பிரசவத்துக்கு முந்தைய மனச்சோர்வு என்பது கர்ப்பகாலத்தில் உண்டாகும் மனச்சோர்வை குறிக்கின்றது (mental health during pregnancy in tamil).
இது கர்ப்பிணிகளுக்கு தீவிரமாகும் போது தொடர்ந்து சோகம், பதட்டம், சோர்வு மற்றும் தூக்கம் மற்றும் உணவு பழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும்.
கர்ப்பிணி பெண் மோசமான மன அழுத்தத்தை கொண்டிருந்தால் அது அவர்களது குழந்தைக்கு தீங்கு விளைவிக்கலாம். கர்ப்பிணி பெண்ணுக்கு மன அழுத்தம் வந்தால் என்ன மாதிரியான பிரச்சனைகள் சந்திப்பார்கள்.
அதை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதை ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் தெரிந்துகொள்ள வேண்டும்.
கர்ப்பிணி பெண் மன அழுத்த பாதிப்பை கொண்டிருந்தால் என்ன செய்வது?- (How to improve mental health during pregnancy in Tamil)
கர்ப்பிணி பெண் மனநல மருந்துகள் எடுக்க FDA அங்கீகரிக்கவில்லை. அதே நேரம் இது குறித்து ஆய்வு பெண்களிடம் செய்யப்படவில்லை.
மன அழுத்த எதிர்ப்பு மருந்து பாதுகாப்பானது என்றாலும் இது குறித்து இன்னும் நம்பகத்தன்மையான ஆய்வுகள் இல்லை. மேலும் சில மருந்து கருவில் இருக்கும் குழந்தைக்கு இதய குறைபாடு உண்டாக்கும் அபாயம் இருக்கலாம் என்கிறது.
கர்ப்பகாலத்தில் பெண் மன அழுத்தம் இல்லாமல் மன ஆரோக்கியத்துடன் இருக்க என்ன செய்யலாம் என்ற குறிப்புகள் இங்கே உங்களுக்கு உதவும்.
கர்ப்பிணி பெண் யோகா செய்யலாம்.
யோகாசெய்வது மனச்சோர்வை கையாள உதவும். இது சக்திவாய்ந்தது. ஆய்வுகள் கர்ப்பிணி பெண் யோகா செய்வதால் மனநிலையை உயர்த்த உதவும் என்று கூறுகிறது.
நீங்கள் யோகா செய்பவராக இருந்தால் டாக்டரின் அனுமதியுடன் கர்ப்பகால யோகா செய்யலாம். இது மன நிலையில் நேர்மறையான தாக்கத்தை உண்டு செய்யும்.
மேலும் இது கர்ப்பிணி பெண்ணுக்கு தூக்கத்தை உண்டு செய்யவும் உதவும். மன அழுத்தம் இல்லாமல் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கவும் செய்யும்.
நேர்மறை பேச்சு
கர்ப்பிணி மனம் தளரும் போது அவர்கள் நேர்மறை ஊக்கம் பெறும் வகையில் நம்பிக்கையானவர்கள் நெருக்கமானவர்கள் இருக்க வேண்டும்.
கர்ப்பிணியும் நான் சக்தி வாய்ந்தவள் என்னும் மந்திரத்தை உருப்பெற்று நாளை தொடங்க வேண்டும். இதன் மூலம் நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பீர்கள்.
கர்ப்பம் சில நேரம் கடினமானது தான் ஆனால் அன்பான மகிழ்ச்சியான வார்த்தைகள் சக்தி வாய்ந்ததாக மனநிலையை மாற்றும். கர்ப்பிணி படுக்கை அறையில் நேர்மறை வாசகத்தை எழுதி ஒட்டிவைத்துகொள்ளலாம்.
எப்போதும் நேரம்றையாக இருப்பது, அது தொடர்பான புத்தகம் படிப்பது மன அழுத்தம் போக்கும்.
உடல் பயிற்சி செய்ய வேண்டும்
கர்ப்பகாலத்தில் யோகா போன்று உடற்பயிற்சியும் மனநிலையை மேம்படுத்துகிறது. கர்ப்பகாலத்தில் மனநிலை அதிகரிக்க தேவையான உடற்பயிற்சி தீவிரமாக இல்லாமல் குறைவாக இல்லாமல் செய்வது நல்லது.
Also Read : சுகப்பிரசவம் ஆவதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!
சில உடற்பயிற்சி உங்கள் மனநிலையை உயர்த்த செய்யும். மனச்சோர்விலிருந்து பாதுகாக்கும். ஆரோக்கிய வாழ்க்கையை தூண்ட செய்யும். உடற்பயிற்சிசெய்வதன் மூலம் எண்டோர்பின்கள் தூண்டி மனநிலையை மேம்படுத்த செய்யும்.
கர்ப்பிணி செய்யவேண்டிய உடல்பயிற்சிகள் என்ன என்பதை உங்கள் நிபுணரிடமிருந்து ஆலோசித்து அதன் படி செய்ய வேண்டும். அல்லது குறைந்தது நடைபயிற்சி மட்டுமேனும் செய்யலாம்.
துணையுடன் செலவிடுங்கள்
உங்கள் துணையுடன் நேரம் செலவிடுங்கள். வெளிப்படையான நேர்மையான உரையாடல்கள் இருவருக்குமே முக்கியம். இதன் மூலம் ஆழமான நெருக்கமான தொடர்பு உருவாக்க உதவும். மன அழுத்தம் இல்லாமல் இருக்கும்.
தாய் போன்று அப்பாக்களும் குழந்தை பிறந்த பிறகு மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். கர்ப்பகாலத்தில் இருவரும் பேசுவதும் பழகுவதும் உரையாடுவதும் இருவருக்குமான ஆதரவை அதிகரிக்கலாம்.
மனச்சோர்வை குறைக்கலாம். தினமும் குறைந்தது 1 மணி நேரமாவது இருவரும் தனிமையில் உங்களுக்கான நேரத்தை செலவிடுங்கள்.
கர்ப்பிணி ஓய்வெடுக்க வேண்டும்
மனச்சோர்வு தவிர்க்க கர்ப்பிணி ஓய்வு எடுப்பது அவசியம். முன்பு போல் சுறுசுறுப்பாக இல்லையென்றாலும் நீங்கள் விரக்தி அடையலாம். குழந்தையின் நல்வாழ்வை உறுதி செய்ய ஓய்வு அவசியம்.
படுக்கையில் கழிக்க வேண்டாம். ஆனால் அவ்வபோது ஓய்வும் அவசியம். தூக்க நேரம் கர்ப்பத்தில் மாறலாம். ஆனால் போதுமான தூக்கம் மற்றும் ஒய்வு போன்றவை ஆரோக்கியமான மனநிலைக்கு முக்கியமாகும்.
அதனால் பகல் நேரத்திலும் தூக்கம் வந்தால் தூங்குங்கள். இரவில் அடிக்கடி கழிப்பறை செல்ல நேர்வதால் தூக்க குறுக்கீடு இருக்கலாம். இதுவும் இயல்பானதே. இயன்றவரை ஓய்வெடுங்கள். அது மனச்சோர்வு மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
மருந்துகள் தவிர்க்காதீர்கள்
கர்ப்பகாலத்தில் மன அழுத்த மருந்துகள் தீவிரமான நிலையில் டாக்டர் பரிந்துரைத்தால் எடுக்கலாம். கர்ப்பத்தில் உள்ள ஆண்டி டிரஸண்ட்கள் பாதுகாப்பானவை என்ற ஆராய்ச்சிகள் அதிகரித்துல்ளன.
கர்ப்பம் மகிழ்ச்சியானவை என்றாலும் சமயங்களில் அது கடினமானது தான். கர்ப்பகாலத்தில் மன ஆரோக்கியத்தை வளர்ப்பது முக்கியமானது.
To Read in English : Tips to Maintain Mental health during pregnancy