பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் கூட கூந்தலின் அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதிலும் நீளமான கருகருவென்ற கூந்தல் அடர்த்தியாக வேகமான வளர்ச்சியில் நன்றாக இருக்க வேண்டும் என்றே பெண்கள் விரும்புவார்கள். ஆனால் முடி வளர்ச்சியில் முடி உதிர்வு (Hair Loss) என்பது அதிக பிரச்சனையாக உள்ளது. இதை வளரும் குழந்தைகள், பெண்கள் ஏன் ஆண்களும் கூட சந்திக்கிறார்கள். அதை எப்படி தடுப்பது, ஏன் முடி உதிர்வு ஏற்படுகிறது என்பதை பார்ப்போம்.
சிறுவயதில் நம்முடைய கூந்தல் பராமரிப்பில் நம்மை விட வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அதிகமாக கவனம் செலுத்துவார்கள். வாரம் ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்க சொல்வார்கள். கூந்தலுக்கு எண்ணெய் வைக்க சொல்வார்கள் இதனால் கூந்தல் நாம் விரும்பியது போல இருந்தது. ஆனால் வளர வளர கூந்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்காத நிலையில் கூந்தல் வளர்ச்சி என்பதை தாண்டி உதிர்வு அதிகரித்துள்ளது.
அப்படி வளர வளர கூந்தல் உதிர்வுக்கு என்ன காரணம், ஏன் முடி உதிர்வு உண்டாகிறது என்பதை அறிய முக்கியமான மூன்று விஷயங்களை இப்போது பார்க்கலாம். ஏன் முடி உதிர்வு ஏற்படுகிறது, அன்றாட பணியில் நாம் கூந்தலை சீவ என்ன பயன்படுத்த வேண்டும், மூன்றாவது கூந்தல் பராமரிப்பு முறை குறித்து பார்க்கலாம்.
ஏன் கூந்தல் உதிர்வு (Hair Loss) ஏற்படுகிறது?
மருத்துவ ரீதியாக ஹார்மோன் சமநிலையாக இல்லாமல் இருந்தால் கூந்தல் உதிர்வு ஏற்படும். ஹார்மோன் சமநிலையாக இல்லாமல் இருப்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. polycystic ovaries, தைராய்டு, மன அழுத்தத்தால் முடி உதிர்வு ஏற்படுகிறது. இதையும் தாண்டி முக்கிய காரணமாக வைட்டமின் பி-12 பற்றாக்குறையும் உள்ளது.
மேலும் autoimmune disease அதாவது உடலில் உள்ல செல்களுக்கு எதிராக நமது உடலே antibodies களை உற்பத்தி செய்யும். புற்றுநோய் மற்றும் எதிர்ப்பு சக்திகளுக்கு சிகிச்சை எடுப்பவர்களுக்கும் இந்த கூந்தல் உதிர்வு பிரச்சனை என்பது பொதுவானது.
மேலும் மன ரீதியாக நெருங்கியவர்கள் தவறுதல் அல்லது அதிர்ச்சி ஏற்படுத்தும் நிகழ்வுகளால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் உடல் எடை குறைய தீவிரமான பயிற்சியும் கடுமையான கட்டுப்பாட்டுடன் கூடிய உணவுகளையும் எடுத்துகொண்ட போது கூந்தல் உதிர்வு ஏற்படுகிறது.
alloplasia என்பது குறிப்பிட்ட இடத்தில் கூந்தல் உதிர்வு ஏற்படும். trichotillomania என்பது கூந்தலை இழுப்பதால் கூந்தல் உதிர்வு ஏற்படுவது ஆகும். வழக்கத்தை விட அதிகமாக கூந்தல் உதிர்வு ஏற்பட்டால் அதை telogen effluvium என்பதாகும். இது குறுகிய கால பிரச்னைகள் ஆகும். இந்த பிரச்னைகளுக்கு மன அழுத்தத்தை கட்டுபடுத்துவதே மிக சிறந்த வழி.
மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானது ஆனால் இவை கட்டுப்படுத்தாமல் விடுவதால் கூந்தல் உதிர்வு (Hair Loss) பிரச்சனை மட்டுமல்ல பல்வேறு பிரச்னைகளும் உண்டு செய்யும். இதற்கு தீர்வாக நீங்கள் இதை செய்யலாம்.
Short Term கூந்தல் உதிர்வை கட்டுபடுத்த டிப்ஸ்:
வாழ்க்கைமுறை மாற்றங்கள்:
எல்லா வித பிரச்னைகளுக்கும் முதல் டிப்ஸ் ஆக இருப்பது வாழ்க்கை முறை மாற்றங்கள். சரியான உணவு, தூக்கம், உடற்பயிற்சி செய்தால் கூந்தல் உதிர்வு (Hair Loss) மட்டுமல்ல எல்லா வித பிரச்னைகளையும் தடுக்கலாம். உணவில் அதிக அளவு புரோட்டீன் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
உடற்பயிற்சி:
மணி கணக்கில் உடல் உழைப்பு கொடுக்க வேண்டும் என அவசியம் இல்லை. தினமும் 20-30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் போதுமானது. அதோடு 15-20 நிமிடம் தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும், புத்துணர்ச்சியோடு வேலைகளை செய்ய மூளை ஒத்துழைக்கும்.
தூக்கம்:
நமக்கு சராசரியாக 6.5-8 மணி நேரம் இடைவிடாத தூக்கம் மிகவும் அவசியம்.
இந்த மூன்று விஷயங்களை பின்பற்றுவது மிகவும் நல்ல பலன்களை கொடுக்கும்.
கூந்தல் ஆரோக்கியத்துக்கு எந்த சீப் பயன்படுத்துவது, எப்படி கூந்தலை வாறுவது?
எதற்காக கூந்தலை வாற வேண்டும்? இதனால் மூன்று நன்மைகளை பெற முடியும்.
முதலாவது
உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த தலை சீவுவது மட்டுமே உதவும். இதனால் ஆக்ஸிஜன் மற்றும் உணவில் எடுத்துக்கொண்ட ஊட்டச்சத்துக்களை இரத்தம் வழியாக உச்சந்தலைக்கு செல்லும். அதை எடுத்துசெல்ல இரத்த ஓட்டத்தை சீராக்க இது அவசியம். இந்த ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன் தான் மயிர்க்கால்களை வலுவாக வைத்து கூந்தலை அடர்த்தியாக, கருமையாக நீளமாக வளர்க்க உதவும்.
இரண்டாவது
இயற்கையாகவே கூந்தலில் உச்சதலையில் எண்ணெய் இருக்கும். sebacious glands சீபம் தான் என்னும் எண்ணெயை உற்பத்தி செய்யும். அதை கூந்தல் முழுவதும் சமமாக பரப்ப தலை சீவுவது உதவும்.
மூன்றாவது
வெளியில் செல்வதால் சுற்றுச்சூழல் மாசுக்களால் தலையில் தூசி படிகின்றது. அதை வெளியேற்றவும் தலை சீவுவது அவசியமாகும்.
இவ்வளவு நன்மைகள் இருப்பதால் கூந்தலை தினமும் 100 முறை வாறினால் தான் நல்லது என்று பலரும் நம்பிகொண்டிருக்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. பலன்களை அதிகமாக கொண்டிருந்தாலும் கூந்தலை அதிகமாக வாறுவது நல்லதல்ல. கூந்தலை சிக்கில்லாமல் வைத்தாலே போதுமானது.
எந்த சீப் பயன்படுத்த வேண்டும்?
மரத்தில் செய்யப்பட்ட சீப், ப்ளாஸ்டிக் சீப், பேடி ப்ரஷ், ப்ரஷ் என்று நிறைய வகைகள் உள்ளது. மரத்தில் செய்யப்பட்ட சீப்- பற்கள் நெருக்கமாக இருக்கும் சீப்பை பயன்படுத்தினால் கூந்தல் உதிர்வு (Hair Loss) அதிகமாகும். பற்கள் தூரமாக இருக்கும் சீப்பை பயன்படுத்தவும். சீப்பின் நுனி மிகவும் கூர்மையாக இருக்க கூடாது. மரச்சீப்பு என்றாலும் தரமானதாக இருக்க வேண்டும். ரோஸ்வுட் மரத்தினால் ஆன சீப் பயன்படுத்துவது மிகவும் நல்லது
பிளாஸ்டிக் சீப்புக்கும், மர சீப்புக்கும் என்ன வித்தியாசம்?
ப்ளாஸ்டிக் சீப்பில் static electricity என்று இருக்கிறது. இதை வைத்து தலை வாறும்போது நேர்மறை மற்றும் எதிர்மறை கொண்ட static electricity உருவாகும். நமது மயிர்க்கால்கள் ஒரு மின்சர சக்தியை உற்பத்தி செய்யும். நாம் பயனபடுத்தும் சீப் வேறு ஒரு மின்சார சக்தியை உற்பத்தி செய்யும்போது கூந்தல் உதிர்வு அதிகமாகும். இதனால் ப்ளாஸ்டிக் சீப் பயன்படுத்துவதை தவிர்க்கவும். ப்ளாஸ்டிக் சீப் மற்றும் ப்ளாஸ்டிக் பிரஷ் இரண்டையும் தவிருங்கள்.
எந்த வகை ப்ரஷ் பயன்படுத்தலாம்?
சீப் இல்லாமல் ப்ரஷ் பயனபடுத்துபவர்களுக்கு எந்த பரஷ் பயனபடுத்தலாம் என்ற சந்தேகம் இருக்கும். பேடி ப்ரஷ் மற்றும் ப்ரஷ் இரண்டுமே பயன்படுத்தலாம். இதிலும் பற்கள் நெருக்கமாக இருக்க கூடாது, நுனியில் வடிவமாக இருந்தால் கூந்தலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
ப்ரஷ் பயன்படுத்தும்போது அதில் சிக்கி கொள்ளும் கூந்தலை உடனடியாக எடுத்து விடுங்கள், ப்ரஷ் அல்லது சீப்பை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இரண்டு நாளுக்கு ஒரு முறை மைல்டான சோப்பு கொண்டு கழுவி சுத்தப்படுத்துவதால் அதில் உள்ள தூசிகளும் உள்ளே செல்லாமல் தடுக்கும்.
கூந்தல் பராமரிப்புக்கு தலை குளியல் அவசியம்
கூந்தலை சரியாக பராமரித்தாலே கூந்தல் நாம் விரும்பியபடி இருக்கும். 100 முறை தலை வாற வேண்டும் என்பது போல தினமும் தலைக்கு குளித்தால் நல்லது என்று சொல்வார்கள். ஆனால் அப்படி குளிக்க கூடாது. நீங்கள் வாரத்திற்கு 2-3 முறை குளித்தால் போதுமானது.
ஆயில் மசாஜ் செய்யலாமா? எந்த எண்ணெய் பயன்படுத்தலாம்.
என்ன செய்யலாம்:
தலைக்கு குளிப்பதற்கு 10 நிமிடம் முன்பு எண்ணெய் தேய்த்து ஊறவைத்தால் போதுமானது.
எண்ணெயை மிதமாக சுட வைத்து 2-3 நிமிடம் இளஞ்சூடாக மசாஜ் செய்து தேய்க்க வேண்டும்.
செய்யக் கூடாது:
குளித்த பின் கூந்தலை இறுக்கமாக கட்டக் கூடாது.
இரவு முழுவதும் எண்ணெய் தேய்த்து ஊறவைக்க கூடாது
இயற்கையாக எண்ணெய் பசை நிறைந்த உச்சந்தலை உள்ளவர்கள் அதிகமாக எண்ணெய் தேய்க்க வேண்டாம்.
கூந்தலுக்கு ஷாம்பு பயன்படுத்துவது எப்படி?
இரண்டு டீ ஸ்பூன் ஷாம்புவை தண்ணீரில் கலந்து பயன்படுத்துங்கள். தலையை அலசுவதால் அதில் உள்ள தூசிகளை வெளியேற்றி உச்சந்தலையில் உள்ள ஓட்டைகளை திறக்கும். சிறிது நேரம் கழித்து இரண்டாவது முறை ஷாம்பு போடலாம். இது மயிர்க்கால்களில் உள்ள தூசிகளை சுத்தப்படுத்தி ஆரோக்கியமாக வைப்பதால் இரண்டு முறை ஷாம்பு போடுவது அவசியம்.
கண்டிஷனர் எப்படி பயன்படுத்த வேண்டும்?
ஸ்கால்பில் கண்டிஷ்னர் பயன்படுத்தக் கூடாது. கூந்தலின் நுனியில் தடவி 5 நிமிடம் கழித்து அலச வேண்டும்.
தலைக்கு குளித்த பின் இறுக்கமாக டவலில் கட்ட வேண்டாம், கூந்தல் ஈரமாக இருக்கும்போது தலை சீவினால் கூந்தல் உதிர்வு (Hair Loss) அதிகமாகும். கூந்தல் ஈரமாக இருக்கும்போது உதிர்வதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது. தவிர்க்க முடியாத சூழலில் அவசரமான சூழலில் ஹேர் ட்ரையர் பயன்படுத்தலாம் ஆனால் எப்போதும் இயற்கையாக கூந்தலை உலர செய்வது நல்லது.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்!
கூந்தல் வளரவும் கூந்தல் வலிமையாக்கி உதிர்வதை தடுக்கவும் உணவுகள் உதவும். வைட்டமின் ஏ, பயோட்டின் எனப்படும் பி- காம்ப்ளக்ஸ் வைட்டமின் மிகவும் முக்கியமானது. அடர்ந்த பச்சை காய்கறிகள், கீரைகள், அனைத்துவித நட்ஸ் வகைகள், பப்பாளிகளில் தேவையான அளவு கொழுப்பு, புரோட்டின் உள்ளதால் உடல் மற்றும் கூந்தலுக்கு மிகவும் நல்லது.