மாதவிடாய் நாள் வருவதை தள்ளிப்போட மாத்திரைகள் பயன்படுத்தலாமா?

CWC
CWC
9 Min Read

மாதவிடாய் வருவதை தள்ளிபோட மாத்திரைகள் பயன்படுத்தலாமா? (can I take pills to stop my period) பக்கவிளைவுகள் உண்டாகுமா? எப்படி தடுப்பது?மருத்துவர் சொல்வது என்ன?

மாதவிடாய் என்பது பெண்களுக்கு அசெளகரியமான நாட்கள் என்று சொல்வதுண்டு. பெண் குழந்தை பருவமடைந்த பிறகு முதல் இரண்டு வருடங்களில் மாதவிடாய் சுழற்சி சீராகதொடங்கிவிடும். இது அவர்களது 55 வயது வரை நீடிக்க கூடும்.

தற்போதைய காலத்தில் சில பெண்களுக்கு 40 வயது முதலே இந்த மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் உண்டாகிவிடுகிறது. மாதவிடாய் நிற்கும் காலம் தான் மெனோபாஸ் என்றழைக்கப்படுகிறது. மெனோபாஸ் என்பது மாதவிடாய் நிற்றல் என்று நிம்மதியான மூச்சு விட முடியாது. ஏனெனில் இது மாதவிடாய் சுழற்சிகளை காட்டிலும் மோசமான அறிகுறிகளை உண்டாக்கலாம். இதை தனி கட்டுரையாக பார்க்கலாம்.

இப்போது மாதவிடாய் சுழற்சியை வராமல் தடுக்க மாத்திரைகள் எடுக்கலாமா? (can I take pills to stop my period) யாரெல்லாம் எடுத்துகொள்ளலாம்? எப்போது பலன் அளிக்கும்? என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்கும்? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

’விரும்பும் நாட்களில் மாதவிடாய் சுழற்சி வரவேண்டும் என்று சில பெண்கள் நினைக்கிறார்கள். இது சரியா?’

மாதவிடாய் சுழற்சி என்றால் என்ன?

மாதவிடாய் சுழற்சி என்பது பெண் பருவமடைதலுக்கு பிறகு ஒவ்வொரு 28 நாட்களிலும் வரக்கூடிய நிகழ்வு. இது ஒவ்வொரு பெண்ணுக்கும் 28 முதல் 35 நாட்களுக்கு இடையில் இவை வரலாம். சிலருக்கு இந்த நாட்களை தாண்டியும் மாதவிடாய் சுழற்சி வரலாம். எல்லா மாதங்களிலும் இவை ஒரே நாளில் சீராக வரும் என்பதை சொல்ல முடியாது.

உடலில் ஹார்மோன்களின் சரியான சுழற்சிக்கு இடையில் வரக்கூடிய இந்த மாதவிடாய் சுழற்சி இயல்பான மற்றும் ஆரோக்கியமான பகுதியாகும். உங்கள் ஹார்மோன் செயல்பாட்டை மாற்ற பாதுகாப்பான மற்றும் நம்பகமான விஷயங்கள் உடலில் உள்ளன,. இதுதான் மாதவிடாய் சுழற்சி வருவதற்கு பொறுப்பேற்கின்றன.

ஆனால் பலரும் இந்த மாதவிடாய் சுழற்சி அவர்கள் விரும்பும் நேரத்தில் வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த மாதவிடாய் சுழற்சி வராமல் தடுக்கலாமா?

மாதவிடாய் சுழற்சியை தடுக்கலாமா?

சில பெண்கள் பிறப்பு கட்டுப்பாட்டு தடைகளை பயன்படுத்தும் போது அவர்களது மாதவிடாயை தவறவிடலாம். மாதவிடாய் தள்ளி போக செய்யும் ஹார்மோன் மாத்திரைகள் (Pills Be Used to Delay Your Period) மற்றும் இணைப்புகள் இதேபோல் வேலை செய்கின்றன.

பொதுவாகவே பெண்கள் மாதவிடாய் சுழற்சியை தள்ளி வைக்க நினைக்க கூடாது. ஏனெனில் உடல் இயற்கையாக நடக்கும் இந்த மாற்றத்தை நாம் விரும்பியபடி மாற்றி அமைத்தால் அவை பிரச்சனையை உண்டு செய்யலாம்.

தவிர்க்க முடியாத சூழலில் அதாவது ஒரு பெண் அதிக கனமான மாதவிடாய் காலங்களை வலியோடு எதிர்கொள்ளும் போது அவர்கள் பெரிய விழாக்களில் கலந்து கொள்ளும் போது அல்லது அவர்களே விழா நாயகியாக திருமணப்பெண்ணாக இருக்கும் போது இதை தவிர்க்க நினைக்கலாம். அதோடு இவை அடிக்கடி செய்ய வேண்டியிராது என்பதால் இதை செய்வதில் பிரச்சனையில்லை.

மாதவிடாய் வருவதை தடுத்து நிறுத்தும் வகையில் மருந்துகளை சுயமாக எடுக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பிறகே எடுக்க வேண்டும். சரியான முறைகளை பயன்படுத்தி மாதவிடாய் தாமதப்படுத்துவது உண்மையில் பாதுகாப்பான விஷயம் தான். ஆனால் இவை எல்லாமே தற்காலிகமானவையாக இருக்க வேண்டும். அடிக்கடி விரும்பும் வகையில் மாதவிடாய் காலங்களை மாற்றிக்கொள்வதற்கல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மாதவிடாய் மாத்திரைகள் எடுக்கலாமா – Can I take pills to stop my period?

மருத்துவர்களே கண்டிப்பாக தவிர்க்க பரிந்துரைக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று. மாதவிடாய் தவிர்க்க மாத்திரைகள் (can I take pills to stop my period) எடுத்துகொள்வது எளிதாக இருக்கலாம். ஆனால் அதன் பக்கவிளைவுகள் குறித்து நீங்கள் அறிந்தால் கண்டிப்பாக மாத்திரை பக்கம் இருக்க மாட்டீர்கள். எனெனில் இது மோசமான பழக்கம் என்று சொல்லலாம்.

மாதவிடாய் கால தாமதமாக்கும் மாத்திரைகள் ஒப்பீட்டளவில் பொதுவானவை. இவை மனநிலை மாற்றங்கள் மற்றும் முகப்பரு போன்ற சரும பாதிப்புகளை உண்டாக்க செய்யலாம். பொதுவாக மாதவிடாய் வருவதற்கு முன்பு சில அறிகுறிகள் தென்படும்.

  • மார்பக மென்மை
  • வீக்கம்
  • மனநிலை மாற்றங்கள்

போன்றவை தென்படும். ஆனால் மாதவிடாய் தாமதமான மாத்திரைகள் எடுக்கும் போது கனமான காலம் இருக்கும். நீடித்த வலிமிகுந்த காலங்கள் உங்கள் துயரத்தை அதிகரிக்க செய்யும்.

மாதவிடாய் மாத்திரைகள் என்ன செய்யும்?

மாதவிடாய் தாமதமாக தள்ளிப்போட நோரேதிஸ்ட்ரோன் பொதுவாக பரிந்துரைக்கப்படும் மருந்து ஆகும். கிறிஸ்மெட் ஜர்னல் ஆஃப் ஹெல்த் அண்ட் ரிசர்ச்சில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த மருந்து அதிகப்படியான அளவு எடுக்கும் போது இந்த அறிகுறிகள் உண்டாகலாம் என்கிறது.

போன்ற அறிகுறிகளை உண்டாக்குகிறது. எல்லா பெண்களுக்கும் இந்த அறிகுறிகள் பொருந்தாது என்றாலும் ஒவ்வொருவரது உடல் தன்மைக்கேற்ப இவை மாறுபடலாம். அதனால் மாதவிடாய் சுழற்சி தாமதமாக மருத்துவரை சந்தித்து பரிசோதனை பிறகே எந்த மருந்தையும் எடுக்க வேண்டும்.

இந்த மருந்துகளில் செயற்கை புரோஜெஸ்ட்ரான் அல்லது ஈஸ்ட்ரோஜன் உள்ளது. அதிகமாக இதை பயன்படுத்தும் போது வருங்காலத்தில் அந்த பெண்ணின் மாதவிடாய் ஓட்டத்தை சீர்குலைக்கும்.

மாத்திரைகள் எடுப்பதால் உண்டாகும் விளைவுகள் குறித்து ஆய்வுகள்!

மாதவிடாய் தாமதமாக எடுத்துகொள்ளும் மாத்திரைகள் உண்டாக்கும் விளைவுகள் குறித்து ஆய்வுகள் சொல்வதையும் தெரிந்து கொள்வோம். தேசிய புற்றுநோய் நிறுவனம் மற்றும் அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியின் கூற்றுப்படி மாத்திரைகள் நீண்ட காலம் எடுப்பது மார்பக மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்பதற்கான சான்றுகள் உள்ளன.

இது உங்களை பயமுறுத்துவதற்காக சொல்லவில்லை. உங்கள் உடலில் நீங்கள் செய்யும் மாற்றங்களில் விழிப்புணர்வு கொண்டிருப்பது அவசியம். அதோடு சுயமாக மருந்துகள் எடுப்பதும் உங்கள் பிரச்சனையை அதிகரிக்க செய்யலாம். மாத்திரைகள் இல்லாமல் மாதவிடாயை தள்ளி போட செய்யமுடியுமா என்பதையும் தெரிந்து கொள்வோம்.

மாதவிடாய் மாத்திரைகள் கர்ப்பத்தை தடுக்குமா?

”மாதவிடாய் தாமதமாக மாத்திரைகள் எடுத்த பிறகு கருத்தரிக்க வாய்ப்புண்டு என்பதை பல பெண்கள் உணருவதில்லை.”

மாதவிடாய் காலங்களை தள்ளிப்போட மாத்திரை எடுத்துகொள்ளும் பெண்கள் இந்த காலத்தில் உடலுறவு கொள்வதன் மூலம் கர்ப்பத்தை தவிர்க்க முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்த மாத்திரைகள் மாதவிடாயிலிருந்து காப்பதற்கு மட்டுமே. கர்ப்பத்திலிருந்து பாதுகாப்பதற்கல்ல என்பதை உணரவேண்டும். அதனால் குழந்தை வேண்டாம் என்று நினைக்கும் பெண்கள் பாதுகாப்பான உடலுறவு மேற்கொள்வது அவசியம்.

மாதவிடாய் தாமதம் இயற்கையாக தள்ளிபோட என்ன செய்யலாம்?

ஆப்பிள் சீடர் வினிகர் இது முகப்பரு. நெஞ்செரிச்சல், தொப்பை கொழுப்புகளுக்கு அதிசய தீர்வாக இருக்கும். இது குறித்து சில ஆய்வுகள் இதற்கு ஆதரவளிக்கின்றன. சில இல்லை. மாதவிடாய் வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு பலர் ஆப்பிள் சீடர் வினிகர் பயன்படுத்துகிறார்கள்.

மாதவிடாயை தாமதப்படுத்த ஆப்பிள் சீடர் வினிகர் பயன்படுத்தி எந்த ஆராய்சியும் இல்லை. இது பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் உள்ள பெண்களுக்கு மட்டுமே மாதவிடாய் மீது தாக்கம் ஏற்படுத்துவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்த ஆய்வு ஆப்பிள் சீடர் வினிகரானது இரத்த சர்க்கரை மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இயல்பான இனப்பெருக்க சுழற்சிகள் இல்லாத பெண்களுக்கு மாதவிடாய் உண்டாக்கலாம் என்று கண்டறிந்துள்ளது.ஆப்பிள் சீடர் வினிகர் மாதவிடாயை தாமதப்படுத்தும் என்பதற்கான ஆதாரம் இல்லை. அதோடு இதை நேரடியாக எடுக்க கூடாது. இது பற்கள் மற்றும் வாய் தொண்டையில் இருக்கும் மென்மையான திசுக்களில் எதிர்மறையான தாக்கத்தை உண்டு செய்யும். அதனால் இதை எப்போது எடுத்துகொண்டாலும் தண்ணீரில் நீர்த்து எடுக்க வேண்டும்.

உளுந்து

மாதவிடாய் அறிக்கைகள் மூலம் மாதவிடாய் வருவதற்கு முன்பு உளுந்து பருப்பை வறுத்து பொடியாக்கி சாப்பிடுவது அதை தள்ளிபோட செய்யும் என்கிறது. ஆனால் இது குறித்து நிரூபனமான ஆராய்ச்சிகள் இல்லை. அதிகமாக இவை எடுத்துகொள்வதால் வயிறு உபாதை, வீக்கம் மற்றும் வாய்வு தான் உண்டாகும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு ஆப்பிள் சீடர் சாறு போன்று அதிக அமிலத்தன்மை கொண்டது. சிட்ரஸ் பழங்கள் இரத்தப்போக்கை பின்னுக்கு தள்ள கூடும் என்று சொல்கிறது. ஆனால் இது குறித்தும் தெளிவாக ஆராய்ச்சிகள் இல்லை.

அதிக அமிலம் உள்ள உணவுகள் உங்கள் பற்கள், ஈறுகள், வாய், தொண்டை, வயிறு மற்றும் குடல்களை எரிச்சலூட்டும். இந்த முறையில் நீங்கள் விரும்பினால் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சையை சேர்த்து குடிக்கலாம்.

ஜெலட்டின்

ஊன்பசை என்று அழைக்கப்படும் இதை வெதுவெதுப்பான நீரில் கரைத்து குடிப்பது மாதவிடாயின் தொடக்கத்தை சுமார் நான்கு மணி நேரம் வரை தாமதப்படுத்தலாம்.உங்களுக்கு நீண்ட நேரம் தேவைப்பட்டால் மீண்டும் இந்த சிகிச்சையை தொடங்க வேண்டும்.

ஜெலட்டின் மாதவிடாய் தொடக்கத்தை தாமதப்படுத்துவதற்கு இயற்கை ஊக்குவியாக ஏன் பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாக இல்லை. இதை ஆதரிக்க ஆராய்ச்சிகள் இல்லை. அதிக அளவு ஜெலட்டின் குடிப்பது வீக்கம் அல்லது செரிமான கோளாறு போன்ற பக்கவிளைவுகளை உண்டாக்கலாம்.

தீவிரமான உடற்பயிற்சி

தீவிரமான அல்லது அதிகமான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மாதவிடாய் தொடங்குவது தாமதமாகலாம். மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில் அதிக உடல் உழைப்பு அல்லது இயல்பாகவே அதிக உழைப்பு கொண்டவர்களுக்கு அது சரியான நேரத்தில் தொடங்குவதில்லை.இது குறைந்த ஆற்றல் இருப்பின் அதன் விளைவாக இருக்கலாம்.

உடற்பயிற்சி மற்றும் மீட்பு ஆகிய இரண்டுக்கும் உடல் ஆற்றல் பயன்படுத்தும் போது மாதவிடாய் சுழற்சியை நிறைவேற்றுவதற்கு ஆற்றல் இருப்பு இல்லாமல் இருக்கலாம் என்பதால் இந்த நிலை உண்டாகிறது., அதனால் தான் தொழில்முறை விளையாட்டு வீரர்கள் மாதவிடாயை அடிக்கடி தவறவிடுகிறார்கள். ஒரு காலத்தை தாமதப்படுத்த உடற்பயிற்சி செய்தால் போதும் என்பதற்கான ஆராய்ச்சிகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாதவிடாய் தாமதப்படுத்த இயற்கை வைத்தியங்கள் முயற்சி செய்வது பாதுகாப்பானது. ஆனால் என்னவாக இருந்தாலும் அது குறித்து முழுமையான ஆராய்ச்சி தேவை. ஏனெனில் இயற்கை வைத்தியங்கள் பாதுகாப்பானதாக இருந்தாலும் ஆராய்ச்சிகள் அவை பயனுள்ளவை என்பதை நிரூபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இயன்றவரை மாதவிடாயை தள்ளிபோட நினைக்காதீர்கள். தவிர்க்க முடியாத காலங்களில் மட்டுமே உங்கள் காலங்களை தள்ளிப்போடலாம். அதுவும் மருத்துவர் அறிவுறுத்திய அறிவுறுத்தலின் படி.

மாதவிடாய் தாமதமாக மாத்திரைகள் எடுப்பது குறித்து மருத்துவர் சொல்வது என்ன?

பொதுவாக பல பெண்கள் மாதவிடாய் தள்ளிபோக மாத்திரைகள் கேட்டு வருவார்கள் (can I take pills to stop my period). சில பெண்கள் தனது தோழி எடுத்துகொண்ட மாத்திரையின் பெயரை கேட்டு அதை அப்படியே எடுத்துகொண்டதாக சொல்வார்கள். அதிலும் தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை மாதவிடாய் வரவில்லை என்பதால் தான் சிகிச்சைக்கு வந்ததாக சொல்வார்கள்.

இது பல இடங்களில் நடக்கிறது.இன்னும் சில பெண்கள் மாதவிடாய் தாமதமாக வருவதால் மாத்திரை எடுத்தேன். ஆனால் பத்து நாட்கள் கழித்து கர்ப்ப பரிசோதனை செய்ததில் கருவுறுதல் நிச்சயமாகிவிட்டது. ஆனால் மாத்திரைகள் எடுத்ததால் குழந்தைக்கு ஆபத்து நேரிடுமா? என்ன செய்வது என்று கவலையோடு வருவார்கள்.

முதலில் பெண்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். நமது உடலில் மெட்டபாலிசம் அதாவது வளர்சிதை மாற்றம், ஹார்மோன் சமநிலையில் செயல்படும் போது அதை தடுக்கும் வகையில் நாமே செயல்படுகிறோம். இது நல்லதல்ல. ஏனெனில் ஒவ்வொருவரது உடல் அமைப்பும், செயல்பாடும் மாறுபடும். இதை உங்கள் மருத்துவரால் மட்டுமே உணர்ந்து உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

மாதவிடாய் முன்னாடி வருவதற்கு அல்லது தாமதமாவதற்கு மாத்திரைகள் எடுத்து கொள்வது அதிலும் சுயமாக எடுத்துகொள்வது மோசமானது. இதை மருத்துவரிடம் ஆலோசித்தால் மருத்துவர் 3 நாட்களுக்கு முன்பு தொடங்கி அதற்கேற்ப அது ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை பரிந்துரைப்பார்கள். அது உங்கள் உடல் நிலை, காரணம், தாமதப்படுத்த வேண்டிய நாட்கள் போன்றவற்றை பொறுத்தது.

அதோடு உங்கள் தேவைக்கேற்ப அது புரோஜெஸ்ட்ரோன் அல்லது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் கலந்து கொடுக்கப்படும். இதன அளவு கூட்டி, குறைத்து உங்கள் தேவைக்கேற்ப மருத்துவரால் மட்டுமே வழங்கமுடியும். இனி மாதவிடாய் தாமதத்துக்கு மாத்திரைகள் போடும் போது உங்கள் உடல் மாற்றம் குறித்தும் யோசியுங்கள்.

5/5 - (206 votes)

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »