திருமணம் ஆனதும் சிலர் குழந்தைப்பேறை தள்ளிப்போட விரும்புகின்றனர்.
சிலர் விரைவாக குழந்தை பெற்று கொள்ள விரும்புகின்றனர்.
அப்படி விரைவாக குழந்தை பெற்று கொள்ள விரும்பும் தம்பதியருக்கான குறிப்புகள் இங்கே.
ஒரே மாதத்தில் கர்ப்பமாக எளிய வழிகள் (How to Get Pregnant Fast in Tamil)
அவைகள் சரியான உடற்பயிற்சி, சீரான உணவு முறைகள், உரிய நேரத்தில் உடலுறவு மேலும் தவிர்க்கப்பட வேண்டிய உணவுகளும் சில போதைப் பழக்க வழக்கங்களும் என சில வழிமுறைகள் உண்டு.
ஒரே மாதத்தில் கர்ப்பமாக எளிய வழிகள் (How to Get Pregnant Fast in Tamil) எளிதாக கர்ப்பமடைதலுக்கான சில சாத்தியக் கூறுகள் இங்கே.
அண்டவிடுப்பைக் கண்காணிக்கவும்
விரைவாக கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண்கள் தங்களின் மாதவிடாய் சுழற்சியை தெரிந்து வைத்து கொள்ளவது அவசியம்.
சீரான மாதவிடாய் சுழற்சி இருந்தால் தான் அண்டவிடுப்பின் நாட்களை கணக்கிட முடியும்.
அண்டவிடுப்பின் நாட்களில் உறவு கொண்டால் தான் கர்ப்பம் தரிக்க முடியும்.
தம்பதிகள் உடலுறவு கொள்ளும் நேரமும் அவசியமாகிறது.
இது இருவரின் மனநிலை சம்மந்தபட்டதாக இருந்தாலும், அவர்கள் உடலுறவு கொள்ளும் நேரம் சரியானதாக இருந்தால் மட்டுமே ஆணின் விந்தணு சரியாக கருமுட்டையில் இணையும்.
மேலும் பெண்ணின் மாதவிடாய் முடிந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு உடலுறவு செய்தால் விரைவில் கரு உருவாக வாய்ப்புள்ளது.
மேலும் தொடர்ந்து உடலுறவு கொள்ளுதல் அவசியம்.
சீரான உடல் இடை
உடல் எடை அதிகமாக இருந்தாலும் கர்ப்பத்திற்கு நாட்கள் எடுக்கும்.
இது மாதவிடாய் வழக்கதையும் கெடுக்கும். உடலும் மனதும் ஆரோக்கியமானதாய் இருந்தால் தான் சுமக்கப் போகும் கருவினை சரிவர பாதுகாக்க முடியும்.
உறக்கம்
நல்ல உறக்கத்தை பழக்கமாக்கிக் கொள்வது அவசியம்.
ஏனென்றால் நல்ல தூக்கம் மன அமைதிக்கு வழி வகுக்கும். மேலும் பல பிரச்சனைகளுக்கு காரணம் சரியான தூக்கம் இல்லாததால் கூட இருக்கலாம்.
நல்ல தூக்கம் நல்ல உடலுறவுக்கும் தேவையானது.
மது, புகைபிடித்தல் – தவிர்ப்பது
மது, புகைபிடித்தல் அல்லது புகையிலை போடுதல் போன்ற தவறான பழக்க வழக்கத்தை தவிர்ப்பது நல்லது.
ஏனென்றால் இவை அனைத்தும் நம் உடலின் பாகங்களை எப்படி பாதிக்கிறதோ அதே போல கர்ப்பபையையும் பாதிக்கும்.
அதனால் கரு உண்டாவதும் கடினம்.
சில நேரம் குழந்தை உண்டாவதற்கான வாய்ப்பையும் இழக்க நேரிடும்.
ஆரோக்கியம் தரும் உவுணவுகள்
தொடர்ச்சியாக துரித உணவுகளை உட்கொள்ளும்போது கர்ப்பத்திற்கு பாதிப்பைக் கொடுக்கும்.
மேலும் இந்த உணவுகள் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களும் சாப்பிடுதல் தவறே.
இது விந்துக்களையும் பாதிக்கும். முடிந்தவரை உடலுக்கு ஆரோக்கியம் தரும் உவுணவுகள் உட்கொள்வதே நன்மை தரும்.
பழங்கள், பச்சை மற்றும் வேகவைத்த காய்கறிகள், பயிர் வகைகள், பருப்பு வகைகள் என வகை வகையாக நல்லவைகள் நம் ஊரில் கொட்டிக் கிடக்கிறது.
எனவே அவைகளை உட்கொள்ளுதல் வேண்டும்.
மருத்துவரை அணுகவும்
உங்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் , PCOS, தைராய்டு போன்ற பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரை அணுகி அதற்கு சிகிச்சை பெறுவது அவசியம்.
கர்ப்பம் தரிக்க தவிர்க்க வேண்டியவை
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
முடிவுரை
பெண்கள் தாயாவது உற்சாகத்தை ஏற்படுத்தும். அதிலும் ஒரே மாதத்தில் கர்ப்பமாவது என்பது எவ்வகை சாத்தியம் என்று நினைப்பவர்களுக்கான எளிய வழிமுறைகளே இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
கர்ப்பம் தொடர்பான
FAQ
விந்து எத்தனை நாட்கள் இருக்கும்?
உடலுறவுக்குப் பிறகு பெண் உடலில் விந்து மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை உயிர்வாழும்.
விந்துவை கருமுட்டை தான் தேர்வு செய்யுமா?
ஆம் விந்துவை கருமுட்டை தான் தேர்வு செய்து கருவுற செய்கிறது.
மாதவிடாய்க்கு பின் கருத்தரிக்க சரியான நாள் எது?
உங்கள் மாதவிடாய் சுழற்சி சரியாக 28 நாளில் இருந்தால், மாதவிடாய் பிறகு 11வது நாள் முதல் 15வது நாள்களில் அண்டவிடுப்பின் நிகழ்கிறது, இது கருத்தரிக்க சரியான நாட்கள்.
உடலுறவுக்கு பின் சிறுநீர் கழிப்பதால் விந்து வெளியேறுமா?
உடலுறவுக்குப் பிறகு சிறுநீர் கழிப்பதால் விந்து வெளியேறாது, இருப்பினும் 15 முதல் 20 நிமிடம் படுக்கையில் இருப்பது நல்லது.
அண்டவிடுப்பின் போது அறிகுறி இருக்குமா?
சில பெண்கள் அண்டவிடுப்பின் அறிகுறிகள் அனுபவிக்கிறார்கள்.
வயிற்று வலி அல்லது வயிற்று பிடிப்புகள், வீக்கம், உயர்ந்த உடல் வெப்பநிலை, கர்ப்பப்பை வாய் சளி மற்றும் மார்பக மென்மை ஆகியவை இதில் அடங்கும்.
To Read in English : How to Get Pregnant Fast in Tamil