கர்ப்பம் என்பது ஒரு பெண்ணுக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணத்தை கொடுக்க கூடிய கால கட்டமாகும். இந்த கால கட்டத்தில் குழந்தையின் உடல் நிலையை ஆரம்ப நிலையிலேயே பரிசோதிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
அதனால் தான் இந்த கால கட்டத்தில் தாய்மார்களுக்கு பல்வேறு ஸ்கேன் முறைகள் பரிந்துரைக்கப்படுகிறது. அதில் ஒன்று தான் இந்த அனோமலி ஸ்கேன் முறையாகும்.
அனோமலி ஸ்கேன் என்பது ஒவ்வொரு தாய்க்கும் அவர்களின் கர்ப்பகாலத்தின் 20-24 வாரங்களில் பரிந்துரைக்கப்படும் ஒரு முக்கியமான ஸ்கேன் முறையாகும்.
இந்த ஸ்கேன் முறை மூலம் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சி குறைப்பாட்டை அறிய முடியும். கருவில் உள்ள குழந்தைக்கு எதாவது ஒழுங்கற்ற வளர்ச்சி இருந்தால் அதை எளிதாக கண்டறிய முடியும்.
அனோமலி ஸ்கேனின் ரிப்போர்ட் (Anomaly scan report in tamil) மூலம் கண்டறியப்படும் விஷயங்கள் :
அனோமலி ஸ்கேன் (Anomaly scan report in tamil) மூலம் கருவில் வளரும் குழந்தையின் நஞ்சுக் கொடியின் இருப்பிடம் சரியாக உள்ளதா, குழந்தையைச் சுற்றி அமைந்துள்ள அம்னோடிக் திரவத்தின் அளவு சீராக உள்ளதா, கருவின் அளவு மற்றும் வளர்ச்சி அடைந்த கருவின் ஒவ்வொரு பகுதியும் கவனமாக ஸ்கேன் செய்து மதிப்பிடப்படுகிறது.
இந்த பரிசோதனையில் குழந்தையின் மூளை, முகம், முதுகுத் தண்டு, இதயம், வயிறு, பெருங்குடல், சிறுநீரகம் மற்றும் மூட்டுகள் போன்றவற்றை குறிப்பாக இந்த ஸ்கேன் மூலம் ஆராய்கின்றனர்.
இந்த அனோமலி ஸ்கேனின் முக்கிய குறிக்கோள் கர்ப்பத்தை சரியாக மதிப்பிடுவது, குழந்தையின் மூளை, முதுகெலும்பு மற்றும் இதய வளர்ச்சியில் ஏதேனும் அசாதாரண கோளாறு இருப்பது கண்டறியப்படுகிறது.
அனோமலி ஸ்கேனின் (Anomaly scan report in tamil) அளவீடுகள் :
அனோமலி ஸ்கேனின் மூலம் கருவின் வளர்ச்சியை மதிப்பிட முடியும். அதுமட்டுமல்லாமல் கருவின் எடையை தீர்மானிக்கவும், கருவில் உள்ள குழந்தையின் இருமுனை விட்டம் (BPD), குழந்தையின் தலை சுற்றளவு (HC), குழந்தையின் வயிற்று சுற்றளவு (AC) மற்றும் தொடை நீளம் (FL) ஆகியவற்றையும் அளவிட முடியும்.
இது குறித்து இன்னும் சற்று விளக்கமாக பார்க்கலாம்.
இருமுனை விட்டம்(BPD) :
கருவின் 13 வாரங்களுக்கு பிறகு, குழந்தையின் தலையின் இரு பக்கங்களுக்கு இடையே உள்ள விட்டம் அளவிடப்படுகிறது. இந்த விட்டத்தின் அளவானது 13 வாரங்களில் தோராயமாக 2.4 செ.மீ முதல் தோராயமாக 9.5 செ.மீ வரை உயரும்.
கர்ப்பத்தின் பிற்பகுதியில் இருமுனை விட்டத்தை அளவிடுவது நம்பகத்தன்மையற்ற ஒன்றாக கருதப்படுகிறது. காரணம் ஒரே எடை கொண்ட பல்வேறு குழந்தைகள் வெவ்வேறு தலை அளவுகளைக் கொண்டிருக்கலாம்.
எனவே குழந்தைகளின் இருமுனை விட்டம் வேறுபடுகிறது.
தலை சுற்றளவு (HC) :
கருவின் வளரும் குழந்தையின் தலை சுற்றளவானது அவற்றின் தலை சுற்றளவைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. கர்ப்பத்தின் 13 வது வாரங்களில் இந்த தலைசுற்றளவு கணக்கிடப்படுகிறது.
வயிற்று சுற்றளவு (AC) :
கர்ப்பத்தின் பிற்பகுதியில் வயிற்று சுற்றளவை கணக்கிடுவது மிகவும் அவசியம். வயதுக்கு பதிலாக, இது கருவின் அளவு மற்றும் எடையை ஒத்திருக்கிறது. இந்த ஸ்கேன் முறை மூலம் கருவின் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணிக்க முடியும்.
கருவின் நாட்களை வயிற்று சுற்றளவு கொண்டு கணக்கிடக் கூடாது.
தொடை எலும்பு நீளம் (FL) :
தொடை எலும்பு தான் உடலில் நீளமான எலும்பு ஆகும். கருவில் உள்ள குழந்தையின் தொடை எலும்பு அளவிடப்படுகிறது.
இது கருவின் நீளமான வளர்ச்சியை காட்டுகிறது. இந்த அளவை நீங்கள் இருமுனை விட்டத்துடன் (BPD) ஒப்பிட்டு பார்க்கலாம்.
தொடை எலும்பு நீளமானது 14 வாரங்களில் 1.5 செ.மீ முதல் 7.8 செ.மீ வரை வளரும். இருமுனை விட்டம் போன்றே இதையும் சரியான வாரங்களில் கணக்கிடுவது அவசியம்.
அனோமலி ஸ்கேனில் (Anomaly scan report in tamil) உள்ள அசாதாரண அளவீடுகள்
சில குழந்தைகளில் முதுகெலும்பை சேதப்படுத்தும் ஒரு கோளாறு ஏற்படுகிறது. அது திறந்த பைனா பிஃபிடா என்று அழைக்கப்படுகிறது. பத்தில் ஒன்பது குழந்தைகளில் இந்த ஸ்பைனா பிஃபிடா கண்டறியப்பட்டுள்ளது.
அனோமலி ஸ்கேன் மூலம் இதை எளிதாக கண்டறிய முடியும். அதிலும் கருவில் உள்ள குழந்தையின் இதயக் கோளாறுகளை கண்டறிவது மிகவும் சவாலானது.
10 இல் 5 அதாவது புதிதாகப் பிறந்த குழந்தைகளில் பாதி பேர்களுக்கு ஏற்படும் இதயக் கோளாறுகள் ஸ்கேன் மூலம் எளிதாக கண்டறியப்படுகிறது.
அனோமலி ஸ்கேன் குறித்து மருத்துவரே அனைத்தையும் சரிபார்த்து வேண்டிய தகவல்களை உங்களுக்கு அளிப்பார்.
நீங்கள் அனோமலி ஸ்கேன் குறித்து கேட்க வேண்டிய கேள்விகள்
குழந்தையின் உடல் நிலை மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி எப்படி இருக்கிறது?
கருவுக்கு ஏதேனும் அசாதாரணங்கள் உள்ளதா?
நஞ்சுக் கொடியின் இடம் எங்கே உள்ளது
கருவில் ஏதேனும் அசாதாரண வளர்ச்சி உள்ளதா? போன்றவை குறித்து நீங்கள் கேட்கலாம்.
பொதுவாக, ஒரு கரு உருவானதில் இருந்து குழந்தை பிறக்கும் வரை ஒன்பது மாதங்கள் ஆகிறது. எனவே இந்த கர்ப்ப காலம் பெண்களுக்கு மிகச் சிறப்பான மற்றும் மகிழ்ச்சியான கால கட்டமாகும். எனவே வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணிப்பது மிகவும் அவசியம்.
எனவே உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் ஸ்கேன்களை தவறாமல் எடுத்து உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியமும் வளர்ச்சியும் மிகவும் இன்றியமையாதது என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்.