உடல் பயிற்சி செய்ய முடியவில்லை என்றாலும் நடைப்பயிற்சியே (walking during pregnancy in tamil )கூட போதும் என்பது கர்ப்பிணிகளுக்கும் சரியானதாக இருக்கும்.
கர்ப்பிணி பெண் உடற்பயிற்சிகள் செய்யலாமா, அதிலும் நடைப்பயிற்சி செய்யலாமா என்ற சந்தேகம் உண்டு. கர்ப்பிணி நடைப்பயிற்சி செய்தால் மிகவும் நல்லது என்கிறது பெரும்பாலான ஆராய்ச்சிகள்.
கர்ப்பிணி நடப்பதால் தாய்க்கும் சேய்க்கும் அதிக நன்மையை தருகிறது. இதை தொடங்குவதற்கு குறிப்பிட்ட பொருள்கள் என்று வாங்கவேண்டியது இல்லை. யாருடைய உதவியும் தேவையில்லை.
நீங்கள் குறிப்பிட்ட நேரம், இடம், பொருட்கள் தேவை என்று பார்க்க வேண்டாம். எப்போது வேண்டுமானாலும் நடைப்பயிற்சி செய்யலாம்.
கர்ப்பக் காலத்தில் எப்போது நடக்க தொடங்க வேண்டும்?
கர்ப்பக் காலத்தில் நடைப்பயிற்சி செய்வது எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். பாதுகாப்பான பயிற்சி இது என்பதால் இதற்கு பிரத்யேக கால கட்டம் தேவையில்லை.
முதல் மூன்று மாதங்களிலேயே நீங்கள் நடைபயிற்சியை தொடங்கிவிடலாம்.
இது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஒருவேளை நீங்கள் முன்கூட்டியே எதுவும் செய்யவில்லை என்றால் இந்த மாதத்திலிருந்தும் செய்ய தொடங்கலாம்
உங்கள் உடற்பயிற்சி நிலை எப்படி இருந்தாலும் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை பொறுத்து அதை அதிகரிக்கவோ அல்லது தவிர்க்கவோ செய்யலாம்.
ஒரு நாளின் மொத்த நடைபயிற்சி நேரத்தை குறுகிய இரண்டு அல்லது அதற்கு மேல் பிரித்து செய்வது கூட நன்மையே அளிக்கும். இப்படி உங்கள் நடைபயிற்சியை திட்டமிட்டுகொள்வது தான் இலக்கை அடைய உதவும். நீங்கள் மேற்குறிப்பிட்ட இடத்தில் எப்படி உள்ளீர்கள் என்பதை பொறுத்து உங்கள் கர்ப்பகால நடைபயிற்சி திட்டமிடலாம்.
முதல் மூன்று மாதம் நடைப்பயிற்சி (13 வாரம் வரை)
முதல் மூன்று மாதம் என்பது முதல் 13 வாரங்கள் வரை இருக்கும். ஆனால் உங்கள் உடல் ஆரோக்கியம் ஏற்ப இதை முழுவதுமாக தொடரவோ அல்லது எப்போது வேண்டுமானாலும் முடிக்கலாம்.
நடைப்பயிற்சி தொடங்கிய சில நாட்களில் உங்கள் கவனத்தை அதில் செலுத்துங்கள். இதன் மூலம் நீங்கள் நடக்கும் வேகமும் நேரமும் அதிகரிக்கும்.
இரண்டாவது மூன்று மாதங்கள் (13-25 வாரம் வரை)
இந்த நேரத்தில் உங்களது ஆற்றல் அதிகரிக்கும். இந்த காலம் ஹனிமூன் ட்ரைமெஸ்டர் என்று சொல்வார்கள். பலருக்கும் மசக்கையெல்லாம் சென்று விடும், அதனால் இந்த இரண்டாவது மூன்று மாதத்தில் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லதாகும்.
மூன்றாவது மூன்று மாதங்கள் (26- 40 வாரம் வரை)
உங்கள் பிரசவ காலத்தை நெருக்கத்தில் கொண்டுள்ளதால் நீங்கள் வேகத்தை அல்லது நாட்களை அதிகப்படுத்தினாலும் உங்களை அதிக சோர்வுக்கும் சிரமத்துக்கும் ஆளாக்க செய்யலாம்.
முயன்ற அளவிற்கு நீங்கள் நடக்கும் வேகம் மற்றும் தூரத்தை ஒரே அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் நீங்கள் கடைசி மூன்று மாதங்களில் இருப்பதால் இது இயற்கையாகவே குறையும்.
கர்ப்பிணி நடைபயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய குறிப்புகள் (tips for walking during pregnancy in tamil)
- கர்ப்பகாலத்தில் தொடர்ந்து நடைபயிற்சியை உடற்பயிற்சியாக செய்யும் போது மருத்துவரிடம் ஒப்புதல் பெறுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
- நடைபயிற்சியின் போது பேச முடியும் என்றாலும் அதிகம் பேச வேண்டாம். இது உங்களை சோர்வாக வைத்திருக்கும்.
- நடைபயிற்சியின் போது உடல் ஓய்வை கேட்டால் நீங்கள் அதை செய்யலாம். கர்ப்பமாக இருக்கும் பொது உடல் அதிகம் வேலை செய்யும். சில நாட்களில் அதிக சோர்வை உனரலாம். அப்போது ஓய்வு அவசியம்.
- கர்ப்பகாலத்தில் நீரேற்றம் அவசியம். நீங்கள் நடைபயிற்சி மேற்கொள்வது ஒவ்வொரு 30 நிமிட உடறயிற்சிக்கும் உங்கள் தினசரி திரவ உட்கொள்ளலில் 8 அவுன்ஸ் அளவு கூடுதலாக சேர்க்கவும்.
- காலுறைகள் வசதியான காலணிகள் வீக்கம் குறைக்கும். நடக்கும் போது முதுகுவலி இருந்தால் மருத்துவரை சந்தித்து உரிய ஆலோசனை செய்யுங்கள்.
- கடுமையான வலி அல்லது தசைபிடிப்பு, திரவம் கசியும் நிலை, இரத்தப்போக்கு போன்றவை இருந்தால் நடைபயிற்சியை நிறுத்துங்கள். மற்ற நேரங்களில் நடைபயிற்சி பாதுகாப்பானதே.