மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி (Menstrual Stomach Pain in Tamil) நீங்க உதவும் வைத்திய குறிப்புகள்?

Deepthi Jammi
8 Min Read

மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி (Menstrual Stomach Pain in Tamil) நீங்க டிப்ஸ்

மாதவிடாய் என்பதே ஒரு வித அசெளகரியமான நிலை தான். இந்நிலையில், மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி (Menstrual Stomach Pain in Tamil) மற்றும் தசைப்பிடிப்பையும் சிலருக்கு அதிகமாக உண்டாக்கும். இந்த மோசமான வலி மருத்துவத்தில் டிஸ்மெனோரியா என்றழைக்கப்படுகிறது. இது பொதுவான நிலை.

Contents
மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி (Menstrual Stomach Pain in Tamil) நீங்க டிப்ஸ்மாதவிடாய் பிடிப்புகள் ஏன் வலிமிகுந்தவை?மாதவிடாய் வலி, தசைப்பிடிப்பு இயல்பானதா என்பதை எப்படி கண்டறிவது?மோசமான மாதவிடாய் வயிற்று வலி (Menstrual Stomach Pain in Tamil) என்பது என்ன?வெந்நீர் ஒத்தடம்அத்தியாவசிய எண்ணெய்கள்வலி நிவாரணி எடுத்துகொள்ளுங்கள்உடற்பயிற்சி செய்யுங்கள்பாத் டப்பில் சில நேரம் இருக்கலாம்யோகா செய்யலாம்மாதவிடாய் வலியை குறைக்கும் சப்ளிமெண்ட்கள்காஃபைன் உணவுகள் தவிருங்கள்9.நீரேற்றமாக இருங்கள்அக்குபிரஷரை முயற்சிக்கவும்மூலிகை தேயிலைகள்மெக்னீசியம் அதிகரியுங்கள்மாதவிடாய் வயிற்று வலிக்கான காரணங்கள்

அமெரிக்க மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி மாதவிடாய் காலத்தில் பெண்களில் பாதிக்கும் வலி சிலருக்கு அதிகமாகவே இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

தசைப்பிடிப்புகள் பொதுவாகவே ஒரு தீவிர சுகாதார நிலைக்கான அறிகுறி அல்ல என்றாலும் அது வாழ்க்கை முறையை முடக்கி அன்றாட வேலையை முடக்கிவிட செய்யும்.

மாதவிடாய் பிடிப்புகள் ஏன் வலிமிகுந்தவை?

டிஸ்மெனோரியா என்பது உடலில் புரோஸ்டாக்லாண்டின்கள் எனப்படும் சேர்மங்களால் உண்டாகிறது என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சி தொடங்குவதற்கு முன் கருப்பையில் இருக்கும் புரோஸ்டாக்லாண்டின்களின் அளவு அதிகரிக்கிறது.

மாதவிடாயின் முதல் நாளில் உங்கள் புரோஸ்டாக்லாண்டின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் தான் முதல் நாளில் வலி அதிகமாக இருக்கும். மாதவிடாய் முன்னேறும் போது, கருப்பையின் புறணி சிதறும் போது, புரோஸ்டாக்லாண்டின் அளவு குறைந்து வலி உணர்வு குறையகூடும் என்று சொல்லப்படுகிறது.

மாதவிடாய் வலி, தசைப்பிடிப்பு இயல்பானதா என்பதை எப்படி கண்டறிவது?

சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வலி தாங்க கூடிய அளவு இருக்கும். சில பெண்களுக்கு வலி உணர்வு மிகவும் பலவீனமாக இருக்கும். பிடிப்புகள் இயல்பானதா என்பதை அறிந்துகொள்ள விரும்பினால் உங்கள் வலி தாங்ககூடிய அளவு இருக்க வேண்டும்.

மோசமான மாதவிடாய் வயிற்று வலி (Menstrual Stomach Pain in Tamil) என்பது என்ன?

இயல்பான அளவுவலி இருப்பது உடல் நலத்தில் தவறை குறிக்காது. ஆனால் மோசமான சந்தர்ப்பங்களில் அவை மருத்துவ நிலைக்கான அறிகுறியாக இருக்கலாம்.

எண்டோமெட்ரியோசிஸ் பொதுவாக கருப்பையின் உட்புறத்தில் உள்ள திசுக்களை ஒத்த திசு உங்கள் கருப்பைக்கு வெளியே வளரும் போது இந்த கோளாறு ஏற்படுகிறது, கருப்பை நார்த்திசுக்கட்டிகள் கருப்பை சுவர்களுக்குள் வெளிப்படும் கட்டிகள் ஆனால் இது புற்றுநோயற்ற வளர்ச்சி கட்டிகள் இது சிறிய புள்ளியிலிருந்து பல பருமனான கட்டிகள் வரை இருக்கும்.

அடினோமையோசிஸ் திசு பொதுவாக கருப்பையை வரிசையாக கொண்டு உறுப்பு தசை சுவருக்குள் வளர தொடங்குகிறது. இது மாதவிடாய் வலி போல தோன்றினாலும் நீண்ட காலம் நீடிக்கும். வழக்கமான மாதவிடாய் வலியை காட்டிலும் மிகவும் கடுமையானதாக இருக்கும். இதற்கு மருத்துவரின் ஆலோசனை தேவை..

மாதவிடாய் வயிறு வலியை (Menstrual Stomach Pain in Tamil) குறைக்கும் வைத்தியங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். குறிப்பாக கருப்பை பிரச்சனையில் எதுவும் இல்லாமல் மாதவிடாய் வலியை உணரும் பெண்களுக்கு என்ன மாதிரியான வைத்தியம் உதவும் என்பதை பார்க்கலாம்.

  1. வெந்நீர் ஒத்தடம்

வயிற்றில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் கருப்பையின் தசைகளை தளர்த்த முடியும். இந்த தசைகள் மாதவிடாய் பிடிப்பை உண்டாக்குகிறது. வெப்பச்சூடு உங்கள் வயிற்றில் சுழற்சியை அதிகரிக்கும். இது வலியை குறைக்க செய்யும்.

2004 ஆம் ஆண்டு ஆய்வின் படி நம்பகமான ஆதாரத்தில் வலி நிவாரணிக்கு மாத்திரைகள் எடுத்துகொள்வதை விட வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது நன்றாகவே பலனளித்தது கண்டறியப்பட்டது.

வலி மற்றும் பிடிப்பை தணிப்பதில் பயனுள்ளதாக இருந்ததை போன்றே இது மனநிலை மாற்றங்கள் மற்றும் குறைவான மனசோர்வை கொண்டிருப்பதையும் ஆராய்ச்சி காட்டுகிறது.

இந்த ஹாட் பேக் கடைகளில் கிடைக்கும். அதே போன்று மருந்தகங்களில் கிடைக்கும் வெப்ப திட்டுக்கள் வாங்கி வயிற்றில் ஒட்டலாம்.

  1. அத்தியாவசிய எண்ணெய்கள்

அத்தியாவசிய எண்ணெய்கள் வயிற்றுக்கு மசாஜ் செய்வதன் மூலம் வலிக்கு தீர்வு கிடைக்கும். சில அத்தியாவசிய எண்ணெய்கள் அடிவயிற்றில் மசாஜ் செய்யும் போது குறிப்பாக எண்ணெய் கலவையில் பயன்படுத்தும் போது மாதவிடாய் பிடிப்புகளை குறைக்க உதவும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.

சுழற்சியை அதிகரிக்கும் திறன் காரணமாக இவை மாதவிடாய் பிடிப்புகளை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • லாவெண்டர் எண்ணெய்
  • சேஜ் எண்ணெய்
  • ரோஜா
  • மார்ஜோரம்
  • இலவங்கப்பட்டை எண்ணெய்
  • கிராம்பு எண்ணெய்

போன்றவை நல்ல பலன் கொடுக்கும். இந்த எண்ணெயில் எதை நீங்கள் பயன்படுத்துவதாக இருந்தாலும் அத்தியாவசிய எண்ணெயை நேரடியாக பயன்படுத்தாமல் தேங்காயெண்ணெய் அல்லது ஜோஜாபா எண்ணெய் போன்ற கெரியர் எண்ணெயுடன் கலக்க வேண்டும். கெரியர் எண்ணெய் சருமத்தில் அத்தியாவசிய எண்ணெயை பாதுகாப்பாக எடுத்து செல்வதன் மூலம் தீர்வு அளிக்கின்றன.

எண்ணெய் கலந்ததும் விரல்களில் சில துளிகள் தடவி பிறகு வயிற்றுக்கு மென்மையான மசாஜ் அளியுங்கள். மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் ஐந்து நிமிடங்களுக்கு வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்வது வயிற்றில் பிடிப்பை குறைக்க மற்றும் சுழற்சியை அதிகரிக்க உதவும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

  1. வலி நிவாரணி எடுத்துகொள்ளுங்கள்

அமெரிக்க மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ கல்லூரியின் கூற்றுப்படி மாதவிடாய் கால வலியை குறைக்க வலி நிவாரணியை மருத்துவரின் ஆலோசனைபடி எடுத்துகொள்ளலாம்.

இந்த மருந்துகள் தசைப்பிடிப்பின் அல்லது வலியின் முதல் அறிகுறியில் எடுத்துகொண்டால் பலன் வேகமாக கிடைக்கும். அதோடு இதயம், கல்லீரல் அல்லது சிறுநீரக பிரச்சனைகள் இருந்தாலோ ஆஸ்துமா, இரத்தபோக்கு பிரச்சனை இருந்தால் இதை மனதில் வைத்து மருத்துவரின் ஆலோசனையோடு மருந்து எடுங்கள்.

  1. உடற்பயிற்சி செய்யுங்கள்

சமீபத்திய ஆராய்ச்சியின் படி நம்பகமான ஆதாரத்தின் படி குறைந்த முதல் நடுத்தர தீவிரம் கொண்ட ஏரோபிக் உடற்பயிற்சி மாதவிடாய் பிடிப்புகளால் உண்டாக்கும் வலியை குறைக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் விஞ்ஞானிகள் 30 நிமிடங்கள் ஏரோபிக் உடற்பயிற்சியை வாரத்தில் மூன்று நாட்கள், எட்டு வாரங்கள் செய்த பெண்கள் மாதவிடாய் பிடிப்புகளில் குறைவான வலியை கண்டறிந்தது அறியப்பட்டது.

மாதவிடாய் வலி இருந்தால் உங்கள் அட்டவணையில் ஏரோபிக் வொர்கவுட் குறித்து ஆலோசித்து திட்டம் சேருங்கள். அதோடு நடைப்பயிற்சி , பிடித்தால் நடனம் கூட ஆடலாம்.

  1. பாத் டப்பில் சில நேரம் இருக்கலாம்

பாத் டப் இருந்தால் உங்கள் வலி வெகுவாக குறையும். பொறுக்கும் சூட்டில் வெந்நீர் விட்டு இடுப்பு தசைகள் அதில் இருக்கும் படி வைத்து ஓய்வாக இருப்பது மென்மையான உணர்வை தரும்.

இதை செய்யும் போது குளியல் நீரில் லாவெண்டர், ரோஜா எண்ணெய் போன்ற அத்தியாவசிய எண்ணெய்களில் சில துளிகள் சேர்ப்பதன் மூலம் இது நல்ல வலி நிவாரணியாக இருக்கும். இந்த நன்மைகளை பெற விரும்பினால் சூடான நீரில் 15 நிமிடங்கள் இருக்க முயற்சி செய்யுங்கள்.

  1. யோகா செய்யலாம்

நம்பகமான ஆய்வு ஒன்றில் ஏரோபிக் உடற்பயிற்சியை போன்றே யோகாவும் மாதவிடாய் பிடிப்புகளை குறைக்க உதவும் என்று சொல்கிறது.

இது குறித்து ஆய்வு ஒன்றில் வாரத்துக்கு 1 முறை 12 நிமிடங்களுக்கு 60 நிமிடங்கள் யோகா வகுப்பில் பங்கேற்ற பெண்கள் மாதவிடாய் வலியை வெகுவாக குறைத்ததாக நிபுணர்கள் கண்டறிந்தனர்.

யோகாவை முயற்சி செய்ய விரும்பினா உடல் கூறு மற்றும் உடல் தளர்வு என இரண்டும் கொண்ட பயிற்சிகளை செய்யுங்கள். மாதவிடாய் பிடிப்புகளிலிருந்து வலியை குறைக்க இந்த கலவையானது பயனளிக்க கூடும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.

  1. மாதவிடாய் வலியை குறைக்கும் சப்ளிமெண்ட்கள்

பல ஆய்வுகள் மாதவிடாய் கால பிடிப்பை குறைக்க உணவு பொருள்கள் உதவும் என்று கூறுகின்றன. எனினும் இது எப்படி செயல்படுகிறது என்பது குறித்து முழுமையான விளக்கம் இல்லை.

மாதவிடாய் வலியை குறைப்பதில் உதவக்கூடிய சத்து மருந்துகள் என்று சொல்லப்படுவது கால்சியம், வைட்டமின் பி-6, பி-1, வைட்டமின் ஈ, வைட்டமின் டி, மெக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் பி12 மற்றும் ஒமேகா 3 போன்றவை. இவை நிறைந்திருக்கும் உணவுகள் அல்லது சப்ளிமெண்ட்களாக எடுக்கலாம். நீங்கள் வேறு ஏதேனும் மாத்திரைகள் எடுப்பதாக இருந்தால் இது குறித்தும் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகே மருந்து பயன்படுத்துங்கள்.

  1. காஃபைன் உணவுகள் தவிருங்கள்

காஃபைன் மற்றும் உப்பு நிறைந்த உணவுகள் தவிர்ப்பது நல்லது. மாதவிடாய் வலியை குறைக்க மாத்திரைகள் உதவக்கூடும். ஆனால் நீர் தேக்கம் வீக்கம் மற்றும் அசெளகரியத்தை உண்டாக்கும். ஆனாலும் சில உணவுகளை தவிர்ப்பது நல்லது.

தசைப்பிடிப்புகள் இருக்கும் போது சில வகையான உணவுகளை தள்ளி வைக்க வேண்டும். அப்படியான உணவுகள் என்னென்ன என்பது தெரியுமா?

  • உப்பு நிறைந்த உணவுகள்
  • காஃபைன்
  • மதுப்பழக்கம்
  • கொழுப்பு நிறைந்த உணவுகள் தவிர்க்க வேண்டும்.

2000 ஆண்டு ஆய்வின் படி குறைந்த கொழுப்புள்ள, சைவ உணவு மாதவிடாய் வலி மற்றும் மாதவிடாய் முன்நோய்க்குறி அறிகுறிகளை குறைக்க உதவும்.

9.நீரேற்றமாக இருங்கள்

நிபுணர்களின் அறிவுரைப்படி பெண்கள் நீரீழப்புடன் இருந்தால் வயிற்றுப்பிடிப்புகள் அதிகமாக உண்டாக வாய்ப்புண்டு.

மாதவிடாய் நாட்களில் எட்டு டம்ளர் அளவு தண்னீர் குடிக்க வேண்டும். குறிப்பாக உடல் உஷ்ணம் இருந்தால் உடற்பயிற்சி செய்பவராக இருந்தால் தாகம் அதிகமாக எடுத்தால் அவசியம் உங்களை நீரேற்ற்மாக வைத்திருக்க வேண்டும். இது தசைப்பிடிப்பை குறைக்க செய்யும்.

  1. அக்குபிரஷரை முயற்சிக்கவும்

அக்குபிரஷர் என்பது பல உடல்நல பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படும் ஆக்கிரமிப்பு இல்லாத சீனமருந்து சிகிச்சையாகும். இந்த சிகிச்சையானது பல்வேறு அறிகுறிகளை எளிதாக்க உதவுகிறது. உடல் பாகங்களுக்கு உறுதியான அழுத்தத்தை பயன்படுத்த விரல்கள் போதுமானது.

2004 ஆம் ஆண்டு ஆய்வின் ஆதாரத்தின் படி கணுக்கால்களுக்கு மேலே உள்ள புள்ளியில் வட்ட வடிவில் தேய்ப்பது மாதவிடாய் வலியை நீக்கும். எப்படி செய்வது என்று தெரிந்துகொள்வோம்.

உள் கணுக்கால் எலும்பிலிருந்து நான்கு விரல் நுனிகளை அளவிடவும். பல நிமிடங்கள் இந்த பகுதியை உறுதியாக தேய்க்கவும். இதை மாதவிடாய்க்கு முன்பும் பின்பும் தேவைக்கேற்ப தினமும் செய்துவருவது நல்லது.

  1. மூலிகை தேயிலைகள்

மூலிகை தேயிலை வகைகள் தசைப்பிடிப்பை போக்க உதவும். ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைப்படி மூலிகை தேநீர் பற்றிய ஆராய்ச்சி குறைவாக உள்ளது. பாரம்பரியமாகவே பெண்கள் மாதவிடாய் காலங்களில் மூலிகை தேநீர் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

கெமோமில் மற்றும் புதினா தேநீர் மாதவிடாய் வயிறு வலிக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இது டிஸ்மெனோரியாவுடன் தொடர்புடைய தேநீர் இஞ்சி அல்லது பெருஞ்சீரகத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.

  1. மெக்னீசியம் அதிகரியுங்கள்

உணவில் மெக்னீசியம் பிடிப்புகள் வலியை குறைக்க உதவுவதாக தெரிகிறது. மாதவிடாய் காலங்களில் பாதாம், பீன்ஸ், கீரைவகைகள், தயிர் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் உள்ளிட்ட பல உணவுகளில் மெக்னீசியம் காணப்படுகிறது. மெக்னீசியம் மாத்திரைகள் குறித்து மருத்துவரிடம் கலந்தாலோசித்து பயன்படுத்துங்கள்.

மாதவிடாய் வயிற்று வலிக்கான காரணங்கள்

மாதவிடாய் வயிற்று வலிக்கு காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதை கண்டறிவதன் மூலம் மோசமான வலியை குறைக்க முடியும். ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகள் இருக்கும் போது பெண்களுக்கு மாதவிடாய் கால வயிற்று வலி அதிகமாக இருக்கும் .

மாதவிடாய் பிடிப்புகள் கருப்பையில் ஏற்படும் சுருக்கங்களால் ஏற்படுகின்றன உடலின் ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மற்றங்கள் இந்த சுருக்கங்களை தூண்டுகின்றன. மாதவிடாயின் போது கருப்பை புறணி சுருங்கும்போது யோனி வழியாக இரத்தம் வெளியேறுகிறது. ஆனால் மோசமான மாதவிடாய் வலி ஏற்பட சில ஆபத்துகளும் காரணமாகிறது. அதனால் மோசமான வலியை எதிர்கொண்டால் நீங்கள் மருத்துவரை அணுகுவதே நல்லது.

5/5 - (115 votes)

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Follow:
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »