கருப்பை கட்டி (Uterine Fibroids in tamil) ஏன் உருவாகிறது, அறிகுறி எப்படி இருக்கும்? கண்டறியும் முறை மற்றும் சிகிச்சை முறைகள்!

Deepthi Jammi
8 Min Read

கருப்பை கட்டி (Uterine Fibroids in tamil) என்பது புற்றுநோயற்ற கட்டியின் பொதுவான வகை என்று சொல்லலாம். இந்த கட்டிகள் கருப்பையில் வளரும். அனைத்து நார்த்திசுக்கட்டிகளும் அறிகுறிகளை உண்டாக்காது, ஆனால் இவை உண்டாகும் போது அதிக மாதவிடாய், இரத்தப்போக்கு, முதுகுவலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் உடலுறவின் போது வலி போன்றவை உண்டாக்கலாம். கருப்பை நார்த்திசுக்கட்டிகளுக்கு பெரும்பாலும் சிகிச்சை தேவையில்லை. இந்த கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டிகள் குறித்து பார்க்கலாம்.

Contents
கர்ப்பப்பை கட்டி என்றால் என்ன?கர்ப்பப்பை கட்டிகள் (Uterine Fibroids in tamil) எல்லா பெண்களுக்கும் வரக்கூடியதா?கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டிகளுக்கு அதிக ஆபத்து யாருக்கு?நார்த்திசுக்கட்டிகளின் வளர்ச்சி எங்கு இருக்கும்?சப்மியூகோசல் நார்த்திசுக்கட்டிகள் (Submucosal fibroids)உட்புற நார்த்திசுக்கட்டிகள்சப்செரோசல் ஃபைபராய்டுகள் (Subserosal Fibroid)பெடுங்குலேட்டட் ஃபைப்ராய்டு (Pedunculated Fibroids)நார்த்திசுக்கட்டிகள் எப்படி இருக்கும்?நார்த்திசுக்கட்டிகள் என்பது புற்றுநோயா?கர்ப்பப்பை கட்டிகளுக்கு (Uterine Fibroids in tamil) என்ன காரணம்?கர்ப்பப்பை கட்டி (Uterine Fibroids in tamil) அறிகுறிகள்?கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டிகளில் வலிகருப்பை கட்டிகள் (Uterine Fibroids in tamil) காலப்போக்கில் மாறுமா?கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டிகள் எப்படி கண்டறியப்படுகிறது?கம்ப்யூட்டட் டோமோகிராபி (Computed Tomography)ஹிஸ்டரோஸ் கோபிஹிஸ்டெர்போசல்பிங் கோகிராபிலேப்ராஸ்கோப்பிகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Fibroids in tamil) எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகின்றன?கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டிகள் மருந்துகள்?நார்த்திசுக்கட்டிகள் வராமல் தடுக்க முடியுமா?கர்ப்பப்பை கட்டிகள் (Uterine Fibroids in tamil) இருந்தால் கருத்தரிக்க முடியுமா?Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

கர்ப்பப்பை கட்டி என்றால் என்ன?

கர்ப்பப்பை என்பது இடுப்பில் உள்ள தலைகீழான பேரிக்காய் வடிவ உறுப்பு. இது சாதாரண எலுமிச்சை பழத்தை போன்று இருக்கும். இது கர்ப்பகாலத்தில் குழந்தை வளரும் அளவுக்கு விரிவடையும் தன்மை கொண்ட ஓர் உறுப்பு.

கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டிகள் (Uterine Fibroids in tamil) லியோமியோமாஸ் என்றும் அழைக்கப்படுகின்றன. இது கருப்பையின் சுவரில் இருந்து தசை மற்றும் இணைப்பு திசுக்களால் உருவாக்கப்பட்ட வளர்ச்சி. இந்த வளர்ச்சியான கட்டிகள் பொதுவாக கர்ப்பப்பை புற்றுநோய் அல்ல. இந்த நார்த்திசுக்கட்டிகள் ஒற்றை முடிச்சு அல்லது கொத்தாக வரலாம்.

நார்த்திசுக்கட்டி கொத்துகள் 1 மிமீ முதல் 20 செ.மீ (8 அங்குலம்) விட்டம் அல்லது அதைவிட பெரியதாகவும் இருக்கலாம். சமயங்களில் இது தர்பூசணி அளவும் விரிவடையலாம்.

இது கர்ப்பப்பையின் சுவரில் உறுப்பின் முக்கிய குழிக்குள் அல்லது வெளிப்புற பரப்பிலும் உருவாகலாம். நார்த்திசுக்கட்டிகள் அளவு, எண்ணிக்கை மற்றும் கர்ப்பப்பையில் அவை இருக்கும் இடம் என்பது மாறுபடலாம். இந்த கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டிகள் இருந்தால் அதை சில அறிகுறிகள் உங்களுக்கு உணர்த்திவிடும். அதே நேரம் இந்த அறிகுறி ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். அதனால் பொதுவான அறிகுறிகள் என்னென்ன என்பதை அறிவது அவசியம்.

கர்ப்பப்பை கட்டிகள் (Uterine Fibroids in tamil) எல்லா பெண்களுக்கும் வரக்கூடியதா?

இந்த கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டிகள் ஃபைப்ராய்டுகள் என்று அழைக்ககூடிய இவை உண்மையில் இடுப்பில் பொதுவான வளர்ச்சி என்று சொல்லலாம். ஏனெனில் 40 முதல் 80% பெண்களுக்கு ஃபைபராய்டுகள் உள்ளன. எனினும் பல பெண்கள் தங்கள் நார்த்திசுக்கட்டிகளில் இருந்து எந்த அறிகுறியையும் கொண்டிருப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பாக சிறிய நார்த்திசுக்கட்டிகள் இருந்தால் அது அறிகுறியற்றது என்றே சொல்லலாம். அதோடு இவை எந்த அபாயகரமான நிலையையும் உண்டாக்காது.

கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டிகளுக்கு அதிக ஆபத்து யாருக்கு?

  • அதிக உடல் எடை (ஆரோக்கியமான உடல் எடையை விட 20% இருந்தால் ஒரு நபர் பருமனாக சொல்லப்படுவார். அதோடு உங்கள் பிஎம் ஐ அளவும் முக்கியம்)
  • ஃபைப்ராய்டுகளின் குடும்ப வரலாறு கொண்டுள்ள பெண்கள்
  • குழந்தை பெறாத பெண்கள்
  • மாதவிடாயின் ஆரம்ப காலம் (சிறுவயதிலேயே உண்டாவது)
  • மெனோபாஸ் என்னும் தாமதமான நிலை.

நார்த்திசுக்கட்டிகளின் வளர்ச்சி எங்கு இருக்கும்?

கருப்பையின் உள்ளேயும் வெளியேயும் என பல இடங்களில் நார்த்திசுக்கட்டிகள் வளரலாம். இது வளரும் இடம் மற்றும் உங்கள் சிகிச்சை மாறுபடும். ஏனெனில் அதன் வளர்ச்சி, வளரும் இடம் எவ்வளவு பெரியவை என்பதை பொறுத்து மருத்துவ நிபுணர்கள் சிகிச்சையை பரிந்துரைப்பார். அதை பொறுத்து உங்களுக்கு சிகிச்சை தேவையா என்பதும் முடிவு செய்யப்படும்.

உங்கள் நார்த்திசுக்கட்டிகள் கருப்பையில் மற்றும் கருப்பையில் அமைந்துள்ள இடங்களுக்கு ஏற்ப இதன் பெயர்கள் மாறுபடும். நார்த்திசுக்கட்டிகள் எங்கு உள்ளது என்பதை பொறுத்து மருத்துவ நிலையில் அழைக்கப்படும் முறைகள் இதுதான்.

சப்மியூகோசல் நார்த்திசுக்கட்டிகள் (Submucosal fibroids)

இந்த விஷயத்தில் கர்ப்பகாலத்தில் கர்ப்பகாலத்தில் குழந்தை வளரும் கருப்பை இடைவெளி (குழி) நார்த்திசுக்கட்டிகள் வளரும். கருப்பையின் நடுவில் உள்ள வெற்று இடத்தில் விரிவடையும். வளர்ச்சியை பற்றி கவனிக்க வேண்டும்.

உட்புற நார்த்திசுக்கட்டிகள்

இந்த நார்ட்திசுக்கட்டிகள் கருப்பையின் சுவரிலேயே பதிக்கப்பட்டுள்லன. கர்ப்பப்பையின் பக்க சுவர்களில் இந்த தசை சுவரின் உள்ளே நார்த்திசுக்கட்டிகள் வளரும்.

சப்செரோசல் ஃபைபராய்டுகள் (Subserosal Fibroid)

கர்ப்பப்பையின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள இந்த நார்த்திசுக்கட்டிகள் கருப்பையின் வெளிப்புற சுவருடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.

பெடுங்குலேட்டட் ஃபைப்ராய்டு (Pedunculated Fibroids)

மிகக் குறைவான பொதுவான வகை, இந்த நார்த்திசுக்கட்டிகள் கர்ப்பபையின் வெளிப்புறத்திலும் அமைந்துள்ளன. இருப்பினும், துடுப்பு நார்த்திசுக்கட்டிகள் ஒரு மெல்லிய தண்டுடன் கருப்பையுடன் இணைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் இது காளான் போன்றவை என்று விவரிக்கப்படுகின்றன. இது தண்டு மற்றும் அகலமான மேல்.

நார்த்திசுக்கட்டிகள் எப்படி இருக்கும்?

நார்த்திசுக்கட்டிகள் பொதுவாக மென்மையான தசை திசுக்களின் முடிச்சுகளை போல தோற்றமளிக்கும் வட்டமான வளர்ச்சியாகும். சில சந்தர்ப்பங்களில் அவை மெல்லிய தண்டுடன் இணைக்கப்படலாம். அவை காளான் போன்ற தோற்றத்தை கொடுக்கும்.

நார்த்திசுக்கட்டிகள் என்பது புற்றுநோயா?

ஒரு நார்த்திசுக்கட்டியானது புற்றுநோய் அல்லது வீரியம் மிக்க கட்டியாக மாறும் என்பது அரிதானது. உண்மையில் நார்த்திசுக்கட்டிகளை கொண்ட 350 பெண்களில் ஒருவருக்கு வீரியம் ஏற்படும். அரிதான ஃபைப்ராய்டு தொடர்பான புற்றுநோய்களை கண்டறிவதில் 100% முன்னறிவிக்கும் சோதனை எதுவும் இல்லை.

எனினும் நார்த்திசுக்கட்டிகளின் விரைவான வளர்ச்சியை கொண்டவர்கள் அல்லது மாதவிடாய் காலத்தில் வளாரும் நார்த்திசுக்கட்டிகளை உடனடியாக மதிப்பீடு செய்ய வேண்டும்.

கர்ப்பப்பை கட்டிகளுக்கு (Uterine Fibroids in tamil) என்ன காரணம்?

ஃபைப்ராய்டு காரணங்கள் இதுதான் என்று தீர்மானமாக கண்டறியப்படவில்லை. பெரும்பாலான நார்த்திசுக்கட்டிகள் இனப்பெருக்க வயதுடைய பெண்களில் ஏற்படுகின்றன. முதல் மாதவிடாய் ஏற்படாத இளம் பெண்களிடம் அவை காணப்படுவதில்லை.

கர்ப்பப்பை கட்டி (Uterine Fibroids in tamil) அறிகுறிகள்?

பெரும்பாலான நார்த்திசுக்கட்டிகள் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது மற்றும் வழக்கமான மருத்துவ பரிசோதனை கண்காணிப்பு மூலம் இதை கண்டறியலாம். சிறிய நார்த்திசுக்கட்டிகள் இருக்கும் போது நீங்கள் அறிகுறிகளை கொண்டிருக்கமாட்டீர்கள். இது அறிகுறியற்ற நார்த்திசுக்கட்டிகள் என்று அழைக்கப்படுகிறது. பெரிய அளவில் நார்த்திசுக்கட்டிகள்

கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டிகளில் வலி

உங்களுக்கு நார்த்திசுக்கட்டிகள் இருந்தால் நீங்கள் பல்வேறு உணர்வுகளை அனுபவிக்கலம். சிறிய நார்த்திசுக்கட்டிகள் எதையும் உணர்த்தாது. அதை கவனிக்காமல் கூட இருக்கலாம். பெரிய கட்டிகள் அசெளகரியங்களை உண்டாக்கலாம். முதுகுவலி, கடுமையான மாதவிடாய் பிடிப்புகள், அடிவயிற்றில் கூர்மையான குத்தல் வலிகள் மற்றும் உடலுறவின் போது வலியை உண்டாக்கலாம்.

கருப்பை கட்டிகள் (Uterine Fibroids in tamil) காலப்போக்கில் மாறுமா?

நார்த்திசுக்கட்டிகள் காலப்போக்கில் சுருங்கலாம் அல்லது வளரலாம். நீண்ட காலத்துக்கு திடீரென சீராக அளவை மாற்றலாம். பெரும்பாலும் இந்த மாற்றும் உடலில் உள்ள ஹார்மோன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. உடலில் அதிக அளவு ஹார்மோன் இருந்தால், நார்த்திசுக்கட்டிகள் பெரிதாகலாம்.

கர்ப்பகாலத்தில் ஹார்மோன் அதிகரிக்கும் போது இந்த நார்த்திசுக்கட்டி வளர்ச்சி அடையலாம். அதனால் கருவுறுதலுக்கு முன்பு உங்களுக்கு நார்த்திசுக்கட்டி இருந்தால் மருத்துவரிடம் ஆலோசியுங்கள்.

மாதவிடாய் நிற்கும் சமயம் ஹார்மோன் குறையும் போது கட்டிகள் சுருங்கலாம். அறிகுறிகளும் குறையலாம்.

கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டிகள் எப்படி கண்டறியப்படுகிறது?

பெரும்பாலும் வழக்கமான பரிசோதனையில் இவை கண்டறியப்படுகிறது. இடுப்பு பரிசோதனை அல்லது பெற்றோர் கவனிப்பு பரிசோதனை மூலம் கண்டறியலாம். அறிகுறிகள் அதிகம் இருக்கும் பொது மருத்துவர் இந்த பரிசோதனை செய்ய அறிவுறுத்தலாம். கட்டிகள் இருக்கும் இடம் அளவு பற்றி அறிய விரிவான சோதனை செய்யப்படலாம்.

அல்ட்ராசோனோகிராபி இந்த பரிசோதனை ஒலி அலைகளுடன் உடலின் உள் உறுப்புகள் படத்தை உருவாக்கும். கர்ப்பையின் அளவை பொறுத்து பரிசோதனை முறை செய்யப்படலாம்.

கம்ப்யூட்டட் டோமோகிராபி (Computed Tomography)

சிடி ஸ்கேன் பல கோணங்களில் இருந்து உங்கள் உள் உறுப்புகளின் விரிவான படத்தை உருவாக்க செய்து காட்டுகிறது.

ஹிஸ்டரோஸ் கோபி

இந்த முறை கருப்பை நார்த்திசுக்கட்டிகளை பார்க்க மெல்லிய நெகிழ்வான குழாய் சாதனத்தை பயன்படுத்தலாம். இது புணர்புழை மற்றும் கருப்பை வாய் வழியாக கருப்பையில் நகர்த்தப்படுகிறது.

ஹிஸ்டெர்போசல்பிங் கோகிராபி

இது விரிவான எக்ஸ்ரே. மாறுபட்ட பொருள் செலுத்தப்பட்டு பிறகு கருப்பையின் எக்ஸ் கதிர்கள் எடுக்கப்படுகின்றன.

லேப்ராஸ்கோப்பி

இந்த சோதனையில் அடிவயிற்றில் ஒரு சிறிய வெட்டு உருவாக்கி உள் உறுப்புகளை கவனிக்க கேமராவுடன் கூடிய மெல்லிய மற்றும் நெகிழ்வான குழாய் செருகப்படும்.

கர்ப்பப்பை கட்டிகள் (Uterine Fibroids in tamil) எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகின்றன?

கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டிகள் இருக்கும் இடம், அளவு, எண்ணிக்கை மற்றும் அறிகுறி பொறுத்து ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அறிகுறி இல்லாதவர்களுக்கு பெரும்பாலும் சிகிச்சை தேவையில்லை. மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகு இவை படிப்படியாக சுருங்கிவிடும்.

எனினும் கட்டிகள் அளவு பொறுத்து தகுந்த இடைவேளையில் மருத்துவரின் கண்காணிப்பில் இடுப்பு பரிசோதனை மற்றும் அல்ட்ராசவுண்ட் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படலாம். இதன் மூலம் கட்டிகள் வளர்ச்சியடைகிறதா அல்லது சுருங்குகிறதா என்பதை பார்க்கலாம்.

கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டிகள் மருந்துகள்?

நார்த்திசுக்கட்டிகளால் உண்டாகும் அசெளகரியங்கள் மற்றும் வலியை நிர்வகிக்க மருந்துகள், இரும்புச்சத்துகள், பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் அறிவுறுத்தலாம். கருப்பை நார்த்திசுக்கட்டிகள் பெரியதாக இருந்தால் சமயங்களில் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. மருந்துகள் வழியாக சிகிச்சை பெறுபவர்கள் கருப்பை நார்த்திசுக்கட்டி கரையும் வரை சிகிச்சை பெற வேண்டும்.

நார்த்திசுக்கட்டிகள் வராமல் தடுக்க முடியுமா?

பொதுவாக கருப்பை நார்த்திசுக்கட்டிகளை தடுக்க முடியாது. பெரும்பான்மையோனோர் அறிகுறி இல்லாமல் இதை கொண்டிருப்பார்கள். ஆனால் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதன் மூலமும் வழக்கமான இடுப்பு பரிசோதனை மேற்கொள்வதன் மூலமும் இதனால் உண்டாகும் ஆபத்தை குறைக்கலாம். ஒருவேளை நார்த்திசுக்கட்டிகள் இருப்பதை அறிந்தால் அதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

கர்ப்பப்பை கட்டிகள் (Uterine Fibroids in tamil) இருந்தால் கருத்தரிக்க முடியுமா?

கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டிகள் இருந்தால் நீங்கள் கர்ப்பம் அடையலாம். கர்ப்பத்துக்கு முன்பாகவே இந்த கட்டிகளை நீங்கள் அறிந்தால் மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் கர்ப்பகாலத்தில் உடல் அதிக அளவு ஹார்மோன் வெளியிடும் போது இந்த கட்டிகள் வளர்ச்சி அதிகரிக்கலாம். இதுவும் அவை பெரிதாக காரணமாக இருக்கலாம்.

மேலும் இந்த பெரிய நார்த்திசுக்கட்டிகள் உங்கள் குழந்தையின் வளர்ச்சி நிலையில் அவர்கள் புரட்டுவதை தடுக்கலாம். இதனால் கருவின் தலையில் தவறான தோற்றம் உண்டாகலாம் இது அபாயத்தை அதிகரிக்கவும் செய்யும். மேலும் முன்கூட்டிய பிரசவத்தை ஊக்குவிக்க செய்யும்.

சில நேரங்களில் நார்த்திசுக்கட்டிகள் கருவுறாமைக்கு பங்களிக்கவும் செய்யலாம். பல பெண்கள் கருப்பை நார்த்திசுக்கட்டிகளுக்கு சிகிச்சை எடுத்துகொண்ட பிறகு எளிதாக கருத்தரிப்பை எதிர்கொள்கிறார்கள்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

எப்போதும் கர்ப்ப்பை நார்த்திசுக்கட்டிகள் அறிகுறி இல்லாத நிலையில் பிரச்சனை இல்லை. அதை அவ்வபோது கண்காணித்து வந்தால் மட்டும் போதுமானது. அறிகுறி இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

5/5 - (171 votes)

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Follow:
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »