கர்ப்ப காலத்தில் அனோமலி ஸ்கேன் (Anomaly Scan During Pregnancy in Tamil) ஏன் முக்கியம்?
கர்ப்ப காலத்தில் அனோமலி ஸ்கேன் (Anomaly Scan During Pregnancy in Tamil) என்பது மிகவும் முக்கியமானது, அனைத்து கர்ப்பிணிகளும் இந்த பரிசோதனையை தவறாமல் செய்து உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
கர்ப்ப காலத்தில் முறையான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் கவனத்துடன் கடைப்பிடித்தாலே கர்ப்பகால இறுதியில் தாய் சேய் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ஓரு பெண் கர்ப்பத்தை உறுதி செய்தவுடன் மகப்பேறு மருத்துவரை அணுகி ஆரம்ப கட்ட பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை கணக்கிடலாம். கர்ப்பத்தின் குறிப்பிட்ட இடைவெளியில் செய்யப்படும் ஸ்கேன் வகைகளில் மிக முக்கியமானது அனோமலி ஸ்கேன்.
கர்ப்பிணிகளுக்கு செய்ய வேண்டிய பரிசோதனை என்ன என்பதை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். கர்ப்பத்தின் 20 வாரங்களில் மருத்துவர் இந்த ஸ்கேன் பரிசோதனை செய்யப்படும்.
இந்த ஸ்கேன் செய்வதால் வயிற்றில் வளரும் சிசுவின் உடல் குறைபாடு, அன்ன பிளவு உதடு மற்றும் ஸ்பைனா பிஃபிடா (Spina Bifida) போன்ற நிலைமைகள் சரிபார்க்கப்படும். இது ஒரு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் ஆகும். மேலும் இந்த பரிசோதனையில் குழந்தையின் நஞ்சுக்கொடி கூட இதில் பரிசோதிக்கப்படும்.
அனோமலி ஸ்கேன் (Anomaly Scan During Pregnancy in Tamil) என்றால் என்ன?
இந்த ஸ்கேன் கர்ப்பத்தின் நடுப்பதியில் எடுக்கப்படும், இதனை ஒழுங்கின்மை ஸ்கேன் என்றும் சொல்லலாம். இந்த பரிசோதனை மூலம் வயிற்றில் வளரும் சிசு மற்றும் கருப்பை இரண்டையும் நெருக்கமாக பார்க்கலாம்.
மருத்துவர் குழந்தையின் வளர்ச்சி சாதாரணமாக உள்ளதா, அசாதாரணமாக உள்ளதா என்பதை சரி பார்த்து குழந்தையின் உடல் உறுப்புகள் தவிர, நஞ்சுக்கொடி மற்றும் கருப்பை சுற்றி உள்ள அம்னோடிக் திரவத்தையும் சரிபார்ப்பார்.
20 வாரங்களில் எடுக்கப்படும் இந்த பரிசோதனையை 18 முதல் 21 வாரங்களுக்கு இடையில் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.
இந்த ஸ்கேன் பரிசோதனையின் போது என்ன செய்ய வேண்டும், என்ன பரிசோதிக்கப்படுகிறது, அதற்கு தயாராகும் முறை போன்றவற்றை முன்னரே விரிவாக பார்த்திருக்கிறோம். அந்த கட்டுரையின் லிங்க் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
விரிவாக தெரிந்துகொள்ள அந்த கட்டுரையை படியுங்கள்: அனோமலி ஸ்கேன் செய்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை
அனோமலி ஸ்கேன் (Anomaly Scan During Pregnancy in Tamil) கண்டிப்பாக செய்ய வேண்டுமா?
கர்ப்பத்தின் ஆரம்பத்திலேயே உங்கள் மருத்துவர் கர்ப்பகாலம் முழுவதும் எடுக்கவேண்டிய பரிசோதனைகள் குறித்து பரிந்துரைப்பார். அதோடு இந்த ஸ்கேன் பரிசோதனை அவசியம் என்பதால் ஸ்கேன் செய்வதை தீர்மானிப்பது உங்கள் இறுதி முடிவாக இருக்கும்.
எனினும் கர்ப்பிணிகள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக கவனத்துடன் இருப்பதால் பெரும்பாலும் இதை தவிர்ப்பதில்லை என்பது தான் உண்மை.
அனோமலி ஸ்கேன் (Anomaly Scan During Pregnancy in Tamil) செய்யும் போது கர்ப்பிணிகளால் சிசுவை பார்க்க முடியுமா?
அனோமலி ஸ்கேன் (Anomaly Scan During Pregnancy in Tamil) 30 நிமிடங்கள் நடைபெறும். அனைத்தையும் நீங்கள் வழக்கமாக பார்க்க முடியும். கர்ப்ப காலத்தில் இதுவரை நீங்கள் ஸ்கேன் எதுவும் செய்யவில்லை எனில் இந்த எண்ணிக்கை மற்றும் பிரசவத்தேதியை கணிக்க முடியும்.
உங்கள் மருத்துவர் உங்கள் வயிற்றில் வளரும் சிசுவின் இதயத்துடிப்பு, முகம் மற்றும் உடல் பாகங்கள் கை, கால்கள் போன்றவற்றை காட்டலாம். எனினும் சிசுவின் உறுப்புகளை அவர் குறுக்கு வெட்டாக பார்ப்பதால் அதை நீங்கள் புரிந்துகொள்வது சிரமமாக இருக்கும்.
அனோமலி ஸ்கேனில் (Anomaly Scan During Pregnancy in Tamil) குழந்தையை பார்க்கும் போது சிசுவின் எலும்புகள் வெண்மையாக தோன்றும். அவர்களது சதை மற்றும் உள் உறுப்புகள் சாம்பல் மற்றும் புள்ளிகள் போல் தெரியும். கருப்பையில் குழந்தை வளர்ந்துவரும் இடத்தை சுற்றியிருக்கும் அம்னோடிக் திரவம் கருப்பு நிறமாக இருக்கும்.
வயிற்றில் வளரும் சிசுவை மருத்துவர் முழுமையாக ஆய்வு செய்த பிறகு உங்களுக்கு மானிட்டரை திருப்பி விளக்கலாம். அப்போது முழுமையாக நீங்கள் பார்க்கமுடியும்.
அனோமலி ஸ்கேன் (Anomaly Scan During Pregnancy in Tamil) பரிசோதனை
குழந்தையின் அனைத்து உறுப்புகளையும் பரிசோதித்து அளவீடுகளை எடுப்பார்கள். குழந்தையின் தலை, மூளையின் வடிவம் மற்றும் அமைப்பு பரிசோதிப்பார்கள்.
அரிதாக நிகழும் கடுமையான மூளை பிரச்சனைகள் இங்கு கண்டறியப்படுகின்றன. குழந்தையின் முகம், பிளவுப்பட்ட உதடு இருக்கிறதா என்று சோதிக்கப்படும்.
உங்கள் குழந்தையின் முதுகெலும்பு, அதன் நீளம் மற்றும் குறுக்குவெட்டு ஆகிய இரண்டிலும் அனைத்து எலும்புகளும் சீரமைக்கப்படுவதையும், தோல் பின்பிறமுள்ள முதுகெலும்பை மறைப்பதையும் உறுதி செய்வார்கள்.
குழந்தையின் வயிற்றுச்சுவர் முன்புறத்தில் உள்ள அனைத்து உள் உறுப்புகளையும் உள்ளடக்கியிருப்பதை உறுதி செய்வார்கள்.
குழந்தையின் இதயம் மேல் இரண்டு அறைகள் மற்றும் கீழ் இரண்டு அறைகள் அளவு சமமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு இதயத்துடிப்பிலும் வால்வுகள் திறந்து மூடப்பட வேண்டும். இந்த பரிசோதனையும் பார்க்கப்படும்.
குழந்தையின் இதயத்துக்கு இரத்தத்தை எடுத்து செல்லும் முக்கிய நரம்புகள் மற்றும் தமனிகளையும் மருத்துவர் பரிசோதிப்பார்.
குழந்தையின் வயிறு பரிசோதிக்கப்படும், வயிற்றில் இருக்கும் போது அம்னோடிக் திரவத்தில் சிலவற்றை விழுங்குகிறது. இது வயிற்றில் ஒரு கருப்பு குமிழியாக காணப்படுகிறது.
குழந்தையின் சிறுநீரகங்கள் பரிசோதிக்கப்படும். குழந்தைக்கு இரண்டு சிறுநீரகங்கள் உள்ளதா என்பதையும், சிறுநீர் அவர்களின் சிறுநீர்ப்பையில் தாராளமாக பாய்வதையும் கவனிப்பார்.
குழந்தையின் சிறுநீர்ப்பை காலியாக இருந்தால் ஸ்கேன் செய்யும் போது அது நிரப்பப்பட வேண்டும் அப்போதுதான் பார்க்க எளிதாக இருக்கும்.
குழந்தையின் கைகள், கால்கள் விரல்கள் பார்ப்பார். நஞ்சுக்கொடி தொப்புள்கொடி மற்றும் அம்னோடிக் திரவம்.
நஞ்சுக்கொடி முன் சுவர் அல்லது உங்கள் கருப்பையின் பின் சுவரில் அருகில் இருக்கலாம். நஞ்சுக்கொடி மேல் இருந்தால் உங்கள் ஸ்கேன் குறிப்புகளில் உங்கள் மருத்துவர் அதை ஃபண்டல் என்று சொல்லலாம்.
நஞ்சுக்கொடியானது உங்கள் கருப்பையின் கழுத்தை கருப்பை வாய் வரை சென்றாலோ அல்லது மறைந்திருந்தாலோ நஞ்சுக்கொடி குறைவாக இருப்பதாக விவரிப்பார்.
நஞ்சுக்கொடி வயிற்றில் குறைவாக இருந்தால், அதன் நிலையை சரிபார்க்க உங்கள் மருத்துவர் மூன்றாவது ட்ரைமெஸ்டர் மாதங்களில் மீண்டும் ஸ்கேன் செய்வார். சமயங்களில் அதற்குள் கருப்பை வாயில் இருந்து விலகியிருக்க வாய்ப்புள்ளது.
தொப்புள் கொடியில் உள்ள மூன்று இரத்த நாளங்களை (இரத்த தமனிகள் மற்றும் ஒரு நரம்பு) கவனிக்கலாம். எனினும் இதை அவர்கள் கவனிக்க வேண்டும் என்னும் கட்டாயமல்ல. இந்த குழந்தை சுதந்திரமாக நடமாட போதுமான அம்னோடிக் திரவம் உள்ளதா என்பதை சரிபார்க்க செய்வார்கள்.
ஸ்கேன் செய்யும் போது மருத்துவர் உங்கள் குழந்தையின் உடலின் பாகங்களை அளவிடுவார். அவர்கள் வளர்ச்சியை கணக்கிடுவார். குழந்தையின் மொத்த அளவை கணக்கிடுவார்.

கர்ப்பிணியின் பிரசவ தேதியை பொறுத்து குழந்தைக்கு எதிர்பார்க்கப்படும் அளவீடுகள் பொருந்த வேண்டும் அதற்கேற்ப அவர் பரிசோதனையுடன் குழந்தையின் அளவையும் பரிசோதிப்பார்.
அனோமலி ஸ்கேன் (Anomaly Scan During Pregnancy in Tamil) செய்யும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் என்னென்ன?
குழந்தை பிறந்தவுடன் சில நிபந்தனைகளுக்கு சிகிச்சையளிக்க முடியும். இருப்பினும் அரிதாக ஒரு குழந்தை உயிர்வாழ முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கலாம்.
இந்த நிலை குணப்படுத்தக்கூடியதாக இருந்தால் அதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள உதவும். சில நிலைமைகள் மற்றவர்களை விட எளிதாக கண்டறியப்படுகின்றன.
சிலவற்றை பார்ப்பது கடினம். பட்டியலில் உள்ள பெரும்பாலான நிபந்தனைகள் அரிதானவை. அப்படி பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை பொதுவாக பார்க்கலாம்.

பிறவி இதய நோய்
இதய அறைகள், வால்வுகள் அல்லது பாத்திரங்களின் குறைபாடுகள் உட்பட பலவிதமான இதய பிரச்சனைகளை உள்ளடக்கியது.
ஒட்டுமொத்தமாக 125 குழந்தைகளில் 1 குழந்தைகளை பாதிக்கிறது. 500 குழந்தைகளில் 1 குழந்தை பிறவி இதய நோயால் பாதிக்கப்படுகிறது.
பிளவு உதடு
மேல் உதடு வாய் மற்றும் மூக்கு இடையே பிளவு நிலை உண்டாகிறது. இது 1300 குழந்தைகளில் 1 குழந்தைக்கு உண்டாகிறது.
எட்வர்ட்ஸ் நோய்க்குறி
கூடுதல் குரோமோசாம் 18 காரணமாக ஏற்படும் ஒரு நிலை. இது 1500 குழந்தைகளில் ஒருவருக்கு உண்டாகும்.
ஸ்பைனா பிஃபிடா (Spina Bifida)
முதுகுத்தண்டு மற்றும் தண்டுவடத்தை பாதிக்கும் நிலை ஆகும் இது 1666 ல் ஒருவரை பாதிக்கும்.
மண்டை ஓடு மற்றும் மூளையின் பெரிய பகுதிகள் இல்லாத உயிரை கட்டுப்படுத்தும் நிலை இது 2000 பேரில் ஒருவருக்கு இந்நிலை உண்டாகலாம்.
காஸ்ட்ரோஸ்கிசிஸ்
வயிற்றுச்சுவரின் குறைபாடு, தொப்புள் சரியாக வளர்ச்சியடையாமல் உடலுக்கு வெளியே குடல் உருவாகிறது இது 2000 பேரில் ஒருவருக்கு உண்டாகிறது.
எக்ஸோம்பாலஸ்
வயிற்று சுவரின் குறைபாடு குடல் மற்றும் கல்லீரல், தொப்புள் கொடி நீண்டு செல்லும் நிலை இது 2500 பேருக்கு ஒருவருக்கு உண்டாகலாம்.
பிறவி உதரவிதான குடலிறக்கம்
மார்பு மற்றும் வயிற்றை பிரிக்கும் தசையில் ஒரு துளை 2500 -ல் ஒருவருக்கு உண்டாகலாம்.
படெளவின் நோய்க்குறி
கூடுதல் குரோமோசாம் 13 நிலை காரணமாக உண்டாகும் ஒரு நிலை இது 4000 பேரில் ஒருவருக்கு உண்டாகலாம்.
சிறுநீரக வளர்ச்சி
இரு சிறுநீரகங்களும் வளர்ச்சியடையாத ஒரு உயிரை கட்டுப்படுத்தும் நிலை இது 5000 பேரில் ஒருவருக்கு உண்டாகிறது.
கடுமையான எலும்பு டிஸ்ப்ளாசியா
மார்பு மற்றும் நுரையீரல் வளர்ச்சியடையாத அளவுக்கு எலும்பின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கலாம். 10 ஆயிரத்தில் 1 கர்ப்பிணி இந்த நிலைக்கு உண்டாகலாம்.
எனினும் இதயக்குறைபாடுகள் மற்றும் குடல் அமைப்புகள் உள்ளிட்ட சில நிலைமைகள் உங்கள் கர்ப்பத்தின் பிற்பகுதி வரை காணப்படாமல் இருக்கலாம்.
குழந்தைகள் ஆரோக்கியமாக பிறக்க இந்த அனோமலி ஸ்கேன் செய்துகொள்வது இந்த நிலைமைகள் வராமல் தடுக்க உதவும்.
அனோமலி ஸ்கேன் (Anomaly Scan During Pregnancy in Tamil) ஒரு முறை எடுத்தால் போதுமா அல்லது மீண்டும் எடுக்க சொல்வார்களா?
வெகு அரிதாக சில கர்ப்பிணிகளுக்கு மட்டும் மீண்டும் அனோமலி ஸ்கேன் (Anomaly Scan During Pregnancy in Tamil) தேவைப்படலாம். 15% பெண்களுக்கு மீண்டும் அனோமலி ஸ்கேன்கள் பரிந்துரைக்கப்படும்.

ஒரு காரணத்துகாக அல்லது மீண்டும் மீண்டும் ஒன்றை உறுதி செய்ய இவை செய்யப்படும். பெரும்பாலும் இவை தீவிரமானவை அல்ல.
பொதுவாக மருத்துவர் பார்க்க வேண்டிய அனைத்தையும் சரியாக பார்த்திருக்க மாட்டார்கள். ஏனெனில் குழந்தை ஸ்கேனிங்கிற்கான சிறந்த நிலையில் இல்லாமல் இருக்கலாம். அல்லது அதிக எடையுடன் இருக்கலாம்.
மேலும் உங்களுக்கு நார்த்திசுக்கட்டிகள் இருந்தால் அவை பரிசோதனையை துல்லியமாக அறிவதில் சிரமத்தை உண்டு செய்யலாம். இந்நிலை அறிந்தால் உங்களுக்கு 23 வாரங்களுக்குள் மற்றொரு ஒழுங்கின்மை ஸ்கேன் செய்யப்படும்.
அனோமலி ஸ்கேனில் (Anomaly Scan During Pregnancy in Tamil) பிரச்சனை இருந்தால் என்ன அறிகுறிகள் தென்படும்?
ஸ்கேன் செய்யும் போது ஏதேனும் அறிகுறி இருந்தால் அல்லது சந்தேகித்தால் உடனடியாக தெரிவிப்பார்கள். குழந்தைக்கு இதய பிரச்சனை இருப்பதாக நிபுணர் நினைத்தால் கருவின் எதிரொலி ஸ்கேன் அதாவது கரு எக்கோ கார்டியோகிராம் பரிசோதனை செய்ய வர சொல்வார்கள். இது குழந்தையின் இதயத்தை விரிவாக பார்க்க உதவும்.
ஸ்கேன் தீவிரமான நிலையை வெளிப்படுத்தினால் உங்களுக்கு அடுத்து செய்ய வேண்டிய விருப்பங்களுக்கு வழிகாட்ட மருத்துவர் உதவுவார். கடுமையான பிரச்சனைகள் அரிதாக இருந்தாலும் சில நேரங்களில் கர்ப்பத்தை தொடரலாமா என்பதை விட மிகவும் கடினமான முடிவை எதிர்கொள்ள நேரிடலாம்.
மேலும் பிற பிரச்சனைகள் வயிற்றில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை அல்லது பிறந்த பிறகு சிகிச்சை தேவை. என்பதை உணர்த்தலாம்.
எனினும் மகப்பேறு மருத்துவ நிபுணர்கள், பிசியோதெரபிஸ்ட், கரு மருத்துவ நிபுணர்கள் அனைவரும் இணைந்து வேண்டிய சிகிச்சையை அளிப்பார்கள்.
கருவில் இருந்து குழந்தை பிறக்கும் வரை பயணம் என்பது ஒன்பது மாதங்கள் வரை. எனினும் இது அவரது வாழ்க்கையின் சிறந்த காலகட்டம் ஆகும்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
அதனால் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க உன்னதமான கர்ப்பகாலத்தை மேலும் மகிழ்ச்சியுடன் கொண்டாட விரும்புவது நல்லது கர்ப்பகாலத்தில் சரியான மருந்துகள், முறையான கர்ப்ப கால உணவு முறை வழக்கமான சோதனைகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட ஸ்கேன் ஆகியவற்றை பின்பற்றுவது முக்கியம். இது குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.