குழந்தைகளுக்கு டான்சில்ஸ் (Tonsils in tamil) ஏன் உண்டாகிறது : அறிகுறிகள், காரணங்கள், பரிசோதனை, சிகிச்சை

Deepthi Jammi
9 Min Read

டான்சில்ஸ் (Tonsils in tamil) என்பது குழந்தைகளிடம் பொதுவாக காணப்படும் ஒரு நிலை. இது கொடிய நோய் அல்ல. ஆனால் விழுங்குவதை கடினமாக்குகிறது. இதனால் குழந்தைகள் சாப்பிட மறுக்கலாம். எரிச்சலுடன் அழுதுகொண்டே இருக்கலாம்.

Contents
குழந்தைகளில் டான்சில்ஸ் (Tonsils in tamil) என்றால் என்ன?குழந்தைகளுக்கு டான்சில்ஸ் (Tonsils in tamil) உண்டாக காரணம்?இதையும் தெரிந்து கொள்ளுங்கள்: குழந்தைக்கு மலச்சிக்கல் அறிகுறிகள் மற்றும் தீர்வுகள்!குழந்தைகளுக்கு டான்சில்ஸ் (Tonsils in tamil) அறிகுறிகள்இதையும் தெரிந்து கொள்ளுங்கள்: பிறந்த குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை தவிர்க்க வேண்டிய விஷயங்கள்!டான்சில்ஸ் (Tonsils in tamil) எப்படி கண்டறியப்படுகிறது?டான்சில்ஸ் (Tonsils in tamil) கவனிக்கவில்லையெனில் என்ன ஆகும்?இதையும் தெரிந்து கொள்ளுங்கள்: குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதில் பெற்றோர்கள் செய்யும் தவறுகள்!குழந்தைகளுக்கு டான்சில்ஸ் (Tonsils in tamil) சிகிச்சைடான்சில்ஸ் (Tonsils in tamil) மற்றும் டான்சிலெக்டோமிக்கு வீட்டு வைத்தியம் உண்டா?டான்சில்ஸ் (Tonsils in tamil) எப்படி தடுப்பது?

குழந்தைகளில் டான்சில்ஸ் (Tonsils in tamil) என்றால் என்ன?

குழந்தைகளுக்கு வரக்கூடிய நோய்களில் டான்சில்ஸ் (Tonsils in tamil) ஒன்று. டான்சில்ஸ் என்பது தொண்டையில் காணப்படும் உறுப்பு. டான்சில்ஸ் அடினாய்டுகள் தொண்டையின் பின்புறம் மற்றும் மூக்கின் பின்னால் அமைந்துள்ள நிணநீர் முனைகள் ஆகும். இது தொண்டையின் இடது மற்றும் வலது முதுகெலும்பில் உள்ளன. இது புண் ஆகும் போது உண்டாகும் வலியை தான் டான்சில்ஸ் என்று அழைக்கிறார்கள்.

நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பிற கிருமிகள் இதில் நுழைந்து பாதிப்பை உண்டாக்கலாம். சில நேரங்களில் டான்சில்ஸ் (Tonsils in tamil) மற்றும் அடினாய்டுகள் பாதிக்கலாம். அப்போது டான்சில்ஸ் என்னும் நிலை உண்டாகலாம்.

குழந்தைகளுக்கு டான்சில்ஸ் (Tonsils in tamil) உண்டாக காரணம்?

பல வகையான பாக்டீரியாக்கள் அல்லது வைரஸ்கள் டான்சில்ஸ் (Tonsils in tamil) மீது சென்று வீக்கத்தை உண்டாக்கும். குறிப்பாக டான்சில்ஸை பாதிக்கும் பொதுவான நோய்க்கிருமிகள்

ஜலதோஷம் உண்டாக்கும் வைரஸ்

டான்சில்ஸ் (Tonsils in tamil)பிரச்சனைக்கு ஜலதோஷம் முக்கிய காரணமாகும். இன்ஃப்ளூயன்ஸா வைரஸ், அடினோ வைரஸ், ரைனோவைரஸ் உள்ளிட்ட வைரஸ்களின் தொகுப்பு இந்த இடத்தில் குளிர்ச்சியை உண்டாக்குகிறது.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்: குழந்தைக்கு மலச்சிக்கல் அறிகுறிகள் மற்றும் தீர்வுகள்!

குழு A ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியா

30% டான்சில்ஸ் (Tonsils in tamil) நிகழ்வுகளுக்கு இந்த ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியா தொற்றுதான் காரணமாகிறது. மற்ற பாக்டீரியாக்கள் கிளமிடியா, நிமோனியா ஸ்ட்ரெப்டோகாக்கல் நிமோனியா மற்றும் ஸ்டேஃப்ளோகோகஸ் ஆரியஸ் ஆகியவை டான்சில்ஸ் உண்டாக்கும் வேறு சில பாக்டீரியாக்கள் ஆகும். குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால் அறிகுறிகளை தணிக்க ஆரம்ப கட்டத்தில் வீட்டு வைத்தியம் குறித்த குறிப்புகள் பின்பற்றலாம்.

குழந்தைகளுக்கு டான்சில்ஸ் (Tonsils in tamil) அறிகுறிகள்

குழந்தைகளுக்கு டான்சில்ஸ் வந்தால் பெரியவர்களிடம் இருப்பதை போன்றே அறிகுறிகள் இருக்கும். குழந்தைக்கு டான்சில்ஸ் (Tonsils in tamil) தொற்று இருந்தால் கவனிக்க வேண்டிய அறிகுறிகள் என்ன என்பதை பார்க்கலாம்.

தொண்டையில் சிவத்தல்

குழந்தையின் தொண்டையின் பின்புறத்தில், டான்சில்ஸ் (Tonsils in tamil) இடத்தில் தனித்துவமான சிவத்தல் உள்ளது. டான்சில்ஸ் மேல் மஞ்சள் அல்லது வெண்மையான அடுக்கு கூட இருக்கலாம். இது வெள்ளை இரத்த அணுக்களின் திரட்சியை குறிக்கிறது.

விழுங்கும் போது வலி

பொதுவாக விழுங்கும் போது தொண்டையில் டான்சில்ஸ் (Tonsils in tamil) தேய்க்கும். குழந்தைக்கு டான்சில்ஸ் (Tonsils in tamil) இருந்தால், இந்த நடவடிக்கை வலியை உண்டாக்கும். இதன் காரணமாக குழந்தைகள் எதையும் சாப்பிடவோ அல்லது குடிக்கவோ அடம்பிடிப்பார்கள். அழுவார்கள். எரிச்சலோடு இருப்பார்கள்.

இருமல்

தொண்டையில் எரிச்சல் இருப்பதால் குழந்தைக்கு இருமல் அதிகரிக்கலாம். இதனால் வலி அதிகரிக்கும். இருமிக்கொண்டே இருப்பார்கள்.

அதிகப்படியான உமிழ்நீர்

தொண்டை தொற்று காரணமாக குழந்தை விழுங்க முடியாமல் இருக்கலாம். இது அதிகப்படியான உமிழ்நீரை வாயில் விட்டு செல்கிறது. வழக்கத்தை விட உமிழ்நீர் அதிகமாக வெளியேறும்.

காதுவலி

டான்சில்ஸ் (Tonsils in tamil) இருந்து வரும் வலி காதுகளுக்கு பரவுகிறது. இது குழந்தையை அதிக அழுகையை உண்டாக்குகிறது. அவர்கள் விழுங்கும் போது, இருமும் போது, குழந்தையின் காதுகளை இழுக்கும் போது அலறுவது போலவும் அழுவதும் போலவும் இருக்கும்.

காய்ச்சல்

உடலில் ஒரு நோய்க்கிருமி இருப்பதைக் கண்டறிந்து உடலில் வெப்பநிலையை அதிகரிக்கிறது. இது காய்ச்சலாக சொல்லப்படுகிறது.

வாய் துர்நாற்றம்

தொண்டையில் பாக்டீரியா செயல்பாடு துர்நாற்றத்தை வெளியிடும் கலவைகளை உண்டாக்குகிறது. இதனால் வாய் துர்நாற்றம் உண்டாகிறது.

வீங்கிய நிணநீர்

டான்சில்ஸ்கள் (Tonsils in tamil) நிணநீர் மண்டலத்தின் ஒரு பகுதியாகும். மேலும் இதில் உண்டாகும் ஒரு தொற்று கழுத்து மற்றும் தாடைக்கு கீழ் உள்ள நிணநீர் முனைகளின் வீக்கத்துக்கு வழிவகுக்கும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்: பிறந்த குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை தவிர்க்க வேண்டிய விஷயங்கள்!

டான்சில்ஸ் (Tonsils in tamil) சொறி

இது ஸார்லெட் காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் குழு A பாக்டீரியா தொற்றுக்கு காரணமாக இருக்கும் போது ஏற்படலாம். பாக்டீரியா உடலில் ஒரு நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது. கழுத்து, முதுகு, வயிறு மற்றும் முகத்தில் சிவப்பு தடிப்புகளை உருவாக்குகிறது. நாக்கில் சிறிய புண்களை உருவாக்குகிறது. இது ஸ்ட்ராபெர்ரி போன்ற தோற்றத்தை அளிக்கிறது. கடுமையான சந்தர்ப்பங்களில் வெள்ளை திட்டுகள் இருப்பதால் நாக்கு அடர் சிவப்பு நிறமாக மாறும்.

இந்த அறிகுறிகளை குழந்தைகளிடம் கண்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகினால் டான்சில்ஸ் தீவிரமாகாமல் தடுக்கலாம்.

டான்சில்ஸ் (Tonsils in tamil) எப்படி கண்டறியப்படுகிறது?

தொண்டை பகுதியில் ஆய்வு

குழந்தையின் தொண்டைப்பகுதியில் டான்சில்ஸ் (Tonsils in tamil) அறிகுறிகள் முழுமையாக பரிசோதிக்கப்படுகிறது. பெரும்பாலான மருத்துவ வல்லுநர்கள் இந்த பரிசோதனையின் அடிப்படையில் குழந்தைகளின் டான்சில்ஸ் உறுதி செய்கிறார்கள்.

வீங்கிய திசுக்களுக்கான உணர்வு

தொற்றினால் டான்சில்ஸ் (Tonsils in tamil) வீங்கி கழுத்தை சுற்றியுள்ள நிணநீர் கணுக்களின் வீக்கத்தை ஏற்படுத்தலாம். கழுத்து மற்றும் தாடையை சுற்றியுள்ள தோலில் ஏதேனும் வீக்கம் அல்லது கட்டிகள் இருந்தால் அதையும் மருத்துவர் பரிசோதிப்பார்.

காதுகள் மற்றும் மூக்கை பரிசோதிப்பார்

நோய்க்கிருமி மூக்கு அல்லது காதுகள் வழியாக உடலில் நுழைந்திருக்கலாம். இதனால் இந்த பகுதிகளில் இரண்டாம் நிலை தொற்று உண்டாகிறது. மேலும் டான்சில்ஸ் (Tonsils in tamil) தொற்று காது, மூக்கு மற்றும் தொண்டை போன்ற வழிகளில் இதை கண்டறியலாம்.

தொண்டை துடைப்பான் ஆய்வக பரிசோதனை

டான்சில்ஸ் இருந்து சில திரவங்களை எடுத்து பரிசோதிக்கப்படுகிறது. இது டான்சில்ஸ் (Tonsils in tamil) உண்டாக்கிய பாக்டீரியா அல்லது வைரஸின் சரியான வகையை கண்டறிய ஆய்வகத்துக்கு அனுப்பப்படுகிறது. இது ஸ்ட்ரெப் தொண்டை போன்ற நிலைகளில் இருந்து வேறுபடுத்த உதவுகிறது. பிந்தையது ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. குழந்தை மற்ற வகை பாக்டீரியாக்காள் மற்றும் வைரஸ்களிலிருந்து அழற்சி மற்றும் பாதிக்கப்பட்ட டான்சில்ஸ்களை உருவாக்கலாம். தொண்டை துடைப்பான் ஆய்வக பரிசோதனை துல்லியமாக முடிவை அளிக்கிறது.

இரத்த பரிசோதனை

மருத்துவர் ஒரு முழுமையான இரத்த பரிசோதனை பரிந்துரைக்கலாம். லிம்போசைட்டுகளின் அதிக இருப்பு மற்ற அறிகுறிகளுடன் இணைந்து டான்சில்ஸ் (Tonsils in tamil) இருப்பதை முடிவு செய்யலாம். நிலை கண்டறியப்பட்டதும் மருத்துவர் மருந்துகளை பரிந்துரைக்கலாம். நிலைமையின் தீவிரத்தை பொறுத்து வீட்டில் இருக்கும் சிகிச்சையும் மேற்கொள்ளலாம்.

டான்சில்ஸ் (Tonsils in tamil) கவனிக்கவில்லையெனில் என்ன ஆகும்?

நீண்ட காலம் சிகிச்சையளிக்காமல் விட்டால் நாள் பட்டதாக புறக்கணிக்கப்பட்டால் இது பல சிக்கல்களை உண்டாக்கும்.

அடினாய்டு தொற்று

அடினாய்டு தொற்று என்பது டான்சில்ஸ் போலவே நிணநீர் திசுக்களின் ஒரு பகுதியாகும். மேலும் இது நாசி குழியின் பின்புறத்தில் அமைந்துள்ளது. கடுமையான தொற்று அடினாய்டை பாதிக்கலாம். இதனால் அது டான்சில்ஸ் (Tonsils in tamil) போலவே வீக்கமடையாலாம். இதனால் தூக்கத்தில் மூச்சுத்திணறல் உண்டாகும்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

பெரிட்டோன்சில்லர் சீழ்

தொற்று டான்சில்ஸில் இருந்து சுற்றியுள்ள திரவங்களுக்கு பரவும் போது அது சீழ் நிரம்பிய பாக்கெட் உருவாவதற்கு வழிவகுக்கிறது. இது வெளிப்புறமாக வெண்மையாக இருக்கும்.

ஓடிடிஸ் மிடியா

ஒரு நோய்க்கிருமியானது யூஸ்டாசியன் குழாய் வழியாக தொண்டையில் இருந்து காதுக்கு விரைவாக செல்கிறது. அங்கு செவிப்பறை அதாவது டைம்பானிக் சவ்வு எனப்படும் நடுத்தர காது பகுதியை தாக்கலாம். இது ஒரு புதிய சிக்கலுக்கு வழிவகுக்கும்.

ருமாட்டிக் காய்ச்சல்

குழு A ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியாவால் ஏற்படும் டான்சில்ஸ் (Tonsils in tamil) மிக நீண்ட காலத்துக்கு சிகிச்சையளிக்கப்படாமல் இருந்தால் அது ருமாட்டிக் காய்ச்சலை உண்டாக்கிவிட வாய்ப்புண்டு. இது உடலின் பல்வேறு உறுப்புகளின் கடுமையான வீக்கமாகும்.

குளோமெருலோனெப்ரிடிஸ்

ஸ்ட்ரெப்டோகாக்கல் பாக்டீரியா உடலின் பல்வேறு உள் உறுப்புகளுக்கு வழியை கண்டறிந்து சிறுநீரகங்களுக்குள் நுழையலாம். இது ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பிந்தைய குளோமெருலோனேப்ரிடிஸ் ஏற்படுத்துகிறது. இதனால் சிறுநீரகத்தில் உள்ள இரத்த நாளங்கள் வீக்கமடையலாம். மேலும் இரத்தத்தை வடிகட்டுவதற்கும் சிறுநீரை உருவாக்குவதற்குமான பணிகளில் பாதிப்பை உண்டாக்குகிறது.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்: குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதில் பெற்றோர்கள் செய்யும் தவறுகள்!

குழந்தைகளுக்கு டான்சில்ஸ் (Tonsils in tamil) சிகிச்சை

குழந்தைகளுக்கு சிகிச்சையின் ஒரு பகுதியாக அடினாய்டுகள் மற்றும் டான்சில்ஸ் (Tonsils in tamil) அகற்ற பரிந்துரைப்பார்கள். நவீன மருத்துவத்தில் மாற்று சிகிச்சை மருத்துவ விருப்பங்கள் உள்ளன.

டான்சில்ஸிற்கான சிகிச்சையானது அதன் தீவிரத்தை பொறுத்தது. பொதுவாக பாக்டீரியா இருந்தால் ஆண்டி பயாடிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படும். வலி மற்றும் அறிகுறிகளின் தீவிரத்தை பொறுத்து மருந்துகள் கொடுக்கப்படும்.

கடுமையான நோய்த்தொற்றாக இருந்தால் சுய வைத்தியம் இல்லாமல் மருத்துவரை அணுகுவது நல்லது. அதிலும் டான்சில்ஸ் என்பது டான்சிலெக்டோமி ஆக மீண்டும் மீண்டும் தொற்றுநோய்களை உண்டாக்கினால் டான்சில்ஸ்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதே சரியானது. ஒரு வருடத்தில் 7 முறைக்கு மேல் குழந்தைக்கு டான்சில்ஸ் மீண்டும் மீண்டும் வரும் போது இது தான் கடைசி வழியாக இருக்கும்.

குழந்தைக்கு உணவளிக்கும் போது, சுவாசிக்கும் போது அல்லது தூங்கும் போது முக்கியமான செயல்பாடுகள் கடுமையாக சீர்குலைக்கும்.

டான்சில்ஸ் (Tonsils in tamil) மற்றும் டான்சிலெக்டோமிக்கு வீட்டு வைத்தியம் உண்டா?

வீட்டு பராமரிப்பு மருந்துகளின் செயல்திறனை மேம்படுத்துகிறது. இதன் மூலம் குழந்தையை விரைவில் மீட்க முடியும். டான்சில்ஸ் (Tonsils in tamil) இருந்தால் குழந்தைக்கு இந்த வைத்தியம் நீங்கள் செய்யலாம்.

திரவ ஆகாரம்

குழந்தைக்கு ஆறுமாதங்களுக்கும் குறைவாக இருந்தால் குழந்தை தாய்ப்பால் கொடுக்கும் போது திரவம் பெறுவார்கள். அதற்கு மேலான குழந்தைகளுக்கு நீங்கள் ப்யூரிகள் மற்றும் சூப்கள் வழியாக திரவ ஆகாரம் கொடுக்கலாம். இது இயற்கையாகவே டான்சில்ஸை குணப்படுத்த செய்கின்றன. டான்சில்ஸை ஈரமாக வைத்து எரிச்சலை குறைக்கின்றன. குளிர், சூடான அல்லது அதிக இனிப்பு எதையும் கொடுக்க வேண்டாம். இது காயத்தை எரிச்சலூட்டும்.

ஓய்வு தேவை

இது டான்சில்ஸ் (Tonsils in tamil) எரிச்சலை தணிக்கவும். காய்ச்சலின் தீவிரத்தை குறைக்கவும் உதவுகிறது.

ஹுமிடிஃபையர் | Humidifiers

ஈரப்பதமூட்டியான இது சுற்றியிருக்கும் நீராவியை வெளிப்படுத்தும். இதனால் டான்சில்ஸ் (Tonsils in tamil) கொண்ட குழந்தைகள் வறண்ட காற்றுக்கு உணர்திறன் உடையவர்களாக இருக்கலாம். இது புண் டான்சில்ஸ்களில் சிராய்ப்பை உண்டாக்கும். ஈரப்பதம் அளிக்கும் போது டான்சில்ஸ் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. ஹ்யூமிடிஃபையர் பயன்படுத்தாத நிலையில் வறண்ட காற்றிடமிருந்து குழந்தையை தள்ளி வைக்கவும்.

குழந்தைக்கு தீவிரமாகி இருந்தால் அறுவை சிகிச்சைக்கு பிறகு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து மருத்துவரிடம் விவாதித்து செயல்படுவது அவசியம்.

டான்சில்ஸ் (Tonsils in tamil) எப்படி தடுப்பது?

தூசியிலிருந்து விலக்கி வையுங்கள், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருங்கள். வீட்டுத்தூசியில் பாக்டீரியாக்கள் உள்ளது. இது பெரியவர்களுக்கு பாதிப்பில்லாதது. ஆனால் குழந்தைகளுக்கு டான்சில்ஸுக்கு வழிவகுக்கும். தூசிகள் உள்ளிழுக்காமல் பார்த்துகொள்வது நல்லது.

குழந்தைக்கு கொடுக்கும் பொம்மைகள், பாத்திரங்கள், பாட்டில்கள் அனைத்தையும் வெந்நீரில் கழுவி பயன்படுத்துங்கள். தினசரி குளிக்க வைப்பதன் மூலம் உடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் வெளியேற்றப்படுகிறது. குழந்தைகள் கைகளை கீழே வைத்து அப்படியே வாயில் வைக்கும் போது தொற்று உண்டாவதற்கான வாய்ப்புகள் குறைவும்.

தொண்டை நோய்த்தொற்று இருப்பவர்களிடமிருந்து குழந்தையை விலக்கி வையுங்கள். தொண்டை புண் அல்லது சளி உள்ள யாரையும் குழந்தையை நெருங்க விட வேண்டாம். பெரும்பாலும் மேல் சுவாச நோய்த்தொற்றுகள் காற்றின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகின்றன. அதனால் பாதிக்கப்பட்ட நபர் இலேசாக இருமினாலும் குழந்தை முழுக்க முழுக்க டான்சில்ஸ் (Tonsils in tamil) தொற்றுக்கு ஆளாகலாம். கூடுமானவரை குழந்தையை தொற்றில்லாமல் வைத்திருப்பது தான் பாதுகாப்பானது.

5/5 - (158 votes)

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Follow:
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »