பொதுவாக சந்திக்கும் உடல்நல பிரச்சனைகளில் சிலவற்றை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ளமுடியாது என்று சொல்லலாம்.
அந்தரங்க விஷயம் அல்ல என்றாலும் வீட்டில் இருப்பவர்களிடம் கூட இது பற்றி பேசதயங்குகிறோம் என்றால் அது வாயு பிரச்சனை தான் (Gas During Pregnancy in Tamil) . இது எல்லோருக்கும் அவ்வபோது வரக்கூடியது தான்.
ஆனால் வாயுத்தொல்லையை பொதுவெளியில் பகிர்ந்து கொள்வது என்பது அது தரும் வலியை விட பலருக்கும் அசௌகரியமான விஷயமாக இருக்கிறது.
அதுவும், கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாயுத்தொல்லை (Gas During Pregnancy in Tamil) அதிகமான வலியை தரக் கூடியது. பலரும் இதை வெளியே சொல்ல தயங்குவதன் காரணம் பொது வெளிகளில் வாயு வெளியேறுவது உள்ளிட்டவை அசிங்கமான, கேலிக்கு உள்ளாக கூடிய விஷயமாக பார்க்கப்படுவதுதான்.
கர்ப்பிணிகள் மட்டும் அல்ல எல்லோருமே இந்த வாயுத்தொல்லையை எதிர்கொள்ளும் போது ஆண்களாக இருக்கட்டும், பெண்களாக இருக்கட்டும் அனைவருமே எடுத்த உடன் மருத்துவரை சந்திக்காமல் உடனடி தீர்வாக என்ன இருக்கு என்பதை தான் யோசிப்பார்கள்.
எப்படி வீட்டு வைத்தியம் மூலமாக வாயுத்தொல்லையை சரி செய்யலாம்? எப்போது மருத்துவரை அணுகுவது என்பதை இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.
குறிப்பாக கர்ப்காலத்தில் வாயுப்பிரச்சனை (Gas During Pregnancy in Tamil) ஏன், எப்படி தீர்வு காண்பது, எப்படி தவிர்ப்பது, வீட்டு குறிப்புகள் என்ன என்பதை பார்க்கலாம்.
கர்ப்ப கால வாயுத்தொல்லை (Gas During Pregnancy in Tamil) இருப்பது நல்லதா? கெட்டதா?
பலரும் வாயு வெளியேறுவதை அசிங்கமாக நினைக்கும் அளவிற்கு அது கெட்ட விஷயமா என்று கேட்டால் இல்லை. இது உடலின் ஒரு சாதாரணமான இயக்கம்தான்.
கர்ப் காலத்தில் சாப்பிடும் உணவு உணவுக்குழாய் வழியாக வயிற்றுக்கு சென்று அங்கிருந்து குடல்கள் வழியாக ஊட்டச்சத்துக்கள் எல்லாம் பிரித்தெடுக்கப்பட்டு அதன் சக்கை மட்டும் மலமாக மலக்குழாய் வழியாக வெளியேறிவிடும்.
இந்த செயல்பாட்டின் போது குடல்பகுதிகளில் உருவாவதுதான் வாயுவும். அதுவும் மலத்தை போலவே வெளியேறியாக வேண்டும். இது முழுக்க முழுக்க இயல்பான ஆரோக்கியமான விஷயம்தான்.
உடல் செரிமான மண்டலத்தில் இந்த இயக்கம் எல்லாமே நடக்கும். அதனால் வாயு உருவாவதும் வெளியேறுவதும் நார்மலானது தான்.
உடலில் வாயு உருவாவது எப்போது கெட்டதாகிறது?
சாதாரணமாக வாயு எந்த தொல்லையும் உண்டாக்காமல் முழுமையாக வெளியேறி விட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. இது சாதாரணமானது.
ஆனால் அதுவே வாயு வெளியேறும் போது அசௌகரியமான உணர்வை தருதல், வயிற்று வலியை உண்டாக்குதல், வயிறு வீங்கியது போல காட்சியளித்தால் அது கவலைப்பட வேண்டிய விஷயம். அது அசாதாரணமானது.
குறிப்பாக கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு சாதாரணமாகவே வயிறு விரிவடைந்து காணப்படும். அப்போது வாயுத்தொல்லையும் இருந்தால் வலியை மேலும் அதிகப்படுத்தும்.
அப்போதுதான் நீங்கள் பின்வரும் வீட்டு வைத்தியம் மூலமாக இதை சரி செய்யலாம். அல்லது தீவிரமாக தொடர்ந்து வாயுத்தொல்லை அனுபவித்தால் உங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெயரில் மருந்துகளை எடுத்து கொள்வது பலன் அளிக்கும்.
உணவுகள் மூலமாக வாயுத்தொல்லை வருமா?
எடுத்துகொள்ளும் உணவு வழியாக வாயுத் தொல்லை உண்டாகும் என்றாலும் அதில் அளவும் உண்டு. நீங்கள் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டாலும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான்.

நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள் எடுக்கும் போது அளவுக்கு அதிகமாகும் போது வாயுத்தொல்லை வரலாம்.
ஏனெனில் எந்த உணவாக இருந்தாலும் வயிற்றுக்கு போகும் போது உங்கள் குடல்பகுதியின் அருகில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் நீங்கள் உண்ணும் உணவை சிறிது சிறிதாக உடைக்கும். அதை செரிமானத்திற்கு கொண்டு செல்கிறது.
இந்த வேலையை பாக்டீரியாக்களுக்கு அதிகம் கொடுக்கும் போது ஒரே நேரத்தில் அதிக காய்கறிகள் அதிக ஜங்க்ஃபுட் என்று எடுக்கும் போது இதற்கு வேலை அதிகரிக்கிறது.
எனவே, ஒரே சமயத்தில் நீங்கள் அதிகமான உணவுகள், தின்பண்டங்கள் உள்ளிட்டவற்றை உண்ணும்போது அந்த பாக்டீரியாக்களுக்கு அதிகமான வேலை கொடுக்கப்படுகிறது.
குறிப்பாக நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளான சர்க்கரைவள்ளி கிழங்கு, உருளைக்கிழங்கு, பீன்ஸ், ப்ரோக்கோலி, காளிஃபிளவர் ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ளும்போது அந்த உணவை உடைக்கும் செயல்முறையின் போது கர்ப்ப காலத்தில் வாயு (Gas During Pregnancy in Tamil) அதிகமாக வெளியாகும் வாய்ப்பு உள்ளது.
அதனால் தான் இந்த வகை உணவு பொருள்களையும் எந்த உணவாக இருந்தாலும் சத்தானது என்றாலும் அளவாக சாப்பிடுவது மிக அவசியம்.
கர்ப்ப காலத்தில் வாயுத்தொல்லை (Gas During Pregnancy in Tamil) அதிகரிக்க என்ன காரணம்?
மற்றவர்களை காட்டிலும் கர்ப்ப காலத்தில் அதிகமாக வாயுத்தொல்லை (Gas During Pregnancy in Tamil) ஏற்படுகிறது. இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது.

முதலாவது காரணம்
கர்ப்பகாலத்தில் அதிகமாக காணப்படும் ஹார்மோன் தான் குறிப்பாக புரோஜெஸ்டிரோன். கர்ப்ப காலத்தில் தலை முதல் கால் வரை என முழு உடலிலும் தனது ஆதிக்கத்தை செலுத்துவது இந்த ஹார்மோன் தான்.
குறிப்பாக செரிமான மண்டலத்தில் இதன் வேலை குறிப்பிடத்தக்கது. இவை தான் குடல் பகுதி, வயிற்றுப்பகுதிகளை தளர்வாக்கி விடும்.
இதனால், இயல்பாக நடக்க வேண்டிய செரிமான செயல்முறை அழுத்தம் கொடுத்து சீராக நடப்பது கடினமாகி விடும். இதனால் அவர்கள் சாப்பிடும் உணவு செரிமானம் ஆகும் நேரமும் மெதுவாகி விடுகிறது.
இதை தான் Gastric Motility என்று சொல்கிறோம். பொறுமையாக செரிமானம் ஆகும் போது, அதிகமான வாயுவும் உருவாகி விடும். இதனால் வயிறு விரிவடைந்து வலியும் ஏற்படும்.
இரண்டாவது கர்ப்பிணிக்கு செயல்பாடு குறைவு
இரண்டாவதாக கரு உண்டாகி விட்டாலே பலரும் இருக்கின்ற இடத்தை விட்டு கூட நகரக்கூடாது என்று நினைக்கின்றனர். அது தவறு. நீங்கள் பாதுகாப்பாக கவனத்தோடு இருக்க வேண்டியது அவசியம்தான்.
ஆனால், அதற்காக எந்த செயல்பாட்டிலும் ஈடுபடாமல் இருப்பதனால் உங்கள் செரிமான பகுதிகளின் செயல்பாடும் குறைந்து வாயு அதிகாமாகி விடுகிறது.
சில கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் நடக்க கூட பயந்து ஒரே இடத்தில் முடங்கிவிடுவதால் வாயு பெருக்கம் அதிகமாகிவிடுகிறது,
மூன்றாவது அதிகமாக உண்ணுதல்
என்ன நீ வயித்துல ஒரு குழந்தையை வெச்சிகிட்டு கொஞ்சமா சாப்பிடுற? ரெண்டு பேருக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று சொல்லி பலரும் கர்ப்பிணி பெண்களை அதிகமாக சாப்பிட சொல்லி ஆலோசனை தருகிறார்கள்.
இது முற்றிலும் தவறு. மூன்று நான்கு மாதம் ஆன கரு 5 சென்டிமீட்டர் தான் வளர்ந்திருக்கும். அதுக்காக கர்ப்பிணிகள் இரண்டு பேருக்கான சாப்பாடு சாப்பிட வேண்டிய அவசியமில்லை.
கர்ப்பிணிக்கு தினசரி கலோரி அளவில் 400 முதல் 500 கலோரியே அதிகரித்தால் போதுமானது. இரண்டு பேருக்கான சாப்பாடு என்பது 1000 முதல் 1500 கலோரி(உணவை பொறுத்து) வரை இருக்கும்.
ஏற்கனவே, தாயின் உடலில் சேமிக்கப்பட்டிருக்கும் இரும்பு, வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவற்றை தான் குழந்தைகள் உணவாக எடுத்து கொள்ளும். அதனால், அதிக உணவு தேவையில்லை.
குழந்தைக்கு தேவை என்று கர்ப்பிணிகள் அதிகமாக உணவு சாப்பிடுவதும் வாயுத்தொல்லையை தூண்டி விடும்.
இப்படி இந்த மூன்று காரணங்கள்தான் சாதாரண நாட்களை விட கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு அதிகமாக வாயுத்தொல்லையை உருவாக்குகின்றன. இந்த நிலையில் கர்ப்பிணிகள் ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுக வேண்டியதில்லை.
முதலில் இதற்கு வீட்டில் என்ன மாதிரியான வைத்தியம் செய்யலாம். எப்போது மருத்துவரை அணுகுவது என்பதை தெரிந்துகொள்வோம்.
வாயுத்தொல்லைக்கு வீட்டு வைத்தியம்!
வாயுத்தொல்லையை வீட்டிலிருந்தபடியே போக்க நீங்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள், செய்ய வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. எளிமையான இந்த குறிப்புகள் உங்கள் அசெளகரியங்களை போக்க செய்யும்.
இதை கடைப்பிடித்தாலே உங்களுக்கு வாயுத்தொல்லை இல்லாமல் செய்துவிட முடியும். முன்னதாக வாயுத்தொல்லை வராமல் தவிர்க்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
நீங்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்ன?
ஒரு வேளை நீங்கள் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டிருந்தால் சுவிங்கம் மெல்லுதல் போன்ற செயல்பாடுகளின் போது நம்மையே அறியாமல் நாம் அதிகப்படியான காற்றை உள்ளே இழுத்து கொள்கிறோம்.
எனவே அதை மொத்தமாக அதை தவிர்க்க வேண்டும்.
சோடா குளிர்பானங்கள், ஜங்க் ஃபுட் உணவுகள் வறுத்த, பொறித்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அது மட்டுமின்றி நீங்கள் ஜூஸ் குடிக்க பயன்படுத்தும் ஸ்ட்ரா மூலமாக ஜூஸ் மட்டுமின்றி வாயுவும் உங்கள் உடலுக்குள் சென்று விடும்.
எனவே இது போன்ற, சிறு சிறு விஷயங்களை நீங்கள் எளிதில் தவிர்க்க முடியும்.

குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் சோடா பானங்களை குடிக்கும்போது அது வாயுத்தொல்லையை மேலும் அதிகமாக்கலாம்.
வாந்தி, குமட்டல் உணர்வு இருக்கும் போது பலருக்கும் இது நன்றாக இருப்பது போன்று உணர தோன்றும் ஆனால் இது வாயுத்தொல்லையை அதிகரிக்க செய்யும்.
உங்களுக்கு குமட்டல் உணர்வு இருந்தால் நீங்கள் தண்ணீரை வெதுவெதுப்பாக்கி எடுத்துகொள்வது பாதுகாப்பானது. எனவே, அதை மகப்பேறு காலத்தில் தவிர்த்தல் நல்லது.
அதே போல், தண்ணீர் அருந்தும் போது கூட கொஞ்சம் மிதமான சுடுநீரை அருந்துவது நல்லது.
இது உங்களின் செரிமானத்திற்கு உதவும். குமட்டலை கட்டுப்படுத்தும். அல்லது சீரக தண்ணீரோ எதுவாக இருந்தாலும் இளஞ்சூடாக குடிப்பது நல்லது.
உணவை பிரித்து கொள்ள வேண்டும்!
வாயுத்தொல்லையை தவிர்க்க உங்கள் உணவு இடைவெளியை மூன்றாக பிரித்து கொள்ளுங்கள். 3 மேஜர் மீல்ஸ் 3 மைனர் மீல்ஸ் என பிரித்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு 2-3 மணிநேர இடைவெளிக்கு ஒரு முறை சிறிய சிறிய அளவில் சாப்பிடுவது போல் திட்டமிட்டு கொள்ளுங்கள்.
குறிப்பாக நீங்கள் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தாலோ, நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்து விட்டு திடீரென்று அதிகமாக உணவு எடுத்துக்கொண்டாலோ இது உங்கள் வாயுத்தொல்லையை மேலும் அதிகப்படுத்தும். அதனால் நேரத்தை திட்டமிடுங்கள்.
காலையில் எழுந்தவுடன் காபி போன்றவற்றை அருந்த வேண்டாம். அதற்கு பதிலாக நட்ஸ் சாப்பிடலாம். உதாரணமாக இரவே நீரில் 3-4 பாதாமை ஊற வைத்து விட்டு காலையில் முதல் உணவாக எடுத்து கொள்ளுங்கள்.
அதுவும் அதிகமாக எடுத்து கொள்ளக்கூடாது. எந்தளவு நீங்கள் உங்கள் குடல்பகுதியில் உள்ள பாக்டீரியாவுக்கு குறைவான வேலையை கொடுக்கிறீர்களோ அந்தளவு வாயுத்தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.
எனவே., எளிதில் செரிமானம் ஆக கூடிய குறைவான உணவை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.
அதே சமயம் முதலில் எடுத்து கொண்ட உணவு செரித்த பிறகு அடுத்த உணவை உட்கொள்ளுங்கள். இதனால் வாயுத்தொல்லை அதிகரிக்காமல் பார்த்து கொள்ள முடியும்.
வாயுத்தொல்லையை போக்கும் உடல் அசைவுகள்!
வாயுத்தொல்லையால் உங்களுக்கு வயிறு வலி ஏற்படுகிறது என்றால் கீழே சமதளத்தில் படுத்து கொள்ளுங்கள். பின்னர் உங்கள் ஒரு காலை லேசாக மடக்கி மற்றொரு காலை நேராக மேல் நோக்கி நீட்டுங்கள்.
ஒரு 10 நொடிகள் காலை மாற்றி மாற்றி இதேபோல் செய்யும்போது உங்கள் அடிவயிற்று தசைகள் சிறிது விரிவடைந்து இலகுவாகும். இது சைக்கிளிங் செய்வதை போல்தான்.
இப்படி செய்வதால் வலி குறையும். அல்லது பக்கவாட்டில் படுத்தும் தூங்கலாம்.
இதற்கு பிறகும் உங்களுக்கு வலி இருக்கிறது என்றால் மருத்துவரை அணுகுங்கள். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் மகப்பேறு மருத்துவரை கண்டிப்பாக அணுக வேண்டும்.
இப்போது உணவு முறையில் வீட்டு வைத்தியம் மூலம் எப்படி சரி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
உணவே மருந்து!
மேல் சொன்னவற்றை தவிர நமது வீட்டில் உள்ள சில உணவுகள் மூலமாகவே வாயுத்தொல்லையை குறைத்து விடலாம்.
பாரம்பரியமாகவே நமது உணவு முறையில் விருந்து காலங்களிலும் விசேஷ காலங்களிலும் பலமான உணவுக்கு பிறகு செரிமானத்தை தூண்ட சில ஸ்பெஷல் டிஷ் செய்வதுண்டு.
அதில் ஒன்று இலேகியம். உதாரணத்துக்கு தீபாவளி நேரத்தில் செய்யகூடிய இலேகியம் இனிப்புகள் அதிகம் சாப்பிட்ட பிறகு செரிமானத்தை தூண்ட அவசியம் உணவில் சேர்க்கப்படும்.
இப்படி கைகண்ட மருந்துகள் நம் பாரம்பரியமான உணவு பொருள்களிலேயே உண்டு.
அதில் முதல் இடத்தில் இருப்பது சீரக தண்ணீர் தான். அது இல்லாமல் பட்டை, இலவங்கம் போன்றவற்றை பொடி செய்து வைத்து கொண்டு தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.
இஞ்சியும் கூட நல்ல செரிமானம் தரக்கூடிய ஒரு பொருள்தான். ஏலக்காய் கூட பொடி செய்து வைத்து தண்ணீரில் கலந்து சாப்பிடலாம். எல்லாவற்றையும் பொடித்து வைத்தும் குடிக்கலாம்.
தினசரி குடிநீர் சீரகத்தண்ணீராக இருக்கலாம்.
மேற்கண்ட குறிப்புகளை செய்த பிறகும் வயிறு உப்புசம் குறையாமல் வலி இருந்தால் கவனிக்க வேண்டும். இந்நிலையில் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
எப்போது மாத்திரை மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம்!
வாயுத்தொல்லைக்கு மருந்து மாத்திரைகள் என நிறைய உண்டு. சாப்பிடுவதற்கு முன்பு, பின்பு என போட்டு கொள்ளலாம். ஆனால், நீங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே மாத்திரை சாப்பிடும் அளவிற்கு போகாமல் தவிர்த்து விட முடியும்.
அதே சமயம் கர்ப்பிணி பெண்கள் இறுக்கமான உள்ளாடைகள், ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். இது கூட மோசமான தசை இறுக்கத்தை உண்டு செய்யும்.
சாதாரண வயிறு வலியை தாண்டி, இடைவிடாது வயிறு வலி, ரத்தக்கசிவு, வாந்தி, வயிறு இறுக்கம், குழந்தை அசைவு தெரியவில்லை, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தெரிந்தால் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் மருத்துவரை சந்தித்து விடுங்கள். அது அம்மாவுக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பானது.