முன்னுரை
பனிக்குட நீர் என்பது கர்ப்பப்பையில் குழந்தையை சுற்றி இருக்கும் நீராகும். இந்த நீர் சரியான அளவில் இருக்க வேண்டும். பனிக்குட நீர் குறைந்தாலோ, அதிகமானாலோ குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்
பாலிஹைட்ராம்னியோஸ் (Polyhydramnios) என்னும் பனிக்குட நீர் அதிகமாக (high amniotic fluid in tamil) இருப்பது, இது சுமார் 1 முதல் 2 சதவீத கர்ப்பங்களில் ஏற்படுகிறது.
பனிக்குட நீர் அதிகமாக இருந்தால் (high amniotic fluid in tamil) என்ன பிரச்சனைகள் வரும் என்பதை தெரிந்து வைத்து கொள்ளுவது மிகவும் அவசியம்.
இந்த வலைப்பதிவில் பனிக்குட நீர் அதிகமாக இருப்பதால் என்னென்ன குறைபாடுகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுவோம்.
பனிக்குட நீர் அதிகமாக (high amniotic fluid in tamil) இருப்பதன் காரணம் என்ன?
பனிக்குட நீர் அதிகமாக இருந்தால் முதலில் அம்மாவிற்கு சர்க்கரை இருக்கிறதா, இருந்தால் சர்க்கரை அளவு சரியாக இருக்கிறதா என்பதை மருத்துவர் சோதனை செய்து கண்டுபிடிப்பார்கள்.
பிறகு குழந்தை, சரியான எடையை தான் கொண்டுள்ளதா மற்றும் தாயின் சர்க்கரை அளவு குறிப்பிட்ட அளவை விட அதிகமாக இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அடுத்ததாக தாயின் உடல் நிலையை தாண்டி, கருவில் உள்ள குழந்தையின் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சரியாக வளர்ந்து உள்ளதா என்பதை பரிசோதனை செய்வார்கள்.
குழந்தையின் வாய் மற்றும் வயிறு போன்ற உறுப்புகளின் செயல்பாடுகளை பார்ப்பார்கள்
குழந்தையின் இந்த உறுப்புகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பதால், அம்னோடிக் திரவம் அதிகமாக இருக்கும்.
குழந்தையின் வயிறுப் பகுதி, குடல் பகுதி உறுப்புகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பதால், அம்னோடிக் திரவம் அதிகமாக இருக்கும்.
ஏன் என்றால் கருவில் இருக்கும் குழந்தை சரியாக பனிக்குட நீரை விழுங்க முடியவில்லை என்றால் பனிக்குட நீர் வெளியில் வருவதால் வரும். எனவே அதன் அளவு அதிகமாக இருக்கும்.
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வதால் பனிக்குட நீர் எதனால் அதிகமாக இருக்கிறது என்பதை கண்டறிய முடியுமா?
பொதுவாக அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யும் போது குழந்தையின் வாய் பகுதி நன்றாக உள்ளதா மற்றும் அதன் வயிற்று பகுதி எப்படி உள்ளது என்பதை மட்டும் தான் ஸ்கேன் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
வயிறு மற்றும் குழந்தையின் வாய் பகுதியில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதால் உணவுக்குழாய் நன்றாக உள்ளது என்று மருத்துவர்கள் கூறுவார்கள். ஸ்கேன் செய்வதால் இதை மட்டும் தான் தெரிந்து கொள்ள முடியும்.
குழந்தை பிறந்த பிறகு தான் உணவுக்குழாய் சரியாக இருப்பதை ஆய்வு செய்ய முடியும்.
உங்கள் அம்னோடிக் திரவம் அதிகமாக இருந்தால் மருத்துவர் பின்வரும் சோதனையை செய்யலாம். குளுக்கோஸ் சோதனை, இதை செய்வதால் கர்ப்பகால நீரிழிவு நோய் இருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.
அம்னோசென்டெசிஸ் செய்வதால் அம்னோடிக் திரவத்தின் மாதிரியை எடுத்து பரிசோதனை செய்து கண்டுபிடிப்பார்கள்.
இதையும் தாண்டி 20 வதில் இருந்து 30 சதவீதம் வரை எந்த ஒரு காரணமும் தெரியாமல் பனிக்குட நீர் அதிகமாக இருக்கிறது.
பனிக்குட நீர் அதிகமானால் (high amniotic fluid in tamil) என்ன ஆகும் ?
இதனால் மருத்துவர்கள் கூறுவது, பனிக்குட நீர் அதிகமாக (high amniotic fluid in tamil) இருப்பதால் கர்ப்பிணிகளுக்கு குறை மாதத்தில் பிரசவம் நடக்கும், மூச்சி விடுவதில் சிரமம், பிரசவத்திற்குப் பின் அதிகமான இரத்தப்போக்கு, சிறுநீர் உற்பத்தி குறைவது, மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், வயிறு பெரியதாகவும் அல்லது இறுக்கமானவும் இருக்கும் உணர்வு, குழந்தையின் இரத்த சிவப்பணுக்களின் பற்றாக்குறை ஏற்படும் அதாவது கருவில் இருக்கும் குழந்தைக்கு இரத்த சோகை, மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் நோய் தொற்று போன்ற பிரச்சனைகள் வரும்.
அம்னோடிக் திரவம் அதிகம் (high amniotic fluid in tamil) ஆகா ஆகா தாயின் வயிறு பெரியதாகும். ஒவ்வொரு கர்ப்பிணிகளின் கர்ப்பபையும், தன்னால் முடிந்த அளவு வரை மற்றும் தான் வயிறு பெரியாதவதை தாங்கி கொள்ள முடியும்.
ஒரு சமயத்தில் தானாகவே உங்கள் வயிறு சுருங்க ஆரம்பிக்கும் அப்போது தான் பிரசவம் நடக்கும். அதனால் தான் பனிக்குட நீர் அதிகமாவதால் குறைப்பிரசவம் ஏற்படும் அபாயம் அதிகம், எனவே கவனமாக இருக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் பொதுவாக அம்னோடிக் திரவம் அதிகமாக இருப்பதால் 8 முதல் 9 வது மாதத்தில் கவனமாக இருக்க வேண்டும், வயிற்றில் ஏதேனும் வலி ஏற்படுகிறதா மற்றும் பனிக்குட நீர் வெளியில் வருகிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும், இப்படி ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும், இது பிரசவத்தின் அறிகுறியாக இருக்கும்.
முடிவுரை
நிறைய கர்ப்பிணி பெண்களுக்கு பனிக்குட நீர் அதிகமாக இருந்தும் குழந்தை ஆரோக்கியமானதாக பிறந்து உள்ளது.
எனவே பனிக்குட நீர் அதிகமாக இருப்பதை நினைத்து கவலை கொள்ளாதீர்கள் அனைத்து நேரமும் பிரச்சனைதான் இருக்கும் என்பது இல்லை , மேலும் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளுங்கள்.
மேலும் எல்லா கர்ப்பகால ஸ்கேன்களுக்கும், உங்கள் பெண்ணோயியல் மற்றும் கர்ப்பகால ஆலோசனைகளுக்கும் ஜம்மி ஸ்கேன்ஸ் -ஐ அணுகவும்.