கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் வழக்கமான உணவுத் திட்டத்தில் பழங்கள் ஒரு முக்கிய பகுதியாகும். இதில் கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் (Fruits to Eat During Pregnancy in Tamil), என்ன பழங்கள் சாப்பிடக்கூடாது என்பதை நாம் அறிந்திருத்தல் அவசியம்.
இதில் எதை சாப்பிட வேண்டும் என்று நீங்கள் குழப்பமடைய வாய்ப்புகளும் உண்டு. அதற்கான விளக்கமே இது. கீழ்வரும் பழங்களை நீங்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
எதிலிலும் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவு எடுத்து கொண்டால் எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் வாழலாம்.
கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய பழங்கள் (Fruits to Eat During Pregnancy in Tamil)
மாம்பழம்
கர்ப்ப காலத்தில் மாம்பழம் சாப்பிடலாமா என்பது பலரில் கேள்வியாக இருக்கிறது. கண்டிப்பாக சாப்பிடலாம். மாம்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி நிறைந்திருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் கர்ப்ப காலத்தில் அதிகம் தேவைப்படும் ஃபோலிக் அமிலம், பொட்டாசியம் , இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் இதை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.
பலரும் மாம்பழம் உடலுக்கு சூடு என்று கூறுகின்றனர். ஆனால் அது கர்ப்பிணிகளுக்கு ஆபத்தானது என்று எந்த சாத்தியக் கூறும் இல்லை. மாம்பழத்தில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று அவைகள் இயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்டவைகளா என்பது மட்டும் தான்.
அப்படி இல்லாமல் கால்சியம் கார்பனேட் போட்டு பழுக்க வைக்கப்படும் பழங்கள் தான் கர்ப்பிணிகளுக்கு உண்மையில் ஆபத்தை உண்டாக்கும்.
நன்மைகள்:
- இரத்த சோகையை தடுக்கும்.
- ஃபோலிக் அமிலம் இருப்பதால் கருசிதைவை தடுக்கும்.
- நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை சமாளிக்கஉதவும்.
- வைட்டமின்கள் நிறைந்திருப்பதால் எதிர்ப்பு சத்தி பலப்படும்.
- மக்னீசியம் நிறைந்திருப்பதால் உயர் இரத்த அழுத்ததை கட்டுப்படுத்தும்.
- வைட்டமின் பி6 இருப்பதால் மார்னிங்க் சிக்னஸை தாங்கும் சக்தி கொடுக்கும்.
அவகேடோ
கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுவது (Fruits to Eat During Pregnancy) மிகவும் நல்லது மற்றும் அவசியமும் கூட. அதில் சிறந்த பழம் இந்த அவகேடோ.
சாதாரணமாகவே அவகேடோவில் 20க்கும் மேற்பட்ட வைட்டமின்களும், மினரல்களும் உண்டு. அதில் கர்ப்பிணிகளுக்கு தேவைப்படும் பொட்டாசியம், ஃபோலட், வைட்டமின் சி, வைட்டமின் பி6 நிறைந்திருக்கிறது.
இவைகள் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்துகள் ஆகும். மேலும் இதில் ஆரோக்கியமான கொழுப்பு இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் டையட்க்கான பழமாகவும் இதை சேர்த்துகொள்ளலாம்.
தினமும் ஒரு அவகேடோ எடுத்துகொள்ளலாம். இது குழந்தையில் மூளை வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது மற்றும் தாய்பால் சுரப்பதையும் அதிகப்படுத்துகிறது.
அத்திப்பழம்
அத்திப்பழத்தின் சுவை ஒருவகை தேன் சுவையினை ஒத்து இருக்கும். இதனை பழமாகவோ அல்லது உலர் பழமாகவோ எடுத்துக்கொள்ளலம்.
அத்திப்பழம் அதிக நார்ச்சத்து கொண்ட ஓர் பழம். கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய சத்துகளில் ஒன்று இந்த நார்ச்சத்து.
இதில் கால்சியம், இரும்புச்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு, சர்க்கரை மற்றும் தாதுக்களை உள்ளடக்கியது. மேலும் இதில் பொட்டாசியம், மெக்னீசியம், செம்பு போன்ற தாதுக்களும் உள்ளது. இது மட்டுமல்லாமல் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் கே, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்ற நிறைய வைட்டமின்களும் உள்ளது.
இத்தனை ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளதால் இதனை அதிகம் சாப்பிடலாமா என்று கேட்டால் இல்லை மருத்துவர் பரிந்துரைக்கப்பட்ட அளவைத் தாண்டி சாப்பிடக்கூடாது.
அத்திப்பழம் சாப்பிடுவதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும். இது நார்ச்சத்து கொண்டுள்ளதால் மலச்சிக்கலை சீர்படுத்துகிறது. உடலில் உள்ள அமில அளவை சமப்படுத்துகிறது. அத்திப்பழம் உங்களுக்கு அலர்சியை ஏற்படுத்தினாலோ அல்லது பழம் புளிப்பு சுவையுடன் இருந்தாலோ அதனை உடனே நிறுத்திவிடுவது நல்லது.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி, பொட்டாசியம், வைட்டமின் பி-6, நார்ச்சத்து போன்ற சத்துகள் உள்ளது.
வாழைப்பழத்தில் உள்ள அதிக நார்ச்சத்து கர்ப்பம் தொடர்பான மலச்சிக்கலுக்கு உதவும், வைட்டமின் பி-6 கர்ப்பத்தின் ஆரம்பத்தில் குமட்டல் மற்றும் வாந்தியை போக்க உதவும் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன. வாழைப்பழம் சாப்பிட்டால் குடல் கருப்பை அழுத்தம் குறையும். தேவையற்ற கவலை, பயம் நீங்கும்.
மகப்பேறுக்கு தேவையான வைட்டமின்களில் இரும்பு ,நார்ச்சத்து நிறைந்த வாழைப்பழங்களைச் சேர்ப்பது உடலுக்கு வலுவாக இருக்கும். வாழைப்பழம் சாப்பிடுவதால் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். மேலும் அஜீரணக் கோளாறு இருந்தால் அந்த நேரம் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
திராட்சை
ஏராளமான திராட்சைகளை சாப்பிடுவதால் அதிகம் உணவு உட்கொள்ளும் அளவை அதிகரிக்கலாம்:
- வைட்டமின்கள் சி மற்றும் கே
- ஃபோலேட்
- ஆக்ஸிஜனேற்றிகள்
- நார்ச்சத்து
- கரிம அமிலங்கள்
- பெக்டின் போன்ற சத்துகள் உள்ளது.
திராட்சையில் உள்ள சத்துக்கள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயிரியல் மாற்றங்களுக்கு உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும் உதவுகின்றன.
பெர்ரி
ராஸ்பெர்ரிகள், ஸ்ட்ராபெர்ரிகள், ப்ளாக்பெர்ரிகள் போன்றவைகளில் அனைத்து வகையான நன்மைகளிலும் நிறைந்துள்ளன.
- கார்போஹைட்ரேட்டுகள்
- வைட்டமின் சி
- நார்ச்சத்து
- ஃபோலேட் சத்துகள் உள்ளன.
கார்போஹைட்ரேட்டுகள் உங்களுக்கு மிகவும் தேவையான ஆற்றலைத் தரும், மேலும் அவை உங்கள் குழந்தைக்கு ஊட்டமளிக்க உங்கள் நஞ்சுக்கொடியின் வழியாக எளிதாகச் செல்கின்றன.
கேக்குகள் மற்றும் குக்கீகள் போன்ற பதப்படுத்தப்பட்ட எளிய கார்போஹைட்ரேட்டுகளுக்குப் பதிலாக பெர்ரி போன்ற ஊட்டச்சத்து அடர்த்தியான கார்போஹைட்ரேட்டுகளை சாப்பிடுவது முக்கியம்.
வைட்டமின் நிரம்பிய உணவோ அல்லது சிற்றுண்டிக்கு வாழைப்பழங்கள் மற்றும் பெர்ரி இரண்டையும் சேர்த்து ஒரு மில்க் ஷேக் காக கூட செய்து குடிக்கலாம்.
ஆரஞ்சு
ஆரஞ்சு ஒரு நபரை நீரேற்றமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க சிறந்தது. இதில் உள்ள வைட்டமின் சி செல் சேதத்தைத் தடுக்க உதவுகிறது. இதில் ஃபோலேட், வைட்டமின் சி மற்றும் தண்ணீர் சத்து அதிகம் உள்ளது ஃபோலேட் நரம்புக் குழாய் குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது.
இது ஃபோலிக் அமிலத்தின் சிறந்த மூலமாகும். ஃபோலேட் ஒரு பி வைட்டமின் ஆகும், இது மூளை மற்றும் முதுகுத் தண்டு குறைபாடுகளைத் தடுப்பதில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது.
ஆப்பிள்
ஆப்பிள்களில் அதிக நார்ச்சத்து உள்ளது மற்றும் வைட்டமின் சி இன் நம்பகமான ஆதாரம். மேலும்,
- வைட்டமின் ஏ
- பொட்டாசியம்
- பெக்டின் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன.
பேரிக்காய்
பேரிக்காயில் பின்வரும் ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது:
- நார்ச்சத்து
- பொட்டாசியம்
- ஃபோலேட்
கர்ப்பகால உணவில் நார்ச்சத்து அதிகம் இருந்தால் மலச்சிக்கலை எளிதாக்க உதவும், பொட்டாசியம் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
பீச் பழம்
கர்ப்ப காலத்தில் உண்மையிலேயே மதிப்புமிக்க ஒரு பழம் பீச் ஆகும். இந்த பழத்தில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது.
- செரிமானத்திற்கு உதவுகிறது
- மனநிலையை உயர்த்துகிறது
- இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
- சருமத்தைப் பாதுகாக்கிறது
- நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது
- ஒவ்வாமை அறிகுறிகளைக் குறைக்கிறது
மாதுளை:
கர்ப்பிணிப் பெண்களுக்கு மாதுளை அவசியமான பழங்களில் ஒன்று.
- வைட்டமின் கே
- கால்சியம்
- ஃபோலேட்
- இரும்புச்சத்து
- புரதச்சத்து
- நார்ச்சத்து போன்றவை உள்ளடக்கியுள்ளது.
ஊட்டச்சத்து நிறைந்த மாதுளை ஒரு நல்ல ஆற்றல் மூலமாகும், மேலும் அவற்றின் உயர் இரும்புசத்து குழந்தைக்கு இரும்புச்சத்து குறைபாட்டை தடுக்க உதவுகிறது.
ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க வைட்டமின் கே மிகவும் அவசியமாகிறது. அது மாதுளையில் உள்ளது. மாதுளம் பழச்சாறு குடிப்பதால் நஞ்சுக்கொடியில் ஏற்படும் காயத்தின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
உணவில் கொடுக்கும் பங்களிப்பை பழங்களிலும் கொடுக்க வேண்டிய அவசியம் அனைவருக்கும் உண்டு. அதிலிலும் கர்ப்பிணிப் பெண்கள் அவசியம் பழங்கள் (Fruits to Eat During Pregnancy in tamil) சாப்பிட வேண்டும்.