கர்ப்பமாக இருக்கும் போது சிக்கன் சாப்பிடலாமா (chicken during pregnancy in tamil) என்ற கேள்வி பொதுவாக அனைத்து கர்ப்பிணிகளுக்கும் கேட்பார்கள் ஏனெனில் கர்ப்பமாக இருக்கும்போது ஆரோக்கியமாக சாப்பிடுவது என்பது மிகவும் முக்கியமானது.
உங்கள் குழந்தை வளர, வளர மற்றும் உடல் எடை அதிகரிக்க சரியான ஊட்டச்சத்துக்கள் தேவை.
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இரத்த சோகை, குறைந்த எடை கொண்ட குழந்தை மற்றும் பிறப்பு குறைபாடுகள் போன்ற சிக்கல்களையும் குறைபதற்கு கர்ப்ப காலத்தில் சரியான உணவை தெரிந்தெடுத்து சாப்பிடுவது சிறந்தது.
கர்ப்ப காலத்தில் உடலில் புரதம் முக்கியமானது, ஏனெனில் இது குழந்தையின் திசுக்கள், உறுப்புகள் மற்றும் மூளையின் வளர்ச்சிக்கு அவசியம்.
சிக்கன் கறியில் புரதம் அதிகம் உள்ளது கர்ப்ப காலத்தில் இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை என்ன யார் கர்ப்ப காலத்தில் சிக்கன் சாப்பிடலாம் என்பதை இந்த வலைப்பதிவில் பார்க்கலாம்.
கர்ப்பமாக இருக்கும் போது சிக்கன் (chicken during pregnancy in tamil) சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- கர்ப்பத்தின் சிக்கன் சாப்பிடுவது வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கும். ஒரு நாளைக்கு 100 கிராம் சிக்கன் சாப்பிடுவது ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் தினசரி புரதத் தேவையில் 50% பூர்த்தி செய்கிறது.
- சிக்கனில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது மற்றும் கொலஸ்ட்ரால் அளவு குறைவாக உள்ளது.
- கோழி கல்லீரலில் வைட்டமின் கோலின் உள்ளது இது குழந்தை பிறந்த பிறகு ஆரம்பதில் குழந்தைகளின் மூளை மற்றும் நினைவாற்றல் செயல்பாட்டிற்கு உதவுகிறது.
- குழந்தைகளுக்கு நரம்பு குழாய் குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது.
- சிக்கனில் வைட்டமின் பி3 நிறைந்துள்ளது, இது குழந்தையின் மூளை வளர்ச்சியைத் தூண்டுகிறது மற்றும் மூளையை ஆரோக்கியமாக வைக்கிறது.
- அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன
- தசைகளை உருவாக்குவதற்கும் வலுப்படுத்துவதற்கும் தேவையான ஆற்றலை வழங்குகிறது.
- சிக்கனில் வைட்டமின் ஏ, ஈ மற்றும் செலினியம் உள்ளது.
- சிக்கன் உடலுக்கு இரும்பு மற்றும் துத்தநாகத்தை அளிக்கிறது, இது புதிய செல்களை உருவாக்க உதவுகிறது.
சிக்கன் சரியாக சமைக்கப்படாமல் இருந்தால் பின்வரும் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும், மேலும் உங்கள் குழந்தைக்கு என்ன ஆபத்துகள் ஏற்படுத்தும்.
சரியாக சமைக்கப்படாத சிக்கனில் சால்மோனெல்லா என்ற பாக்டீரியாவால் உணவில் நச்சுத்தன்மையை ஏற்படுத்துகிறது, இது வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் மற்றும் சில சந்தர்ப்பங்களில் கருச்சிதைவை ஏற்படுத்தும்.
குளிர்சாதன பெட்டியில் சேமிக்கப்படும் எஞ்சிய சிக்கன் பாக்டீரியாவைக் கொண்டிருக்கலாம் மற்றும் அதை சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது.
உங்கள் உணவை உண்ணும் முன் அனைத்து பாக்டீரியாக்களும் அழிக்கப்பட்டுவிட்டன என்பதை உறுதிப்படுத்த நன்றாக சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவது நல்லது.
பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியில் லிஸ்டீரியா பாக்டீரியாவால் மாசுபட்டு நோய் ஏற்படலாம், எனவே இதை தவிர்ப்பது நல்லது.
கர்ப்ப காலத்தில் சிக்கன் பல நன்மைகளை கொண்டுள்ளது. எனவே இந்த சத்தான உணவுப் பொருளை உங்கள் கர்ப்பகால உணவு முறையில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆனால், நன்றாகச் சமைத்திருப்பதை உறுதி செய்து, சூடாக இருக்கும்போதே சாப்பிடுங்கள்.
கர்ப்ப காலத்தில் சிக்கனை(chicken during pregnancy in tamil) எப்படி சாப்பிடலாம்?
- தோல் இல்லாத மற்றும் எலும்பு இல்லாத சிக்கன் மார்பகத்தை அதாவது chicken breast சமைத்து, உங்கள் சாலட்டில் சேர்க்கலாம்.
- கோழி கறியை சமைத்து, சப்பாத்தி அல்லது ரொட்டியுடன் சாப்பிடலாம்.
- நீங்கள் வீட்டில் சமைத்த கோழியை சாண்ட்விச்சில் பயன்படுத்தலாம்.
- சிக்கனை சில மசாலாப் பொருட்களுடன் வேகவைத்து ஆரோக்கியமான சூப் செய்து உட்கொள்ளலாம்.
- சிக்கனை அதிகமான எண்ணியில் பொரித்து சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன?
சிக்கன் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாதுகாப்பான உணவு இதனால் எந்த தீங்கும் ஏற்படுவது இல்லை. சிக்கனுடன் தொடர்புடைய ஆபத்து லிஸ்டீரியா எனப்படும் தொற்றுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியா ஆகும்.
இது அசுத்தமான கோழியில் காணப்படுகிறது, மேலும் இது லிஸ்டீரியோசிஸ் எனப்படும் தொற்றுநோயை ஏற்படுத்துகிறது.
கர்ப்பிணிப் பெண்களில் லிஸ்டீரியோசிஸ் தொற்று இருந்தால் குறைப்பிரசவம், கருச்சிதைவுகள், புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தொற்று போன்ற அபாயத்தை அதிகரிக்கிறது.
ஆய்வுகளின் படி, பிரசவத்திற்கு முந்தைய லிஸ்டீரியோசிஸ் தொற்று இருந்தால் 22% குழந்தை பிறந்து இறப்புக்கு காரணமாகிறது. கர்ப்பிணிப் பெண்களில் லிஸ்டீரியா நோய்த்தொற்றுகள் பொதுவானவை அல்ல.
இருப்பினும், கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பமாக இல்லாத பெண்களை விட அதிகமான தொற்றுநோய்க்கு ஆளாகிறார்கள்.
இந்த பாக்டீரியா 160 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் உயிர் வாழ முடியாது. அதனால்தான், பாக்டீரியாவை அகற்றுவதற்காக, சிக்கனை சாப்பிடுவதற்கு முன், நன்றாக சமைக்க அறிவுறுத்தப்படுகிறது.
ஒரு கர்ப்பிணிப் பெண் நன்கு சமைத்த சிக்கனை மட்டுமே உட்கொள்ள வேண்டும் அரை குறையாக வேகவைத்த கோழியை உட்கொள்வதைத் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் உங்கள் உணவில் எந்த உணவுப் பொருளையும் சேர்க்க முடிவு செய்வதற்கு முன், உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.
முடிவுரை
கர்ப்ப காலத்தில் சிக்கன் (chicken during pregnancy in tamil) சாப்பிடுவது பாதுகாப்பானது, எனவே கர்ப்ப காலத்தில் எந்த உணவை சாப்பிடலாம் எந்த உணவை சாப்பிட கூடாது என்பதை தெரிந்து கொள்ளுவது அவசியம்.
எந்த உணவை சாப்பிட்டாலும் அதை அளவோடு எடுத்துக்கொள்ளுவது முக்கியம். மேலும் உங்களுக்கு ஏற்படும் கர்ப்ப கால சந்தேகங்களுக்கு இப்போதே ஜம்மி ஸ்கேன் மையத்தை தொடர்பு கொண்டு உங்களின் வருகையை முன்பதிவு செய்து கர்ப்பத்தை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.