ஃபோலிக் அமிலம் (Folic Acid) என்றால் என்ன ?
ஃபோலிக் அமிலம் (Folic Acid) என்பது வைட்டமின் பி ஆகும். இது பல கூடுதல் மற்றும் வலுவூட்டப்பட்ட உணவுகளில் இருந்து பெறப்படுகிறது. இது ஃபோலேட்டின் செயற்கை வடிவம் ஆகும்.
ஃபோலிக் அமிலம் எடுத்துகொள்வது கர்ப்பத்துக்கு முன்பும் பின்பும் என இரண்டு கால கட்டத்திலுமே மிக முக்கியம். வளரும் குழந்தையின் சரியான உறுப்பு வளர்ச்சிக்கு இது அவசியம் தேவை.
ஒரு பெண் கருவுறுதலுக்கு முன்பு ஃபோலிக் அமிலம் பற்றாக்குறையில்லாமல் பார்த்துகொள்வது அவசியம் என்று வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.
நிறைவான ஃபோலிக் அமிலமானது ஸ்பைனாபிஃபிடா, என்செபலோலெக்ஸ் மற்றும் அனென்ஸ்பாலி போன்ற கடுமையான நரம்புக்குழாய் குறைபாடுகள் உள்ளிட்ட பிறப்பு குறைபாடுகளை தடுக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.
ஃபோலிக் அமிலம் குறைவாக இருந்தால் என்ன ஆகும்?
கருவுற்ற முதல் 28 நாட்களுக்குள் குழந்தையின் முதுகெலும்பு மற்றும் மூளை பகுதி உருவாகிறது.
நரம்பு குழாய் சரியாக மூடப்படாவிட்டால் நரம்புக்குழாய் குறைபாடுகள் உண்டாக கூடும்.
ஆய்வு தெரிவித்தபடி அனென்ஸ்ஃபாலி என்பது மூளை உருவாகாத நிலை ஆகும். இந்த நிலையில் பிறக்கும் குழந்தைகள் உயிர்வாழ முடியாது.
ஸ்பைனா பிஃபிடா அல்லது என்செபலோசெல்லுடன் பிறந்த குழந்தைகள் பல அறுவை சிகிச்சைகள், பக்கவாதம் அதோடு இயலாமை போன்றவற்றை எதிர்கொள்ளக்கூடும்.
ஃபோலிக் அமிலம் நிறைவாக இருக்கும் தாய்க்கு பிறக்கும் குழந்தைகள் இதய குறைபாடுகள் ஆபத்தை குறைத்து கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் கூற்றுப்படி பிறப்பதற்கு முன்பு ஒரு குழந்தை இதயம் அல்லது ரத்த நாளங்கள் வளராத போது பிறக்கும் நிலையில் அது இதய குறைபாடுகளை கொண்டிருக்க கூடும்.
இதயத்தின் உட்சுவர்கள், இதய வால்வுகள், இதயத்தின் தமனிகள் நரம்புகளும் பாதிக்கப்படலாம். மூளை வளர்ச்சியும் சீராக இருக்காது. இந்த குறைபாடோடு குழந்தை வாழ்வது சிரமமாக இருக்கும்.
ஒரு பெண் கருவுற்ற தொடக்கத்தில் ஃபோலிம் அமில குறைபாட்டை கொண்டிருந்தால் அந்த குழந்தை பிறக்கும் போது கூடுதலாக பிளவு உதடு மற்றும் பிளவு அண்ணம் போன்றவற்றை கொண்டிருக்கவும் வாய்ப்புண்டு.
நிறைவான சத்துகொண்டிருந்தால் இந்த குறைபாடு இல்லை.
கர்ப்பத்தின் முதல் 6 மற்றும் 10 வாரங்களில் தான் குழந்தையின் வாய் மற்றும் உதடு பகுதி உருவாவதால் இந்த குறைபாடு அதைசரியாக ஒருங்கிணைக்காத போது இந்த பிறப்பு குறைபாடுகள் உண்டாக கூடும். அப்படி பிறக்கும் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள் மூலம் தீர்வு காணப்படுகிறது.
கர்ப்ப காலத்தில் ஃபோலிக் அமிலம் (Folic Acid During Pregnancy in Tamil)எவ்வளவு தேவை?
கருவுறுதலை எதிர்நோக்கும் தம்பதியர் முன்பே மருத்துவரை சந்தித்தால் அவர் அப்போதே ஃபோலிக் அமிலம் குறித்த உணவுகளை எடுத்துகொள்ள பரிந்துரைப்பார். கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு நாள் ஒன்றுக்கு 400 மைக்ரோகிராம் ஃபோலிக் அமிலம் தேவைப்படும்.
பிறகு படிப்படியாக 600 மைக்ரோகிராம் அளவு வரை தேவைப்படும். இதை மருத்துவரே அறிவுறுத்துவார்.
ஒருவேளை கர்ப்பிணிகள் முன்கூட்டியே சிறுநீரக குறைபாடு, சர்க்கரை நோய், கல்லீரல் குறைபாடு, தடிப்பு, தோல் அழற்சி, முடக்குவாதம், ஆஸ்துமா, தடிப்பு ,குடல் அழற்சி போன்ற பிரச்சனைகள் கொண்டிருந்தாலும் கூடுதலாக ஃபோலிக் அமிலம் தேவைப்படும்.
கருவுறுதலுக்கு முன்பு ஃபோலிக் அமிலம் எடுக்காவிட்டால் கருவுற்ற உடனாவது எடுத்துகொள்ளலாமா என்று கேட்கலாம்.
கருவுற்ற பிறகு கருவுறுதலை அறிந்துகொள்ளும் போது கர்ப்பத்தின் 6 அல்லது 8 வாரங்கள் ஆகிவிடக்கூடும்.
இந்த காலகட்டத்துக்குள் கர்ப்பத்தின் முதல் மாதத்தில் நரம்புகுழாய் உண்டாகிவிடும் என்பதால் முன்னதாக ஃபோலிக் அமில குறைபாட்டை கொண்டிருக்கும் பெண்கள் கருவின் நரம்புக்குழாய் குறைபாட்டை சந்திக்க கூடும்.
ஃபோலிக் அமிலம் உள்ள உணவுகள் என்ன?
ஃபோலிக் அமிலம் உணவிலேயே நிறைவாக கிடைக்க கூடும். இயற்கையாக ஃபோலேட் உள்ள கீரைகள், பீட்ரூட்ம் ப்ரக்கோலி போன்ற உணவுகளில் இவை நிறைவாகவே உண்டு.
இவை தவிர ஆரஞ்சு சாறு, அரிசி, தானியங்கள் போன்றவற்றில் ஃபோலிக் அமிலம் உண்டு.
அதே நேரம் இந்த உணவுகள் மட்டுமே போதுமான ஃபோலிக் அமிலத்தை தந்துவிடமுடியாது. கூடுதலாக மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளும் அவசியம்.
அதே போன்று நீங்கள் ஃபோலிக் அமிலத்தை கொண்டிருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்தி கொள்வதும் அவசியம். ஃபோலிக் அமிலம் நிறைவாக எடுத்துகொள்வதன் மூலம் வயிற்றீல் கருவுக்கு ஆபத்தை உண்டாக்காமல் காப்பாற்ற முடியும்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
குடும்பத்தில் யாருக்கேனும் அன்னபிளவு பிரச்சனை முன்கூட்டியே இருந்தால் குழந்தைப்பேறுக்கு முன்பு போதுமான வைட்டமின்கள் மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துகொள்வது அவசியம்.
சுயமாக மாத்திரை எடுத்துகொள்ளும் போது அளவில்லாமல் எடுத்துகொள்வதால் உடலில் நச்சுத்தன்மை அதிகரிக்கவும் வாய்ப்புண்டு. ஃபோலிக் அமிலம் குறித்த விழிப்புணர்வு அவசியம். அதே நேரம் ஒவ்வொரு பெண்ணும் தங்களுக்கு தேவையான ஃபோலிக் அமிலம் குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.