தூக்கத்தில் மூச்சுத்திணறல் (Obstructive Sleep Apnea)
தூக்கம் ஆழ்ந்து இருந்தால் தான் அடுத்த நாள் வேலையை சோர்வில்லாமல் செய்ய முடியும். தூங்கும் போது சிலருக்கு மூச்சு அடைத்தாற்போன்ற உணர்வு வந்து சட்டென்று முழிப்பு வரக்கூடும். வெகு அரிதானது என்றாலும் சிலர் தூங்கும் போது இறப்பதற்கு காரணம் என்ன? (die during sleep) என்பதை அறிவதற்கு முன்பு இயல்பாக தூங்கும் போது என்ன நடக்கும் என்பதையும் தெரிந்துகொள்வோம்.
தூங்கும் போது நமது மூக்கில் உள்ள நாசி பாதை காற்றை உள்ளிழுத்துக்கொள்ளும். உள்ளிழுத்த காற்றை trachea மற்றும் brochus வழியாக நுரையீரலுக்கு செல்லும். இது நமக்கு தெரியும்.
காற்று உள்ளே செல்லும்போது நமது முக தசைகள்,மென்மையான திசுக்கள்,சதை, தொண்டை பகுதியில் ஓர் அழுத்தத்தை கொடுக்கும். இதை இந்த பகுதிகள் முழுமையாக உள்வாங்கும். இந்த எதிர்மறை அழுத்தம் நேரும் போது இவை ரிலாக்ஸ் அடையும்.
அப்போது தொண்டை உடனடியாக திசுக்கள் ,மூலம் உள்ளிழுத்தவற்றை மேலே தள்ளும். இது இயல்பாக அனைவருக்கும் நடக்கக்கூடியது. ஆனால் தூக்கத்தில் குறட்டை விடுவார்கள். இவர்களை சுற்றி இருப்பவர்கள் அறியும் வகையில் இது இருக்கும்.
![தூங்கும்போதே இறப்பதற்கு காரணம் என்ன? 2 normal sleep pattern](https://www.jammiscans.in/wp-content/uploads/2023/05/normal-sleep-pattern-1024x576.jpg)
குறட்டை விடுபவர்களுக்கு மூச்சுஎடுக்கும்போது தசைகள் நீண்ட நேரம் ரிலாக்ஸ் செய்யும். இயல்பாக இருப்பவர்களை காட்டிலும் இவர்களுக்கு கூடுதல் நேரம் தேவைப்படும். அப்போது தூங்கும்போது நாக்கு காற்று போகும் வழிபாதையை அடைக்கிறது.
அதனால் நுரையீரலுக்கு காற்று போகாததால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இது ஒருமுறை மட்டும் அல்ல பலமுறை கூட வரலாம். இதை obstructive sleep apnea என்று சொல்வார்கள். இது யாருக்கு வரும். யாருக்கெல்லாம் அதிகமாக வரலாம்.
தூக்கத்தில் மூச்சுத்திணறல் (obstructive sleep apnea) யாருக்கெல்லாம் வரும்?
அதிக உடல் எடை கொண்டவர்கள், தொண்டை சுற்றியுள்ள திசுக்களில் கொழுப்பு படிந்திருக்கலாம் அல்லது tonsillitis இருப்பவர்களுக்கு டான்சில் அழற்சி ஏற்பட்டிருக்கலாம். இதனால் குறட்டை விடுவது மற்றும் obstructive sleep apnea மிகவும் பொதுவாக வரும்.
குறட்டை விடுதலை எப்படி கண்டுப்பிடிப்பது?
குறட்டை விடுதலை அருகில் இருப்பவர்கள் தான் கண்டறிந்து சொல்வார்கள். அல்லது அதிக சத்தத்துடன் குறட்டை விடும்போது மறுநாள் காலையில் எழும்போது தலைவலி மற்றும் புத்துணர்ச்சி ஆக இல்லாமல் மிகவும் சோர்வாக உணர்வீர்கள், தூக்கம் போதிய அளவில் கிடைக்காததால் வேலையில் கவனம் செலுத்த முடியாது.
![தூங்கும்போதே இறப்பதற்கு காரணம் என்ன? 4 snoring](https://www.jammiscans.in/wp-content/uploads/2023/05/snoring-1024x576.jpg)
இதை குணப்படுத்தாமல் விட்டால் சர்க்கரை நோய், சீரான இதய துடிப்பு இல்லாதது (arrhythmias) ஹைப்பர் டென்ஷன் வருவதற்கு வாய்ப்புண்டு. மேலும் தூக்கத்தில் இறப்பதற்கும் இது வழி வகுக்கும். வயதானவர்களுக்கு தொண்டை சுற்றியுள்ள தசைகள் வலிமையை இழப்பதற்கு வாய்ப்பு உண்டு. இந்த sleep apnea பிரச்சனையால் இறந்து போகவும் வாய்ப்புண்டு.
குறட்டையை எப்படி தடுக்கலாம் அல்லது எப்படி குணப்படுத்துவது?
வாழ்க்கைமுறை மாற்றங்கள்:
அதிக உடல் எடை கொண்டவர்கள் கட்டாயமாக எடையை குறைத்து ஆரோக்கியமான அளவில் பி.எம்.ஐ அளவை வைத்திருக்க வேண்டும். எடை அதிகம் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் எல்லோரும் ஆரோக்கியமான பி.எம்.ஐ அளவை பின்பற்ற வேண்டும்.
புகைப்பிடித்தல்:
புகை பிடிப்பது அல்லது மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் மோசமானவை. இதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும்.
தூக்கத்தில் மூச்சுத்திணறல் (obstructive sleep apnea) இரண்டு வகைப்படும். ஒன்று mild form மற்றும் severe form. இது அதனுடைய தீவிர தன்மையை பொருத்து வகைப்படுத்தப்பட்டுள்ளது.
1.Mild form- இதை குணப்படுத்த ஒரு பொருளை கொடுப்பார்கள். இது தாடைகளை முன்னே தள்ளுவதால் காற்று போகும் பாதை அடைக்காமல் உள்ளே செல்லும். நாக்கு, தொண்டை மற்றும் நாசி பாதையை பிரித்து காற்றை உள்ளே செல்லவிடும்.இதனால் நாக்கு காற்றுப்பாதையை அடைக்காது.
2.Severe form- இதற்கு டியூப் உடன் இருக்கும் மாஸ்க்கை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இதை continous positive airway pressure (CPAP) என்பார்கள். திசுக்களுடன் இழுக்கும்போது எதிர்மறை அழுத்தத்தை ஈடு செய்ய மூக்கு மற்றும் நுரையீரலுக்கு நிலையான நேர்மறை அழுத்தத்தை கொடுக்கும்,
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
இதனால் குறட்டை அல்லது மூச்சுதிணறல் ஏற்படாமல் தடுத்து நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும். அதனால் குறட்டை பிரச்சனை இருந்தால் தவிர்க்காமல் மருத்துவரை அணுகுங்கள்.