சில பெண்களும் மது அருந்தும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனிக்கிறோம். இவர்கள் கர்ப்பம் தரித்த பிறகு மது (alcohol during pregnancy in tamil) அருந்தக்கூடாது. அதிலும் கருத்தரிப்பதற்கு முன்பே கூட மதுப்பழக்கத்தை கொண்டிருந்தால் அதை தவிர்ப்பதே நல்லது.
இது குழந்தைக்கு உண்டாகும் ஆபத்தை குறைக்கும். கர்ப்பகாலத்தில் மதுப்பழக்கம் (Alcohol During Pregnancy in Tamil) தொடர்ந்தால் அது தாய்க்கும் குழந்தைக்கும் நீண்ட கால தீங்கு உண்டாக்கும்.

அதிகமான மதுப்பழக்கம் ஆபத்தை அதிகரிக்கும். மது அருந்துவது பிறக்காத குழந்தையை எப்படி பாதிக்கும், கருவின் மது ஸ்பெக்ட்ரம் கோளாறு fetal alcohol spectrum disorder (FASD) மற்றும் ஃபெடல் ஆல்கஹால் சிண்ட்ரோம் fetal alcohol syndrome (FAS) மற்றும் தாய்ப்பால் போன்ற நிலையில் அது எப்படி பாதிப்பை உண்டு செய்கிறது என்பதை அறிந்துகொள்வது அவசியம்.
நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அல்லது கர்ப்பமாக விரும்பினால் மருத்துவரை அணுகி மது குறித்து ஆலோசனை பெறுவது முக்கியம்.
கர்ப்பமாக இருக்கும் போது பாதுகாப்பான மது அளவு இல்லை என்பதால் இது குறித்து உங்கள் மருத்துவரிடம் விவாதிப்பது மிக மிக முக்கியம்.
மது குடிப்பது கருவின் வளர்ச்சியை எப்படி பாதிக்கிறது?

நீங்கள் மது அருந்தும்போது, மது உங்கள் இரத்தத்தில் இருந்து நஞ்சுக்கொடி வழியாக உங்கள் குழந்தைக்கு சென்று அதன் வளர்ச்சியை தீவிரமாக பாதிக்கலாம்.
குழந்தைக்கு முழுமையாக வளர்ந்த கல்லீரலை உருவாக்க மது தடையாக இருக்கலாம்.

கர்ப்ப காலத்தில் மது அருந்துவது முன்கூட்டிய பிறப்பு உண்டாக்கலாம். குழந்தையின் எடையை குறைக்கலாம். இது குழந்தை பிறந்த பிறகும் பாதிக்கலாம்.
கர்ப்ப காலத்தில் அதிகமாக குடிப்பது கருச்சிதைவுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். கருப்பையில் குழந்தை வளரும் விதத்தையும், குழந்தையின் மூளை வளர்ச்சியையும் பாதிக்கும். மேலும் குழந்தை கருப்பையில் வளரும் விதத்தை பாதிக்கிறது.
நஞ்சுக்கொடி பணியை பாதிக்கிறது. இது கரு வளர்ச்சிக்கட்டுப்பாடு என்று அழைக்கப்படுகிறது. குழந்தை பருவத்திலும், பெரியவர்களான பிறகும் ஆரோக்கிய குறைபாட்டை உண்டு செய்யலாம்.
அதுவே கர்ப்பகாலத்தில் குடிப்பதை நிறுத்தினால் நன்மை பயக்கும்.
கர்ப்பிணி மது எடுத்துகொண்டால் வரும் ஆல்கஹால் ஸ்பெக்ட்ரம் கோளாறு fetal alcohol spectrum disorder (FASD) மற்றும் ஃபெடல் ஆல்கஹால் சிண்ட்ரோம் fetal alcohol syndrome (FAS) என்றால் என்ன?
கர்ப்ப காலத்தில் மது எடுக்கும் போது கருவுக்கு கருவின் ஆல்கஹால் ஸ்பெக்ட்ரம் கோளாறு ஏற்பட்டால் கற்றல் சிரமங்கள், நடத்தையில் உள்ள பிரச்சனைகள், உட்ல் மற்றும் உணர்ச்சி மற்றும் மனநல பிரச்சனைக்கள் வாழ்நாள் முழுவதும் இருக்கும்.
இது குழந்தைக்கு பாதிப்பு என்பது கர்ப்பிணி பெண் எவ்வலவு மது எடுக்கிறார் என்பதை பொறுத்து மிதமாகவோ தீவிரமாகவோ இருக்கலாம்.
மற்ற ஒன்றான ஃபெடல் மது சிண்ட்ரோம் என்பது தீவிரமான நிலையை உண்டு செய்யலாம். இவர்கள் கடுமையான உடல் மற்றும் மன இயலாமையை கொண்டிருக்கலாம்.
இவர்களுக்கு கற்றல் மற்றும் நடத்தை மூட்டுகள், எலும்புகள், தசைகள் மற்றும் சில உறுப்புகள் உணர்ச்சிகளை நிர்வகித்தல் மற்றும் சமூக திறன்களை வளர்த்தல் அதிவேகத்தன்மை மற்றும் பேச்சு தொடர்பான பிரச்சனைகள் உண்டாகலாம்.
கர்ப்பத்திற்கு முன் மது அருந்தலாமா ?

பெண் கருத்தரிக்க திட்டமிட விரும்பினால் இந்த நேரத்தில் மது அருந்தாமல் இருப்பது நல்லது. ஒருவர் கர்ப்பமாக இருக்க முயற்சிக்கும் போது மது குடித்தால் கருத்தரிப்பதை கடினமாக்கலாம்.
நீங்கள் மகப்பேறு மருத்துவரை சந்தித்தால் முன்பு உங்களுக்கு மது பழக்கம் இருந்தால் இது குறித்து மருத்துவரிடம் பேசுங்கள். ஏனெனில் கருத்தரிக்க விரும்புவதற்கு முன்பே மதுவை தவிர்க்க வேண்டும். அதனோடு பிரசவம் முடிந்து தாய்ப்பால் கொடுக்கும் போதும் உங்கள் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கலாம்.
கர்ப்பகாலத்தில் மதுவை (Alcohol During Pregnancy in tamil) எப்படி தவிர்ப்பது?

கர்ப்பகாலத்தில் கண்டிப்பாக பாதுகாப்பான அளவு எவ்வளவு என்பதை தேடுவதை விட முற்றிலுமாக தவிர்ப்பது நினைப்பது போல் கடினமாக இருக்காது. ஏனெனில் கர்ப்பகால மகிழ்ச்சி உங்களை அதை முழுமையாக விட்டுவிட செய்யும்.
பல பெண்கள் கருவுற நினைக்கும் போதே இந்த பழக்கத்தை விட்டுவிடுவார்கள். சில பெண்கள் கருத்தரிப்பை உறுதி செய்யும் வரை மது பழக்கத்தை தொடரவும் செய்வார்கள்.
எனினும் அதன் பிறகு அவர்கள் கவலையடைய வேண்டியதில்லை. கருவின் ஆரம்பத்தில் குழந்தைக்கு எந்த ஆபத்தும் உண்டாகாது. மோசமான நண்பர்களுடனான சேர்க்கை மது குடிப்பதற்கு அழுத்தத்தை உண்டு செய்யலாம்.
சில பெண்கள் பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தத்தை சமாளிக்க முயற்சி செய்யலாம். அதற்கு ஆல்கஹாலை உதவியாக பயன்படுத்தலாம். அதோடு கர்ப்பகாலத்தில் மது (alcohol during pregnancy in tamil) அருந்துவதால் உண்டாகும் ஆபத்தை அறிந்திருக்க மாட்டார்கள்.
நீங்கள் ஏன் மது அருந்துகிறீர்கள் என்பதற்கான காரணத்தை மருத்துவரிடம் ஆலோசித்தால் அதற்கான உதவியை மருத்துவர் செய்வார் என்பதால் தயக்கமில்லாமல் மருத்துவரை அணுகுங்கள்.