கெமிக்கல் பிரக்னன்ஸி (chemical pregnancy in tamil) அதாவது இரசாயன கர்ப்பம் என்பது, கர்ப்பத்தின் ஆரம்பதில் ஏற்படும் கருச்சிதைவு ஆகும்.
மாதவிடாய் தவறிய பிறகு விரைவில் கருச்சிதைவு ஏற்படுவதால், பலர் தங்களுக்கு ஆரம்ப கருச்சிதைவு ஏற்பட்டதை தெரியாமலே இருக்கலாம்.
கெமிக்கல் பிரக்னன்ஸி (chemical pregnancy in tamil) மற்றும் சரியான மருத்துவ கர்ப்பத்தை எப்படி தெரிந்து கொள்ளலாம்?
முதல் ஐந்து வாரங்களுக்குள் கரு, மனித கோரியானிக் கோனாடோட்ரோபிக் (hCG) ஹார்மோனை உற்பத்தி செய்யும். உங்கள் hCG ஹார்மோன் அளவுகள் இந்த ஐந்து வாரத்தில் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
சரியான மருத்துவ கர்ப்பமாக இருந்தால் உங்கள் hCG அளவுகள் படிப்படியாக அதிகரிக்கும். மருத்துவர் கருவின் வளர்ச்சி மற்றும் இதயத் துடிப்பை ஆறு அல்லது ஏழு வாரங்களுக்கு பிறகு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் பார்க்க மற்றும் கேட்க முடியும்.
கெமிக்கல் பிரக்னன்ஸியில் ஐந்து வாரத்தில் கரு வளர்ச்சியை நிறுத்துவதால், உங்கள் hCG அளவு ஐந்து வாரத்திற்கு பிறகு படிப்படியாக குறையும்.
கெமிக்கல் பிரக்னன்ஸி (chemical pregnancy in tamil)அறிகுறிகள்
ஆரம்பகால கர்ப்ப பரிசோதனையானது லேசான கோடுடன் சரியான முடிவைக் காட்டும் போது கெமிக்கல் பிரக்னன்ஸி சில நேரங்களில் தெரிந்துகொள்ள முடியும், ஆனால் பின்னர் ஒரு வாரத்தில் அல்லது இரண்டு நாட்களுக்குள் எதிர்மறையான கர்ப்ப பரிசோதனை முடிவை கொடுக்கிறது.
வீட்டில் கர்ப்ப பரிசோதனைகள் செய்து பலர் தாங்கள் கர்ப்பமாக இருப்பதை மிகவும் சீக்கிரம் கண்டுபிடித்துள்ளனர் சில நேரம் அவர்கள் எதிர்பார்க்கும் மாதவிடாய்க்கு முன்பே.
இரசாயன கர்ப்பம் நிகழும்போது, கருவுற்ற முட்டையின் செல்கள் போதுமான கர்ப்ப ஹார்மோனை hCG (மனித கோரியானிக் கோனாடோட்ரோபின்) உற்பத்தி செய்து நேர்மறையான கர்ப்ப பரிசோதனை முடிவைப் பெறுகின்றன, ஆனால் பின்னர் கரு வளர்ச்சியை நிறுத்துகிறது.
மேலும் படிக்க : எப்போது கர்ப்ப பரிசோதனை செய்ய வேண்டும்
கெமிக்கல் பிரக்னன்ஸியுடன் மாதவிடாய் இரத்தப்போக்கு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம், இது பெரும்பாலும் ஒரு சாதாரண மாதவிடாய் போன்றே இருக்கும். இரசாயன கர்ப்பத்தின் பிற அறிகுறிகள் பின்வருமாறு:
- இரத்த பரிசோதனையில் குறைந்த hCG அளவுகள் காட்டுவது
- லேசான வயிற்றுப் பிடிப்பு அல்லது வழக்கத்தை விட அதிக அளவு வயிறு பிடிப்புகள் ஏற்படுவது
- சாதாரண மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு லேசான இரத்த புள்ளிகள் தோன்றுவது, இது கரு பதித்தல் இரத்தப்போக்கு அல்லது ஆரம்ப கர்ப்பத்தில் ஏற்படும் இரத்த புள்ளிகளை விட வேறுபட்டு இருக்கும்.
- கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் அளவுகள் இரசாயன கர்ப்பத்தில் குறைவாக இருப்பதால், சோர்வு அல்லது குமட்டல் போன்ற ஆரம்ப கால கர்ப்பத்தின் பிற பொதுவான அறிகுறிகள் ஏற்படாது.
ஒரு இரசாயன கர்ப்பம் பொதுவாக உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், அது மன உளைச்சலை ஏற்படுத்தும்.
இரசாயன கர்ப்ப (chemical pregnancy in tamil) ஏற்பட காரணங்கள்
கெமிக்கல் பிரக்னன்ஸிக்கான சரியான காரணம் பொதுவாக அறியப்படவில்லை என்றாலும், பல சந்தர்ப்பங்களில், கருவுற்ற முட்டையில் ஒருவித அசாதாரணம் இருப்பதால் கெமிக்கல் பிரக்னன்ஸி ஏற்படுகிறது இதற்கான சில காரணங்கள்
- ஹார்மோன் அளவுகள் அசாதாரணமாக இருப்பது
- கருப்பைக்கு வெளியே கரு பதித்தல் அல்லது கரு பொருத்துதல் நடைபெறுவது
- நோய் தொற்றுகள், கிளமிடியா அல்லது சிபிலிஸ்
- கருப்பையில் ஏற்படும் அசாதாரணங்கள்
- இரத்தம் உறைதல் கோளாறு இருப்பது
- கருப்பை சுவர் மிகவும் மெல்லியதாக இருப்பது
- விந்தணுவில் உள்ள டி.என்.ஏவில் ஏதும் பிரச்சனைகள்
- நீரிழிவு நோய்
- தாயின் வயது 35 அல்லது அதற்க்கும் மேல் இருக்கும் போது
- பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்)
- தைராய்டு கோளாறுகள்
ஒரு இரசாயன கர்ப்பம் நிகழ்ந்து கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால், உங்கள் அடுத்த கர்ப்பம் சாதாரணமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கருச்சிதைவுகளைச் அனுபவித்து இருந்தாலும், உங்கள் கருத்தரித்தல் மற்றும் ஆரோக்கியமான கர்ப்பத்தைத் தாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
கெமிக்கல் பிரக்னன்ஸி (chemical pregnancy in tamil) சிகிச்சைகள் என்ன?
இரசாயனக் கர்ப்பங்கள் (chemical pregnancy in tamil) ஆரம்பத்திலேயே நிகழ்கின்றன, அவை பொதுவாக கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன மற்றும் சிகிச்சை தேவையில்லை.
ஒரு தடவை கெமிக்கல் பிரக்னன்ஸி நடந்தால், தம்பதிகள் மீண்டும் கர்ப்பம் தரிக்க முயற்சி செய்வதற்கு பொதுவாக எதுவும் தடையாக இருக்காது.
உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இரசாயன கர்ப்பம் இருந்திருந்தால், சாத்தியமான அடிப்படை காரணங்களை கண்டறிய மற்றும் மற்றொரு ஆரம்ப கால கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தை குறைக்க உங்கள் மருத்துவரை உடனடியாக அணுகவும்.
முடிவுரை
நீங்கள் கருத்தரிக்க முயற்சிக்கிறீர்கள் மற்றும் இரசாயன கர்ப்பம் குறித்து கவலையை அனுபவித்தால் மருத்துவர்கள் ஆரம்பகால கர்ப்ப பரிசோதனைக்கு உங்களுக்கு ஆலோசனை கூறுவார்கள்.
தேவையற்ற மன உளைச்சலைத் தவிர்ப்பதது மற்றும் மாதவிடாய் தாமதமாகும் வரை காத்திருப்பது நல்லது. ஒருவரின் இரசாயன கர்ப்பத்திலிருந்து கருச்சிதைவு ஏற்படுவதை தவிர்க்க முடியாதது என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
நீங்கள் அதை நிறுத்தவோ அல்லது தடுக்க முடியாது அதே நேரம் இந்த கெமிக்கல் பிரக்னன்ஸி ஏற்படுவது யாருடைய தவறும் இல்லை. மேலும் உங்களுக்கு கெமிக்கல் பிரக்னன்ஸி பற்றிய சந்தேகங்கள் மற்றும் மருத்துவ ஆலோசனையை பெறுவதற்கு இப்போதே ஜம்மி ஸ்கேன் மையத்தை தொடர்பு கொள்ளவும்.