திருமணமான ஒரு பெண் கர்ப்பம் அடைய என்ன செய்ய வேண்டும் (Steps for Getting Pregnant Faster) என்பது தான் இங்கு பலரின் கேள்விகளாக இருக்கிறது. கீழ்கண்ட பதிவில் அதற்கான தெளிவான விளக்கமும் சில ஸ்கேன்களின் உதவியும் குறிப்பிட்டிருக்கும். அதன் வழி நீங்கள் கர்ப்பம் அடையலாம்.
சீக்கிரம் கர்ப்பம் அடைய டிப்ஸ் (Steps to Get Pregnant Faster in Tamil)

மாதவிடாய் சுழற்சி கவனிக்க வேண்டும்?
குழந்தை பிறக்கத் திட்டமிடும் பெண்கள் கர்ப்பம் அடைய என்ன செய்ய வேண்டும்? (Get Pregnant Faster in Tamil) தங்கள் மாதவிடாய் இடைவெளியைக் கண்காணிக்க வேண்டும். மாதவிடாயின் முதல் நாள் ஒவ்வொரு மாதமும் ஒரே நாளில் வருகிறதா என்பதை கண்காணிக்க வேண்டியது அவசியம்.
அப்படி ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு நாட்காளிலோ அல்லது ஒரு மாதம் தவறி வந்தால் அவர்களின் மாதவிடாய் ஒழுங்கற்றதாய் இருக்கிறது என்று அர்த்தம்.
ஒரு காலெண்டரில் தன் மாதவிலக்கு நாட்களை குறித்து வைத்து வருவதன் மூலம், அவர்களுக்கு எப்போது கருமுட்டை வெளிவரும் என்பதை இன்னும் துல்லியமாக கணிக்க முடியும்.
ஒரு பெண்ணின் கரு முட்டை வெளியான பிறகு 12-24 மணிநேரங்களுக்கு மட்டுமே கருவுற முடியும். ஒரு பெண் கர்ப்பமாக கருமுட்டைகள் அவசியம் என்பதாலேயே மாதவிலக்கு நாட்களை சரியாக கவனிக்க வேண்டும் என்கின்றனர்.
உங்கள் அண்டவிடுப்பின் நிலையை கவனிக்க வேண்டும்
கர்ப்பம் அடைய என்ன செய்ய வேண்டும் (Get Pregnant Faster in Tamil) முதலில் மாதவிடாய் சரியான நாட்களில் வருகிறதா என்பதை கவனிக்க வேண்டும். ஏனென்றால் ஒழுங்கற்ற மாதவிலக்கு சுழற்சிகளைக் கொண்ட பெண்களின் அண்டவிடுப்பைக் கணிப்பது கடினம். ஆனால் வழக்கமாக அவரது அடுத்த மாதவிடாய் காலத்திற்கு 12 முதல் 16 நாட்களுக்கு முன்பு அண்டவிடுப்பு நாட்கள் துவங்குகிறது.

ஒரு பெண் கருவுறுதல் என்பது அவரின் வாழ்க்கைக்கான மாற்றமாகும். அதனால் அண்டவிடுப்பின் அளவைக் கண்காணிப்பது சிறந்தாக இருக்கிறது.
ஒவ்வொரு மாதமும் ஒரு பெண் எப்போது கருவுறுகிறாள் என்பதை தீர்மானிக்க, பல முறைகள் பயன்படுத்தப்படலாம்
வீட்டில் ஒரு அண்டவிடுப்பின் முன்கணிப்பு கிட் மூலம் பரிசோதிக்கலாம். மருந்துக் கடைகளில் விற்கப்படும் கிட்கள், லுடினைசிங் ஹார்மோனின் சிறுநீரைச் சோதிக்கின்றன. இதன் அளவு ஒவ்வொரு மாதமும் அண்டவிடுப்பின் போது அதிகரித்து, கருப்பைகள் முட்டைகளை வெளியிடச் செய்யும்.
அதில் அவரது மூன்று நாட்கள் நேர்மறையான சோதனை முடிவைத் தந்தால், தம்பதிகள் கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்க உடலுறவு கொள்ள சிறந்த நேரமாகும்.
அண்டவிடுப்பைக் கணிக்க மற்றொரு வழி கர்ப்பப்பை வாய் சளி கண்காணிப்பு ஆகும். ஒரு பெண் தனது யோனியில் உள்ள சளியின் அளவு மற்றும் தோற்றம் இரண்டையும் தவறாமல் சரிபார்க்க வேண்டும்.
கருமுட்டை வெளிவரும் போது ஒரு பெண்கள் கருத்தரிக்க அதிக வாய்ப்புள்ளது. அப்போது சளியின் அளவு அதிகரித்தும், மெல்லியதாகவும், தடிமனாகவும் மாறும் என்று கூறுகிறனர்.
இது பார்ப்பதற்க்கு வெளிப்படையாகவும் மற்றும் வழுக்கும் நிலையிலும் இருக்கும். கர்ப்பப்பை வாய் சளி வழுக்கும் போது, ஆணின் விந்து கரு முட்டையை அடைய உதவுகிறது.
கருவுறுதல் மற்றும் மலட்டுத்தன்மை போன்ற பிரச்சனை உடையவர்கள் கர்ப்பப்பை வாய் சளியை தவறாமல் பரிசோதித்தால் ஆறு மாதங்களுக்குள் கருத்தரிக்கும் வாய்ப்பு 2.3 மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அண்டவிடுப்பைக் கண்காணிக்க அடித்தள உடல் வெப்பநிலை ஒரு சிறந்த வழியாகும். இதைச் செய்ய, ஒவ்வொரு காலையிலும் நீங்கள் எழுந்திருக்கும் முன் உங்கள் உடல் வெப்பநிலையை ஒரே நேரத்தில் சரிபார்த்து, உங்கள் தினசரி அளவை பதிவாக வைத்திருங்கள்.
பி.சி.ஓ.எஸ் இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்
கர்ப்பம் அடைய என்ன செய்ய வேண்டும் (Steps for Getting Pregnant Faster) அவர்களுக்கு பி.சி.ஓ.எஸ் இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். பி.சி.ஓ.எஸ் என்பதனை ஸ்டீன்-லெவென்டல் சிண்ட்ரோம் என்றும் அழைக்கப்படுகிறது. இது பெண்களை பாதிக்கும் ஹார்மோன் சமநிலையின்மை குறிக்கும். இது ஆண்ட்ரோஜன்கள் அல்லது “ஆண்” ஹார்மோன்களின் அதிகப்படியான உற்பத்தியால் வகைப்படுத்தப்படுகிறது.
PCOS இருக்கும் பெண்களுக்கு சருமத்தில் பாதிப்பு ஏற்படுத்தும். அதிகப்படியான முடி வளர்ச்சி மற்றும் முகப்பருவை ஏற்படுத்தும். இது கருப்பையில் நீர்க்கட்டிகளை ஏற்படுத்தும் மற்றும் சாதாரண மாதவிடாய் சுழற்சியை சீர்குலைக்கும்.
இது மாதவிடாய் சீர்குழைப்பது மட்டும் இல்லாமல் உங்கள் கருவை உங்கள் கர்ப்பபையில் தங்க விடாமலும் தடை செய்யும். முடிந்தவரை நீங்கள் உங்கள் மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை எடுப்பதன் மூலம் இதனை கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்.
PCOS அறிகுறிகள்
பொதுவாக பி.சி.ஓ.எஸ்-னை பெண்கள் பெரும்பாலும் கவனிப்பதில்லை. ஏனெனில் அதைக் கண்டறிவது கொஞ்சம் கடினம் மற்றும் இது ஒவ்வொரு பெண்களுக்கும் மாறுபட்ட அறிகுறிகளை ஏற்படுகின்றன.
உதாரணமாக, உடல் பருமன் மற்றும் திடீர் அதிக எடை அதிகரிப்பு PCOS இல் பொதுவானது. ஆனால் பிசிஓஎஸ் உள்ள பல பெண்கள் மெலிதான உருவம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.
பெரும்பாலும் PCOS உள்ள பெண்களில் 50% வரை எந்த அறிகுறிகளும் கண்டறியப்பட முடியாமல் இருக்கின்றனர்.
பி.சி.ஓ.எஸ் இருந்தால் கருத்தரிப்பதில் பிரச்சனை இருக்கும் என்று சிலர் நம்புகின்றனர். PCOS சரிசெய்யக் கூடிய ஒன்று தான். எனவே, முறையான மருத்துவ சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் நீங்கள் கர்ப்பமடையலாம்.
ஃபோலிகுலர் ஆய்வு எப்போது தேவை?
ஃபோலிகுலர் ஆய்வு என்பது ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சிக்கு பிறகு, அவரின் அண்டவிடுப்பு நிலையை தெரிந்து கொள்வதற்காக செய்யப்படும் ஒரு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் ஆகும்.
பல பெண்கள் ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு நாட்களில் அண்டவிடுப்பில் இருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சில பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியைக் கண்காணிப்பது கடினமாக இருக்கும். இந்த சமயங்களில் தான் அவர்கள் ஃபோலிகுலர் ஆய்வு ஸ்கேன் செய்வதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
பெண்ணின் இனப்பெருக்க அமைப்பில் கருப்பை நுண்ணறைகள் எனப்படும் சிறிய திசுக்கள் உள்ளன. அவை அண்டவிடுப்பின் போது கருவுறுதலுக்கான முட்டைகளை வெளிவிடுகின்றன. நுண்ணறை என்பது முட்டைகள் வளரும் ஒரு திரவப் பகுதி. முட்டை வளரும் போது நுண்ணறையின் அளவும் அதிகரிக்கிறது.
ஃபோலிகுலர் ஆய்வு மாதவிடாய் சுழற்சியின் போது கருப்பைகளை தவறாமல் ஸ்கேன் செய்வதற்காகவும் மற்றும் நுண்ணறைகளின் அளவு அதிகரிப்பதைக் கவனிப்பதற்காகவும் செய்யப்படும் ஒரு ஸ்கேன் ஆகும்.

இது ஒரு பெண்ணின் கருமுட்டை எப்போது வெளிவரும் மற்றும் அண்டவிடுப்பின் முதிர்ந்த முட்டைகளின் எண்ணிக்கையினையும் தீர்மானிக்க உதவும் பிறப்புறுப்பு ஸ்கேன்களில் ஒன்றாகும்.
உடல் உறவு எப்போது கொள்ள வேண்டும்?
கருதரிக்க முயற்சிக்கும் தம்பதிகள் ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் உடலுறவு கொள்ளக்கூடாது. பல முறை உடலுறவு வைத்துக்கொண்டால் கருத்தரித்துவிடலாம் என்பது கற்பனையான நம்பிக்கை.
அடிக்கடி உடலுறவு கொள்வது ஆரோக்கியமான விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடும் என்பதால் குழந்தை வேண்டும் என முயற்சி செய்யும் தம்பதிகள் ஒருநாள் விட்டு ஒருநாள் உடலுறவு கொண்டாலே நல்ல பலன் பெறலாம்.

பெண்களுக்கு கரு நிற்பதற்கு எல்லா நாட்களும் சாத்தியமாக இருக்காது. அவர்களுடைய கருப்பை , அண்டவிடுப்பு, மாதவிடாய் இவை அனைத்தையும் மனதில் வைத்துக்கொண்டு தான் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். கர்ப்பமடைய கருப்பை உங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்றால் அண்டவிடுப்பு துவங்குவதற்கு முன்பு உடலுறவு கொள்ள வேண்டும்.
இந்த அண்டவிடுப்பின் போது தான் கரு முட்டை வெளியேறும். அவை கருப்பை குழாயில் (fallopian tube) சென்று தேங்கியிருக்கும். இந்த சமயத்தில் ஆணின் விந்தணுக்கள் பயணித்து உள்ளே செல்லும்போது தேங்கியிருக்கும் முட்டையால் அவை ஈர்க்கப்பட்டு கரு முட்டையாக உருவாகி கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. குழாயில் செல்லும் விந்தணுக்கள் ஐந்து நாட்கள் வரை உயிர் வாழும்.

ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியும் முதல் நாளில் தொடங்கி அடுத்த மாத மாதவிடாய் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு முடிவடையும். உங்கள் சுழற்சியின் நடுவில் வரும் நாட்களை குறியுங்கள். உங்களுக்கு 28 நாட்கள் சரியான சுழற்சி இருந்தால் 14 வது நாளில் நீங்கள் கருவுறுவீர்கள்.
கர்ப்ப தரிக்க செய்ய கூடாதவை என்ன?
- கர்ப்பம் தரிக்க கடுமையான உடற்பயிற்சியினை தவிர்ப்பது நல்லது.
- நச்சுத்தன்மை நிறைந்த துரித உணவுகளை சாப்பிடக்கூடாது.
- ரசாயணம் கலந்த பானங்களை அருந்த கூடாது.
- மது அருந்துதல் கூடாது
- புகைப்பழக்கம் இருத்தல் கூடாது.
- உடலுறவு செய்யும் போது கருத்தடை மாத்திரைகளோ, சாதனங்களோ பயன்படுத்த கூடாது.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
மேற்கண்ட பிரச்சனைகள் இருந்தால் உங்களை எளிதில் கர்ப்பம் அடைய செய்யாது. அதனால் நீங்கள் குழந்தை எதிர்பார்கும் தம்பதிகளாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி அதனை சரிசெய்வதன் மூலம் நீங்களும் தாய் தந்தையர்கள் ஆகலாம்.