கருத்தரித்தலை எதிர்நோக்கும் போது எல்லோருக்கும் இயல்பாக அமைந்துவிடுவதில்லை. பலருக்கும் சில பல காரணங்களால் கருவுறுதலில் சிக்கல் உண்டாகிறது.
இதனால் கருவுறாமை பிரச்சனையை அதிக தம்பதியர் எதிர்கொள்கிறார்கள். அப்போது அவர்களுக்கு இந்த IVF கை கொடுக்கிறது. கருவுறுதல் தாமதமாகும் போதும் பரிசோதனையில் இயல்பான கருத்தரிப்பு சாத்தியமில்லை என்னும் போதும் IVF தொழில்நுட்பத்தை விரும்புகிறார்கள்.
நீங்கள் IVF முயற்சிக்கும் தம்பதியராக இருந்தால் IVF வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் நீங்கள் சில குறிப்புகளை (Tips for Successful IVF in Tamil) பின்பற்ற வேண்டும்.
IVF வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் (Tips for Successful IVF in Tamil)
ஆரோக்கியமான எடையை பராமரிப்பது அவசியம்

ஆரோக்கியமான எடையை பராமரிப்பது IVF சிகிச்சையில் முக்கியமானது என்கிறார்கள் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர்கள்.
உடல் பருமனாக இருப்பது மற்றும் குறைவான எடை கொண்டிருப்பது என இரண்டுமே உங்க்ள் IVF சிகிச்சை வெற்றி விகிதங்களை பாதிக்க செய்யலாம்.
அதிக எடையுடன் இருக்கும் பெண் IVF சிகிச்சையில் கருப்பை கண்காணிப்பை சிரமமாக வைக்கிறது. முட்டைகளை மீட்டெடுக்கும் போது சிரமத்தை உண்டு செய்கிறது.
ஆரோக்கியமான எடையை பெறுவது உணவு மற்றும் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள். தேவையெனில் உடல் எடை குறைய பயிற்சி போன்றவற்றை நீங்கள் அடையலாம்.
உணவியல் நிபுணருடன் ஆலோசியுங்கள். பெண்களோடு ஆண்களும் இந்த உடல் எடையை கட்டுக்குள் வைப்பது வெற்றி விகிதத்தை அதிகரிக்க செய்யும்.
மன அழுத்தத்தை குறையுங்கள்

மன அழுத்தம் உங்கள் சிகிச்சையில் தலையிடலாம். மேலும் IVF சிக்ச்சையின் போது மன அழுத்தம் இருந்தால் அது சிகிச்சையை வெற்றி பெற செய்வதில் தலையிடலாம்.
மேலும் இதை குறைப்பது கடினமானதாக இருந்தாலும் கூட மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சிகளில் தம்பதியர் இருவரும் இணைய வேண்டும்.
விந்தணு ஆரோக்கியத்தை மேம்படுத்த முயற்சிப்பது நல்லது

விந்தணு ஆரோக்கியத்தை மேம்படுத்த மல்டி வைட்டமின்களின் பயன்பாடு முக்கியம். உடல் எடையை பராமரிப்பது உடற்பயிற்சி செய்வது விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தலாம்.
சரியான கவனிப்பின் கீழ் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை அதிகரிக்க உதவும் மருந்துகளை ஆண்களும் உட்கொள்ள தொடங்கலாம்.
இது IVF விளைவுகளில் நன்மை பயக்கும். சில நேரங்களில் விந்தணுவிலிருந்து நேரடியாக விந்து வெளியேறும் அளவுக்கு இவை பலனளிக்கலாம்.
விந்து பகுப்பாய்வுகளில் எந்த வகையான அசாதாரணங்கள் இருந்தாலும் கருவுறாமை நிபுணரை சந்தித்து உரிய சிகிச்சை பெறுவது அவசியம்.
புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்

ஆண்கள் கருத்தரிப்பு சிகிச்சைக்கு முயற்சிக்கும் போது புகைப்பிடிப்பதால் அது முட்டை மற்றும் விந்தணுக்களின் தரத்தை பாதிக்கலாம்.
நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தாலும் அதை நிறுத்துவதுதான் சிறந்த வழி.
புகைப்பிடிப்பதை விட்டுவிடுவது எளிதான காரியம் அல்ல. பெரும்பாலும் தனிப்பட்ட மற்றும் அது குறித்த சிகிச்சையும் தேவைப்படலாம்.
எனினும் சுற்றியிருப்பவர்கள், குடும்பத்தினரின் ஆதரவுடன் அதை முற்றிலும் நிறுத்துவதான் நல்லது.
போதுமான அளவு வைட்டமின் டி

போதுமான அளவு வைட்டமின் டி இருப்பதை உறுதி செய்யுங்கள்.
ஏனெனில் கருவுறாமை கொண்டுள்ள தம்பதியரில் 40% அதிகமான நபர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கலாம்.
மேலும் இந்த குறைபாடு IVF உடன் மோசமான விளைவுகளை உண்டு செய்யலாம்.
கருவுற முயற்சிக்கும் தம்பதியர் மற்றும் கருவுறாமை நிலையில் உள்ளவர்கள் உடல் பரிசோதனையில் வைட்டமின் டி பரிசோதனை செய்வதும் நல்லது.
வைட்டமின் டி குறைவாக இருந்தால் வைட்டமின் டி உணவுகள் மற்றும் வைட்டமின் டி மாத்திரைகள் எடுப்பது நல்லது.
IVF செய்த உடனேயே கருவுறுதலில் வெற்றி கிட்டிவிடுமா?
கருவுறாமைக்கு பரிசோதனைக்கு பிறகு உங்கள் மருத்துவர் IVF தீர்வு என்று சொன்னால் நீங்கள் உங்கள் சிகிச்சை காலத்தில் சில விஷயங்களில் கவனமாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும்.
தொடர்ந்து முயற்சி செய்வதும் பொறுமையோடு இருப்பதும் சிகிச்சையில் வெற்றி பெற உதவும். பல நேரங்களில் தம்பதியருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட IVF சுழற்சிகள் இந்த சிகிச்சையில் தேவைப்படலாம்.
மேலும் முடிவுகள் இந்த சுழற்சியிலிருந்து கணிசமாக வேறுபடலாம்.
முடிவுரை
முதல் முறை வெற்றி கிடைக்கவில்லை என்றால் உங்கள் மருத்துவர் அடுத்த சுழற்சியில் மேம்படுத்த சிகிச்சை செய்யலாம். அதனால் பின்னடைவில் சோர்வடையாமல் இருங்கள்.
ஏனெனில் இவை எதுவும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் சில சமயங்களில் இது குறித்து அலட்டிகொள்ளாமல் இருப்பது உங்களை நீங்களே நிம்மதியாக வைத்திருக்க செய்யும். சிகிச்சையில் வெற்றி கிட்டாத போது உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட வேண்டாம். பொறுமையாக இருங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும்.