குழந்தையின்மைக்காக சிகிச்சைக்கு வரும் தம்பதியருக்கு பல கட்ட பரிசோதனைக்கு பிறகு தேவைப்படும் நிலையில் இந்த IUI (intrauterine insemination) சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.
இந்த சிகிச்சை செயற்கை முறை கருவூட்டல் சிகிச்சை ஆகும். இந்த சிகிச்சைக்கு பிறகு கருத்தரிப்பில் என்ன மாதிரியான அறிகுறிகளை (Pregnancy Symptoms After IUI in Tamil)பெண்கள் உணர்வார்கள்.
IUI கர்ப்பத்தின் அறிகுறிகள் (Pregnancy Symptoms After IUI in Tamil)எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இயற்கையான கருத்தரிப்பு என்பது உடலுறவின் போது பெண்ணின் பிறப்புறுப்பு வழியாக விந்தணு கருப்பை வாய் சென்று அங்கு தயாராக இருக்கும் கருமுட்டையுடன் இணைய ஃபலோபியன் குழாய் வழியாக பயணிக்க செய்யும்.
இவற்றில் 5% விந்தணுக்கள் மட்டுமே பெண் உறுப்பு வழியாக கருப்பைக்கு சென்று அங்கு கருமுட்டையை சந்தித்து ஃப்லோபியன் குழாயில் செல்கிறது. கருமுட்டையும் தரமான விந்தணு ஒன்றும் இணையும் போது கருத்தரித்தல் உண்டாகிறது.
IUI என்றால் என்ன?
கருப்பைக்குள் கருவூட்டல் என்று சொல்லும் இம்முறை செயற்கை கருவூட்டல் ஆகும். இந்த சிகிச்சையில் விந்தணு நேரடியாக பெண்ணின் கருப்பையில் வைக்கப்படுகிறது.
விந்தணுக்கள் சேகரிக்கப்பட்டு செறிவூட்டப்பட்டு தரமான உயர்தர விந்து நேரடியாக பெண்ணின் கருப்பையில் வடிகுழாய் மூலம் ஃப்லோபியன் குழாய்களுக்கு நெருக்கமாக வைக்கப்படுகிறது.
இதன் மூலம் தரமான விந்தணுக்கள் முட்டையை எளிதாக அடைகிறது. மேலும் விந்தணுக்கள் எளிதாக பயனடைந்து கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
கருவுறுதல் சிகிச்சையின் செயற்கை கருத்தரிப்புக்கு முன்பு மருத்துவர்கள் இந்த IUI சிகிச்சையை முயற்சி செய்வார்கள்.
மேலும் அண்டவிடுப்பின் போது கருமுட்டை வெளிவரும் நேரத்தில் விந்தணுக்களை சரியாக செலுத்த அண்டவிடுப்பின் கண்காணிக்கப்படும். அதற்கேற்ப மருந்துகளும் எடுத்துகொள்ளலாம்.
இந்த IUI சிகிச்சைக்கு பிறகு படுக்கையில் ஓய்வு எடுக்க வேண்டியதில்லை. சில நேரங்களில் பெண் பரிசோதனையில் கர்ப்பத்தை உறுதி செய்த பிறகே கர்ப்ப அறிகுறிகளை பெறுவார்கள்.
அல்லது எந்த அறிகுறிகளும் இல்லாமலும் இருப்பார்கள். பெரும்பாலும் சில வாரங்களுக்கு பிறகு அறிகுறிகள் உணர தொடங்கலாம்.
சோர்வு, குமட்டல் போன்றவை இருந்தால் அது துல்லியமாக கர்ப்பத்தின் உறுதியான அறிகுறி என்று சொல்லமுடியாது. ஏனெனில் கருவுறுதல் குறித்த மன அழுத்த்தாலும் இவை உண்டாகலாம்.
IUI கர்ப்பத்தின் அறிகுறிகள் (Pregnancy Symptoms After IUI in Tamil) தனித்து இருக்காது. இதுவும் இயற்கையான கர்ப்பம் போன்று இருக்கும். முதல் இரண்டு வாரங்களுக்கு பிறகு கரு உறுதி பரிசோதனை செய்ய வேண்டும்.
கருத்தரித்த பரிசோதனைக்கு பிறகு 10 முதல் 12 நாட்கள் கழித்து சிறுநீரில் ஹெச்.சி.ஜி அளவு குறித்து பரிசோதிக்க வேண்டும்.
IUI செய்த பின் கர்ப்ப அறிகுறிகள் – Pregnancy Symptoms After IUI in Tamil

கரு உள்வைப்பு இரத்தப்போக்கு
மாதவிடாய்க்கு முன்பே உண்டாகும் இரத்தப்போக்கு ஆகும். இதில் உதிரப்போக்கு இருக்காது ஆனால் புள்ளிகள் போல் இருக்கும். IUI செயல்முறை முடிந்த பிறகு இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த இரத்தப்போக்கு இருக்கலாம்.
கருவானது கருப்பை சுவரில் பொருத்தப்படும் போது இந்த புள்ளிகள் உருவாகிறது. இந்த இரத்தப்போக்கு தசைப்பிடிப்பும் உண்டு செய்யலாம். சிலருக்கு ஆறு முதல் 12 நாட்களுக்கு பிறகு இருக்கும். எல்லோருக்கும் இந்த புள்ளிகள் தென்படாது.
களைப்பு
IUI செயல்முறைக்கு பிறகு உடல் பலவீனமாகவும் சோர்வாகவும் இருக்கும். இது இயல்பானது. பிறகு கரு உருவாகும் போது உடலில் வழக்கமாக இருக்கும் புரோஜெஸ்ட்ரோன் அளவுகள் அதிகமாக இருக்கும் இவையும் கர்ப்பிணி பெண்ணுக்கு தூக்கம் மற்றும் அதிக சோர்வு உண்டு செய்யும்.
அதோடு கர்ப்பத்துக்கான வேலைகள் தொடங்கும் போது உடலில் இரத்த உற்பத்தியை அதிகரிக்கவு ஆற்றல் தேவை என்பதால் சோர்வு அதிகரிக்கும். சில பெண்கள் இந்த சோர்வை கர்ப்பத்தின் ஆரம்பத்திலேயே உணர்ந்துவிடுவார்கள்.
சில பெண்கள் புரோஜெஸ்ட்ரான் உச்சம் அடையும் வரை இந்த சோர்வை தீவிரமாக உணரமாட்டார்கள்.
குமட்டலும் வாந்தியும்
ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பதால் இந்த IUI செயல்முறைக்கு பிறகு குமட்டல் உணர்வார்கள். இது கர்ப்ப அறிகுறி அல்ல. இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த குமட்டல் அறிகுறி இருந்தால் அது கர்ப்ப அறிகுறியாகும்.
காலை நோய் என்பது பொதுவான கர்ப்ப அறிகுறி அதே போன்று IUI செயல்முறைக்கு பிறகு இரண்டு வாரங்களுக்கு பிறகு குமட்டலும் வாந்தியும் இருக்கும்.
ஆனால் எல்லா பெண்களும் இந்த அறிகுறியை உணர மாட்டார்கள். சிலருக்கு இன்னும் சில நாட்கள் வாரங்கள் ஆகலாம்.
மென்மையான மார்பகம்
இயல்பாகவே மாதவிடாய் சுழற்சிக்கு பிறகு அண்டவிடுப்பின் காலங்களில் புரோஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் போன்றவை மார்பக மென்மைக்கு பொறுப்பு வகிக்கிறது.
IUI செயல்முறைக்கு பிறகு கர்ப்பம் தொடங்கும் போதும் மார்பகம் மென்மை உண்டாகும். இந்த IUI செயல்முறைக்கு பிறகு இதன் விளைவாக உடனடியாக மார்பக அசெளகரியம் இருக்கும்.
ஆனால் மாதவிடாய் தாமதம் பிறகும் மார்பக வலி தொடர்ந்தால் கர்ப்ப பரிசோதனை தேவைப்படலாம்.
முடிவுரை
கர்ப்பத்தின் மிக உறுதியான அறிகுறி என்றும் சொல்லலாம் எனில் மாதவிடாய் தவறுதல் தான், மாதவிடாய் எதிர்பார்க்கும் தேதியிலிருந்து ஒரு வாரம் வரை வரவில்லை என்றால் கர்ப்ப பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம்.
இது மட்டுமே போதுமானதாக இருக்காது. மருத்துவரை சந்தித்தால் இன்னும் சில பரிசோதனைகள் செய்து உறுதிபடுத்துவார்.

IUI செயல்முறைக்கு பிறகு வரும் கர்ப்பம் இயற்கையான கருவுற்றலுக்கு பிறகு வரக்கூடிய கர்ப்ப அறிகுறிகள் (Pregnancy Symptoms After IUI in Tamil) போன்று தான் இருக்கும். கர்ப்பம் எப்படி நடந்தாலும் உடலில் அதற்கு பொறுப்பான ஹார்மோன்களை உடல் உற்பத்தி செய்யும்.
அதனால் கர்ப்பத்தின் அறிகுறிகள் இக்கட்டுரையில் உள்ளபடிதான் இருக்க வேண்டும் என்றில்லை. அதனால் அறிகுறிகள் உணரவில்லை என்றாலும், அறிகுறிகள் வித்தியாசமாக இருந்தாலும் நீங்கள் கருத்தரிக்கவில்லையோ என்று நினைக்க வேண்டாம்.
கர்ப்பத்தை உறுதிப்படுத்த இரத்த பரிசோதனை செய்ய வேண்டும். எனினும் IUI செயல்முறைக்கு பிறகு மருத்துவர் உங்களுக்கு இது குறித்து வழிகாட்டுவார்.