கர்ப்ப காலத்தில் பால் ஒரு நல்ல உணவு. அதில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
ஆனால் கர்ப்ப காலத்தில் பேஸ்டுரைசேஷன் செய்யாத பச்சை பால் (Unpasteurized Milk During Pregnancy in Tamil)குடிப்பது நல்லதல்ல. ஏன் என்று இந்த வலைப்பதிவில் காணலாம்.
பேஸ்டுரைசேஷன் என்றால் என்ன?
பேஸ்டுரைசேஷன் என்பது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் பாலை சூடாக்குவதன் மூலம் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவைக் கொல்லும் முறையாகும்
லிஸ்டீரியோசிஸ், டைபாய்டு காய்ச்சல், காசநோய், கியூ காய்ச்சல் மற்றும் புருசெல்லோசிஸ் போன்ற நோய்களுக்கு காரணமான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவை பேஸ்டுரைசேஷன் செய்வதால் கொல்லும்.
பேஸ்டுரைசேஷன் செய்யாத பால் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் என்ன?
பாலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவைக் கொல்ல பேஸ்டுரைஸ் செய்யப்படவில்லை என்றால் சால்மோனெல்லா, ஈ.கோலை, லிஸ்டீரியா, கேம்பிலோபாக்டர் போன்ற ஆபத்தான பாக்டீரியாக்களையும், உணவில் மூலம் பரவும் நோயை ஏற்படுத்தும் பிற பாக்டீரியாக்களும் பச்சைப் பாலில் உள்ளது, இது பெரும்பாலும் உடலில் ஒவ்வாமையை அஏற்படுத்தும்.
கர்ப்பிணிகளுக்கு மட்டும் இல்லாமல், இந்த பாக்டீரியாக்கள் பச்சைப் பால் குடிப்பதால் அல்லது பச்சை பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை சாப்பிடுபவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
இந்த பாலில் உள்ள பாக்டீரியாக்கள் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு குறிப்பாக ஆபத்தானவை.
பேஸ்டுரைசேஷன் செய்யாத பாலை கர்ப்பிணிகள் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன? – Unpasteurized Milk During Pregnancy in Tamil
- பேஸ்டுரைசேஷன் செய்யாமல் பச்சை பாலில் இருந்து வரும் பாக்டீரியாவால் நோய் தொற்றுகள் ஏற்பட்டு அடிக்கடி வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுப் பிடிப்புக்கு வழிவகுக்கும்.
- கர்ப்பிணிப் பெண்களுக்கு மற்றும் கருவில் உள்ள பிறக்காத குழந்தைக்கு மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு லிஸ்டீரியா நோய்த்தொற்றின் காரணமாக கடுமையான நோய்களை உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
- கர்ப்ப காலத்தில் பேஸ்டுரைசேஷன் செய்யாமல் பச்சை பால் (Unpasteurized Milk During Pregnancy in Tamil)குடிப்பதால் சில சமயம் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளது.
- பேஸ்டுரைசேஷன் செய்யாத பால் நோய் தொற்றுக்களை கர்ப்பிணிக்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் ஏற்படும்.
- பேஸ்டுரைசேஷன் செய்யாத பால் சில சமயம் குழந்தை இறப்பு ஏற்படும் அபாயம் உள்ளது, இதனுடன் குறைப்பிரசவம் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது.
கர்ப்ப காலத்தில் பேஸ்டுரைசேஷன் செய்யாத பாலை (Unpasteurized Milk During Pregnancy in Tamil) குடிப்பதை கர்ப்பிணிகள் முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
கர்ப்பிணிகள் வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், தலைவலி மற்றும் உடல்வலி, போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு செல்லுங்கள்.
முடிவுரை
கர்ப்பிணிகள் பச்சைப் பால் (Unpasteurized Milk During Pregnancy in Tamil)அல்லது பச்சைப் பால் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை உட்கொண்ட பிறகு நோய் வாய்ப்பட்டால் அல்லது நீங்கள் கர்ப்பமாக இருந்து, அசுத்தமான பால் அல்லது பாலாடைக்கட்டியை உட்கொண்டிருக்கலாம் என்று நினைத்தால் உடனடியாக தாமதிக்காமல் மருத்துவரை பார்க்கவும்.
மேலும் உங்களுக்கு கர்ப்ப கால சந்தேகங்கள் மற்றும் கர்ப்ப கால அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்வதற்கு இப்போதே ஜம்மி ஸ்கேன் மையத்தை தொடர்பு கொள்ளவும்.