மாதவிடாய் வருவதற்கு முன்பு, ஆரம்பகால கர்ப்ப அறிகுறிகள் (Early Signs of Pregnancy Before Missed Periods in Tamil) ஒவ்வொருவருக்கும் வேறுபடுகின்றன. அவை பெரும்பாலும் மாதவிடாய் முன் ஏற்படும் நோய் அறிகுறி (PMS) போன்ற நிலைகள் மற்றும் மாற்றங்கள் ஏற்படுத்தும் அறிகுறிகளைப் போலவே இருக்கும்.
மனித கோரியானிக் கோனாடோட்ரோபின் என்கிற ஹார்மோன் (hCG) கர்ப்பத்தின் முதல் அறிகுறிகளில் பலவகை மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
இதன் விளைவாக, சில பெண்கள் ஆரம்பகால கர்ப்ப அறிகுறிகளைப் (Early Signs of Pregnancy Before Missed Periods in Tamil) அனுபவிக்கலாம், மற்றவர்கள் எந்த அறிகுறிகளையும் அனுபவிப்பதில்லை.
மாதவிடாய் ஏற்படுவதற்கு முன் கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறிகள் (Early Signs of Pregnancy Before Missed Periods in Tamil) எப்படி இருக்கும் என்பதை இந்த வலைப்பதிவில் அறிந்து கொள்ளலாம்.
மாதவிடாய் வருவதற்கு முன்பு ஏற்படும் கர்ப்ப அறிகுறிகள் – Early Signs of Pregnancy Before Missed Periods in Tamil
1. கருபதித்தல்
மாதவிடாய் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு கருபதித்தல் நிகழ்கிறது. கருவுற்ற கரு முட்டை கருப்பையின் உள்புறத்தில் கருப்பதித்தல் ஏற்படும் போது கர்ப்பம் தொடங்குகிறது.
கருபதித்தல் நடக்கும் போது hCG ஹார்மோன் உற்பத்தியைத் உடல் தூண்டுகிறது. இந்த ஹார்மோன் உற்பத்தி கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் குறைந்த அளவு இருக்கும் பிறகு உடல் படிப்படியாக அதிக அளவில் உற்பத்தி செய்கிறது.
எனவே, ஒரு பெண் மாதவிடாய் எதிர்பார்க்கும் நேரத்தில் hCG அளவு குறைவாக இருக்கும். இந்த குறைந்த அளவுகள் காரணமாக, சில பெண்கள் எந்த அறிகுறிகளையும் கவனிக்க மாட்டர்கள்.
2. குமட்டல் மற்றும் வாந்தி
மிகவும் பொதுவான ஆரம்ப கர்ப்ப அறிகுறிகளில் குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை அடங்கும்.
பல கர்ப்பிணிப் பெண்கள் குமட்டல் மற்றும் வாந்தியெடுத்தல் அவர்கள் பசியாக இருக்கும்போது அல்லது இரத்தத்தில் சர்க்கரை குறைவாக இருக்கும்போது ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
எனவே, உணவுக்கு இடையில் அல்லது பசியுடன் எழுந்திருக்கும் போது குமட்டல் அறிகுறிகளைக் கவனிக்கும் பெண்கள் கர்ப்பமாக இருக்கலாம்.
3. மார்பகங்கள் உணர்திறன் மாறுபடுதல்
ஆரம்ப கர்ப்ப காலத்தில் ஒரு பெண் கவனிக்கக்கூடிய மாற்றங்களில் ஒன்று வலி மிகுந்த மார்பகங்கள் மற்றும் தொடுவதற்கு மென்மையாக உணரலாம், மேலும் இயல்பை விட மார்பகங்கள் கனமாக இருப்பதை உணரலாம்.
உடலில் புரோஜெஸ்ட்டிரோன் அளவு அதிகரிப்பதே இதற்குக் காரணம். இந்த அறிகுறி கர்ப்பம் முழுவதும் தொடரலாம் அல்லது முதல் சில வாரங்களுக்குப் பிறகு குறையலாம்.
4. சோர்வு
கர்ப்பத்தின் ஆரம்பத்தில் அல்லது மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு உடல் சோர்வு பொதுவானது மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் கர்ப்பத்தில் இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்ததத்தின் அளவு குறைவதால் சோர்வு ஏற்படுகிறது.
5. பெண்ணுறுப்பில் சளி போன்ற திரவம் வெளிவருதல்
ஆரம்பகால கர்ப்பத்தில் அல்லது மாதவிடாய் தொடங்குவதற்கு முன்பு யோனி வெளியேற்றத்தில் மாற்றம் அல்லது அதிகமாக பெண்ணுறுப்பில் சளி போன்ற திரவம் வெளிவருவதை கவனிக்கலாம்.
இது அதிகரித்த கர்ப்பகால ஹார்மோன்கள் மற்றும் யோனியில் ஏற்படும் இரத்த ஓட்டம் காரணமாக நிகழ்கிறது.
6. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
மாதவிடாய்க்கு முன்பு உங்களுக்கு கருப்பதித்தல் நடந்து இருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிப்பது நிகழும்.
பெண்ணின் உடலில் உள்ள இரத்தத்தின் அளவை அதிகரிப்பதால், சிறுநீரகங்கள் வழக்கத்தை விட அதிக திரவத்தை சுரக்கிறது அல்லது சிறுநீர்ப்பையில் அதிக திரவம் இருக்கும், இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும்.
7. அதிகரிக்கும் உடல் வெப்பநிலை
பொதுவாக ஒரு பெண் காலையில் எழுந்தவுடன் தெரியும் உடல் வெப்பநிலை (BBT) அவள் முழுமையாக ஓய்வில் இருக்கும்போது ஏற்படும் சரியான உடல் வெப்பநிலையாகும்.
அண்டவிடுப்பின் பிறகு அதாவது 18 நாட்களுக்கு பிறகு இந்த அடிப்படை உடல் வெப்பநிலை அதிகரித்து இருந்தால் இது மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.
8. வயிறு பிரச்சனை
சில சந்தர்ப்பங்களில், வயிறு பிரச்சனை கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறியாகும். கர்ப்பிணிப் பெண்ணின் செரிமான அமைப்பு ஹார்மோன்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் காரணமாக மெதுவாக இயங்கலாம், இது வீக்கம், மலச்சிக்கல் அல்லது வாயுவை ஏற்படுத்தும்.
9. தலைவலி
மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு அடிக்கடி தலைவலி ஏற்படும்.
கர்ப்ப காலத்தில் தலைவலி மிகவும் பொதுவான அசௌகரியங்களில் ஒன்றாகும் மேலும் உங்கள் கர்ப்ப காலத்தில் எந்த நேரத்திலும் ஏற்படலாம், இவை முதல் ட்ரைமெஸ்டர் மற்றும் மூன்றாவது ட்ரைமெஸ்டர் காலங்கள் வரை மிகவும் பொதுவானதாக இருக்கும்.
10. உணவுகளில் ஏற்படும் விருப்பம் மற்றும் வெறுப்பு
கர்ப்பத்தில் ஆரம்ப காலத்தில் உணவுகளில் விருப்பம் மற்றும் வெறுப்பு ஏற்படும் மேலும் சில சமயம் உங்களுக்கு மிகவும் பிடித்த உணவு பிடிக்காமல் போகும், இது பொதுவானது தான் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படலாம்.
முடிவுரை
ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்ப அறிகுறிகள் மாறுபடும் (Early Signs of Pregnancy Before Missed Periods in Tamil). அவை மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு இருக்கும் நோய் (PMS) அறிகுறிகளைப் போலவே இருக்கின்றன. அதனால்தான், இதுபோன்ற அறிகுறிகளில் மட்டுமே ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதை சொல்வது என்பது சாத்தியமானது இல்லை.
நீங்கள் கர்ப்பமாக இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால் உங்கள் மாதவிடாய் வருவதற்கு முப்பு வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்து சரியான முடிவுகளை தெரிந்து கொண்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது சிறந்த முறையாகும்.
மேலும் உங்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் கர்ப்பகால அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையை செய்வதற்கு இப்போதே ஜம்மி ஸ்கேன் மையத்தை தொடர்பு கொள்ளவும்.