என்பதால் இருவருக்கும் சந்தோஷமும் நிலைக்கும். மேலும் சந்தேகங்களுக்கு உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.