கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிடும் உணவுகள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்து தான்.
சில வகையான உணவுகள் கர்ப்பிணிக்கு பிடிக்கும் என்றாலும் அது வயிற்றில் வளரும் கருவின் வளர்ச்சியை பாதிக்க செய்யலாம். குழந்தைக்கு தீங்கு விளைவிக்கலாம்.
அதனால் கர்ப்பிணி பெண் என்னவெல்லாம் சாப்பிடக்கூடாது (foods to avoid during pregnancy in tamil) என்பதையும் தெரிந்துவைத்துகொள்ள வேண்டும். அப்படி என்னென்ன என்பதை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கலாம் வாங்க.
கர்ப்பகாலத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள் – Foods to avoid during pregnancy in tamil
ஃப்ரிட்ஜ்ஜில் வைத்த உணவுகள்
கர்ப்பிணி பெண் ஃப்ரிட்ஜ்ஜில் சமைத்து வைத்த உணவை சாப்பிடுவதாக இருந்தால் அதை வெளியில் வைத்து இரண்டு மணி நேரம் கழித்து அவை வழக்கமான வெப்பநிலைக்கு வந்ததும் சூடு படுத்தி சாப்பிடலாம்.
இதிலும் எல்லா உணவுகளும் அல்ல. சில வகையான உணவு பொருள்கள் ரெசிபிகளை தவிர்ப்பது தான் நல்லது.
காஃபின்
கர்ப்பிணி பெண் காஃபி குடிக்கும் பழக்கம் கொண்டிருந்தால் அதை விட்டு விட வேண்டியதில்லை. ஆனால் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதிகமாக காஃபி குடிக்க கூடாது.

இறைச்சி
கர்ப்பிணிக்கு இறைச்சி நல்லது தான் என்றாலும் அதை பாதுகாப்பான முறையில் எடுத்துகொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
சிக்கன், மட்டன் இறைச்சிகளை நன்றாக சுத்தம் செய்து சாப்பிட வேண்டும். ஃப்ரிட்ஜ்ஜில் குளிரவைத்த இறைச்சிகளை எடுக்க கூடாது.

மீன்
கர்ப்பிணிக்கு மீன் நல்லது என்றாலும் மீனில் உள்ள மெர்குரி உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இது நரம்புகளை பாதிக்கும் , உடலில் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும்.
சிறுநீரகத்திலும் பாதிப்பு ஏற்படுத்தலாம். இது குழந்தைக்கும் சிறிய அள்வில் பாதிப்பு உண்டு செய்யும்.
ஷார்க், டுனா, King mackerel, shark, swordfish, and tilefish போன்றவற்றை கண்டிப்பாக சாப்பிட கூடாது.

முட்டை
கர்ப்பிணிக்கு முட்டை சாப்பிடுவதன் மூலம் புரதம் கிடைக்கும். ஆனால் முட்டையை வேகவைத்து, பொரித்து சாப்பிட வேண்டும். முட்டை பச்சையாக எடுத்தால் சால்மோனெல்லா பாக்டீரியா உள்ளது.
இந்த தொற்று வந்தால் காய்ச்சல், குமட்டல்,ஒவ்வாமை, வயிறு வலி, வயிற்றுப்போக்கு உண்டாகலாம்.
அதிக பாதிப்பு இருக்கும் போது கருப்பையில் பிடிப்பு இருக்கும். இதனால் முன் கூட்டிய பிறப்பு நிலை உண்டாகலாம்.
முளைகட்டிய தானியங்கள்
முளைகட்டிய தானியங்கள் சத்து மிகுந்தவை. அனால் இதை அப்படியே எடுத்துகொள்ளும் போது அதில் பாக்டீரியாக்களின் தாக்கம் இருக்கலாம்.
முளைகட்ட ஈரப்பதமான சூழல் தேவை என்பதால் இதில் பாக்டீரியாக்கள் வாழ ஏற்ற இடமாகிவிடுகிறது.
அதனால் முளை கட்டிய தானியங்களை சமைத்த பிறகு எடுப்பது தான் பாதுகாப்பானது அப்படியே எடுக்க கூடாது.

பழங்கள் காய்கறிகள் எடுக்கும் போது செய்யும் தவறு
கழுவப்படாத பொருள், கழுவாமல் உரிக்கும் பொருள் பழங்கள், காய்கறிகள் எல்லாமே ஆபத்தானவை.
உள்ளே சாப்பிடுகிறோம் என்றாலும் கூட மேற்பரப்பில் பல பாக்டீரியாக்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் இருக்கலாம்.
இதில் Toxoplasma, ஈ கஒலை, சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் இருக்கும் இது மண் அல்லது கையாளுதல் மூலம் பெறலாம். உற்பத்தி செய்யும் இடம், சேமிக்கும் இடம், போக்குவரத்து நிலையிலும் இருக்கலாம்.
Must Read : கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்!
அதனால் பழங்கள் , காய்கறிகள் எதை எடுத்தாலும் கழுவாமல் சாப்பிட கூடாது. இது பெரும்பாலும் பாதிப்பை உண்டு செய்தாலும் ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் வரை காய்ச்சலை உண்டு செய்யும்.
இதில் மோசமான நிலையில் கருவில் இருக்கும் குழந்தைக்கு குருட்டுத்தன்மை அல்லது அறிவுசார்ந்த கோளாறுகள் போன்றவை வரலாம்.
இது குறைந்த சதவீதம் என்றாலும் இதில் கர்ப்பிணி பெண் கவனமாக இருக்க வேண்டும்.
பதப்படுத்தப்படாத பால்
பதப்படுத்தப்படாத பால், சீஸ் மற்றும் பழச்சாறுகள், பேஸ்டுரைஸ் செய்யப்படாத பாலாடைக்கட்டி மற்றும் மென்மையாக பழுத்த பாலாடைக்கட்டிகள்ல் லிஸ்டீரியா, சால்மோனெல்லா, ஈ கோலை போன்றவை இருக்கும்.
பேஸ்டுரைஸ் செய்யப்படாத சாறுகளும் பாக்டீரியாவை கொண்டிருக்கவும் வாய்ப்புள்ளது. இது தாய் சேய் இருவருக்கும் ஆபத்தான நிலையை உண்டு செய்யலாம்.
தொற்றுநோய் அபாயம் குறைக்க இதை தவிர்ப்பது தான் கர்ப்பிணிகளுக்கு நல்லது.
ஜங்க் ஃபுட் உணவுகள் கூடவே கூடாது
பதப்படுத்தப்பட்ட குப்பை உணவுகள் தாய்க்கும் வயிற்றில் வளரும் கருவுக்கும் மோசமான பாதிப்பை உண்டு செய்யலாம்.
புரதம், ஃபோலேட், கோலின் போன்ற இரும்பு உள்ளிட்ட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவு தேவைப்படலாம்.
பதப்படுத்தப்பட்ட ஜங்க் ஃபுட் உணவுகள் நொறுக்குத்தீனிகளில் பொதுவாக ஊட்டச்சத்துக்கள் குறைவாக, கலோரிகள் சர்க்கரைகள் அதிகமாக உள்ளது. மேலும் கூடுதல் கொழுப்புகளும் இதில் உள்ளது.
மேலும் இவை எடை அதிகரிப்பை தூண்டும். இதனால் கர்ப்பகால நீரிழிவு நோய் வரலாம். இதற்கான நம்பகமான ஆதாரங்களும் உண்டு.

மதுப்பழக்கம்
கர்ப்பமாக இருக்கும் போது மது குறிப்பிட்ட அளவு எடுக்க வேண்டும் என்று அளவுகள் எங்கும் இல்லை. மது அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இது கருச்சிதைவு மற்றும் பிரசவத்தின் அபாயத்தை அதிகரிக்கிறது. சிறு அளவு மதுப்பழக்கம் கூட குழந்தையின் மூளை வளர்ச்சியை எதிர்மறையாக பாதிக்கும்.

கர்ப்பிணி மது அருந்தினால் குழந்தை முக குறைபாடுகள், இதய குறைபாடுகள் போன்றவற்றை எதிர்கொள்ளலாம்.
கர்ப்பிணி பெண் கருத்தரித்த உடன் என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டு உங்கள் டாக்டரிடம் ஆலோசித்து அதன் படி சாப்பிடுவது தான் நல்லது.
முடிவுரை
மேலே கொடுக்கப்பட்டுள்ள “கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாத உணவுகளின் பட்டியல் (foods to avoid during pregnancy in tamil)” எல்லாம் பொதுவானவை. உங்களுக்கு தனிப்பட்டமுறையில் ஏதேனும் உணவு ஓவ்வாமை இருந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசியுங்கள்.
உங்கள் பெண்ணோயியல் மற்றும் கர்ப்பகால மருத்துவ ஆலோசனையை பெறுவதற்கு இப்போதே ஜம்மி ஸ்கேன் மையத்தை தொடர்பு கொள்ளவும்.