கர்ப்ப காலத்தில் பொதுவாக எந்த உணவை சாப்பிடுவது, எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்கள் பொதுவாக கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படும் மற்றும் வேர்க் கடலையை உணவில் சேர்க்கப்படும் போது, பல தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் வேர்க்கடலை (Peanuts during pregnancy)சாப்பிட வேண்டுமா அல்லது சாப்பிட கூடாத என்பதில் குழப்பம் கொண்டுள்ளனர்.
மேலும் கர்ப்பிணிகளுக்கு வேர்க்கடலை பாதுகாப்பானதா அதன் நன்மைகள் என்ன, கர்ப்ப காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன, யார் வேர்க்கடலையை கர்ப்ப காலத்தில் சாப்பிட கூடாது என்பதை பற்றிய முழுமையான தகவலை இந்த வலைப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு வேர்க்கடலை (Peanuts during pregnancy) பாதுகாப்பானதா?
ஆம், வேர்க்கடலை கர்ப்பிணிப் பெண்களுக்கு (Peanuts during pregnancy) பாதுகாப்பானது மற்றும் பல ஊட்டச்சத்துகளுடன் நன்மைகளை வழங்குகிறது. வேர்க்கடலையில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், முக்கியமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
வேர்க்கடலையில் உள்ள நார்ச்சத்து கர்ப்ப காலத்தில் நீரிழிவு, கர்ப்ப கால ப்ரீக்ளாம்ப்சியா மற்றும் கர்ப்ப கால மலச்சிக்கல் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க உதவும்.
இருப்பினும், உங்கள் கர்ப்ப கால உணவுத் திட்டத்தில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும்.
உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காக கர்ப்ப காலத்தில் உங்களின் ஆரோக்கியமான உணவில் வேர்கடலையை நீங்கள் சேர்த்துக் கொள்ளும்போது கண்டிப்பாக இதை செய்ய வேண்டும்.
கர்ப்ப காலத்தில் வேர்க்கடலையின் (Peanuts during pregnancy) நன்மைகள் என்ன?
கர்ப்ப காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவது பல நன்மைகளை அளிக்கும். அவற்றில் சில முக்கியமானவை இதோ:
- வேர்க்கடலையில் அதிகமான புரதம், ஃபோலேட், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் ஈ உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் அதிகமாக உள்ளது.
- கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவைப்படும் அதிக கலோரி தேவைகளைப் பூர்த்தி செய்ய வேர்க்கடலை உதவுகிறது
- கர்ப்ப காலத்தில் உடல் எடை குறைவாக இருந்தால், வேர்க்கடலை எடை அதிகரிக்க உதவும்.
- கர்ப்ப கால நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கவும் உதவக்கூடும். வேர்க்கடலையில் பைட்டோ கெமிக்கல்களும் உள்ளன, அவை கருவின் வளர்ச்சி மற்றும் கர்ப்பிணிக்கு நன்மை கிடைக்கும்.
- வேர்க்கடலையில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, இது இரத்த சோகை போன்ற இரத்தம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கும். பிரசவத்தின் போது இரத்த சோகை மிகவும் சிக்கலாக இருக்கும்.
- வேர்க்கடலை கர்ப்பத்திற்கு நல்லது என்பதற்கான மற்றொரு காரணம் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள். இந்த கொழுப்புகள் குறிப்பாக ஒலிக் அமிலம், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது.
- வேர்க்கடலையில் உள்ள வைட்டமின் பி3 (நியாசின்) நினைவாற்றல் மற்றும் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது மேலும், வேர்க்கடலையில் உள்ள ஃபிளாவோனாய்டி ரெஸ்வெராட்ரோலி மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
- வேர்க்கடலையில் டிரிப்டோபான் எனப்படும் அத்தியாவசிய அமினோ அமிலம் உள்ளது, இது செரோடோனின் உற்பத்தி செய்கிறது. இது மனநிலையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் கர்ப்ப கால மனச்சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் வேர்க்கடலை (Peanuts during pregnancy) சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் என்ன?
1. உப்பு சேர்க்கப்பட்ட வேர்க்கடலையை அதிகமாக சாப்பிடும் போது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இருப்பினும், உப்பு சேர்க்காத வேர்க்கடலையை மிதமாக சாப்பிடுவது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
2. வேர்க்கடலையை அதிகமாக சாப்பிடுவது உடலில் அதிக அளவு கெட்ட கொழுப்புகளுக்கு வழிவகுக்கும். எனவே, இது இதயம், செரிமானம், இரத்த அழுத்தம் மற்றும் பிற சிக்கல்களை ஏற்படுத்தும்.
3. கற்பிணிகள் வேர்க்கடலையை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது, உங்கள் ஆரோக்கியத்தில் சில விளைவுகளை ஏற்படுத்தும்.
கர்ப்ப காலத்தில் வேர்க்கடலையை (Peanuts during pregnancy) எப்போது தவிர்க்க வேண்டும்?
- நீங்கள் அதிக அளவு உடல் எடையுடன் இருக்கிறீர்கள் என்றால்
- உங்களுக்கு வாந்தி அல்லது அதிகமாக மலம் கழித்தல் போன்ற செரிமான பிரச்சனைகள் இருக்கும் போது
- நீங்கள் வெரிகோஸ் வெயின் நோயால் பாதிக்கப்படு இருந்தால்
- உங்களுக்கு சிறுநீரக கற்கள் இருந்தால்
- உங்களுக்கு உணவு ஒவ்வாமை இருந்தால்
உங்களுக்கு ஒவ்வாமை இல்லை என்றால், நீங்கள் வேர்க்கடலையை வெவ்வேறு முறையில் உணவுகளில் சேர்க்கலாம்.
- உலர்ந்த அல்லது வறுத்த வேர்க்கடலை ஒரு சிறந்த தின்பண்டமாக சாப்பிடலாம்.
- வேகவைத்த வேர்க்கடலை உங்களுக்கு பசியை போக்கும்.
- நீங்கள் சிறிது உப்பு சேர்த்து, அவற்றின் தோலுடன் தண்ணீரில் வேக வைக்கலாம் பிறகு வேகவைத்த கடலையை சாப்பிடலாம்
- உப்பு சேர்க்கப்பட்ட வேர்க்கடலை குறைந்த அளவுகளில் எடுத்துக்கொள்வது நல்லது,
- உணவுக்கு நல்ல சுவையைக் கொடுக்க வேர்க்கடலைகளை சட்னிகள் அல்லது சாலட்களில் சேர்த்து கொள்ளலாம்.
- வேர்க்கடலை சாண்ட்விச் செய்ய பயன்படுத்தப்படலாம்.
முடிவுரை
வேர்க்கடலை ஒரு சத்தான பருப்பு வகையாகும், இது கர்ப்ப காலத்தில் கருவின் சரியான மூளை வளர்ச்சியை ஆதரிக்க மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை உங்களுக்கு வழங்குகிறது.
வேர்க்கடலையில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது, அவை தாயின் ஆரோக்கியத்திற்கு உதவும் மற்றும் குழந்தையின் சரியான வளர்ச்சிக்கு உதவுகின்றன.
எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படாமல் தவிர்க்க கர்ப்பிணிப் பெண்களின் உணவின் வேர்க்கடலையை மிதமாக சாப்பிட வேண்டும்.
மேலும் உங்களுக்கு ஏற்படும் கர்ப்ப கால சந்தேகங்களுக்கு இப்போதே மருத்துவரின் ஆலோசனையை கேட்டு கொள்ளுங்கள் அல்லது ஜம்மி ஸ்கேன் மையத்தை தொடர்ப்பு கொள்ளுங்கள்!
வேர்க்கடலை பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. கர்ப்ப காலத்தில் வேர்க்கடலையை பச்சையாக சாப்பிடலாமா?
பச்சை வேர்க்கடலை பாதுகாப்பானது அல்ல, ஏனெனில் அவை தொற்று நோய்களை உண்டாக்கும் பூஞ்சைகளை உருவாக்கலாம்.
2. கர்ப்ப காலத்தில் வேர்க்கடலை சாப்பிட சிறந்த நேரம் எது?
வேர்க்கடலையின் ஒவ்வாமை உங்களுக்கு இல்லாவிட்டால் கர்ப்பத்தின் அனைத்து ட்ரைமெஸ்டரிலும் வேர்க்கடலை சாப்பிடலாம்.
3. கர்ப்ப காலத்தில் வேர்க்கடலை சாப்பிட்டால் குழந்தை புத்திசாலியாகுமா?
வேர்க்கடலையில் ஒமேகா- 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, இது குழந்தையின் மூளை வளர்ச்சியை ஆதரிக்கிறது.