முன்னுரை
பொதுவாக ஃபலோபியன் குழாய்கள் என்பது கரு உருவாகும் இடம் மற்றும் இனப்பெருக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இவை கரு முட்டைகளை இடது அல்லது வலது ஓவரியில் இருந்து கர்ப்பப்பைக்கு கொண்டு செல்கின்றன.
ஒரு கரு முட்டை ஃபலோபியன் குழாய்களில் விந்தணுவைச் சந்திப்பதால், கருத்தரித்தல் ஏற்படும்.
எனவே கரு தரிப்பதற்கு ஃபலோபியன் குழாய் மிகவும் (fallopian tube and pregnancy in tamil) அவசியம்.
ஃபலோபியன் குழாய்யை நீக்குவதால் கருத்தரிக்கும் வாய்ப்பு இருக்கிறதா என்பதை இந்த வலைப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சல்பிங்கெக்டோமி என்றால் என்ன ?
சல்பிங்கெக்டோமி (Salpingectomy) என்பது ஒன்று அல்லது இரண்டு ஃபலோபியன் குழாய்களை அறுவை சிகிச்சை செய்து அதன் மூலம் அகற்றுவதாகும்.
ஒரு ஃபலோபியன் குழாய் நீக்கப்பட்ட பிறகு , மற்றொரு ஃபலோபியன் குழாய் எந்த பிரச்சனையும் இல்லாமல் சரியாக செயல் பட முடிந்தால், ஒரு பெண் இயற்கையாகவே கருத்தரிக்க முடியும்.
ஒவ்வொரு மாதமும் சரியான அண்டவிடுப்பின் நிகழும் போது கரு முட்டையும், விந்துவும் இணைந்து ஃபலோபியன் குழாய்யில் கரு உருவாகும்.
பொதுவாக பல பெண்கள் ஒரு பக்கத்தில் மட்டும் ஃபலோபியன் குழாய் இருந்து இயற்கையாக கர்ப்பம் (fallopian tube and pregnancy in tamil) தரித்து குழந்தையும் ஆரோக்கியமாக பிறக்கும் வாய்ப்பு உள்ளது, மேலும் இருபுறமும் குழாய் உள்ளவர்களுடன் ஒப்பிடும்போது ஓரளவு வாய்ப்பு குறைவானதாகும்.
இருப்பினும், உண்மையில், ஒரு ஃபலோபியன் குழாயை அகற்றிய பிறகும் முதல் வருடத்தில் இயற்கையாகவே கர்ப்பமாக இருக்க முடியும்.
எனவே, ஒரு ஃபலோபியன் குழாயை அகற்றுவது கர்ப்பம் தரிக்கும் (fallopian tube and pregnancy in tamil) திறனை பெரிதும் பாதிக்காது.
கர்ப்பம் தரிக்க விரும்பும் ஒரு பெண், நல்ல மனநிலையில் இருப்பது, போதுமான அளவு ஊட்டச்சத்துகளைப் பெறுவது, சரியான எடையைக் கட்டுக்குள் வைத்து இருப்பது, சரியான உணவு முறை, முறையான மருத்துவ பரிசோதனை, வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கொண்டு இருப்பது முக்கியம்.
இரண்டு ஃபலோபியன் குழாய்களையும் நீக்கிய பிறகு கர்ப்பம் (fallopian tube and pregnancy in tamil) அடைவது சாத்தியமா?
உங்கள் இரண்டு ஃபலோபியன் குழாயும் நீக்கிய பிறகு நீங்கள் கர்ப்பம் தரிப்பது சாத்தியமானது தான்.
ஒரு பெண்ணுக்கு இரண்டு ஃபலோபியன் குழாய்களும் அகற்றப்பட்டால், இறையற்கையாக கர்ப்பம் தரிப்பது என்பது முடியாது.
நீங்கள் சல்பிங்கெக்டோமி அறுவை சிகிக்சை செய்திருந்தால் இரண்டு குழாய்களும் நீக்கப்பட்டால் , ஐ.வி.எப் (IVF -In Vitro Fertilization) செயற்கை முறை கர்ப்பத்தைத் தொடரலாம்.
ஐ.வி.எப் கருத்தரித்தல் என்பது ஒரு ஆய்வகத்தில் உங்கள் கரு முட்டைகள் மற்றும் விந்துவை இணைத்து கருத்தரித்து, பின்னர் அவற்றை உங்கள் கருப்பைக்கு உள்ள செலுத்தும் ஒரு செயல்முறையாகும்.
ஐ.வி.எப் (IVF) செயல்முறை செய்து கர்ப்பம் அடைவது சாத்தியமாகும், இந்த செயல் முறையில் விந்து மற்றும் கரு முட்டை ஃபலோபியன் குழாயில் சந்திக்க வேண்டிய அவசியமில்லை.
ஃபலோபியன் குழாய் அகற்றப்பட காரணங்கள் என்ன?
கருப்பை புற்றுநோய் ஆபத்தை குறைக்க
பெண்களின் இனப்பெருக்க அமைப்பில் புற்று நோய் அல்லாத அறுவை சிகிச்சை செய்யும் போது இரண்டு ஃபலோபியன் குழாயையும் அகற்ற அமெரிக்கன் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவக் கல்லூரி பரிந்துரைக்கிறது.
கருப்பை புற்றுநோய் ஆபத்தை குறைக்க
இது கர்ப்பப்பை புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பை குறைகிறது. மேலும் கர்ப்பப்பை புற்றுநோய் ஃபலோபியன் குழாயில் உண்டாகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
எனவே ஃபலோபியன் குழாயை அகற்றுவது புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பை குறைகிறது
ஹைட்ரோசல்பின்க்ஸ்
ஹைட்ரோசல்பின்க்ஸ் என்பது ஒன்று அல்லது இரண்டு ஃபலோபியன் குழாய்களில் திரவம் அதிகமாக இருந்து குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் அல்லது வீங்கி இருக்கும் நிலை.
ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதில் சில பிரச்சனைகளை சந்திக்கும் போது ஹைட்ரோசல்பின்க்ஸ் பெரும்பாலும் கண்டறியப்படுகிறது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட குழாயை மருத்துவர்கள் நீக்கி அறுவை சிகிக்சை செய்வார்கள்.
எக்டோபிக் கர்ப்பம்
எக்டோபிக் கர்ப்பத்தில், கருவுற்ற கரு முட்டை கருப்பையைத் தவிர வேறு இடத்திற்குச் சென்று கரு பதியும் நிலை. இந்த நிலை பெரும்பாலும் ஆபத்தானது, தாய்க்கு உயிர் போகும் அளவுக்கு ஆபத்து அதிகம்.
கருமுட்டை ஃபலோபியன் குழாயில் பதியும் போது, அதிகமான இரத்தப்போக்கு, சில சமயக்களில் குழாய் வெடிப்பதை தடுக்க ஃபலோபியன் குழாயை நீக்குவது அவசியமாக இருக்கும்.
நிரந்தர பிறப்பு கட்டுப்பாடு
நிரந்தரமான பிறப்புக் கட்டுப்பாட்டை செய்வதற்கு ஃபலோபியன் குழாய் அகற்றப்படும். இது ஒரு சிறந்த கருத்தடை முறையாகும், ஏனெனில் கருத்தரித்தல் ஃபலோபியன் குழாயில் தான் நிகழ்கிறத.
இந்த குழாய் இல்லை என்றால், கருத்தரித்தல் செயல்முறை நடக்காது மற்றும் கர்ப்பம் ஏற்படாது.
கர்ப்பப்பை தொடர்புடைய பிற நோய் தொற்று
கர்ப்பப்பை தொடர்புடைய பிற நோய் தொற்று, பெல்விக் அழற்சி நோய், ஃபலோபியன் குழாயின் அளவு சிறியதாக இருக்கும் போது, உறுப்பின் செயல்பாட்டை பாதிக்கலாம், மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis) ஆகியவை தீவிர நிலையில் இருந்தால் ஃபலோபியன் குழாய்கள் அகற்றப்படும்.
முடிவுரை
உங்கள் ஃபலோபியன் குழாய்கள் ஒருமுறை நீக்கிய பிறகு திரும்பவும் குழாய் வளர முடியாது. இரண்டு குழாய்களும் அகற்றினால் பொதுவாக பெண் உடலில் ஏற்படும் இயற்கையான இனப்பெருக்கமும் நடைபெறாது.
இதனால் இயற்கையான கருத்தரிப்பதும் சாத்தியம் இல்லை. செயற்கை கருத்தரிப்புக்கு சாத்தியம் உள்ளது. உங்களது வயது மற்றும் கருப்பையில் எந்த பிரச்சனையும் இல்ல என்றால் ஐ.வி.எப் மூலம் சீக்கிரம் கர்ப்பம் தரிக்கலாம்.