எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) என்றால் என்ன? எப்படி கண்டறிவது? யாருக்கு இந்த பாதிப்பு உண்டாகும்?

Deepthi Jammi
10 Min Read

கர்ப்ப காலத்தில் சிக்கல்கள் அசெளகரியங்கள் உண்டாவது இயல்பு. அதே நேரம் ஒவ்வொரு பெண்ணும் கருவுற்றதும் தங்களது கர்ப்பம் சரியானதா என்பதை மருத்துவரை அணுகி உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் கருவானது கருப்பைக்குள் வராமல் ஃபெலோப்பியன் குழாயிலேயே தங்கியிருந்தால் அது எப்போதும் கருப்பைக்குள் வராது. மேலும் அது தாய்க்கு ஆபத்தை உண்டாக்கலாம்.

Contents
எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) என்றால் என்ன?எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) ஏன் ஆபத்தானது?எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) அறிகுறிகள் உண்டா?இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்பிணிகள் மருத்துவரிடம் மறைக்கவே கூடாத விஷயங்கள்!எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) ஏன் உண்டாகிறது?எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) யாருக்கு உண்டாகும்?எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) எப்படி கண்டறியப்படுகிறது?எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) சிகிச்சை முறைகள்எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) சிகிச்சைக்கு பிறகுஇதையும் தெரிந்து கொள்ள: கர்ப்ப காலத்தில் ஏற்படும் 5 பொதுவான பிரச்சனைகள்!எக்டோபிக் கர்ப்பத்துக்கு (Ectopic Pregnancy in Tamil) பிறகு மீண்டும் கருத்தரிக்க முடியுமா?

எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) என்றால் என்ன, அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும், ஏன் எக்டோபிக் கர்ப்பம் உண்டாகிறது. யாருக்கு இந்த பாதிப்பு அதிகம் என்பதை இங்கு பார்க்கலாம்.

எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) என்றால் என்ன?

எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) என்பது ஆரோக்கியமான கர்ப்பம் தரித்தலில் இருந்து முற்றிலும் வேறானது. எக்டோபிக் கர்ப்பத்தில் கருவுற்ற முட்டையானது கருப்பைக்குள் வராமல் கருப்பையின் வெளிப்புற சுவரில் இணைந்துவிடும்.

ஆரோக்கியமான கர்ப்பத்தில் கருமுட்டையானது விந்தணுக்களுடன் இணைந்து தானாகவே கருப்பையின் சுவரில் இணைந்து விடும். எக்டோபிக் கர்ப்பத்தில் கருமுட்டை தவறான இடத்தில் வளரும். வெளிப்புற சுவரில் அமைந்துவிடும், ஃபெலோப்பியன் குழாய்களில் அமைந்துவிடும். மேலும் இது கருவறையின் வேறு பகுதிகளிலும் கூட அமைந்துவிடும். கர்ப்பப்பைக்குள் இல்லாமல் கருப்பை வாய் பகுதியில் அடிவயிற்றுக்குழிக்குள் என்று கருவானது வளரலாம்.

எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) ஏன் ஆபத்தானது?

எக்டோபிக் கர்ப்பமானது தீவிர நிலை. இந்த நிலையில் இருக்கு பெண்ணுக்கு உடனடி சிகிச்சை தேவை. ஏனெனில் கருமுட்டையால் உயிர்ப்பெற்று இருந்தாலும் கருப்பை தவிர்த்து எங்கு இருந்தாலும் அவற்றால் வளர முடியாது. மேலும் இது அப்பெண்ணின் உறுப்புகளை பாதிக்க செய்யும். இதனால் உட்புறத்தில் இரத்தக்கசிவு உண்டாகலாம். நோய்த்தொற்றுக்கு ஆளாகலாம். எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) வந்தால் அந்த கருவை அகற்றுவது தான் சிறந்த வழி. 100 பெண்களில் 2 பேருக்கு இந்த எக்டோபிக் கர்ப்பம் உண்டாக வாய்ப்பிருக்கிறது.

எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) அறிகுறிகள் உண்டா?

கருவுற்ற உடன் உடலில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள், அசெளகரியங்கள் போன்றவையே குழப்பமாக இருக்கும் என்றாலும் இந்த எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) அறிகுறிகள் தனியாக தீவிரமாக இருக்கும். ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த அறிகுறி மாறுபடும். சிலருக்கு கருவுற்ற அறிகுறி போன்று இவையும் இருக்கும். எனினும் கருவுற்றதை உறுதி செய்த உடன் இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

  • யோனி இரத்தப்போக்கு (புள்ளிகளாக இல்லாமல் துளிகளாக வெளியேறுவது)
  • குமட்டல் மற்றும் வலியுடன் வாந்தி
  • வயிற்று வலி
  • தீவிரமான வயிற்றுப்பிடிப்புகள்
  • தலைச்சுற்றல் அல்லது பலவீனம்
  • தோள்பட்டை, கழுத்து அல்லது மலக்குடலில் வலி
  • ஃபெலோப்பியன் குழாய் சிதைந்தால் வலி மற்றும் இரத்தப்போக்கு கடுமையானதாக இருக்கும்.
  • அதிகப்படியான களைப்பு

மேற்கண்ட அறிகுறிகள் கருவுற்ற அறிகுறிகளோடு தொடர்பு கொண்டவை என்றாலும் அறிகுறிகளில் உண்டாகும் வித்தியாசத்தை நீங்கள் கண்டறிய வேண்டும்.

இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்பிணிகள் மருத்துவரிடம் மறைக்கவே கூடாத விஷயங்கள்!

அடிவயிறு வலி

இது கரு உறுதியானதும் உண்டாகும் வலி அல்ல. இலேசான வலி இடைவிட்ட நேரத்தில் திடீர் என்று தீவிரமாக உருவாகும் வலி, மலக்குடல் இயக்கத்தின் போது வலி, இருமும் போது தீவிரமான வலி, இடுப்பு மண்டலத்தில் வலி போன்றவை எல்லாமே கர்ப்பத்தின் ஆரம்பத்தில் வந்தால் அதை அலட்சியம் செய்ய வேண்டாம்.

கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் இலேசான இரத்தக்கசிவு புள்ளிகளாக இருக்கலாம். ஆனால் தொடர்ந்து இரத்தக்கசிவு இருந்தாலும் அலட்சியம் வேண்டாம்.

தோள்பட்டை வலி

கர்ப்பகாலத்தில் வலி பிடிப்பு போன்றவை இயல்பானது. ஆனால் படுக்கும் போது தோள்பட்டையில் வலி இருந்தால் அதற்கு காரணம் எக்டோபிக் கர்ப்பமாக (Ectopic Pregnancy) இருக்கலாம். நரம்புகளின் உட்புற பகுதிகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதால் இந்த வலி உண்டாகலாம். இவை தவிர சருமம் எப்போதும் ஈரப்பதமாக இருப்பது, தலைச்சுற்றலுடன் இருப்பது, நாடித்துடிப்பு அதிகமாக இருப்பது, அதிர்ச்சி, பலவீனம் போன்றவை கூட எக்டோபிக் கர்ப்பத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.

எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) ஏன் உண்டாகிறது?

கருமுட்டைகள் சரியான பாதையில் செல்ல கருப்பை தொடர்பான அனைத்து செயல்முறைகளும் அதன் பணிகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். கருமுட்டை கருப்பைக்குள் வர முயற்சிக்கும் பாதையில் ஃபெலோப்பியன் குழாய்கள் சேதம் அடைந்தாலும் எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) உண்டாகலாம். அப்போது கருமுட்டையானது வேறு ஏதேனும் இடத்தில் அமர்ந்துவிடலாம். இது இடம் மாறிய கர்ப்பம் என்று சொல்லப்படுகிறது.

எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) யாருக்கு உண்டாகும்?

35 வயதுக்கு மேல் குறிப்பாக 40 வயதுக்கு மேல் கருவுறுபவர்கள், அடிக்கடி அபார்ஷன் செய்து கொண்டவர்கள், பெல்விக் டிசீஸ் கொண்டவர்கள் இந்த பாதிப்பை எதிர்கொள்ள வாய்ப்புண்டு. புகைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தால் அவருக்கும் எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) சாத்தியமுண்டு.

கருவுறுதலை தள்ளிப்போட நீண்ட காலம் கருத்தடை சாதனங்கள் அல்லது கருத்தடை மாத்திரை போன்றவற்றை எடுத்துகொண்டால் அவர்களில் சிலருக்கு இந்த எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) உண்டாகலாம்.

ஒரு பெண் ஏற்கனவே எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) கொண்டிருந்தால் அவர் கருத்தரிக்கும் போது அவை மீண்டும் எக்டோபிக் கர்ப்பமாக வாய்ப்புண்டு. 90 பேரில் ஒருவர் அல்லது 10 பேரில் ஒருவர் கூட இதை எதிர்கொள்ளலாம்.

கருப்பை, கரு முட்டைகள், ஃபெலோப்பியன் குழாய் போன்றவற்றில் ஏதேனும் நோய்த்தொற்று இருந்தால், அழற்சி இருந்தால் அவர்களுக்கு எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம். சிலர் கிளைமிடியா கோனேரியா போன்ற தொற்றுகளை கொண்டிருந்தால் அவர்கள் எக்டோபிக் கர்ப்பத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

ஃபெலோப்பியன் குழாய்களில் காயங்களை உண்டாக்கும் எண்டோமெட்ரியோசிஸ் பிரச்சனையும் எக்டோபிக் கர்ப்பத்தை உண்டாக்கலாம்.

சில பெண்கள் அசாதாரணமான ஃபெலோப்பியன் குழாய் வடிவம் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கும் இந்த எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) உருவாக வாய்ப்புண்டு. ஃபெலோப்பியன் குழாயில் அறுவை சிகிச்சை ஏற்பட்டிருந்தால் கூட அது எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) உண்டாக்கும் வாய்ப்பை அதிகரிக்கலாம். சிலர் குடல் அழற்சி, கருத்தடை என வயிறு சார்ந்த அறுவை சிகிச்சை செய்திருந்தாலும் இந்த இடம் மாறிய கர்ப்பம் உண்டாகலாம்.

கருவுறுதல் பிரச்சனை எதிர்கொள்பவர்கள், கருவுறுதல் மருந்துகளின் பயன்பாடு சிலருக்கு எக்டோபிக் கர்ப்பத்தை உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.

எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) எப்படி கண்டறியப்படுகிறது?

எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) கண்டறிவதே சிக்கலான விஷயம் ஆகும். கர்ப்பமான பிறகு அப்பெண்ணுக்கு உண்டாகும் அறிகுறிகள், உடலில் ஏற்படும் மாற்றங்கள். போன்றவற்றின் அடிப்படையில் மருத்துவர் சில பரிசோதனைகள் மூலம் கண்டறிவார்.

இரத்த ஹார்மோன் பரிசோதனை அதாவது HCG பரிசோதனை மற்றும் அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகள் மூலம் எக்டோபிக் கர்ப்பத்தை (Ectopic Pregnancy in Tamil) கண்டறிய முயற்சிப்பார்.

இரத்த பரிசோதனையில் ஹெச்.சி.ஜி என்னும் ஹார்மோன் அளவு சரிபார்க்கப்படும். இந்த ஹார்மோன் அளவுகள் தேவையை விட குறைவாக இருந்தால் அது எக்டோபிக் கர்ப்பமாக இருக்கலாம்.

அல்ட்ராசவுண்ட் சோதனை அதாவது ட்ரான்ஸ்வஜினல் பெண் உறுப்பு வழியாக சிறு கருவியைஉள்ளே செலுத்தி கரு எங்கிருக்கிறது என்பதை திரை வழியாக பார்ப்பார்கள். இதற்கு சோனாகிராஃபர் இயந்திரம் மிகவும் கவனமாக கருப்பை மற்றும் குழாய்களை கவனிக்க உதவும்.

இந்த சோதனையின் போது கருவானது ஃபெலொபியன் குழாய் வழியே கவனிக்கப்படால் அது எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) என்பது உறுதி செய்யப்படும். இந்த கரு வளர்ச்சியடைய முடியாமல் இறந்துவிடும் நிகழ்வு பெரும்பாலும் நடக்கும். இரத்த அடைப்பு கொண்ட வீங்கிய குழாய் மற்றும் திசுக்களை மருத்துவரால் கண்டறிய முடியும். மேலும் இந்த பரிசோதனையின் போது சோனாகிராஃபர் இயந்திரம் கொண்டு கருப்பையை ஆராய்வார்.

கர்ப்பம் தரித்திருப்பதற்கான சோதனை பாசிட்டிவ் ஆக வந்து மருத்துவரால் கருவை கண்டறிய முடியவில்லை எனில் அது எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) அதாவது இடம் மாறிய கர்ப்பமாக இருக்கலாம். மருத்துவர் தொடர்ந்து இரத்த பரிசோதனை மற்றும் அல்ட்ரா சவுண்ட் சோதனைகளை நிகழ்த்தி கருப்பையை ஆராய்ந்து முறையான பரிசோதனை செய்வார்.

இந்த பரிசோதனைகளிலும் முழுமையான அல்லது உறுதியான முடிவு எட்டாத நிலையில் டி& சி சோதனை செய்யலாம். கருப்பையில் தேவையில்லாத திசுக்கள் வளர்ந்திருந்தால் அவை கண்டறியப்பட்டு அவற்றிற்கு ஏற்ற சிகிச்சை அளிக்கப்படும்.

வெகு அரிதாக சமயங்களில் மருத்துவர் லாப்ரோஸ்கோப்பி சோதனையை பரிந்துரைப்பார். சிறிய கேமரா கருப்பைக்குள் செலுத்தப்பட்டு உட்புற அமைப்புகளை ஆராயும். இதன் மூலம் அது இடம் மாறிய கர்ப்பமா என்பது கண்டறியப்படும்.

எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) சிகிச்சை முறைகள்

எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) தாய்க்கு பாதுகாப்பானது அல்ல இது கருவை வளர்ச்சியடைய செய்யாது. தாயின் உடனடி ஆரோக்கியம் கருத்தில் கொண்டு விரைவில் கருவை வெளியேற்றுவது அவசியம். எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) எங்கு கருமுட்டை வளர்கிறது அதன் வளர்சியை பொறுத்து சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

மருந்துகள்

உடனடி சிக்கல்கள் சாத்தியமில்லை எனில் மருந்து மூலம் இதை வெளியேற்ற முயற்சி செய்வார்கள். எக்டோபிக் வெடிக்காமல் வெளியேற உதவும் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம். மெத்தோட்ரெக்ஸேட் எனது செல்கள் போன்ற வேகமாக பிரிக்கும் உயிரணுக்களின் வளர்ச்சியை தடுக்கும் மருந்து. இந்த மருந்தை ஊசியாக கொடுக்கலாம். இந்த மருந்து பயனளித்திருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த இரண்டு பரிசோதனைகளும் செய்ய வேண்டும். மருந்து பயனுள்ளதாக இருந்தால் அது கருச்சிதைவை உண்டாக்கும். தசைப்பிடிப்பு

இரண்டாவது இரத்தப்போக்கு உண்டாகும். திசு கடந்து செல்வது இதனால் அறுவை சிகிச்சை தேவைப்படாது. ஆனால் இந்த மருந்தை எடுத்துகொண்ட பிறகு நீங்கள் கருத்தரிக்க விரும்பினாலும் சில மாதங்கள் வரை கர்ப்பமாக முடியாது என்பது குறிப்பிடதக்கது.

அறுவை சிகிச்சை

பல அறுவை சிகிச்சை நிபுணர்கள் கருவை அகற்றி உட்புற சேதத்தை சரி செய்ய பரிந்துரைக்கிறார்கள். இந்த செயல்முறை லேபரோடமி என்று அழைக்கப்படுகிறது. மருத்துவர் சிறிய கீறல் மூலம் வயிற்றில் சிறிய கேமராவை செருகுவார். அறுவை சிகிச்சை நிபுணர் கருவை அகற்றி அதனோடு ஃபெலோப்பியன் குழாயின் ஏதேனும் சேதம் இருந்தால் சரி செய்யப்படுகிறது.

அறுவை சிகிச்சை தோல்வியுற்றால் மீண்டும் நிபுணர் லேப்ரோடமியை செய்யலாம். இந்த முறையில் பெலோபியன் குழாய் சேதமடைந்திருந்தால் அதிகமாக சேதமடைந்தால் அறுவை சிகிச்சையின் போது அந்த ஃபெலோப்பியன் குழாய் அகற்றும் நிலை உண்டாகலாம்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) சிகிச்சைக்கு பிறகு

எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) அகற்றிய பிறகு கீறல்கள் குணமடைய சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் வைத்திருப்பதே முக்கியம்.நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுவதும் அவசியம்.

  • அதிக இரத்தப்போக்கு
  • யோனி பகுதியில் துர்நாற்றம்
  • சூடான யோனி பகுதி
  • சிவந்திருத்தல்
  • வீக்கம்
  • அறுவை சிகிச்சைக்கு பிறகு இலேசான யோனி இரத்தப்போக்கு
  • சிறிய இரத்த உறைவு

போன்றவை இருக்கும். இது ஆறு வாரங்கள் வரை இருக்கலாம். இவை அளவு மீறி அதிகமாக இருந்தால் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.

இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்ப காலத்தில் ஏற்படும் 5 பொதுவான பிரச்சனைகள்!

எக்டோபிக் கர்ப்பத்துக்கு (Ectopic Pregnancy in Tamil) பிறகு மீண்டும் கருத்தரிக்க முடியுமா?

எக்டோபிக் கர்ப்ப பிரச்சனையை சந்திக்கும் பெண்கள் மீண்டும் ஆரோக்கியமான கருத்தரிப்பை எதிர்கொள்ள முடியும். எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) முழுமையாக முறையாக அகற்றி இருக்க வேண்டும். எக்டோபிக் கர்ப்பத்தால் சேதமடைந்த ஃபெலோப்பியன் குழாய் அகற்றிய பிறகும் கூட கருத்தரிப்பதில் சிக்கல் நேராது. ஏனெனில் இரண்டு ஃபெலோப்பியன் குழாய்கள் உண்டு என்பதால் ஒன்றை கொண்டு கூட கருத்தரிக்கலாம். அதே நேரம் எக்டோபிக் கர்ப்பம் எவ்வளவு விரைவில் கண்டறிகிறோமோ அவ்வளவு விரைவில் அந்த குழாயின் சேதத்தை தடுக்க முடியும். மீண்டும் கருத்தரிக்கும் வாய்ப்பை விரைவாக பெற முடியும்.

எக்டோபிக் கர்ப்பத்துக்கான (Ectopic Pregnancy in Tamil) காரணத்தை பொறுத்து மீண்டும் கருத்தரிப்பு காலத்தை பொதுவாக கணிக்கலாம். நோய்த்தொற்று பாலியல் தொடர்பான குறைபாட்டினால் எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) உண்டானால் முறையான சிகிச்சை மேற்கொண்டால் மட்டுமே சாதாரண கருத்தரிப்பு உருவாவதை அதிகரிக்கலாம்.

எக்டோபிக் கர்ப்பத்துக்கு பிறகு மீண்டும் கருத்தரிக்க திட்டமிட்டால் மருத்துவரின் ஆலோசனையுடன் தொடர் சிகிச்சையில் இருப்பது முக்கியம். எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy in Tamil) உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் தாக்கத்தை உண்டு செய்திருக்கலாம். அதனால் மருத்துவ ஆலோசனையோடு உளவியல் ஆலோசகரையும் கலந்து ஆலோசிப்பது ஆரோக்கியமான கருத்தரிப்பை ஊக்குவிக்க செய்யும். இது குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

5/5 - (86 votes)

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Follow:
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »