கருத்தடை (Contraception in Tamil) என்றால் என்ன ? கருத்தடை பற்றி தெரிந்து கொள்க:
கருத்தடை (Contraception in Tamil) என்பது கர்ப்பத்தை கருவுறுதலை தடை செய்வது. குழந்தைப்பேறு வேண்டாம் என்று சில காலத்துக்கு தள்ளிபோடும் தம்பதியர்கள் பலரும் கருத்தடை குறித்து தெரித்துகொள்ள வேண்டும்.
சிலர் ஒரு குழந்தை பிறந்ததும் குழந்தைபேறை தள்ளிபோட விரும்புவார்கள். இன்னும் சிலர் இரண்டு குழந்தைக்கு பிறகு கருத்தடை செய்ய விரும்புவார்கள்.
பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள்
பெண்கள் கருத்தரிக்க விரும்பாத நிலையில் மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் கருத்தடை மாத்திரைகளை எடுத்துகொள்ளலாம். இந்த மாத்திரைகள் பாதுகாப்பானது. தினமும் இந்த மாத்திரைகள் எடுத்துகொள்ள வேண்டும்.
ஒரு நாள் தவறினாலும் பலனில்லாமல் போய்விடும். மேலும் இந்த மாத்திரைகளை நிறுத்தும் போதும் சுயமாக நிறுத்தாமல் மருத்துவரின் ஆலோசனையோடு தான் நிறுத்த வேண்டும். ஏனெனில் இது சுழற்சி முறை என்பதால் குறிப்பிட்ட நாட்கள் வரை போட்ட பிறகு தான் நிறுத்த வேண்டும்.
இல்லையெனில் ஹார்மோன் சுழற்சியில் மாற்றம் உண்டாக கூடும். பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் எப்போதும் பாதுகாப்பானவை. இவை பக்க விளைவை உண்டாக்காது.
ஆணுறை
ஆண்கள் பயன்படுத்தும் கருத்தடை சாதனங்களில் மிக முக்கியமானது இது. கருவுறுதலை தடுக்கும் வழிமுறைகளில் இது முக்கியமானது. பிறப்பு கட்டுப்பாட்டு முறைகளை தடுக்கும் நிலையில் இது சரியான தேர்வாக இருக்கும்.
ஆணுறை சரியாக தேர்வு செய்ய வேண்டும். மேலும் அதை பொருத்துவது குறித்தும் விழிப்புணர்வு கொண்டிருக்க வேண்டும். சரியான அளவு ஆணுறையை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
தற்போது ஆணுறைகள் கூட பலவிதமான ஃப்ளேவர்களில் வருகிறது என்றாலும் கூட தரமானதை வாங்கி அணிவது அவசியம். ஆணுறையை பயன்படுத்திய பிறகு மீண்டும் மீண்டும் பயன்படுத்த கூடாது.
ஆணுறை பயன்படுத்துவதும் எளிது என்பதால் கருத்தடைக்கு ஆணுறை சிறந்த தீர்வாக இருக்கும். மேலும் ஆணுறை அணியும் போது இருவருக்குமே பாதுகாப்பு. இது பாலியல் தொற்று நோய் உண்டாகாமலும் தடுக்கும்.
மேலும் இதை தெரிந்து கொள்ள: சீக்கிரம் கர்ப்பம் அடைவது எப்படி?
பெண் ஆணுறை
ஆண்களை போன்றே பெண்களுக்கும் பெண் ஆணுறை உண்டு. இது யோனிக்குள் செலுத்தப்படக்கூடியது. ஆண் ஆணுறைகள் உடலுறவுக்கு பிறகு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
ஆனால் பெண் ஆணுறைகள் கடினமானது அல்ல. இது ஈரப்பதமானாலும் சிதையாது. மெல்லிய பொருள்களால் தயாரிக்கப்படும் பெண் ஆணுறைகள் ஆண்களின் விந்தணுக்களை உள்ளே செல்லாமல் தடுக்கும்.
பெண்களின் உடல் எடைக்கேற்ப பல்வேறு அளவுகளில் இவை கிடைக்கிறது.
பெண் ஆணுறையின் இரண்டு பக்கமும் வளையப்பகுதி இருக்கும். ஒரு பக்கத்தில் முனை நகராமல் இருக்கும்படியும் மற்றொரு முனையானது யோனிக்குள் செல்லும் வரையிலும் இருக்கும்.
இதை டேம்பன் போல் பொருத்திகொள்ளலாம். பெண் ஆணுறை குறித்த விழிப்புணர்வு நம் நாட்டில் குறைவாக தான் உள்ளது. இதை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று சரியான முறையில் பயன்படுத்துவது அவசியம்.
கருத்தடை (Contraception in Tamil) க்ரீம்கள்
ஆண்களின் விந்தணுக்களை அழிக்ககூடிய ரசாயனங்கள் கலந்த க்ரீம் வகைகள், ஜெல்லிகள், களிம்புகள், மாத்திரைகள் கிடைக்கிறது. இதை பெண் உறுப்பில் கர்ப்பபையின் வாய்ப்பகுதியில் இதை தடவி கொள்ள வேண்டும்.
பொருத்தி கொள்ள வேண்டும். இதனால் ஆண்களின் விந்தணுக்கள் உறவின் போது பெண் உறுப்புக்குள் செல்லாமல் தடுக்கப்படுகிறது. இதனால் கரு உருவாகாமல் தடுக்கப்படுகிறது.
துரதிஷ்டவசமாக இவை கரு உருவாவதை நிச்சயம் தடுத்துவிடும் என்று சொல்லமுடிவதில்லை. பயன்படுத்தும் முறை, அதன் கால் நேரம் இவற்றில் அறியாமல் செய்யும் தவறு கூட கருவுறுதலை மேம்படுத்திவிடுகிறது.
கருத்தடை ஊசி
இது புரொஜெஸ்டிரான் ஹார்மோனில் தயாரிக்கப்பட்ட மருந்து. இது ஊசியாக பயன்படுத்தப்படுகீறது. இதை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை போட்டுகொள்ள வேண்டும். எனினும் இதை தொடர்ந்து வருடக்கணக்காக பயன்படுத்த முடியாது.
ஏனெனில் இது மாதவிலக்கை சீரற்று ஆக்கும். எலும்புகளையும் பலவீனமாக்கிவிடும்.
கருத்தடைக்கு (Contraception in Tamil)உள்ளே பொருத்தும் சாதனம்
கர்ப்பபைக்குள் பதிவிடப்படும் லூப் (Loop) போன்ற கருத்தடை சாதனம். செம்பு கலந்த காப்பர் டி (Copper T) போன்ற மற்றொரு சாதனம், ஹார்மோன் கலந்த (LNG) என உங்கள் உடலுக்கு தேவையான ஒன்றை மருத்துவரின் ஆலோசனையோடு நீங்கள் பொருத்திகொள்ள வேண்டும். மாதவிலக்கு முடிந்ததும் கர்ப்பபைக்குள் இதை பொருத்தி கொள்ள வேண்டும்.
பிரசவத்துக்கு பிறகு இதை பொருத்துவதாக இருந்தால் இரண்டு மாதங்களுக்கு பிறகு இதை பொருத்துவார்கள். எனினும் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் உரிய இடைவேளையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இது இடம் மாறிவிட்டால் உடனடியாக வேறு மாற்றும்படி அறிவுறுத்துவார்கள்.
ஆண்களுக்கு நிரந்தர கருத்தடை
ஆண்களுக்கு நிரந்தர கருத்தடையாக செய்யப்படுவது வாசக்டமி என்று சொல்லகூடிய நிரந்தர கருத்தடை முறை. இந்த முறையில் ஆணின் விரைப்பையிலிருந்து விந்தணுக்களை சுமந்துவரும் விந்தணுச் சேமிப்புகுழல்களை வெட்டிவிடுவதால் விந்தணுக்கள் சேமிக்கப்படுவதும் கிடையாது. இது சுலபமானதும் கூட.
எனினும் பல ஆண்கள் இந்த கருத்தடை செய்து கொண்டால் உறவில் நாட்டமில்லாமல் போய்விடும் என்று தயங்குவதுண்டு. ஆனால் இதனால் உறவில் எவ்விதமான தடையும் இருக்காது.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை
இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு பெண்களே விரும்பி கருத்தடை(Contraception in Tamil) அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள்.
லேப்ராஸ்கோப்பி மூலம் பெண்ணின் இரண்டு கருக்குழாய்களையும் வெட்டிஅதை கருப்பையோடு இணையவிடாமல் செய்து விடுவார்கள். பிரசவத்துக்கு பிறகு இரண்டு அல்லது மூன்று நாட்களில் இந்த அறுவை சிகிச்சை செய்வார்கள்.
ஆண் பெண் இருவருக்குமே நிரந்தர கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பிறகு மீண்டும் கருத்தரிக்க விரும்பினால் அதற்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்வார்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெட்டிய குழாய்களை மறுபடியும் இணைப்பார்கள்.
நீங்கள் தற்காலிகமாக கருத்தடை செய்து கொள்ள விரும்பினால் உங்கள் குடும்ப மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.