கர்ப்பகால நீரிழிவு நோய் கருவை பாதிக்குமா?

Deepthi Jammi
8 Min Read

கர்ப்பகால நோய்களில் முக்கியமானது நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம். எல்லோருக்கும் இந்த பாதிப்பு வராது என்றாலும் இன்றைய சூழலில் பெரும்பாலான பெண்கள் இந்த நீரிழிவுக்கு ஆளாகின்றனர்.

இந்த கர்ப்பகால நீரிழிவு (Gestational Diabetes in tamil) நோய் பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம்.

கர்ப்பிணிக்கு பொதுவாக இந்த நீரிழிவு அபாயம் இருந்தாலும் ஆரோக்கியமான கர்ப்பத்தை உறுதி செய்ய கர்ப்பிணிகள் தங்கள் உணவு முறை உடற்பயிற்சி போன்றவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் இதை தவிர்த்துவிடலாம்.

தவிர்க்க முடியாத நிலையில் அவை வந்தாலும் மருந்துகள் எடுப்பதன் மூலம் அதை கட்டுக்குள் வைக்கலாம். இதன் மூலம் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.

சிக்கலில்லாமல் பிரசவத்தை எளிதாக்க செய்யலாம். இந்த கர்ப்பகால நீரிழிவு நோய் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்.

கர்ப்பகால நீரிழிவு நோய் (Gestational Diabetes in Tamil) என்றால் என்ன?

உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது உண்டாககூடியது. கர்ப்பகாலத்தில் 6 மாதங்களில் இருந்து 7 மாதங்களுக்கு இடையில் அதாவது இரண்டாவது ட்ரைமெஸ்டரில் இவை கண்டறியப்படுகிறது.

Gestational Diabetes and Pregnancy

கர்ப்பகால நீரிழிவு (Gestational Diabetes in tamil) என்பது கர்ப்பத்துக்கு முன்பு நீரிழிவு நோய் இருந்ததற்கான அர்த்தம் அல்ல. இது கர்ப்பத்தினால் உருவாகக்கூடியது. இது பிரசவம் வரை இருக்கும். இதுவே டைப் 1, டைப்2 டயாபட்டீஸ் உள்ளவர்கள் கர்ப்பமாக இருந்தால் அவர்கள் இன்னும் அதிக கவனிப்பில் இருக்க வேண்டியவர்கள்.

கர்ப்பகால நீரிழிவு அறிகுறிகள்?

கர்ப்பகால நீரிழிவு நோய் (Gestational Diabetes in tamil) பெரும்பாலும் அறிகுறிகளை உண்டு செய்யாது. இது கர்ப்ப அறிகுறிகளை போன்றே இருக்க கூடும்.

Gestational Diabetes in tamil
  • அடிக்கடி சிறுநீர் கழிப்பது
  • குமட்டல்
  • தாகம்
  • சோர்வு போன்றவை இருக்கும்.

கர்ப்பகால நீரிழிவு நோய்க்கான எச்சரிக்கை அறிகுறிகள் என்று இல்லை. பெரும்பாலும் இரண்டாவது ட்ரைமெஸ்டர் காலங்களில் நீரிழிவு பரிசோதனையின் போது இவை கண்டறியப்படுகிறது.

கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோய்க்கு (Gestational Diabetes in Tamil)என்ன காரணம்?

கர்ப்பகால நீரிழிவு (Gestational Diabetes in Tamil) ஹார்மோன் மாற்றங்கள் நமது உடல் உணவை ஆற்றலாக மாற்றும் விதத்தில் இருந்து வருகிறது.

உடலில் இன்சுலின் என்னும் ஹார்மோன் உணவில் உள்ள குளுக்கோஸை உடைத்து செல்களுக்கு ஆற்றல் வழங்க உதவுகிறது. இன்சுலின் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை ஆரோக்கியமாக வைக்கிறது.

இன்சுலின் வேலை செய்யாத போது அல்லது போதுமான அளவில் சுரக்காத போது இரத்தத்தில் சர்க்கரை அதிகரித்து அது நீரிழிவு நோய் உண்டாக்குகிறது.

கர்ப்பகாலத்தில் ஹார்மோன்கள் இன்சுலின் செயல்படும் விதத்தில் தலையிடுகிறது. இதனால் உடல் ஆற்றலுக்கு குளுக்கோஸ் பயன்படுத்த முடியாத நிலையில் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்க செய்கிறது. இது கர்ப்பகால நீரிழிவு உண்டாக்குகிறது.

அதிக உடல் எடை, ஆரோக்கியமற்ற உணவு, உடல் உழைப்பு குறைவு, மரபணு போன்றவை நீரிழிவு நோயை உண்டு செய்யலாம். இவர்களை தவிர அதிக ஆபத்துக்குள்ளவர்கள்

gestational diabetes reason

கர்ப்பகாலத்தில் சர்க்கரை பரிசோதனை

கர்ப்பகாலத்தில் இரத்த குளுக்கோஸ் அளவை பரிசோதிக்கும் பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள். இது கர்ப்பத்தின் இரண்டாம் ட்ரைமெஸ்டர் காலங்களில் கண்டறியப்படும் ஒரு நிலை. அறிகுறிகள் இல்லாத நிலையில் இந்த பரிசோதனையின் மூலம் கண்டறிந்துவிடலாம்.

இந்த கட்டத்தில் நஞ்சுக்கொடியால் ஹார்மோன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் மூலம் கருவுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் வழங்கப்படுகிறது. அப்போது உருவாக்கும் ஹார்மோன்கள் இன்சுலின் குறுக்கிடலாம்.

இந்த சோதனை இரண்டு வழிகளில் செய்யப்படுகிறது.

  1. உணவுக்கு முன்பு 95 mg/dl அல்லது குறைவாக
  2. உணவுக்கு பின்பு ஒரு மணி நேரம் கழித்து 140mg/dl அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
  3. இரண்டு மணிநேரம் கழித்து 120 mg/dl அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

கர்ப்பிணிக்கு இனிப்பு திரவம் கொடுக்கப்படும். ஒரு மணிநேரம் கழித்து இரத்த சர்க்கரை அளவு சரிபார்க்கப்படும். இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் குளுக்கோஸ் சகிப்புத்தன்மை பரிசோதனை செய்யப்படும்.

இது சிகிச்சையளிக்க கூடியது என்பதால் கர்ப்பிணிகள் பயம் கொள்ள வேண்டியதில்லை.

கர்ப்பகால நீரிழிவு நோய் குணமாகுமா?

கர்ப்பகால நீரிழிவு நோய் (Gestational Diabetes) இருந்தால் அவை தொடரக்கூடியதல்ல. பிரசவத்துக்கு பிறகு இயல்பு நிலைக்கு உடல் இரத்த சர்க்கரை அளவு திரும்பும். அதே நேரம் கர்ப்பகாலத்தில் இந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு எதிர்காலத்தில் டைப்2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது.

கர்ப்பகால நீரிழிவு நோய் கருவை பாதிக்குமா?

கர்ப்பகால நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்காவிட்டால் கருவுக்கும் தாய்க்கும் சிக்கல்கள் உண்டு செய்யலாம். இது சிசேரியன் பிறப்பு பிரசவத்தை தூண்டலாம். அதாவது இந்நிலையில் கருவானது பெரியதாக இருந்தால். இதனுடன் உயர் இரத்த அழுத்தம் இருந்தால் ப்ரீக்ளாம்ப்சியா ஏற்படலாம்.

தாய்க்கு நீரிழிவு நோய் இருந்தால் கருவுக்கு உண்டாகும் பாதிப்புகள்

குழந்தையின் எடை அதிகரிக்கலாம், இது இரத்த சர்க்கரை அளவு நிலையான வரம்பை விட அதிகமாக இருந்தால் குழந்தையை பெரிதாக்க செய்யலாம். இதனால் குழந்தை 9 பவுண்டுகள் மேல் வளரலாம். இதனால் சுகப்பிரசவம் ஆகாமால் சிசேரியன் பிரசவம் தேவைப்படும்.

உயர் இரத்த சர்க்கரை அளவு இருக்கும் போது அது முன்கூட்டிய பிரசவத்தை கொண்டுவிடலாம். பிரசவத்தேதிக்கு முன்பே குழந்தை பிறக்கலாம். அல்லது குழந்தையின் எடை அதிகரிப்பை கண்டு மருத்துவரே முன் கூட்டிய பிரசவத்துக்கு பரிந்துரை செய்யலாம்.

குழந்தை பிறக்கும் போது சுவாச பிரச்சனைகள் ஏற்படலாம் சமயங்களில் இது அதி தீவிரமாக இருக்கலாம்.

இரத்தச் சர்க்கரை குறைவு. லோ-ஹைபோகிளைசீமியா என்னும் நிலை உண்டாகலாம். இது குழந்தை பிறந்த உடன் அவர்களுக்கு இரத்த சர்க்கரை குறைவு இருக்கலாம். இது குழந்தைக்கு வலிப்புத்தாக்கங்களை உண்டு செய்யலாம். இந்நிலையில் குழந்தைக்கு நரம்பு வழியாக குளுக்கோஸ் கரைசல் ஏற்றப்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படும்.

குழந்தை எதிர்காலத்தில் டைப் 2 நீரிழிவு நோய் உருவாக்கும் அபாயத்தில் இருப்பார்கள்.

குழந்தை இறப்பு என்பது கடும் சிக்கல்களுக்கு பிறகு ஏற்படும் நிலை. இந்நிலையில் குழந்தைக்கு மரணத்தை உண்டு செய்யலாம். குழந்தை பிறப்பதற்கு முன்பு வயிற்றில் இறக்கலாம். அல்லது பிறந்து சில மணி நேரம் கழித்து இறக்கலாம். இது மோசமான சிக்கல்களுக்கு பிறகு வரக்கூடியது.

கர்ப்பகால நீரிழிவு நோய் (Gestational Diabetes in tamil)கண்டறிந்தால் என்ன செய்வார்கள்?

கர்ப்பகால நீரிழிவு நோய் கண்டறியப்பட்டால் முதலில் கர்ப்பகால நீரிழிவு சிகிச்சை நிபுணரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

அப்போது மருத்துவருடன் வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு மாற்றங்கள், உடற்பயிற்சி முறை, மருந்துகள் மூலம் சிகிச்சையளிப்பார்கள். உணவில் சேர்க்க வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை குறித்து ஒரு பட்டியல் வழங்குவார்கள். உணவுக்கு முன்பும் உணவுக்கு பின்பும் உடலில் இருக்க வேண்டிய இரத்த சர்க்கரை அளவு குறித்து விளக்குவார்கள்.

கர்ப்பகால நீரிழிவு இருந்தால் அவ்வபோது தகுந்த இடைவெளியில் கரு வளர்ச்சியை (அல்ட்ராசவுண்ட் மூலம்) சரிபார்ப்பார்கள். எடை அதிகரிப்பை கண்காணிக்கவும், சர்க்கரை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனையும் வழங்கப்படும்.

கர்ப்பிணிக்கு கர்ப்பகால நீரிழிவு உறுதி செய்யப்பட்டால் அடிக்கடி பரிசோதனைகள் தேவைப்படலாம். இரத்த சர்க்கரை அளவை தவறாமல் பரிசோதிக்கலாம். வீட்டிலேயே இரத்த சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டியிருக்கலாம்.

சிலருக்கு கர்ப்பகால நீரிழிவு நோயை கட்டுப்படுத்த இன்சுலின் மருந்துகள் தேவைப்படும். எனினும் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் நிலையில் இன்சுலின் ஊசி பரிந்துரைக்கப்படும். இவர்கள் சரியான நேரத்தில் சரியான அளவு இன்சுலின் எடுத்துகொள்ள வேண்டும். அவ்வபோது இரத்த சர்க்கரை அளவை சரிபார்த்து டாக்டரிடம் ஆலோசித்து இன்சுலின் அளவை கூட்டவோ குறைக்கவோ செய்ய வேண்டும்.

கர்ப்பகால நீரிழிவு (Gestational Diabetes in Tamil)இருந்தால் எப்போது பிரசவம்?

Timing of Delivery in Gestational Diabetes

மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர்களின் அமெரிக்க கல்லூரி American College of Obstetricians and Gynecologists (ACOG) கூற்றுப்படி கர்ப்பகால நீரிழிவு நன்றாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தால் முழு கர்ப்பகாலமும் ஆரோக்கியமாக இருக்கும். இவர்கள் 37 வார கர்ப்பங்களை பெறுவார்கள்.

கர்ப்பகால நீரிழிவு நோயாளிகளுக்கான பிரசவ நேரம் குறித்து துல்லியமான ஆய்வுகள் எதுவும் இல்லை. எனினும் சிக்கல்கள் இல்லாத பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு பிரசவம் குறிப்பிட்ட காலத்துக்குள் நடக்க வேண்டும்.

ஆனால் பெரும்பாலும் கர்ப்பகால நீரிழிவு நோயை கொண்டிருக்கும் பெண்கள் பிரசவத்தேதியை கொண்டிருந்தாலும் அவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. ஏனெனில் கர்ப்பகால சர்க்கரை நோய் உள்ளவர்களில் கருவுக்கு அதிக சர்க்கரையை உடல் கடத்துவதால் கரு வழக்கத்தை விட பெரியதாக வளரும். அப்போது அறுவை சிகிச்சை செய்து குழந்தையை காப்பாற்ற வேண்டியிருக்கும்.

கர்ப்பகால நீரிழிவு (Gestational Diabetes in Tamil)நோயை தடுக்க முடியுமா?

கர்ப்பகால நீரிழிவு நோய் (Gestational Diabetes in tamil)என்பது தற்காலிகமானது. இதை தடுக்க முடியாது. கருவுறுதலை எதிர்கொள்வதற்கு முன்பு நீங்கள் சில ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றலாம்.

இதனால் இவை தவிர்க்க முடியாமல் வந்தாலும் ஆபத்தை குறைக்கலாம். எதிர்காலத்தில் டைப் 2 டயாபட்டீஸ் வரும் அபாயத்தை குறைக்கலாம்.

கர்ப்பகாலத்துக்கு முன்பும் பின்னரும் சீரான உணவை எடுத்துகொள்ள வேண்டும். அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கொழுப்பு மற்றும் கலோரி கொண்ட உணவுகளை தேர்ந்தெடுங்கள்.

பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் மீது கவனம் செலுத்துங்கள். ஊட்டச்சத்துள்ள உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உணவு அளவு அதிகரிக்க வேண்டாம்.

உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள். கர்ப்பத்துக்கு முன்பும் பின்பும் உடற்பயிற்சி செய்யுங்கள். வாரத்தில் குறைந்தது 3 நாட்களேனும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். ஆரோக்கியமான எடையுடன் கருவுறுதல் பாதுகாப்பானது.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

உடல் பருமன் இருப்பவர்கள் கருத்தரிக்க விரும்பினால் முன்கூட்டியே உடல் எடையை குறைப்பது ஆரோக்கியமானது. கர்ப்பகாலத்தில் எடை அதிகரிப்பது இயல்பானது. ஆனால் விரைவாக எடை அதிகரிப்பது கர்ப்பகால நீரிழிவு அபாயத்தை அதிகரிக்க செய்யலாம். இவையே கர்ப்பகால நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க சிறந்த வழியாக இருக்கும்.

5/5 - (43 votes)

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Follow:
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »