இன்று பாரபட்சமில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே உடல் பருமனை கொண்டிருக்கிறார்கள். உண்மையில் உடல் எடை அதிகரிக்க மன அழுத்தம் மன உறுதி இன்மையால் உண்டாக கூடிய பிரச்சனை அல்ல. இது பெரும்பாலும் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை விளைவாக உண்டாகிறது. அதிகப்படியான உணவு மரபியல் மற்றும் ஹார்மோன்கள் போன்ற பல்வேறு உயிரியல் காரணிகளை உடலில் இயக்குகிறது.
ஏன் உடல் பருமன் உண்டாகிறது என்பதற்கு பொதுவான காரணங்கள் (Common Reasons to Gain Weight in Tamil) குறித்து பார்க்கலாம்.
மரபு
ஆம் உடல் பருமனாக வலுவான காரணங்களில் இதுவும் ஒன்று. உடல் மெலிந்த பெற்றோர்களின் குழந்தைகளை விட பருமனான பெற்றோர்களின் குழந்தையும் எதிர்காலத்தில் உடல் பருமனை கொண்டிருக்க வாய்ப்புகள் அதிகம். அப்படியெனில் இந்த உடல் பருமன் நிச்சயம் என்று சொல்ல முடியாது. நீங்கள் பின்பற்றூம் உணவு முறை மோசமானதாக இருந்தால் அது விரைவாக உங்கள் உடல் பருமனை தூண்டிவிடுகிறது. அதனால் வழக்கத்தை காட்டிலும் உடல் பருமன் உண்டாகும் வாய்ப்பும் அதிகமாகிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
மோசமான உணவு என்று இதை சொல்வதற்கு காரணங்கள் உண்டு. உணவின் சுவைக்கு நாக்கு அடிமையாகும் வகையில் இந்த உணவுகள் தயாரிக்கப்படுகிறது. போதும் என்னும் உணர்வே வராமல் மேலும் மேலும் சுவைக்கதூண்டும் இந்த உணவுகள் எப்போதுமே உடலுக்கு ஆரோக்கியமானது கிடையாது.
மேலும் இந்த உணவுகள் முழுமையான உணவுகள் என்று சொல்லமுடியாது. இதன் தயாரிப்புகள், நிறங்கள், அலங்காரம் என எல்லாமே கவர்ந்திழுப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நோய்க்கு அடிமையாகிவிடுகிறார்கள். அதோடு இவை மேலும் மேலும் சுவைக்கவும் தூண்டுகிறது என்பதால் உடல் பருமனும் எளிதில் சாத்தியமாகிறது
இதையும் தெரிந்து கொள்ள: மென்சுரல் கப் என்றால் என்ன? யாரெல்லாம் உபயோகிக்கலாம்!
அதிக உணவு
இந்த பழக்கத்தால் உடல் பருமனை கொண்டிருப்பவர்கள் தான் அதிகம். அதிகளவு உணவு சாப்பிடுவதன் மூலம் அதிக கலோரிகளை பெறுகிறார்கள். சர்க்கரை சேர்த்த இனிப்பு நிறைந்த உணவுகள், கொழுப்பு உணவுகள் சாப்பிடும் போது அவை மூளையை தூண்டி மேலும் உணவை உண்ண வலியுறுத்துகிறது. குறீப்பாக ஜங்ஃபுட் உணவுகள். இதனால் கட்டுப்பாட்டை இழந்து அதிகளவு உணவு உட்கொள்வதும் உடல் பருமனுக்கு காரணமாகிறது (Common Reasons to Gain Weight in Tamil).
அதிக இனிப்பு
இனிப்பு பிடிக்காதவர்கள் என்று யாருமே இல்லை. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கூட இனிப்பு விஷயத்தில் சட்டென்று சமாதானம் ஆவதில்லை. சர்க்கரை நவீன உணவின் மோசமான அம்சம் என்றே சொல்ல வேண்டும். ச்ர்க்கரை சேர்த்த உணவுகளை அதிகம் சேர்க்கும் போது உடலில் ஹார்மோன்கள் மாற்றத்தை சந்திக்கிறது. இது எடை அதிகரிப்பை தூண்டுகிறது.
அதிக உப்பு
உப்பு நிச்சயம் உடலுக்கு தேவையான ஒன்று. ஆனால் அதிகப்படியான உப்பு சேர்த்த நொறுக்குத்தீனிகள் இன்றூ பலரது விருப்பமான உணவாகிவிட்டது. அதிலும் எண்ணெயில் பொரித்து நிறைவான உப்பு கொண்டிருக்கும் நொறுக்குத்தீனிகள் உடலுக்கு நோய்களையும் உடல் பருமனையும் (Common Reasons to Gain Weight in Tamil)உண்டாக்கிவிடக்கூடும். இன்றூ பெரும்பாலான குழந்தைகள் அதிக எடையை கொண்டிருக்க காரணமே இந்த பழக்கத்தால் தான் என்பதை மறந்துவிட வேண்டாம்.
கார்பனேட்டட் பானங்கள்
செயற்கை பானங்கள் பசி உணர்வை அதிகரிக்க செய்யகூடியது. மேலும் இது உடலுக்கு ஆற்றலை எப்போதும் தருவதில்லை. மாறாக பசி உணர்வை தூண்டி இது உடல் பருமனை ஊக்குவிக்கிறது (Common Reasons to Gain Weight in Tamil). எனினும் இது குறித்த ஆராய்ச்சிகள் தேவை. இதில் கூடுதல் சோடியம், மறைக்கப்பட்ட கலோரிகள் இருக்கலாம். இவையும் எடை அதிகரிப்பை ஊக்குவிக்க கூடியவை.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
எண்ணெய் பண்டங்கள்
எப்போதும் எண்ணெயில் பொரித்த உணவுகள், வறுத்த உணவுகள் கொழுப்பு அமிலங்களை கொண்டிருக்க கூடியவை. கொழுப்பிலும் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு இரண்டுமே உடலில் உண்டு. ஆனால் இந்த வகையான உணவுகள் உடலில் கெட்ட கொழுப்பை தேக்கி அதிகப்படியான கலோரிகளை கொடுப்பதோடு எடை அதிகரிப்பை ஊக்குவிக்க செய்யும்.
பேக்கரி உணவுகளும் அப்படியே. உணவுக்கு மாற்றாக பேக்கரி உணவுகளை நாடும் பழக்கம் கொண்டிருக்கும் இளைய தலைமுறையினர் பலரும் மறைமுகமாக தங்கள் உடல் பருமனாகும் வாய்ப்பை அதிகரித்துகொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
இதையும் தெரிந்து கொள்ள: மாதவிடாயில் அதிக இரத்தப்போக்கு எதனால் உருவாகிறது?
இவையெல்லாம் மோசமான உணவு பழக்கங்களால் உடல் பருமனை உண்டாக்க கூடியவை. ஆனால் இவை தவிர்த்து முறையற்ற உணவு பழக்கம், உடல் உழைப்பின்மை, வாழ்க்கை முறை போன்றவையும் உடல் பருமனை உண்டாக்கிவிடுகிறது. இந்த உடல் பருமன் ஒன்று உடலில் பல்வேறு விதமான பிரச்சனைகளை உண்டு செய்கிறது. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மூட்டுவலி, இதய நோய் போன்ற ஆபத்தான நோய்களுக்கும் உடல் பருமன் முக்கியபங்கு வகிக்கிறது.