கர்ப்ப காலத்தில் மன ஆரோக்கியத்தை எவ்வாறு பராமரிப்பது – Mental Health During Pregnancy in Tamil

Deepthi Jammi
4 Min Read

பிரசவத்துக்கு  முந்தைய  மனச்சோர்வு என்பது கர்ப்பகாலத்தில் உண்டாகும் மனச்சோர்வை குறிக்கின்றது (mental health during pregnancy in tamil).

இது  கர்ப்பிணிகளுக்கு தீவிரமாகும் போது தொடர்ந்து  சோகம், பதட்டம், சோர்வு  மற்றும் தூக்கம் மற்றும் உணவு பழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். 

கர்ப்பிணி பெண் மோசமான மன அழுத்தத்தை கொண்டிருந்தால் அது அவர்களது குழந்தைக்கு தீங்கு விளைவிக்கலாம்.  கர்ப்பிணி பெண்ணுக்கு மன அழுத்தம் வந்தால் என்ன மாதிரியான பிரச்சனைகள் சந்திப்பார்கள்.

அதை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதை ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் தெரிந்துகொள்ள வேண்டும்.

கர்ப்பிணி பெண் மன அழுத்த பாதிப்பை கொண்டிருந்தால் என்ன செய்வது?- (How to improve mental health during pregnancy in Tamil)

கர்ப்பிணி பெண் மனநல மருந்துகள் எடுக்க FDA அங்கீகரிக்கவில்லை. அதே நேரம் இது குறித்து ஆய்வு பெண்களிடம் செய்யப்படவில்லை. 

மன அழுத்த எதிர்ப்பு மருந்து பாதுகாப்பானது என்றாலும்  இது குறித்து இன்னும் நம்பகத்தன்மையான ஆய்வுகள் இல்லை. மேலும் சில மருந்து கருவில் இருக்கும் குழந்தைக்கு இதய  குறைபாடு உண்டாக்கும் அபாயம் இருக்கலாம் என்கிறது. 

கர்ப்பகாலத்தில் பெண் மன அழுத்தம் இல்லாமல் மன ஆரோக்கியத்துடன் இருக்க என்ன செய்யலாம்  என்ற குறிப்புகள் இங்கே உங்களுக்கு உதவும்.

கர்ப்பிணி பெண்  யோகா செய்யலாம். 

யோகாசெய்வது மனச்சோர்வை கையாள உதவும். இது சக்திவாய்ந்தது.  ஆய்வுகள் கர்ப்பிணி பெண் யோகா செய்வதால் மனநிலையை உயர்த்த உதவும் என்று கூறுகிறது. 

நீங்கள் யோகா செய்பவராக இருந்தால் டாக்டரின் அனுமதியுடன்  கர்ப்பகால யோகா செய்யலாம். இது மன நிலையில் நேர்மறையான தாக்கத்தை  உண்டு செய்யும். 

மேலும் இது கர்ப்பிணி பெண்ணுக்கு தூக்கத்தை உண்டு செய்யவும் உதவும். மன அழுத்தம் இல்லாமல் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கவும் செய்யும். 

Tips to maintain mental health during pregnancy in tamil - Yoga

நேர்மறை பேச்சு

கர்ப்பிணி மனம் தளரும் போது அவர்கள் நேர்மறை ஊக்கம்  பெறும் வகையில்  நம்பிக்கையானவர்கள் நெருக்கமானவர்கள் இருக்க   வேண்டும். 

கர்ப்பிணியும் நான் சக்தி வாய்ந்தவள் என்னும் மந்திரத்தை உருப்பெற்று நாளை தொடங்க வேண்டும். இதன் மூலம் நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பீர்கள். 

Tips to maintain mental health during pregnancy in tamil - Positive Thinking

கர்ப்பம் சில நேரம் கடினமானது தான் ஆனால் அன்பான மகிழ்ச்சியான வார்த்தைகள்  சக்தி வாய்ந்ததாக மனநிலையை மாற்றும். கர்ப்பிணி படுக்கை அறையில் நேர்மறை வாசகத்தை எழுதி ஒட்டிவைத்துகொள்ளலாம்.

எப்போதும் நேரம்றையாக இருப்பது, அது தொடர்பான புத்தகம் படிப்பது மன அழுத்தம் போக்கும். 

உடல் பயிற்சி செய்ய வேண்டும்

கர்ப்பகாலத்தில் யோகா போன்று உடற்பயிற்சியும் மனநிலையை மேம்படுத்துகிறது. கர்ப்பகாலத்தில் மனநிலை  அதிகரிக்க தேவையான உடற்பயிற்சி தீவிரமாக இல்லாமல்  குறைவாக இல்லாமல்  செய்வது நல்லது.

Also Read : சுகப்பிரசவம் ஆவதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!

சில உடற்பயிற்சி உங்கள் மனநிலையை உயர்த்த செய்யும். மனச்சோர்விலிருந்து பாதுகாக்கும். ஆரோக்கிய வாழ்க்கையை தூண்ட செய்யும். உடற்பயிற்சிசெய்வதன் மூலம் எண்டோர்பின்கள் தூண்டி மனநிலையை மேம்படுத்த செய்யும்.

Tips to maintain mental health during pregnancy in tamil - Exercise

கர்ப்பிணி செய்யவேண்டிய உடல்பயிற்சிகள் என்ன என்பதை  உங்கள் நிபுணரிடமிருந்து ஆலோசித்து அதன் படி செய்ய வேண்டும். அல்லது குறைந்தது நடைபயிற்சி மட்டுமேனும் செய்யலாம். 

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா? என்ன மாதிரியான பயிற்சிகள் செய்யலாம், யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

துணையுடன் செலவிடுங்கள்

உங்கள் துணையுடன் நேரம்  செலவிடுங்கள்.  வெளிப்படையான நேர்மையான உரையாடல்கள்  இருவருக்குமே முக்கியம். இதன் மூலம் ஆழமான நெருக்கமான  தொடர்பு உருவாக்க உதவும். மன அழுத்தம் இல்லாமல் இருக்கும். 

தாய் போன்று அப்பாக்களும்  குழந்தை பிறந்த பிறகு மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். கர்ப்பகாலத்தில் இருவரும் பேசுவதும் பழகுவதும்  உரையாடுவதும் இருவருக்குமான ஆதரவை அதிகரிக்கலாம்.

Tips to maintain mental health during pregnancy in tamil - Spend time with your patner

மனச்சோர்வை குறைக்கலாம். தினமும் குறைந்தது 1 மணி நேரமாவது இருவரும் தனிமையில் உங்களுக்கான நேரத்தை செலவிடுங்கள்.  

கர்ப்பிணி ஓய்வெடுக்க வேண்டும்

மனச்சோர்வு தவிர்க்க கர்ப்பிணி ஓய்வு எடுப்பது அவசியம். முன்பு போல் சுறுசுறுப்பாக இல்லையென்றாலும் நீங்கள் விரக்தி அடையலாம். குழந்தையின் நல்வாழ்வை உறுதி செய்ய ஓய்வு அவசியம். 

படுக்கையில் கழிக்க வேண்டாம். ஆனால்  அவ்வபோது  ஓய்வும் அவசியம்.  தூக்க நேரம் கர்ப்பத்தில் மாறலாம். ஆனால் போதுமான தூக்கம் மற்றும் ஒய்வு போன்றவை ஆரோக்கியமான மனநிலைக்கு முக்கியமாகும்.

Tips to maintain mental health during pregnancy in tamil - Take Rest

அதனால் பகல் நேரத்திலும் தூக்கம் வந்தால் தூங்குங்கள். இரவில் அடிக்கடி கழிப்பறை செல்ல நேர்வதால் தூக்க குறுக்கீடு இருக்கலாம். இதுவும் இயல்பானதே. இயன்றவரை ஓய்வெடுங்கள். அது மனச்சோர்வு மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

மருந்துகள் தவிர்க்காதீர்கள்

கர்ப்பகாலத்தில் மன அழுத்த மருந்துகள் தீவிரமான நிலையில் டாக்டர் பரிந்துரைத்தால் எடுக்கலாம். கர்ப்பத்தில் உள்ள ஆண்டி டிரஸண்ட்கள் பாதுகாப்பானவை என்ற ஆராய்ச்சிகள் அதிகரித்துல்ளன.

Tips to maintain mental health during pregnancy in tamil - Dont skip tablets

கர்ப்பம் மகிழ்ச்சியானவை என்றாலும் சமயங்களில் அது கடினமானது தான். கர்ப்பகாலத்தில் மன ஆரோக்கியத்தை வளர்ப்பது முக்கியமானது. 

To Read in English : Tips to Maintain Mental health during pregnancy

 

Rate this post

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Follow:
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »