ஒரு பெண் அவர் கர்ப்பம் என்று தெரிந்த உடன் தன் உடல், மனம், செயல் என்று எல்லாவற்றிலும் அதற்கேற்ற மாற்றத்தை அவர் கொண்டுவர வேண்டியுள்ளது.
அதிலிலும் அவருக்கு இது முதல் குழந்தையாக இருக்கும் போது அவர் எப்படி தன் கர்ப்பத்திற்கான அறிகுறிகளை கவனிப்பார். மேலும் கர்ப்பம் முதல் வாரம் (First Week Pregnancy Symptoms) எப்படி தெரிந்து கொள்வது போன்ற கேள்விகளுக்கான பதிலாகவே இந்த பதிவு.
கர்ப்பத்தின் முதல் வாரம் (First Week Pregnancy Symptoms) என்ன நடக்கும்?
நீங்கள் முதல் வார கர்ப்பத்தில் இருந்தால் இது உங்களுக்கு முதல் மாதமாகும். இன்னும் ஒன்பது மாதங்களில் உங்கள் கரு குழந்தையாய் வெளிவந்துவிடும். இப்போது தான் உங்கள் கர்ப்ப பயணம் தொடங்குகிறது.
உங்களின் கடைசி மாதவிடாயின் (LMP – Last Menstrual Period) முதல் நாளின் அடிப்படையில் தான் கர்ப்பம் 1 வாரம் துவங்குகிறது. இப்போது, உங்கள் உடல் அண்டவிடுப்பிற்கும் மற்றும் கருத்தரிப்பதற்கும் தயாராகிறது.
கர்ப்பம் முதல் வாரம் கருவின் அமைப்பு எப்படி இருக்கும்?
கர்ப்பம் முதல் வாரம் கருவின் அமைப்பு இன்னும் உருவாகியிருக்காது. இப்போது தான் விந்தணு கரு முட்டையுடன் இணைந்திருக்கும். இன்னும் ஒருவார காலத்திற்கு இந்த கருமுட்டை பிலோபியன் குழாய்குள்ளேயே மிதந்து கொண்டிருக்கும்.
இந்த முட்டை சரியாக சென்று கருக்குழிக்குள் இறங்கும் வரை நம்மால் கர்ப்பத்தை உறுதி செய்ய முடியாது. நம்மால் இப்போது கருவின் அமைப்பை பற்றி தெளிவாக சொல்ல முடியாது. இந்த நிலையில் கர்ப்ப பரிசோதனை செய்தாலும் எதிர்மறையான முடிவையே தரும்.
கர்ப்ப முதல் வாரம் பரிசோதனை செய்ய வேண்டுமா?
இரத்ததில் எச்.சி.ஜி யின் அளவு அதிகரிக்க துவங்கியிருக்கும். ஆனால் அதை வைத்து நீங்கள் கர்ப்பம் என்று உறுதி செய்ய முடியாது. அதனால் சில வாரங்கள் பொறுத்து பரிசோதிப்பது நல்லது.
கர்ப்பம் முதல் வாரம் சிறுநீரில் HCG இன் அளவை பொறுத்தே பரிசோதனை செய்ய முடியும். முதல் வாரத்தில் உயர் நிலை இரத்தத்தில் உள்ள ஹார்மோன், போதுமான அளவு சிறுநீரிலும் இருக்கும். ஆனால், இது பரிசோதனை செய்ய சரியான காலம் இல்லை. எனவே, கர்ப்பத்தின் முதல் வாரத்தில், சோதனை சரியான முடிவைக் காட்டாது.
கர்ப்பப்பைக்குள் கரு இறங்கிய பின்பே அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் கண்டறிய முடியும். ஆனால் முதல் வாரத்தில் கரு பிலோபியன் குழாய்குள்ளேயே மிதந்துகொண்டிருக்கும் என்பதால் பரிசோதனை செய்தால் எந்த தகவலும் தராது.
தினமும் ஃபோலிக் அமிலம் கூடிய மகப்பேறுக்கு முந்தைய வைட்டமின் எடுத்துக் கொள்ளவேண்டியது அவசியம்.
கர்ப்ப முதல் வார பரிசோதனை துல்லியமானதா?
கர்ப்பத்தின் முதல் வாரம் என்னதான் பரிசோதித்தாலும் நேர்மறையான முடிவுகளையே தரும். இன்னும் கர்ப்பப் பையில் கருமுட்டை இணைந்திருக்காது என்பதால் நம்மால் பரிசோதித்து துல்லியமான முடிவுகளை சொல்ல முடியாது.
கர்ப்பம் 1 வாரம் அறிகுறிகள்
கர்ப்பமாக இருக்கும் ஒரு வாரத்தில், நீங்கள் அனுபவிக்கும் அறிகுறிகள் உங்கள் மாதவிடாய்க்கு பொதுவானவையாக கூட இருக்கலாம். அதனால் பொறுமையாக இருந்து உங்கள் கர்ப்பத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
கர்ப்பம் 1 வாரம் முக்கிய அறிகுறிகள் இங்கே உள்ளன:
கீழ் முதுகு வலி மற்றும் பிடிப்புகள்
குழந்தை வளருவதற்காக முதுகெலும்பிலிருந்து சத்துகளை எடுப்பதால் கீழ் முது வலி மற்றும் வயிற்றில் பிடிப்புகள் வரக்கூடும்.
தலைவலி
பல பெண்களுக்கு இந்த ஒற்றைத் தலைவலி வருகிறது. இது ஹார்மோன் தொடர்பானது. ஐஸ் கட்டிகள், சூடான தண்ணீர் குளியல் வலியை குறைக்கும் என்கின்றனர்.
மனநிலை மாற்றம்
கர்ப்பமான பிறகு மனநிலை அடிக்கடி மாறத் தொடங்குகிறது. மகிழ்ச்சியாக இருக்கும் நேரங்களில் திடீரென்று அழும் மனநிலைக்கு மாற்றப்படுவர். இதற்கு காரணம் நரம்பு மண்டலத்தின் மறுசீரமைப்பே. உணர்ச்சி நிலை அதிகமாகிவிடும். இதனால் சிலருக்கு உடல் சோர்வாகவும் கர்ப்ப கால மன அழுத்தம் இருப்பதாக உணரப்படுவார்.
அடிவயிற்று வலி மற்றும் பிடிப்பு
அடிவயிற்றில் ஒரு சிறிய வலி அல்லது லேசான பிடிப்புகளை நீங்கள் உணரலாம். இதற்கு காரணம் இடுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் பாய்வது தான். இந்த வலி மிக விரைவாக மறைந்துவிடும்.
மார்பு பகுதியில் வீக்கம், வலி
மார்பு சற்று பெரிதாகி அதிக உணர்திறன் கொண்டதாக இருக்கும். இந்த நேரத்தில் அவர்களை தொடுவது கூட அவர்களுக்கு விரும்பத்தகாததாக இருக்கலாம்.
பசி
பசி உணர்வு அதிகரிக்கும். எவ்வளவு சாப்பிட்டாலும் முழுமையான உணர்வு வருவதில்லை சிலருக்கு. இப்போது, ஒரு குறிப்பிட்ட பொருளை உண்ணும் ஆசை தோன்றலாம். சுவை விருப்பத்தேர்வுகள் மாறுபடலாம். அதே நேரத்தில், காலையில், உணவைப் பார்க்கும்போது, குமட்டல் உணர்வும் தோன்றலாம்.
- உடல் வெப்பநிலை மாறுபடும்
- வெள்ளைப்படுதல், முட்டையின் வெள்ளைக்கருவைப் போன்று அதிக வழுக்கும் நிலைத்தன்மையுடன் தெளிவாகவும்
- மெல்லியதாகவும் மாறும்
- கர்ப்பப்பை வாய் மென்மையாகி திறக்கும்
- சில இரத்தத் துளிகளை நீங்கள் கவனிக்கலாம்
- உங்களின் பிறப்புறுப்பு வீங்கியிருக்கலாம்
- முகப்பரு தோற்றம்
- கைகள் மற்றும் கால்களில் லேசான வீக்கம்
- மந்தநிலை
1 வார கர்ப்பிணிக்கான உதவிக்குறிப்புகள்
ஆரோக்கியமற்ற பழக்கங்களை விட்டுவிடுங்கள்
நீங்கள் புகைபிடிப்பீர்களா, மது அருந்துவீர்களா, அல்லது காஃபின் அதிகமாக உட்கொள்கிறீர்களா? நேர்மறையான கர்ப்ப பரிசோதனைக்குப் பிறகு நீங்கள் கெட்ட பழக்கங்களை விட்டுவிட வேண்டும்.
மருத்துவரை முன்கூட்டியே சந்திக்கவும்.
நீங்கள் குழந்தை எதிர்பார்க்கும் வேளையில் உங்கள் கர்ப்பம் உறுதி செய்தவுடன் உங்கள் அருகிலுள்ள மருத்துவரை அணுகி உங்களுக்கு சந்தேகம் வரும் கேள்விகளை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். இது உங்களுக்குள் வரும் பயங்களை போக்க உதவும்.
ஓய்வெடுங்கள்
கர்ப்ப காலத்தில் நிறைய அசவுகரியங்கள் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆனால் நீங்கள் இந்த பயணத்தைத் தொடங்கும் போது மனதிற்கு மகிழ்ச்சி தரக் கூடிய விசயங்களில் சிறிது கவனம் செலுத்துங்கள். பகல் வேளைகளில் தினமும் 2 மணி நேரமாவது நிம்மதியாக உறங்குங்கள்.
மனதிற்கு இனிமை தரும் பாடல்களை கேட்டு மகிழுங்கள். விருப்பப்படும் உணவுகளை சமைத்து சாப்பிடுங்கள், அனைவருடனும் சகஜமாய் பேசி சிரித்து மகிழ்வுடன் இருங்கள்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
கர்ப்பம் முதல் வாரம் அறிகுறிகளும், செய்ய வேண்டியவைகளும், செய்ய கூடாதவைகளும் இந்த பதிவில் அடங்கியிருக்கும். மேலும் உங்களுக்கு ஏதேனும் தகவல் தேவைப்படும் வேளைகளில் மருத்துவரை பார்த்து அவரின் பரிந்துரைப்பின் படி நடந்துகொள்ளுங்கள்.