25 நாட்கள் கர்ப்பம் தெரியுமா?
25 நாட்கள் கர்ப்பம் தெரியுமா? என்று கேட்டால், சரியான கர்ப்ப பரிசோதனை முடிவுகள் தெரியாது என்பது தான் பதில்.
துல்லியமான கர்ப்ப பரிசோதனை முடிவுகளை பெற மாதவிடாய் தவறி ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் கழித்து கர்ப்ப பரிசோதனை செய்ய வேண்டும்.
25 நாட்கள் கர்ப்பம் அறிகுறிகளை (25 days pregnancy symptoms in tamil) உணர முடியுமா?
25 நாளில் உங்கள் மாதவிடாய் முன் நோய் அறிகுறிகள் (PMS) ஏற்படுவது போலவே இருக்கும்.
இருப்பினும், பிற ஆரம்பகால கர்ப்ப அறிகுறிகளான குமட்டல், மென்மையான மார்பகங்கள், சோர்வு, வீக்கம், வாசனை உணர்திறன் போன்றவை மாதவிடாய் முன் நோய் அறிகுறி (PMS) காரணமாக ஏற்பட்டதா அல்லது கர்ப்பத்தின் காரணமா என்பதை அறிய ஒரே வழி, நீங்கள் கர்ப்ப பரிசோதனையை மேற்கொள்ளும் வரை காத்திருக்க வேண்டும்.
மேலும் உங்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால், நீங்கள் உடலுறவு கொண்ட நாளில் இருந்து 21 நாட்களுக்கு பிறகு கர்ப்ப பரிசோதனை செய்யவும்.
கர்ப்பம் எத்தனை நாளில் உறுதி செய்யலாம் என்பதை தெரிந்து வைத்து கொண்டு பரிசோதனை செய்வது அவசியம், அப்போது தான் நீங்கள் சரியான முடிவை பெற முடியும்.
25 நாள் கர்ப்ப அறிகுறிகள்
- மார்பக மென்மை
- வாசனை மீது விருப்பம் மற்றும் வெறுப்புகளை அடையக்கூடும்.
- காலை நோய்
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- சோர்வாக / மந்தமாக உணருதல்
- குமட்டல் மற்றும் வாந்தி
- தலைச்சுற்றல் மற்றும் மயக்கம்
- மலச்சிக்கல்
- நெஞ்செரிச்சல்
- அதிகரிக்கும் உடலின் வெப்பநிலை
- அதிகப்படியான பசி அல்லது பசியின்மை
இவை எல்லோருக்கும் பொதுவானது இல்லை சிலருக்கு ஏற்படும்
ஆரம்பகால கர்ப்ப பரிசோதனையின் தீமைகள்
கர்ப்பத்தை பரிசோதிக்க வேண்டிய காலத்தை விட்டு நீங்கள் மிக முன்னதாக சோதித்தால் எதிர்மறை முடிவுகளுக்கு வாய்ப்புள்ளது.
முன்கூட்டியே பார்க்கப்படுவதால் எச்.சி.ஜி யின் அளவு குறைவாக இருக்கும். இதனால் நீங்கள் கர்ப்பமாக இருந்தாலும் உங்களால் கண்டறியப்படா நிலையில் இருக்கும்.
அடிக்கடி இரத்த பரிசோதனை செய்யும் போது உங்கள் உடலும் சோர்வடையக்கூடும்.
இதனால் தேவையில்லாத மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம்.
கர்ப்ப அறிகுறிகள் எப்போது தெரியும்
ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறார இல்லையா என்பதை அறிகுறிகள் மூலம் அறிந்துகொள்ள மாதவிடாய் சுழற்சிக்கு பின்னர் குறைந்தது 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை காலம் எடுக்கும்.
கருவுற்றதற்கான அடிப்படை மாற்றங்கள் அதன் பிறகு தான் தெரியும்.
கர்ப்ப பரிசோதனை செய்த பிறகு மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?
நீங்கள் கர்ப்ப பரிசோதனையில் நேர்மறையான முடிவுகள் வந்த உடனே மருத்துவரை சந்தித்து தேவையான ஆலோசனைகளை பெறுவது நல்லது.
கர்ப்ப பரிசோதனை முடிவு எதிர்மறையாக வந்த பின்பும் மாதவிடாய் இன்னும் வர வில்லை என்றாலும் நீங்கள் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.
சில நேரங்களில் உங்களுக்கு அதிக மன அழுத்தம் இருந்தாலும் மாதவிடாய் சீரான சுழற்சியில் இருக்காது.
உங்களுக்கு தைராய்டு பிரச்சனை இருந்தாலும் மாதவிடாய் வராது. மேலும் இது நீங்கள் கர்ப்பமாவதை தடுக்கிறது. இது போன்ற தொந்தரவுகள் இருந்தாலும் நீங்கள் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
25 நாட்கள் கர்ப்பம் – கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்:
- புரத உணவுகள், நார்ச்சத்துக்கள், புரோபயாடிக்குகள், கார்போஹைட்ரேட்டுகள், நல்ல கொழுப்பு எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
- பருப்பு மற்றும் பயறு வகைகள் , இறைச்சி, மீன் ஆகியவற்றில் புரத சத்துக்கள் உள்ளது.
- பழங்கள், காய்கறிகள் மற்றும் சாலட்டுகளில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது
- நெய்யில் நல்ல கொழுப்புகள் இருப்பதால் வாரம் ஒரு முறை சேர்த்து கொள்ளலாம்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கண்டிப்பாக தங்கள் வாழ்க்கை முறையினை ஆரோக்கியமானதாக மாற்றிக்கொள்வது அவசியம்.
எந்த ஒரு சந்தேகமாக இருந்தாலும் உடனே தன் மருத்துவரை அணுகி சரியான ஆலோசனைகளை எடுத்துகொள்ள வேண்டும்.