கர்ப்பத்திற்குப் பிறகு சிறந்த முடி பராமரிப்பு

Deepthi Jammi
4 Min Read

பிரசவத்துக்கு பிறகு இளந்தாய்மார்கள் சந்திக்கும் பிரச்சனையில் முடி உதிர்வும் மற்றும் முடி பராமரிப்பு ஒன்று. இது உண்மையில் இளந்தாய்மார்களுக்கு பிரச்சனை தரக்கூடியதே.

பெண்கள் இயல்பாகவே அழகை விரும்புபவர்கள். அதிலும் கூந்தலில் பிரச்சனை என்பதை எப்போதுமே விரும்பமாட்டார்கள். 

கர்ப்பிணி பெண்கள் சத்தான உணவு வகைகள் எடுத்துகொண்டாலும் ஏன் முடி உதிர்தல் பிரச்சனை உண்டாகிறது என்னும் சந்தேகம் கர்ப்பிணிகளுக்கு உண்டாக கூடும். மகப்பேறுக்கு பிறகு முடி உதிர்வு (Postpartum Hair Loss) என்பது தற்காலிகமாக நிகழக்கூடியது தான். 

கர்ப்பத்துக்கு பிறகு முதல் சில மாதங்களில் முடி உதிர்வு இருக்க கூடும். அதே போன்று பிரசவக்காலத்துக்கு பிறகு சில மாதங்கள் வரை இந்த முடி உதிர்வு இருக்க கூடும். அதனால் கவலை கொள்ள தேவையில்லை. அதே நேரம் இழந்த முடி மேலும் அதிகரிக்காமல் இருக்க உரிய பராமரிப்பும் மேற்கொள்ள வேண்டும். 

கர்ப்ப காலத்துக்கு பிறகு முடி இழப்பு ஏன் (hair care tips for after pregnancy in tamil) இயல்பானது என்னும் காரணத்தை அறிந்துகொள்வோம். 

இளந்தாய்மார்கள் கர்ப்பத்துக்கு பிறகு முடி இழப்பு (Postpartum Hair Loss) சாதாரணமானது என்பதை மீண்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாகவே கூந்தலில் தலைமுடி உதிர்வு 15 % வரை இருக்க கூடும்.

இது தலைக்கு குளிக்கும் போது அல்லது சீவும் போது உதிரக்கூடும். இது கூந்தலின் மயிர்க்கால்களுக்கு வலு கொடுக்க கூடும். 

கர்ப்பகாலத்தில் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதால் முடி வளர்ச்சி கூடுதலாக இருக்கும். இந்த ஹார்மோன் உச்சந்தலையின் ரத்த ஓட்டம் மற்றும் சுழற்சியை அதிகரித்து கூந்தலின் வேர்களை பலப்படுத்துகிறது. இதனால் முடி உதிர்வு கர்ப்பகாலத்தில் அதிகம் இருக்காது.

ஆனால் இதுவே பிரசவக்காலத்துக்கு பிறகு உடலில் ஹார்மோன் சுழற்சியில் மீண்டும் மாற்றம் உண்டாகிறது. உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்து முடியின் மயிர்க்கால்கள் பலவீனமாகிறது. இதனால் முடி உதிர்வு அதிகமாக எளிதாக இருக்கிறது.

அதே நேரம் இது நிரந்தரமானது அல்ல. இது சில மாதங்கள் வரை நீடிக்கும். ஆறு முதல் எட்டு மாதங்களில் இவை மீண்டும் வலுவடைய தொடங்கும். இந்த முடி உதிர்தலில் மாற்றம் என்பது தற்காலிகமானது. 

இளந்தாய்மார்கள் மிக நீண்ட நெடிய கூந்தலை கொண்டிருந்து அதில் அளவுக்கு அதிகமாக முடி உதிர்வு பிரச்சனையை சந்தித்தால் அது நிச்சயம் மருத்துவரை அணுகி சரிசெய்ய வேண்டியது அவசியம்.

இதையும் தெரிந்து கொள்ள: பிரசவத்திற்குப் பிறகு உடல் எடையைக் குறைக்க 5 குறிப்புகள்!

கர்ப்ப காலத்தில் பிறகு உங்கள் தலைமுடியை எவ்வாறு பராமரிப்பது?

  • எண்ணெய் மசாஜ்
  • நல்ல ஷாம்பு மற்றும் கண்டிஷனரை தேர்வு செய்யவும்
  • இரசாயன சிகிச்சைகள் தவிர்க்கவும்
  • தலை முடியின் நுனியின் முனைகளை பராமரிக்க வேண்டும்
  • ஈரமாக இருக்கும்போது சீப்பு போட வேண்டாம்
  • உங்கள் முடி மற்றும் உச்சந்தலையின் வகையை அறிந்து கொள்ளுங்கள்
  • மிகவும் இறுக்கமான தலை அலங்காரங்களைத் தவிர்க்கவும்
  • ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்
  • மன அழுத்தம் குறையுங்கள்
  • வெந்தய விதைகள் ஊற வைத்து, அரைத்து தலையில் பயன் படுத்தலாம்

இந்த முடி உதிர்தலுக்கு என்ன மாதிரியான பராமரிப்புகள் செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வோம். பிரசவத்துக்கு பிறகு முடி உதிர்வை கட்டுப்படுத்த தனியாக சிகிச்சைகள் எதுவும் இல்லை. ஆனால் அதை பெருமளவு கட்டுப்படுத்திவிடமுடியும். 

வழக்கத்தை விட கூந்தல் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்துங்கள். அதிக இரசாயனம் கொண்ட ஷாம்புக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 

தலை குளியல் வாரம் இருமுறை செய்வது கூந்தலுக்கு நன்மை செய்யும் என்றாலும்  அடிக்கடி தலைக்கு குளிப்பது நல்லதல்ல. 

கூந்தலை சீவும் போது நெருக்கமான சீப்புகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 

இதையும் தெரிந்து கொள்ள:தாய்ப்பால் கொடுக்கும் முறைகள் என்ன?

தலை குளியலுக்கு பிறகு ஹேர் டிரையர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதே போன்று கூந்தலை இறுக்கி பிடிக்கும் அலங்காரங்கள் தவிர்க்க வேண்டும். இது கூந்தலை வேரோடு உடைத்து உதிர்வை உண்டாக்கும். 

பிரசவக்காலத்துக்கு பிறகு இளந்தாய்மார்களுக்கு  மன அழுத்தம் உண்டாவது இயல்பு. இவை அதிகரிக்காமல் பார்த்துகொண்டால் ஆரோக்கிய குறைபாடுகள் போன்று கூந்தல் உதிர்வு பிரச்சனையும் கட்டுக்குள் இருக்கும். 

கூந்தலை இறுக பின்னகூடாது என்பது போன்றே கூந்தலுக்கு அதிக அலங்காரம் செய்வதையும் தவிர்த்து இயன்றவரை சிக்கில்லாமல் வைக்கவும். 

தலை குளியலின் போதும் வேகமாக தலையை தேய்ப்பதால் அது  முடி உதிர்வை மேலும் மேலும் அதிகரிக்க செய்யும். 

உணவு முறையில் அக்கறை செலுத்துங்கள். குழந்தைக்கு தாய்ப்பால் சத்தாக கொடுக்க வேண்டும்.

பழங்கள், காய்கறிகள், புரதம் நிறைந்த உணவுகள் என எல்லாமே உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை  கொடுக்க கூடியவையே. இது முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்க கூடியவை. 

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

சுருக்கமாக என்ன மாதிரியான உணவுகள் என்பதையும் பார்க்கலாம். அடர்ந்த நிறத்தில் இருக்கும் கீரைகள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கேரட், முட்டை , மீன் போன்றவை எல்லாமே நன்மை தருபவை. வைட்டமின் சி, பீட்டா கரோட்டின், வைட்டமின் டி, ஒமேகா 3 போன்ற சத்துகள் கிடைக்கும். 

உடலில் வைட்டமின் குறைபாடுக்கு மருத்துவர் ஏதேனும்  வைட்டமின் நிறைந்த மருந்தை கொடுத்திருந்தால் தவிர்க்காமல் எடுத்துகொள்வது அவசியம்.

இவையெல்லாம் கூந்தல் உதிர்வை முழுவதுமாக கட்டுப்படுத்திவிடாது என்றாலும் கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்த கூடும்.

5/5 - (158 votes)

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Follow:
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »