கருத்தரிக்க விரும்பி ஃபோலிகுலர் ஸ்கேன் செய்யும் எல்லா பெண்களுக்கும் இருக்கும் மிக பெரிய கேள்வி ஃபோலிகுலர் ஸ்கேன் செய்வதால் கர்ப்பத்தை உறுதிப்படுத்த முடியுமா? (Can follicular study confirms pregnancy)
ஃபோலிகுலர் ஸ்கேன் நோக்கம் ?
ஃபோலிகுலர் ஆய்வு என்பது ஒரு பெண்ணின் கருப்பையின் உள்ளே உள்ள கரு முட்டைகளை பற்றிய ஆய்வு ஆகும்.
இதன் மூலம் கரு முட்டையின் வளர்ச்சி மற்றும் தரம் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.
இந்த செயல்முறை செய்வதால், அண்டவிடுப்பின் போது ஏற்படும் சிக்கல்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்
ஃபோலிகுலர் ஆய்வு என்பது ஒரு வருடத்திற்கும் மேலாக கர்ப்பமாக இருக்க முயற்சிப்பவர்களுக்கும், PCOS மற்றும் PCOD பிரச்சினைகள் உள்ளவர்களுக்கும், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி உள்ளவர்களுக்கும், IVF, IUI போன்ற சிகிச்சைகளைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கும் இந்த ஃபோலிகுலர் ஆய்வு உதவுகிறதுஆகும்.
ஃபோலிகுலர் ஸ்கேன் செய்வதால் கர்ப்பத்தை உறுதிப்படுத்த முடியுமா? – (Can follicular study confirms pregnancy)
ஃபோலிகுலர் ஆய்வின் மூலம் உங்கள் மாதவிடாய் சுழற்சி, கருப்பை, கருமுட்டையின் தரம், மற்றும் உங்களின் அண்டவிடுப்பின் நாட்களை தெரிந்து கொள்ள முடியுமே தவிர ஃபோலிகுலர் ஸ்கேன் செய்வதால் கர்ப்பத்தை உறுதிப்படுத்த முடியாது.
ஃபோலிகுலர் ஸ்கேன் செய்து உங்கள் அண்டவிடுப்பின் நாட்களை தெரிந்து கொள்ள முடியும்.
மேலும் அண்டவிடுப்பின் நாட்களில் உடலுறவு கொண்டால், அது உங்கள் கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகப்படுத்தும்.
முடிவுரை
ஃபோலிகுலர் ஆய்வு என்பது நீங்கள் கருத்தரிக்க உதவ அண்டவிடுப்பின் நாட்களை தெரிந்து கொள்ள உதவுகிறது.
உங்கள் கர்ப்பத்தை உறுதிப்படுத்த இரத்த பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்.
ஃபோலிகுலர் ஸ்கேன் செய்வதால் உங்களின் கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகப்படுத்துமே தவிர உங்களின் கர்பத்தை உறுதி படுத்த முடியாது.
To Read in English – Can Follicular Study Confirms Pregnancy