NT scan என்றால் என்ன?
NT ஸ்கேன் என்பது கர்ப்பத்தின் 11 மற்றும் 14 வது வாரங்களுக்கு இடையில் செய்யப்படும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் ஆகும்.
இது குழந்தையின் கழுத்தின் பின்புறத்தில் உள்ள திரவத்தின் தடிமன் (நுச்சல் டிரான்ஸ்லுசன்சி) அளவை கணக்கிட்டு குழந்தைக்கு ஏதேனும் குரோமோசோம் அசாதாரணங்கள் உள்ளதா என கண்டறிய உதவும்.
NT ஸ்கேன் ரிப்போர்ட் (NT scan report in tamil) முடிவுகளை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதை இன்னும் விரிவாகப் பார்ப்போம்
NT ஸ்கேன் ரிப்போர்ட்டில் (NT scan report in tamil) என்ன இருக்கிறது ?
- ஒரு NT ஸ்கேன் ரிப்போர்ட், தாயின் வயது, எடை, இரத்த வகை, மாதவிடாய் சுழற்சி போன்ற அடிப்படை விவரங்களைக் கொண்டிருக்கும்
- குழந்தையின் நீளத்தைக் குறிக்கும் CRL, BPD – குழந்தையின் தலையின் விட்டம், HC -தலை சுற்றளவு; மற்றும் AC – கருவின் வயிற்று சுற்றளவைக் குறிக்கும் குழந்தையின் அளவீடுகளைக் கொண்டிருக்கும்
- NT ஸ்கேன் ரிப்போர்ட்டில் முக்கியமாக பார்க்க வேண்டிய ஒன்று NT அளவீடு ஆகும்.
மேற்கண்ட NT ரிப்போர்ட்டில்(NT scan report), NT அளவீடு 1 (mm) மிமீ ஆகும். இது குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்பதை காட்டுகிறது
NT ஸ்கேனின் சாதாரண அளவு என்ன?
சாதாரண NT ஸ்கேனின் அளவு 3 மிமீ (mm) க்கு குறைவாக இருக்கும்.
ஒரு சாதாரண NT அளவு என்பது குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்பதை குறிக்கும்
குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் இருப்பதை இரண்டு வழிகளில் கண்டறியலாம்:
NT ஸ்கேன்:
NT அளவு 3 மில்லிமீட்டருக்கு மேல் இருந்தால் குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதை குறிக்கும். அப்போது தாய் மரபணு ஆலோசனை மற்றும் கூடுதல் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இரட்டை குறிப்பான் சோதனை (Double Marker Test)
இதை குறைந்த ஆபத்து மற்றும் அதிக ஆபத்து இரண்டாக பிரிக்கலாம்
1:30 என்பது, இதே போன்ற முடிவுகளைக் கொண்ட 30 கர்ப்பிணிப் பெண்களில் ஒரு குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் இருக்கும், மற்ற 29 பேருக்கு இருக்காது.
1:4000 என்பது இதேபோன்ற முடிவுகளைக் கொண்ட 4000 கர்ப்பிணிப் பெண்களில் ஒரு குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் உள்ளது, மீதமுள்ள 3999 குழந்தைகளுக்கு இல்லை.
1:4000 என்ற விகிதத்தில் 4000 போன்ற இரண்டாவது எண் அதிகமாக இருந்தால் ஆபத்து குறைவாக இருக்கும்.
இதை 1 :350 உடன் ஒப்பிடுகிறோம்.
1:30 , 1:350 ஐ விட ஆபத்தானது என்பதால், இது அதிக ஆபத்து என்று கருதப்படுகிறது.
1:4000 ஆனது 1:350 ஐ விட குறைவான ஆபத்தைக் கொண்டிருப்பதால், இது குறைந்த அபாயமாகக் கருதப்படுகிறது.
ஏன் NT ஸ்கேன் அவசியமகிறது ?
இந்த ஸ்கேன் NT மற்றும் CRL அளவீடுகளை துல்லியமாக அளவிட எடுக்கப்படுகிறது.
இந்த அளவீடுகள் குழந்தைக்கு ஏதேனும் குரோமோசோமால் கோளாறு உள்ளதா என்பதை கணித்து முன்னரே அதன் விளைவுகளை கர்ப்பிணிக்கு தெரியப்படுத்த உதவுகிறது
முடிவுரை
உங்கள் NT ஸ்கேன் முடிவுகள் வழக்கத்திற்கு மாறானதாக இருந்தால் பயப்பட வேண்டாம்.
இது உங்கள் குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதை குறிக்கின்றதே தவிர உறுதிப்படுத்தவில்லை
உங்கள் மருத்துவர் கோரியானிக் வில்லஸ் மாதிரி அல்லது அம்னியோசென்டெசிஸ் போன்ற கூடுதல் சோதனைகள் உங்களுக்கு பரிந்துரைப்பார்.
கூடுதலாக இரத்தப் பரிசோதனையையும் பரிந்துரைப்பார். இது உங்கள் குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் இருப்பதற்கான வாய்ப்புகளை மிகவும் துல்லியமான கணிக்க உதவுகிறது
உங்கள் மருத்துவருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுங்கள்