கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களை சுற்றி பலரும் அறிவுரை சொல்ல தொடங்குவார்கள். அதில் சில நன்மையாகவும் சில தவறானதாகவும் இருக்கும்.
அதில் ஒன்று அன்னாசிப்பழம் சாப்பிட்டால் பிரசவ வலி ஏற்படும் என்றோ அல்லது கருச்சிதைவு உண்டாகும் (Pineapple Cause Miscarriage) என்றோ கூறுவார்கள். அது குறித்து தான் இப்போது தெரிந்துகொள்ள போகிறோம்.
கர்ப்ப காலத்தில் பழங்களும் காய்கறிகளும் தாய்க்கும் சேய்க்கும் அதிக ஆரோக்கியத்தை அளிக்கும். அதனால் தினசரி இரண்டு அல்லது மூன்று விதமான பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்க்க வேண்டும்.
அதே நேரம் என்ன மாதிரியான பழங்கள் எடுத்துகொள்ள வேண்டும்.
எவற்றையெல்லாம் கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டும் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். எல்லோருக்கும் இருக்கும் குழப்பம் கர்ப்ப காலத்தில் பப்பாளி, அன்னாசிப்பழத்தை சாப்பிடலாமா (pineapples during pregnancy in Tamil) அது கருச்சிதைவை உண்டாக்கிவிடுமா (Pineapple Cause Miscarriage), அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தி விடுமா போன்ற கவலைகள் தான்.
கர்ப்ப காலத்தில் அன்னாசி சாப்பிடலாமா? (pineapples during pregnancy in Tamil )
கர்ப்பகாலத்தில் அன்னாசிப்பழம் பாதுகாப்பானது தான் என்பதால் இது குறித்த குழப்பம் வேண்டாம். அன்னாசிப்பழம் கர்ப்பத்தின் ஆரம்பகாலத்தில் கருச்சிதைவை உண்டு செய்யலாம் அல்லது பிரசவத்துக்கு வழிவகுக்கலாம் என்பதால் இந்த பழத்தை தவிர்க்கும்படி யாராவது கூறினால் அது கட்டுக்கதை என்றே சொல்லலாம்.
ஏனெனில் கர்ப்ப காலத்தில் அன்னாசிப்பழம் ஆபத்தானது என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. அப்படியான அபாயகரத்தை எந்த ஆய்வுகளும் நிரூபிக்கவும் இல்லை.
கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கும் ப்ரோமைலைன் என்னும் என்சைம் அன்னாசிப்பழத்தில் உள்ளது உண்மைதான். இந்த நொதி நாம் உண்ணும் அன்னாசிப்பழத்தின் ஒரு பகுதியில் சிறிய அளவில் உள்ளது அதனால் அதை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதனால் கர்ப்ப காலத்தில் அன்னாசிப்பழம் சாப்பிடுவது நல்லது தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அன்னாசிப்பழத்தில் இந்த நொதி, உணவை தவிர்த்து இந்த ப்ரோமைலைன் சேர்த்த மாத்திரைகள் கர்ப்ப காலத்தில் பயன்படுத்த பரிந்துரைக்கவில்லை. ஏனெனில் இந்த நொதிகள் உடலில் உள்ள புரதங்களை உடைத்து அசாதாரண ரத்தப்போக்கு உண்டு செய்யும் அபாயம் கொண்டவை.
இந்த நொதிகள் அன்னாசிப்பழத்தின் நடுவில் மட்டுமே இருந்தாலும் உண்மையில் நாம் உண்ணும் அன்னாசிப்பழத்தின் சதையில் மிக குறைவாகவே உள்ளது. ஒரு அன்னாசிப்பழத்தில் உள்ள ப்ரோமைலின் அளவு கர்ப்பத்தை பாதிக்காது. இந்த பழத்தை எடுத்துகொள்ளும் போது கர்ப்பத்தை குலைக்கும் அளவு மோசமான பாதிப்பை உண்டாக்காது என்று தான் சொல்ல வேண்டும்.
அன்னாசிப்பழம் ஆரோக்கியமான கர்ப்ப உணவின் ஒரு பகுதியா?
யுனைடெட் ஸ்டேட்ஸ் டிபார்ட்மெண்ட் ஆஃப் அக்ரிகல்ச்சர் ஆய்வின்படி கர்ப்ப காலத்தில் சிறந்த உணவு குழுக்களில் காய்கறிகள், பழங்கள், பால், தானியங்கள், இறைச்சி, கோழி, மீன், முட்டை மற்றும் பீன்ஸ் போன்ற புரதம் அவசியம்.
இவை குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை அளிக்கின்றன. சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளின் கலவையை பெறுவதோடு நீரேற்றமாகவும் இருப்பது அவசியம்.
மேலும் உங்கள் உயரம் எடை பொறுத்து உங்கள் உணவு திட்டத்தை அமைத்துகொள்ள வேண்டும். பழங்களை பொறுத்தவரை முதல் மூன்று மாதங்களில் நாள் ஒன்றுக்கு 4-5 கப் பழங்கள் மற்றும் காய்கறிகளை பெற வேண்டும். இரண்டாவது மற்றும் மூன்றாவது மூன்று மாதங்களில் 5 கப் வரை உயரலாம். இந்த பழங்களில் அன்னாசிப்பழமும் ஒன்று.
உணவில் அன்னாசிப்பழத்தை எப்படி சேர்ப்பது?
அன்னாச்சி பழத்தில் கர்ப்பிணி பெண்களின் பரிந்துரைக்கப்பட்ட அளவு தினசரி வைட்டமின் சிட்ரஸ்டட் மூலத்தின் 100 சதவீதம் நம்பகமான ஆதாரம்.
இதில் ஃபோலேட், இரும்பு, வெளிமம, மாங்கனீசு, செம்பு, வைட்டமின் பி-6, (பைரிசாக்ஸின்)
இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் முக்கியம்.
கர்ப்பிணிகள் அன்னாசிப்பழத்தை காலையில் தயிரில் கலந்து எடுத்துகொள்ளலாம். ஸ்மூத்தியாக சேர்க்கலாம். சாறாக குடிக்கலாம். அப்படி குடிப்பதாக இருந்தால் சர்க்கரை சேர்க்க வேண்டாம். 100 மில்லி அளவு எடுத்துகொண்டால் போதுமானது.
கர்ப்பத்தின் மூன்று மூன்று மாதங்களிலும் அதாவது மூன்று ட்ரைமெஸ்டர்களிலும் அளவோடு சாப்பிடுவது பாதுகாப்பானது. இது வைட்டமின்கள் சி மற்றும் பி6 நிறைந்தது. நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரமாக உள்ளது என பல நன்மைகளை கொண்டுள்ளது. உங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுடன் உதவுகிறது.
அன்னாசிப்பழம் சாப்பிடுவது கருச்சிதைவை ஏற்படுத்தும் என்று உங்களை சுற்றி இருப்பவர்களால் நீங்கள் எச்சரிக்கப்பட்டிருந்தால் அது குறித்து கவலை வேண்டாம். அதற்கான எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. அதிக அளவு ப்ரோமைலைன் கருச்சிதைவு அபாயத்தை அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனினும் இது அன்னாசிப்பழத்தில் அளவு குறைவாக உள்ளது.
அதனால் அது குறித்து கவலைபட வேண்டியதில்லை. அதே நேரம் காலை உணவு, மதிய உணவு பிறகு இரவு உணவுக்கு பிறகு நீங்கள் அன்னாசிப்பழம் சாப்பிடக்கூடாது. அன்னாசிப்பழத்தை மிதமாக சாப்பிடுவது பாதுகாப்பானது என்று சொல்லப்படுகிறது.
இத்தகைய விரிவாக்கத்திலும் உங்களுக்கு அன்னாசிப்பழம் சாப்பிடுவது பற்றிய கேள்வி இருந்தால் நீங்கள் மருத்துவரை கலந்து ஆலோசிப்பது நல்லது.
அன்னாசிப்பழம் வளரும் குழந்தைக்கு மிதமான அளவு பாதுகாப்பானதே. இதில் உள்ள வைட்டமின்கள் கருவின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியை ஆதரிக்கின்றன. அன்னாசிப்பழத்தில் ஆரோக்கியமான கர்ப்பத்தை ஆதரிக்கும் பண்புகள் உள்ளன.
கர்ப்ப காலத்தில் அன்னாசிப் பழத்தின் (pineapples during pregnancy in tamil) நன்மைகள்!
அழற்சி எதிர்ப்பு
அதிக அளவு ப்ரோமைலைன் கருச்சிதைவு தூண்டும் என்றாலும் அன்னாசிப்பழத்தில் காணப்படும் இந்த செரிமான நொதியின் சிறிய அளவு அழற்சி எதிர்ப்பு பண்புகள் உட்பட சிறந்த பலன்களை கொண்டுள்ளது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் உதவியாக இருக்கும்.
கர்ப்ப காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். அழற்சியானது குழந்தையின் மன நோய் அல்லது மூளை வளர்ச்சி பிரச்சனைகளின் ஆபத்தை அதிகரிக்கிறது. மேலும் வீக்கம், கர்ப்பத்தின் அசெளகரியங்களை அதிகரிக்க செய்யலாம். அதை கட்டுப்படுத்த இவை உதவும்.
நார்ச்சத்து
அன்னாசி நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரமாக உள்ளது. இது மலச்சிக்கலை எதிர்த்து போராட உதவுகிறது. கர்ப்பகாலத்தில் மலச்சிக்கல் பொதுவான புகாராக இருக்கும். ஆனால் மலச்சிக்கலை தவிர்க்க உங்கள் பழக்கலவைகளில் அன்னாசியை அவசியம் சேருங்கள்.
நீரேற்றமாக இருக்க உதவும்
கர்ப்பகாலத்தில் நீரேற்றமாக இருப்பது முக்கியம். அன்னாசியில் 87% நீர் உள்ளது. இது இனிப்பான சுவையில் தவிர்க்காமல் குடிக்க செய்யும் சுவையை கொண்டவை. உங்களை நீரேற்றமாக வைக்க உதவும் பழக்கலவைகளில் அன்னாசியும் ஒன்று.
வைட்டமின் பி 6
அன்னாசிப்பழம் வைட்டமின் பி6 கொண்டுள்ளது. இந்த அத்தியாவசிய வைட்டமின் மூளை வளர்ச்சிக்கு முக்கியமானது. கூடுதலாக கர்ப்பமாக இருப்பவர்களுக்கு வைட்டமின் பி6 குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
மருந்துகள் அல்லாமல் உணவின் மூலம் வைட்டமின் பி6 எடுத்துகொண்டால் பலன் கிடைக்கும். வைட்டமின் பி6 காலை சுகவீனத்துடன் தொடர்புடைய காலைநோய் கட்டுக்குள் வைக்க உதவும்.
வைட்டமின் சி
அன்னாசிப்பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவுகிறது. ஒரு கப் அன்னாசிப்பழத்தில் கர்ப்பிணிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட தினசரி வைட்டமின் சி உள்ளது.
எனினும் நீங்கள் அன்னாசிப்பழத்துக்கு ஒவ்வாமை கொண்டவரா என்பதை கவனிக்க வேண்டும். நாக்கு எரிதல், புண், அரிப்பு, வீங்கிய உதடு, நாக்கு அல்லது தொண்டை அல்லது வேறு ஏதேனும் இருந்தால் மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்.
மேலும் மூச்சுத்திணறல், இருமல், வாந்தி, வயிற்றுப்போக்கு அல்லது குறைந்த இரத்த அழுத்தம் போன்ற அனாபிலாக்ஸின் ஏதேனும் அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால் மருத்துவரை ஆலோசித்து எடுத்துகொள்வது நல்லது.
கர்ப்பகால நீரிழிவு நோய்
அன்னாசிப்பழத்தில் இயற்கையாக கிடைக்கும் சர்க்கரைகள் உள்ளன. இந்த பழத்தை சர்க்கரை சேர்த்து சாறாக்கி குடிக்காமல் துண்டுகளாக நறுக்கி சேர்க்கும் வரை சர்க்கரையின் உள்ளடக்கம் ஒரு பிரச்சனையாக இருக்காது.
அதனால் எக்காரணம் கொண்டும் நீரிழிவு தூண்டும் வகையில் எந்த பழத்தையும் சாறாக்காமல் அப்படியே துண்டுகளாகி வெட்டி எடுத்துகொள்வது நல்லது. அன்னாசிப்பழம் என்றில்லாமல் வேறு எந்த பழத்தையும் துண்டுகளாக்கி எடுப்பது தான் சிறந்தது.
நெஞ்செரிச்சல்
அன்னாசிப்பழம் நெஞ்செரிச்சல் உண்டு செய்யலாம். இது அமிலத்தன்மை கொண்டது. கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் நெஞ்செரிச்சல் பிரச்சனையை எதிர்கொள்வார்கள். கர்ப்பம் வளரும் போது இவை பொதுவான பிரச்சனையாகிறது.
அன்னாசிப்பழத்தை அதிக அளவில் சாப்பிடுவது அமில வீச்சு அல்லது நெஞ்செரிச்சலை உண்டு செய்யும். அதனால் மிதமாக எடுத்துகொள்ளவும். எனினும் அவை நெஞ்செரிச்சல் உண்டு செய்தால் வேறு ஒன்றை சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
வெகு அரிதாக சில நேரங்களில் அன்னாசிப்பழம் நெஞ்செரிச்சலை போக்க உதவும். இதில் இருக்கும் ப்ரோமிலைனில் அழற்சி எதிர்ப்பு தன்மை உள்ளது. நெஞ்செரிச்சல் அதிகமாக இருந்தால் உணவை ஆறு பகுதியாக பிரித்து பிரித்து சாப்பிடலாம்.
எனினும் கர்ப்ப காலத்தில் நீங்கள் அன்னாசிப்பழம் மற்றும் பப்பாளி பழத்தை எடுத்துகொள்வது குறித்து மருத்துவர் சொல்வது என்ன என்பதை பார்க்கலாம்.
அன்னாசி பழமாக இருந்தாலும் பப்பாளியாக இருந்தாலும் எந்த பழம் சாப்பிட்டாலும் அது கருச்சிதைவு உண்டாக்கும் அளவு வலுவானதல்ல என்பதை பல ஆய்வுகள் மூலம் நாம் உணரலாம். இது வரை எந்த ஆய்வும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் குறிப்பிட்ட ஒன்றால் கருச்சிதைவு ஏற்பட்டதாக நிரூபிக்கவில்லை.
அன்னாசிப்பழம் ஆரோக்கியமானது. இதில் அதிக அளவு வைட்டமின்களும் மினரல்களும் உண்டு. அதோடு இதில் சாச்சுரேட்டட் கொழுப்புகள் குறைவு. நார்ச்சத்துகள் அதிகம் இருப்பதால் இது மலச்சிக்கல் இல்லாமல் வைத்திருக்க செய்கிறது.
இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், ஃபோலேட், காப்பர், மெக்னீசியம் என நிறைந்துள்ளது. இது சிலருக்கு உடல் வெப்பத்தை உண்டு செய்யும்.
கருச்சிதைவு உண்டாக்கும் (Pineapple Cause Miscarriage) வகையில் நாம் இதை அதிகமாக சாப்பிட போவதில்லை. 5 துண்டுகள் தான் எடுத்துகொள்வோம். அதனால் உங்களுக்கு அன்னாசிப்பழம் பிடித்தால் நீங்கள் தவிர்க்க வேண்டாம். அளவாக எடுத்துகொள்ளுங்கள்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
உலகளவில் இயற்கையான உணவுகள் கருச்சிதைவை உண்டு செய்யும் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. அப்படியான உணவுகளும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
உங்கள் உணவு குறித்து எந்த சந்தேகம் இருந்தாலும் நீங்கள் மருத்துவரை ஆலோசித்து எடுத்துகொள்வது கூடுதல் பாதுகாப்பை அளிக்கும்.